ஆசிரியரின்
அறிவாற்றலுக்கு முன் தனது அறிவை சாதாரணமாக எண்ண வேண்டும்.
மிக அன்புடனும்
பாசத்துடனும் அவரின் கட்டளைகளை நிறைவேற்ற வேண்டும்.
அவர் நம்மை இழிவு
படுத்தினாலும் அதை நாம் கண்ணியமாக கருத வேண்டும்.
ஆசிரியர்களை நாம்
நேரில் எப்படி கண்ணியப்படுத்துகிறோமோ அது போல அவர்களுக்கு பின்னாலும் மரியாதை
செலுத்த வேண்டும்.
அவர்களைப் பற்றி
புறம் போசாமலிருக்க வேண்டும்.
அவர்களைப் பற்றி
யாராவது புகார் செய்ய தொடங்கினால் அதை கண்டிக்க வேண்டும்.
அவர் கூறும் விசயங்களைக்
கவனமாக கேட்க வேண்டும். அக்கம் பக்கம் முகத்தை திருப்பாமலிருக்க வேண்டும்.
அவர்கள் கோபித்தாலும்
பொறுத்துக் கொள்ள வேண்டும்.
அவர்கள் முன்
சப்தமிட்டு பேசாமலிருக்க வேண்டும்.
அவர்களின்
நலனுக்காக எப்போதும் துஆ செய்ய வேண்டும்.
அவர்கள் மரணித்தப்
பின் அவர்களின் பாவ மன்னிப்பிற்காக துஆ செய்து வர வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக