🌹🌹🌹꧁༼ ﷽ ༽ ꧂🌹🌹🌹
﴿یَـٰۤأَیُّهَا ٱلَّذِینَ ءَامَنُوا۟ كُتِبَ عَلَیۡكُمُ ٱلصِّیَامُ كَمَا كُتِبَ عَلَى ٱلَّذِینَ مِن قَبۡلِكُمۡ لَعَلَّكُمۡ تَتَّقُونَ﴾
[البقرة ١٨٣]
ஈமான் கொண்டோர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும்(அது) விதிக்கப்பட்டுள்ளது; (அதன் மூலம்) நீங்கள் இறையச்சமுடையோர் ஆகலாம்
(அல்குர்ஆன் : 2:183)
எந்த ஒரு செயலையும் திட்டமிட்டு செயல்பட்டால் அந்த காரியம் நல்லபடியாக முடியும் என்ற அடிப்படையில் வருகிற ரமளான் மாதத்தில் நாம் திட்டமிட்டு அமல்களை செய்வோம். நம்முடைய முன்னோர்கள் ரமளான் மாதத்தை எப்படி பயன்படுத்தினார்களோ அதே போன்று நாமும் பயன்படுத்த வேண்டும்.
ஏனெனில் முன்பு சென்ற ரமளானில் அமல்கள் செய்திருந்தாலும் இந்த ரமளானில் இருந்து நம்முடைய அமல்களை அதிகப்படுத்த வேண்டும். காரணம் ரமளான் வருட வருடம் குறித்த நேரத்திலே வந்துவிடும், ஆனால் நாம் இருப்போமா என்பது சந்தேகம்தான்.
معلى بن الفضل رحمه الله : كانوا يدعون الله تعالى ستة أشهر أن يبلغهم رمضان يدعونه ستة أشهر أن يتقبل منهم.
முஅல்லா இப்னுல் ஃப்ழ்ல் (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் கூறினார்கள் : சஹாபாக்கள் ரமளானை அடைவதற்காக ஆறு மாதங்களுக்கு முன்பதாக துஆ செய்வார்கள். ரமளான் மாதம் முடிந்து அடுத்த ஆறு மாதங்களில் ரமளானில் செய்த அமல்கள் ஏற்றுக்கொள்ளப்பட துஆ செய்வார்கள்.
وقال يحيى بن أبي كثير كان من دعائهم: اللهم سلمني إلى رمضان وسلم لي رمضان وتسلمه مني متقبلا.
(لطائف المعارف، ص : ١٤٨)
யஹ்யா இப்னு அபீ கஸீர் (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் கூறினார்கள் : "அல்லாஹும்ம ஸல்லிம்னீ இலா ரமளான் வ ஸல்லிம் லீ ரமளான வ தஸ்லிம்ஹு மின்னீ முதகப்பிலன்"
"யா அல்லாஹ்! வரக்கூடிய ரமளானை ஸலாமத்தாக நான் அடையும் பாக்கியத்தை தருவாயாக! அந்த ரமளானை எனக்கு ஸலாமத்தாக ஆக்குவாயாக!"
என்று இந்த துஆவை சஹாபாக்கள் அதிகம் செய்வார்கள்.
(நூல் : லதாயிஃபுல் மஆரிஃப், பக்கம் : 148)
قال لإمام ابنِ جوزي رحمه الله : " تالله، لو قيل لأهل القبور تمنوا ؛ لتمنوا يوماً من رمضان.! "
|[ التبصرة لإبن الجوزي - ٢/٨٥ ]|
இமாம் இப்னுல் ஜவ்ஸீ (ரஹ்மத்துல்லாஹி அலைஹி) அவர்கள் கூறினார்கள் : அல்லாஹ்வின் மீது சத்தியமாக!கப்ருவாசிகளிடம், "உங்களுக்கு விருப்பமானதை கேளுங்கள்" என்று சொன்னால், ரமளான் மாதத்தில் ஒரு நாள் இருக்க வேண்டும் என்று விரும்புவார்கள்.
(நூல் : அத்தபஸ்ஸுரா லி இப்னில் ஜவ்ஸீ, பாகம் : 2, பக்கம் : 85)
★. ரமளான் மாதத்தின் முதல் இரவில் செய்ய வேண்டிய அமல்
قال بعض العارفين رحمهم الله من قرأ سورة الفتح عند رؤية هلال رمضان في أول ليلة وسع الله رزقه ذلك العام
(خزينة الأسرار الكبرى ، صــ : ١٦٦)
ஆரிஃபீன்களில் சிலர் கூறுகிறார்கள் (ரஹிமஹுமுல்லாஹ்) : ரமளான் மாதத்தின் முதல் இரவின் பிறையை பார்த்து யார் "ஸூரதுல் ஃபத்ஹ்" (இன்னா ஃபதஹ்னா லக) என்ற ஸூராவை ஓதுகிறாரோ, அவ்வருடத்தில் அவருக்கும் அல்லாஹ் ரிஜ்கை விசாலபடுத்தி தருகிறான்.
(நூல் : ஹஸீனதுல் அஸ்ராருல் குப்ரா, பக்கம் : 166)
★. வெய்யில் காலத்தில் நோன்பு வைப்பது
أن عمر ؓ وصى ابنه عند موته فقال له: " يا بني عليك بخصال الإيمان قال: وما هي؟ قال: الصوم في شدة الحر أيام الصيف
(لطائف المعارف ، صــ : ٥٦٠)
ஹழ்ரத் உமர் (ரளியல்லாஹு அன்ஹு) அவர்கள் தன் மகனுக்கு செய்த உபதேசங்களில் ஒன்று... வெயில் காலத்தில் நோன்பு வைத்துப் பழகு.
(நூல் : லதாயிஃபுல் மஆரிஃப், பக்கம் : 560)
عن أبي هريرة ؓ : قال ثلاث من الإيمان, أن يحتلم الرجل في الليلة الباردة, فيقوم فيغتسل, لايراه إلا الله, والصوم في اليوم الحار, وصلاة الرجل في الأرض الفلاة, لايراه الا الله عز وجل
(شعب الإيمان البيهقي ،٢٧٠/٤, رقم الحديث : ٢٥٠٢)
ஹழ்ரத் அபூஹுரைரா (ரளியல்லாஹு அன்ஹு) கூறினார்கள். 3 விஷயங்கள் ஈமானின் அடையாளமாகும்.
1.குளிர் காலத்திலும் குளிப்புக் கடமையாகி அதிகாலையில் குளித்து விட்டுத் தொழுவது.
2. வெயில் காலத்தில் நோன்பு வைப்பது
3. ஆளில்லாத வனாந்தரத்தில் தொழுகையில் ஈடுபடுவது (அதாவது யாரும் பார்க்காத நிலையிலும் தொழுவது)
(நூல் : ஷுஃபுல் ஈமான் லில்பைஹகி, பாகம் : 4, பக்கம் : 270, ஹதீஸ் எண் : 2502)
قال على ؓ : أنا حبب إلي من الدنيا.... الصوم في الصيف
(كشف الخفاء ، صــ : ٣٤١)
அலி ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள்: கோடைக்காலத்தில் நோன்பு வைப்பதை நான் விரும்புகிறேன்.
(நூல்: கஷ்ஃபுல் கஃபா, பக்கம்: 341)
عن سعيد بن جبير ؓ قال لما أصيب ابن عمر ؓ قال: ما تركت خلفي شيئا من الدنيا آسي عليه غير ظما الهواجر وغير مشي إلى الصلاة
(المصنف لإبن أبي شيبة ، ٤٦٨/١٩، رقم الحديث : ٣٦٧٢٨)
ஸயீத் இப்னு முஸய்யப் (ரளியல்லாஹு அன்ஹு) அவர்கள் கூறினார்கள்: இப்னு உமர் (ரளியல்லாஹு அன்ஹு) அவர்கள் சகராத் நேரத்தில் இரண்டு விஷயங்களைப் பற்றி அதிகம் கவலைப்பட்டார்கள்.
1. வெயில் காலத்தில் நோன்பு வைக்கும் பாக்கியம் இனி கிடைக்காதே!
2. தொழுகைக்காக நடந்து செல்லும் பாக்கியம் இனி கிடைக்காதே!
(நூல் : முசன்னஃப் லிஇப்னி அபி ஷைபா, பாகம் : 19, பக்கம் : 468, ஹதீஸ் எண் : 36728)
كان أبو ذر رضي الله عنه يقول :
يا أيها الناس ، إني لكم ناصح ، إني عليكم شفيق ،
صلوا في ظلام الليل لوحشة القبور ، وصوموا في حر الدنيا لحر يوم النشور ، وتصدقوا مخافة يومٍ عسير لعظائم الأمور.
(تاريخ دمشق ،٢١٤/٦٦)
அபூதர் (ரளியல்லாஹு அன்ஹு) அவர்கள் கூறுவார்கள் : மக்களே! நான் உங்களுக்கு உபதேசம் செய்பவனாகவும், உங்கள் மீது இரக்கமுள்ளவனாகவும் இருக்கிறேன்.
1. கப்ருகளின் தனிமையை நீக்குவதற்கு கடும் இருளில் தொழுது கொள்ளுங்கள்,
2. நாளை மறுமையில் மஹ்ஷர் மைதானத்தில் கடுமையான உஷ்ணத்திலிருந்து தப்பிப்பதற்கு, உலகத்தின் உஷ்ணத்தில் நோன்பு வைத்துக் கொள்ளுங்கள்.
3. மறுமையின் படுபயங்கரமான காரியங்களுடைய கஷ்டங்களை பயந்து (உலகத்தில்) அதிகம் சதக்கா (தான் தர்மம்) செய்யுங்கள்.
(நூல் : தாரீகு திமிஷ்க், பாகம் : 66, பக்கம் : 214)
★. நோன்பு திறக்க ஏற்பாடு செய்வோம்
كان حماد بن سلمة الامام الحافظ رحمه الله : يفطر فى كل ليلة من شهر رمضان خمسين
(تفسير روح البيان ، ٢٩٨/١)
அல்ஹாஃபிழ் ஹம்மாத் இப்னு ஸலமா (ரஹ்மத்துல்லாஹி அலைஹி) அவர்கள் ரமளான் மாதத்தில் ஒவ்வொரு நாளும் ஐம்பது நபர்களுக்கு நோன்பு திறக்க உதவி புரிந்து வந்தார்கள்.
(நூல் : தஃப்ஸீரு ரூஹுல் பயான், பாகம் : 1, பக்கம் : 298)
عَنْ سَلْمَانَ الْفَارِسِيِّ، قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ فَطَّرَ صَائِمًا فِي رَمَضَانَ مِنْ كَسْبٍ حَلَالٍ، صَلَّتْ عَلَيْهِ الْمَلَائِكَةُ لَيَالِيَ رَمَضَانَ كُلَّهَا، وَصَافَحَهُ جِبْرِيلُ عَلَيْهِ السَّلَامُ لَيْلَةَ الْقَدْرِ، وَمَنْ صَافَحَهُ جِبْرِيلُ يَرِقَّ قَلْبُهُ، وَتَكْثُرْ دُمُوعُهُ» فَقَالَ رَجُلٌ: يَا رَسُولَ اللَّهِ، أَرَأَيْتَ إِنْ لَمْ يَكُنْ ذَاكَ عِنْدَهُ؟ قَالَ: «بِقَبْضَةٍ مِنْ طَعَامٍ» قَالَ: أَفَرَأَيْتَ إِنْ لَمْ يَكُنْ ذَاكَ عِنْدَهُ؟ قَالَ: «فَفَلْقَةُ خُبْزٍ» قَالَ: أَفَرَأَيْتَ إِنْ لَمْ يَكُنْ ذَاكَ عِنْدَهُ؟ قَالَ: «فَمَذْقَةٌ مِنْ لَبَنٍ» قَالَ: أَفَرَأَيْتَ إِنْ لَمْ يَكُنْ ذَاكَ عِنْدَهُ؟ قَالَ: «فَشَرْبَةٌ مِنْ مَاءٍ.
(فضائل رمضان - لإبن أبي الدنيا، ص : ٨٨)
நபி (ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம்) அவர்கள் கூறினார்கள் : ஹலாலான வருமானத்தில் யார் ஒரு நோன்பாளிக்கு இஃப்தார் ஏற்பாடு செய்கிறாரோ ரமளான் மாதத்தின் அனைத்து இரவுகளிலும் மலக்குமார்கள் அவருக்காக பாவமன்னிப்பு தேடுகிறார்கள், லைலதுல் கத்ர் இரவன்று ஜிப்ரீல் (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் அவரிடம் முசாபஹா செய்கிறார்கள், அப்போது அவருடைய உள்ளம் மென்மையாகும், அதிகமாக கண்ணீர் வரும், என்று நபியவர்கள் சொன்ன போது, யா ரஸூலுல்லாஹ்! நோன்பு திறக்க வைக்கும் அளவுக்கு வசதி இல்லை என்றால் என்ன செய்வது? என்று ஒரு சஹாபி கேட்க, ஒரு பிடி உணவாது கொடுங்கள், அதுவும் இல்லையென்றால்? ஒரு ரொட்டித் துண்டாவது கொடுங்கள், அதுவும் இல்லையென்றால்? ஒரு மீடர் பாலாவது கொடுங்கள், அதுவும் இல்லையென்றால்? ஒரு மீடர் தண்ணியாவது கொடுங்கள் என்று நபியவர்கள் கூறினார்கள்.
(அறிவிப்பாளர் : ஸல்மான் ஃபாரிஸீ (ரளியல்லாஹு அன்ஹு), நூல் : ஃபளாயிலு ரமளான், பக்கம் : 88)
خرج علي بن أبي طالب رضي الله عنه في أول ليلة من شهر رمضان، والقناديل تزهر، وكتاب الله يتلى في المساجد، فقال : نوَّر الله لك يا عمر بن الخطاب في قبرك، كما نورت مساجد الله بالقرآن.
(حياة الصحابة ، ٢٠٢/٤)،
(فضائل رمضان لابن أبي الدنيا، صــ : ٥٨)
ரமளான் முதல் மாதத்தின் இரவன்று அலி (ரளியல்லாஹு அன்ஹு அவர்கள்) (பள்ளிவாசல் பக்கமாக) செல்லும் போது, பள்ளிவாசலில் விளக்கு எரிந்துக் கொண்டு (உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள்) குர்ஆன் ஓதுகிற சப்தம் கேட்டு, "உமரே! (ரளியல்லாஹு அன்ஹு) குர்ஆனைக் கொண்டு மஸ்ஜிதை ஒளிமையமாக ஆக்கியது போன்று அல்லாஹ் உங்கள் கப்ரை ஒளிமையமாக ஆக்குவானாக!" என்று துஆ செய்தார்கள்.
(நூல் : ஹயாதுஸ் ஸஹாபா, பாகம் : 4, பக்கம் : 202,. (ஃபளாயிலு ரமளான் லி இப்னி அபித்துன்யா, பக்கம் : 58)
★. ஸஹர் நேரத்தின் சிறப்புகள்
روى الثعلبي أن النبي صلى الله عليه وسلم قال ثلاثة أصوات يحبها الله تعالى صوت الديك وصوت قارىء القرآن وصوت المستغفرين بالأسحار .
(حياة الحيوان الكبرى ، ٤٣٩/٢)
நபி (ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹு தஆலா மூன்று சப்தங்களை விரும்புகிறான்.
1 - சேவல் கூவும் சப்தம்
2 - குர்ஆன் ஓதுபவரின் சப்தம்
3 - ஸஹர் நேரங்களில் பாவமன்னிப்பு தேடுபவர்களின் சப்தம்
(அறிவிப்பாளர்: ஸஃலபீ (ரளி), நூல்: ஹயாதுல் ஹயவான் அல்குப்ரா, பாகம் : 2, பக்கம் : 439)
وروي أن داوود عليه السلام سأل جبريل عن أفضل الأوقات، قال: لا أعلم، إلاّ أن العرش يهتز في الأسحار
(الدر المنثور ، ٤٨٤/٣)
நேரங்களில் மிகச் சிறந்த நேரம் எது? என்று தாவூத் (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் ஜிப்ரயீல் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களிடம் கேட்டார்கள். எனக்கு தெரியாது, என்றாலும் ஸஹர் நேரங்களில் அர்ஷ் நடுங்கும் என்று ஜிப்ரயீல் (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் கூறினார்கள்.
(நூல் : தஃப்ஸீரு அத்துர்ருல் மன்ஸூர், பாகம்: 3, பக்கம்: 483)
في وصايا لقمان لابنه : يا بني، لا يكون الديك أكيس منك، يقوم في وقت السحر ويستغفر، وأنت نائم.
(تفسير القرطبي، ج : ٤، ص : ٤٠)
லுக்மான் (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் தன்னுடைய பிள்ளைக்கு செய்த உபதேசங்களில் ஒன்று: தம்பி! சேவல் உன்னைவிட புத்திக்கூர்மையாது அல்ல, இருந்தாலும் நீ தூங்கும் சமயத்தில் அது ஸஹர் நேரத்தில் எழுந்து பாவமன்னிப்பு தேடுகிறது.
(நூல்: தஃப்ஸீருல் குர்துபீ, பாகம்: 4, பக்கம் : 40)
عن إبن عباس رضي الله عنهما : قال رسول اللَّهِ ﷺ ثلاثة معصومون من إبليس وجنوده: الذاكرون الله، والباكون من خشية الله، والمستغفرون بالأسحار.
(كنز العمال ، ٨٤١/١٥ ، رقم الحديث : ٤٣٣٤٣)
நபி (ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம்) அவர்கள் கூறினார்கள்: மூன்று பேர் இப்லீஸ் மற்றும் அவனது கூட்டத்தை விட்டும் பாதுகாக்கப்பட்டவர்கள்.
1 - அல்லாஹ்வை திக்ரு செய்பவர்கள்,
2 - அல்லாஹ்வின் அச்சத்தால் அழுதவர்கள்,
3 - ஸஹர் நேரங்களில் பாவமன்னிப்பு தேடுபவர்கள்.
(அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் (ரளி), நூல்: கன்ஜுல் உம்மால், பாகம் : 15, பக்கம் : 841)
قال رسول اللَّهِ (ﷺ) : ثلاث من أخلاق النبوة: تعجيل الإفطار، وتأخير السحور، ووضع اليمين على الشمال في الصلاة
(فيض القدير ، ٢٩٦/٣)
நபி (ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம்) அவர்கள் கூறினார்கள் : மூன்று விஷயங்கள் நபிமார்களின் நற்குணங்களில் உள்ளவை:
1- இஃப்தாரை விரைவுபடுத்துவது,
2 - ஸஹரை பிற்படுத்துவது,
3 - தொழுகையில் இடது கையிக்கு மேல் வலது கையை வைப்பது.
(நூல்: ஃபைளுல் கதீர், பாகம் : 3, பக்கம் : 296)
عن أنس بن مالك رضي الله عنه قال : أمرنا رسول الله صلى الله عليه وسلم أن نستغفر بالأسحار سبعين استغفارة
(الدر المنثور ، ٤٨٤/٣)
ஸஹர் நேரத்தில் 70 தடவை இஸ்திக்பார் செய்யும் படி நபி (ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம்)அவர்கள் எங்களை ஏவினார்கள் என்று அனஸ் (ரளியல்லாஹு அன்ஹு) கூறினார்கள்.
(நூல் : தஃப்ஸீரு அத்துர்ருல் மன்ஸூர் பாகம் : 3, பக்கம் : 484)
عن إبراهيم بن حاطب عن أبيه قال : يمعت رجلا في السحر في ناحية المسجد وهو يقول : رب أمرتني فأطعتك وهذا سحر فاغفرلي فنظرت فإذا ابن مسعود رضي الله عنهما
(تفسير ابن كثير، ٢٩/٣)
இப்ராஹிம் இப்னு ஹாதிப் (ரஹ்மத்துல்லாஹி அலைஹி) அவர்கள் தன் தந்தை கூறியதாக அறிவிக்கிறார்கள் : ஒரு முறை ஸஹர் நேரத்தில் பள்ளிவாசலில், "யா அல்லாஹ்! நீ என்னை கட்டளையிட்டதற்க்காக நான் உன்னை வழிபடுகிறேன், இந்த ஸஹர் நேரத்தில் என்னை மன்னிப்பாயாக!" என்று துஆ ஓதும் சப்தம் கேட்டது, யார் என்று பார்த்தால், இப்னு மஸ்ஊத் (ரளியல்லாஹு அன்ஹுமா) அவர்கள்.
(தஃப்ஸீரு இப்னு கஸீர், பாகம் : 2, பக்கம் : 19)
★. குடும்பத்தினரை எழுப்புதல்
قال معتمر بن سليمان - رحمه الله : كان أبي يُوقظ كلَّ مَنْ في الدار إذا دخل شهر رمضان، ويقول : قوموا ؛ فلعلكم لا تدركوه بعد عامكم هذا.
(موسوعة لابن أبي الدنيا، ٧٣/٢)
முஃதமிர் இப்னு ஸுலைமான் (ரஹ்மத்துல்லாஹி அலைஹி) அவர்கள் கூறினார்கள் : ரமளான் மாதம் வந்துவிட்டால் (தஹஜ்ஜுத் நேரத்தில்) என் தந்தை குடும்பத்தாரை எழுப்பிவிட்டு, "எழுந்திருங்கள்! இதற்கு பிறகு வரக்கூடிய ரமளானை நீங்கள் அடையாமல் இருக்கலாம் (இது தான் உங்களுக்கு கடைசி ரமளானாக இருக்கலாம், அதனால் எழுந்து அல்லாஹ்வை வணங்குங்கள்) என்று கூறுவார்கள்.
(நூல் : மவ்ஸூஅது இப்னு அபித்துன்யா, பாகம் : 2, பக்கம் : 73)
★. நோன்பு திறக்கும் சமயத்தில் ஓதிய துஆ
كان ابنُ عمر رضي الله عنهما إذا أفطَرَ يقولُ : اللّهم، يا واسع المغفرة اغفر لي
(لطائف المعارف ، صــ : ٣٧٨)
நோன்பு திறக்கும் சமயத்தில் இப்னு உமர் (ரளியல்லாஹு அன்ஹுமா) அவர்கள்,
"அல்லாஹும்ம யா வாசிஅல் மக்ஃபிரா இக்ஃபிர் லீ",
"யா அல்லாஹ்! மன்னிப்பதில் விசாலமானவனே! என்னை மன்னிப்பாயாக!"
என்று துஆ செய்வார்கள்.
(நூல் : லதாயிஃபுல் மஆரிஃப், பக்கம் : 378)
★. அதிக நேரம் பள்ளிவாசலில் நேரத்தை கழிப்போம்
《 كانوا إذا صاموا قعدوا في المساجد وقالوا: نحفظ صومنا ولا نغتاب أحداً، ولا نعمل عملاً يجرح به صومنا 》.
|[ المغني ، ٤/٤٤٧) ]|
இமாம் அஹ்மத் இப்னு ஹம்பல் (ரஹ்மத்துல்லாஹி அலைஹி) அவர்கள் கூறினார்கள் : (சஹாபாக்கள், இமாம்கள், வலிமார்கள் போன்ற பெரியார்கள்) நோன்பு வைத்தால் மஸ்ஜிதில் அமர்ந்து விடுவார்கள். கேட்டால் நாங்கள் யாரைப் பற்றியும் புறம் பேசாமல், நோன்பை வீணாக்கும் காரியங்களில் ஈடுபடாமல் எங்கள் நோன்பை நாங்கள் பாதுகாக்கிறோம் என்று கூறுவார்கள்.
(நூல் : அல் முக்னீ, பாகம் : 4, பக்கம் : 337)
عن أبي هريرة رضي الله عنه أنه كان وأصحابه إذا صاموا قعدوا في المسجد، وقالوا: نطهر صيامنا
(حلية الأولياء ، ٣٨٢/١)
அபூஹுரைரா (ரளியல்லாஹு அன்ஹு) அவர்களும், அவர்களின் தோழர்களும் நோன்பு நோற்றால் மஸ்ஜிதில் அமர்ந்து விடுவார்கள், கேட்டால், நாங்கள் எங்கள் நோன்பை (இபாதத் செய்து, நோன்பை அதன் சரியான முறையில் நிறைவேற்றி) சுத்தப்படுத்துகிறோம்" என்று கூறுவார்கள்.
(நூல் : ஹில்யதுல் அவ்லியா, பாகம் : 1, பக்கம் : 382)
عَنْ نَافِعٍ، عَنْ عَبْدِ اللهِ بْنِ عُمَرَ " أَنَّهُ كَانَ يَقُومُ فِي بَيْتِهِ فِي شَهْرِ رَمَضَانَ فَإِذَا انْصَرَفَ النَّاسُ مِنَ الْمَسْجِدِ أَخَذَ إِدَاوَةً مِنْ مَاءٍ، ثُمَّ يَخْرُجُ إِلَى مَسْجِدِ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، ثُمَّ لَا يَخْرُجُ مِنْهُ حَتَّى يُصَلِّيَ فِيهِ الصُّبْحَ.
(سنن الكبري - للبيهقي، رقم الحديث : ٤٦٠٩، ج : ٢، ص : ٦٩٦)
நாஃபிஃ (ரளியல்லாஹு அன்ஹு) அவர்கள் கூறுகிறார்கள் அப்துல்லாஹ் இப்னு உமர் (ரளியல்லாஹு அன்ஹு) அவர்கள் ரமளான் மாதத்தில் தன் வீட்டில் இருப்பார்கள். மக்கள் பள்ளிவாசலிலிருந்து வந்து விட்டால் ஒரு சிறிய பாத்திரத்தில் தண்ணீர் எடுத்துக் கொண்டு நபி (ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம்) அவர்களுடைய பள்ளிவாசலுக்கு செல்லுவார்கள். சுபுஹு தொழும் வரை பள்ளிவாசலிலிருந்து வர மாட்டார்கள்.
(நூல் : ஸுனனுல் குப்ரா பைஹகீ, ஹதீஸ் எண் : 4609, பாகம் : 2, பக்கம் : 696)
عَنْ أَبِي إِسْحَاقَ الْهَمْدَانِيِّ، قَالَ: " خَرَجَ عَلِيُّ بْنُ أَبِي طَالِبٍ عَلَيْهِ السَّلَامُ فِي أَوَّلِ لَيْلَةٍ مِنْ شَهْرِ رَمَضَانَ وَالْقَنَادِيلُ تُزْهِرُ، وَكِتَابُ اللَّهِ يُتْلَى فِي الْمَسَاجِدِ، فَقَالَ: نَوَّرَ اللَّهُ لَكَ يَا عُمَرُ بْنَ الْخَطَّابِ فِي قَبْرِكَ، كَمَا نَوَّرْتَ مَسَاجِدَ اللَّهِ بِالْقُرْآنِ .
(فضائل رمضان - لإبن أبي الدنيا، ص : ٥٨)
ரமளான் மாதத்தின் முதல் பிறையன்று அலி (ரளியல்லாஹு அன்ஹு) அவர்கள் பள்ளிவாசல் பக்கமாக சென்றார்கள். அப்போது பள்ளிவாசலில் விளக்கி எரிந்து கொண்டு குர்ஆன் ஓதுகிற சத்தம் கேட்டது. இதைப் பார்த்த அலி (ரளியல்லாஹு அன்ஹு) அவர்கள், " உமர் இப்னு கத்தாபே!பள்ளிவாசலை குர்ஆனை கொண்டு ஒளிமயமாக ஆக்கியது போன்று உங்களுடைய கப்ரையும் அல்லாஹ் ஒளிமயமாக ஆக்குவானாக!" என்று துஆ செய்தார்கள்.
(நூல் : ஃபளாயிலு ரமளான், பக்கம் : 58)
★. புறம் பேசாமல் இருப்போம்
قَالَ ابْنُ المُنْكَدِرِ - رَحِمَهُ اللّٰهُ تَعَالَى - : الصَّائِمُ إِذَا اغْتَابَ خَرَقَ ، وإِذَا اسْتَغْفَرَ رَقَعَ
(جَامِعُ العُلُومِ وَالحِكَمِ، ٣٠٥)
இப்னுல் முன்கதிர் (ரஹ்மத்துல்லாஹி அலைஹி) அவர்கள் கூறினார்கள் : ஒரு நோன்பாளி புறம் பேசினால் அந்த நோன்பு கிழிந்து விரிசல் ஏற்பட்டு விடுகிறது. அதற்காக பாவமன்னிப்பு தேடினால் அந்த விரிசல் தைத்துவிடுகிறது (நீங்கிவிடுகிறது).
(நூல் : ஜாமிஉல் உலூம் வல் ஹிகம், பக்கம் : 305)
★. அதிகம் குர்ஆன் ஓதுவோம்
كانت عائشة - رضي الله عنها - . تقرأ في المصحف أول النهار في شهر رمضان فإذا طلعت الشمس نامت
(لطائف المعارف ، صــ : ٣١٩)
ஆயிஷா (ரளியல்லாஹு அன்ஹா) அவர்கள் ரமளான் மாதத்தில் காலையில் சூரியன் உதிக்கும் வரை குர்ஆன் ஓதுவார்கள். சூரியன் உதயமானால் தூங்கி விடுவார்கள்.
(நூல் : லதாயிஃபுல் மஆரிஃப், பக்கம் : 319)
كان عبد الله بن مسعود رضي الله عنهما يقرأ القرآن في غير رمضان من الجمعة إلى الجمعة، ويقرأه في رمضان في ثلاث
(جمال القراء وكمال الإقراء، صــ : ٣٤٦)
அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரளியல்லாஹு அன்ஹுமா) அவர்கள் ரமளான் அல்லாத மாதங்களில் ஒரு ஜும்ஆவிலிருந்து அடுத்த ஜும்ஆ வரை ஒரு குர்ஆன் ஓதி முடிப்பார்கள். ரமளான் மாதத்தில் மூன்று நாட்களுக்கு ஒரு முறை ஒரு குர்ஆன் ஓதி முடிப்பார்கள்.
(நூல் : ஜமாலுல் குர்ரா வ கமாலில் இக்ரா, பக்கம் : 346)
عن مسبح بن سعيد رحمه الله قال : كان محمد بن إسماعيل البخاري رحمه الله يختم في رمضان في النهار كل يوم ختمة، ويقوم بعد التراويح كل ثلاث ليالٍ بختمة
(سير أعلام النبلاء ، ٤٣٩/١٢)
முஸப்பிஹ் இப்னு ஸயீத் (ரஹ்மத்துல்லாஹி அலைஹி) அவர்கள் கூறினார்கள் : முஹம்மது இப்னு இஸ்மாயில் அல் புகாரி (ரஹ்மத்துல்லாஹி அலைஹி) அவர்கள் ரமளான் மாதத்தில் தினமும் பகல் நேரத்தில் ஒரு குர்ஆன் ஓதி முடிப்பார்கள். தராவீஹ் தொழுகைக்குப் பிறகு மூன்று இரவுகளுக்கு ஒரு முறை ஒரு குர்ஆன் ஓதி முடிப்பார்கள்.
(நூல் : ஸியரு அஃலாமின் நுப்லா, பாகம் : 12, பக்கம் : 439)
قال يحيى بن نصر رحمه الله : ربما ختم أبو حنيفة رحمه الله القرآن في رمضان ستين مرة
(تهذيب الكمال ، ٤٣٦/٢٩)
யஹ்யா இப்னு நஸ்ர் (ரஹ்மத்துல்லாஹி அலைஹி) அவர்கள் கூறினார்கள் : இமாம் அபூ ஹனீஃபா (ரஹ்மத்துல்லாஹி அலைஹி) அவர்கள் ரமளான் மாதத்தில் 60 முறை குர்ஆன் ஓதி முடிப்பார்கள்.
(நூல் : தஹ்தீபுல் கமால், பாகம் : 29, பக்கம் : 436)
قال الربيع بن سليمان رحمه الله : كان الشافعي يختم في كل شهر ثلاثين ختمة، وكان يختم في شهر رمضان ستين ختمة، سوى ما يقرأ في الصلاة.
(مناقب الشافعي للبيهقي، ٢٧٩/١)
ரபீஃ இப்னு ஸுலைமான் (ரஹ்மதுல்லாஹி அலைஹி) அவர்கள் கூறினார்கள் : இமாம் ஷாஃபிஈ (ரஹ்மத்துல்லாஹி அலைஹி) அவர்கள் ஒவ்வொரு மாதமும் 30 முறை குர்ஆன் முடிப்பார்கள். ரமளான் மாதத்தில் 60 முறை குர்ஆன் முடிப்பார்கள். தொழுகையில் ஓதுவதைத் தவிர.
(நூல்: மனாகிபுஷ் ஷாஃபிஈ லில் பைஹகி, பாகம்: 1, பக்கம்: 279)
كان قتادة رحمه الله : إذا جاء رمضان ختم في كل ثلاث ، فإذا جاء العشر ختم كل ليلة
(سير أعلام النبلاء ، ٢٧٦/٥)
ரமளான் மாதம் வந்தால் கத்தாதா (ரஹ்மத்துல்லாஹி அலைஹி) அவர்கள் மூன்று நாட்களுக்கு ஒரு முறை ஒரு குர்ஆன் ஓதி முடிப்பார்கள். ரமளான் கடைசி பத்து நாட்களில் ஒவ்வொரு இரவிலும் (தினமும்) ஒரு குர்ஆன் ஓதி முடிப்பார்கள்.
(நூல் : ஸியரு அஃலாமின் நுப்லா, பாகம் : 5, பக்கம் : 276)
عن إبراهيم النخعي رحمه الله : أنه كان يختم القرآن في شهر رمضان في كلِّ ثلاث، فإذا دخلت العشر ختم في ليلتين واغتسل كلَّ ليلة
(مصنف عبد الرزاق ، رقم الحديث : ٧٧٠٥ ، ٢٥٤/٤)
இப்ராஹிம் அந்நகயீ (ரஹ்மத்துல்லாஹி அலைஹி) அவர்கள் ரமளான் மாதத்தில் மூன்று நாட்களுக்கு ஒரு முறை குர்ஆன் ஓதி முடிப்பார்கள். ரமளான் மாதம் கடைசி பத்து நாட்களில் இரண்டு நாட்களுக்கு ஒரு முறை ஒரு குர்ஆன் ஓதி முடிப்பார்கள். அதே பத்து நாட்களில் இரவில் தினமும் குளிப்பார்கள்.
(நூல் : முசன்னஃப் அப்துர் ரஜ்ஜாக், பாகம் : 4, பக்கம் : 254, ஹதீஸ் எண் : 7705)
كان سفيان الثوري -رحمه الله- إذا دخل رمضان ترك جميع العبادات، وأقبل على قراءة القرآن
(لطائف المعارف لابن رجب (صــ ٣١٨)
ரமளான் மாதம் வந்துவிட்டால் இமாம் ஸுஃயானுஸ் ஸவ்ரீ (ரஹ்மத்துல்லாஹி அலைஹி) அவர்கள், எல்லா இபாதத்களையும் விட்டுவிட்டு (குறைத்து விட்டு) குர்ஆன் ஓதுவதில் ஈடுபட்டுவிடுவார்கள்.
(நூல் : லதாயிஃபுல் மஆரிஃப், பக்கம் : 318)
قال معتمر بن سليمان - رحمه الله : كان أبي يُوقظ كلَّ مَنْ في الدار إذا دخل شهر رمضان، ويقول : قوموا ؛ فلعلكم لا تدركوه بعد عامكم هذا.
(موسوعة لابن أبي الدنيا، ٧٣/٢)
முஃதமிர் இப்னு ஸுலைமான் (ரஹ்மத்துல்லாஹி அலைஹி) அவர்கள் கூறினார்கள் : ரமளான் மாதம் வந்துவிட்டால் (தஹஜ்ஜுத் நேரத்தில்) என் தந்தை குடும்பத்தாரை எழுப்பிவிட்டு, "எழுந்திருங்கள்! இதற்கு பிறகு வரக்கூடிய ரமளானை நீங்கள் அடையாமல் இருக்கலாம் (இது தான் உங்களுக்கு கடைசி ரமளானாக இருக்கலாம், அதனால் எழுந்து அல்லாஹ்வை வணங்குங்கள்) என்று கூறுவார்கள்.
(நூல் : மவ்ஸூஅது இப்னு அபித்துன்யா, பாகம் : 2, பக்கம் : 73)
كان ابنُ عمر رضي الله عنهما إذا أفطَرَ يقولُ : اللّهم، يا واسع المغفرة اغفر لي
(لطائف المعارف ، صــ : ٣٧٨)
நோன்பு திறக்கும் சமயத்தில் இப்னு உமர் (ரளியல்லாஹு அன்ஹுமா) அவர்கள்,
"அல்லாஹும்ம யா வாசிஅல் மக்ஃபிரா இக்ஃபிர் லீ",
"யா அல்லாஹ்! மன்னிப்பதில் விசாலமானவனே! என்னை மன்னிப்பாயாக!"
என்று துஆ செய்வார்கள்.
(நூல் : லதாயிஃபுல் மஆரிஃப், பக்கம் : 378)
قال الإمام أحمد - رحمه الله - : 《 كانوا إذا صاموا قعدوا في المساجد وقالوا: نحفظ صومنا ولا نغتاب أحداً، ولا نعمل عملاً يجرح به صومنا 》.
|[ المغني ، ٤/٤٤٧) ]|
இமாம் அஹ்மத் இப்னு ஹம்பல் (ரஹ்மத்துல்லாஹி அலைஹி) அவர்கள் கூறினார்கள் : (சஹாபாக்கள், இமாம்கள், வலிமார்கள் போன்ற பெரியார்கள்) நோன்பு வைத்தால் மஸ்ஜிதில் அமர்ந்து விடுவார்கள். கேட்டால் நாங்கள் யாரைப் பற்றியும் புறம் பேசாமல், நோன்பை வீணாக்கும் காரியங்களில் ஈடுபடாமல் எங்கள் நோன்பை நாங்கள் பாதுகாக்கிறோம் என்று கூறுவார்கள்.
(நூல் : அல் முக்னீ, பாகம் : 4, பக்கம் : 337)
أبو ذر رضي الله عنه يقول :
يا أيها الناس ، إني لكم ناصح ، إني عليكم شفيق ،
صلوا في ظلام الليل لوحشة القبور ، وصوموا في حر الدنيا لحر يوم النشور ، وتصدقوا مخافة يومٍ عسير لعظائم الأمور.
(تاريخ دمشق ،٢١٤/٦٦)
அபூதர் (ரளியல்லாஹு அன்ஹு) அவர்கள் கூறுவார்கள் : மக்களே! நான் உங்களுக்கு உபதேசம் செய்பவனாகவும், உங்கள் மீது இரக்கமுள்ளவனாகவும் இருக்கிறேன்.
1. கப்ருகளின் தனிமையை நீக்குவதற்கு கடும் இருளில் தொழுது கொள்ளுங்கள்,
2. நாளை மறுமையில் மஹ்ஷர் மைதானத்தில் கடுமையான உஷ்ணத்திலிருந்து தப்பிப்பதற்கு, உலகத்தின் உஷ்ணத்தில் நோன்பு வைத்துக் கொள்ளுங்கள்.
3. மறுமையின் படுபயங்கரமான காரியங்களுடைய கஷ்டங்களை பயந்து (உலகத்தில்) அதிகம் சதக்கா (தான் தர்மம்) செய்யுங்கள்.
(நூல் : தாரீகு திமிஷ்க், பாகம் : 66, பக்கம் : 214)
قَالَ ابْنُ المُنْكَدِرِ - رَحِمَهُ اللّٰهُ تَعَالَى - : الصَّائِمُ إِذَا اغْتَابَ خَرَقَ ، وإِذَا اسْتَغْفَرَ رَقَعَ
(جَامِعُ العُلُومِ وَالحِكَمِ، ٣٠٥)
இப்னுல் முன்கதிர் (ரஹ்மத்துல்லாஹி அலைஹி) அவர்கள் கூறினார்கள் : ஒரு நோன்பாளி புறம் பேசினால் அந்த நோன்பு கிழிந்து விரிசல் ஏற்பட்டு விடுகிறது. அதற்காக பாவமன்னிப்பு தேடினால் அந்த விரிசல் தைத்துவிடுகிறது (நீங்கிவிடுகிறது).
(நூல் : ஜாமிஉல் உலூம் வல் ஹிகம், பக்கம் : 305)
ரமளான் மாதத்தில் நிறைய பேர் துணி கடைகளிலும், காலையிலிருந்து மாலை வரை ஏதும் சாப்பிடக்கூடாது அவ்வளவு தானே என்று வீணான பொழுது போக்கிலும் நேரத்தை வீணடிப்பார்கள். இது போன்ற எண்ணத்தை விட்டுவிட்டு நம் முன்னோர்கள் ரமளானை எப்படி திட்டமிட்டு அமல்களை செய்வதன் மூலம் கழித்தார்களோ அதே போன்று நாமும் ரமளானை நல்ல முறையில் பயன்படுத்த வேண்டும்.
வல்ல ரஹ்மான் வருகிற ரமளான் மாதத்தை நல்லபடியாக அடைந்து, அதில் அதிகமதிகம் அமல் செய்யும் பாக்கியத்தை தந்தருள்வானாக! ஆமீன்…!