வியாழன், 29 நவம்பர், 2018

இறை தீர்க்கதரிசி.

( ஆடியோ உரை  : மௌலானா மௌலவி அல்ஹாபிழ் அல்ஹாஜ்
                   S.Sஅஹ்மது பாஜில் பாகவி
    தலைமை இமாம் மஸ்ஜித் இந்தியா கோலாலம்பூர் மலேசியா.)

அண்ணல் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம் அவர்கள் அல்லாஹ்வினுடைய திருத்தூதராக இருக்கிறார்கள்.
உண்மையிலேயே அவர்கள் ஒரு தீர்க்கதரிசி தான் என்பதற்கு எத்தனையோ ஆதார சான்றுகள் குர்ஆனிலும் ஹதீஸிலும் நிரம்ப இடம்பெற்றுள்ளது. 

குர்ஆனே அவர்களுடைய பெரிய ஒரு முழுமையான அத்தாட்சியாகும். நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய முழுமையான வாழ்க்கை வரலாறு அவர்கள் ஒரு தீர்க்கதரிசி தான் என்பதற்கு ஆதாரமாக இருக்கிறது.

வித்தியாசமாக ஒரு செய்தியை நாம் பார்க்க வேண்டும் என்றால் பூமான் நபி ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம் அவர்களின் பொன் முகமே அவர்கள் உண்மையான நபிதான் என்பதற்கு தெளிவான ஆதாரமாக அமைந்திருந்தது.

விருப்பு வெறுப்புக்கு அப்பாற்பட்டு இயல்பாக நிதானமாக நியாயமான கண்கொண்டு யார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களை பார்ப்பார்களோ பார்த்த மாத்திரத்திலேயே பெருமானாரின் உண்மை தன்மையை புரிந்து கொள்வார்கள்.

அப்துல்லாஹ் இப்னு ஸலாம் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் யூத மத குருவாக வேதங்களைக் கற்றறிந்த ஒரு ஞானியாக இருந்தார்கள். அவர்கள் கூறினார்.

عَنْ عَبْدِ اللَّهِ بْنِ سَلَامٍ رضي الله عنه قَالَ : لَمَّا قَدِمَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الْمَدِينَةَ انْجَفَلَ النَّاسُ إِلَيْهِ ( أي : ذهبوا مسرعين إليه ) ، وَقِيلَ : قَدِمَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ، فَجِئْتُ فِي النَّاسِ لِأَنْظُرَ إِلَيْهِ ، فَلَمَّا اسْتَبَنْتُ وَجْهَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَرَفْتُ أَنَّ وَجْهَهُ لَيْسَ بِوَجْهِ كَذَّا

நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மதினாவிற்கு வருகை தந்தபொழுது நான் அவர்களைக் காண்பதற்காக வந்தேன் அப்போது நபியவர்களின் முகத்தை தெளிவாக நான் பார்த்த பொழுது அவர்களின் திருமுகம் ஒரு பொய்யானவரின் முகம் அல்ல என்பதை நான் விளங்கிக் கொண்டேன்.

அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பதுபோல பூமான் நபி ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம் அவர்களின் முகம் தெளிவானதாக பிரகாசமானதாக உண்மையின் வெளிப்பாடாக அமைந்திருந்தது.

அபு ரிம்ஸா (ரலி) அவர்கள் கூறினார்கள். நான் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் முதன் முறையாக வந்தேன். என்னோடு எனது மகனார் இருந்தார். நபிகள் நாயகத்தை எனது மகனுக்கு காட்டினேன் பெருமானாரை நான் பார்த்த பொழுது சொன்னேன் *ஹாதா நபியுல்லாஹ்* இவர்கள் அல்லாஹ்வுடைய நபிதான் என்று நான் சொன்னேன் என்றார்.

பார்த்தவர்கள் பார்த்தமாத்திரத்திலேயே அவர்களுடைய எழிலான உண்மையான அந்தத் திருமுகத்தைப் முகத்தைப் பார்த்து இவர்கள்தான் அந்த  சாந்த நபி சத்திய நபி என்பதை மிகச்சரியாகச் சொல்லி விடுவார்கள்.

فلمّا أتينا المدينة أدْنَى حيطانها نزلنا نلبس ثيابًا غير ثيابنا وإذا برجل في الطريق، فقال: من أين أقبل القوم؟ قلنا: من الربذة، قال: أين تريدون؟ قلنا: نريد المدينة. قال: وما حاجتكم فيها؟ قلنا: نُمير أهلَنا من تمرها. قال ولنا جمل أحمر قائم مخطوم، فقال: أتبيعون جملكم؟ قلنا: نعم، قال: بكَم؟ قلنا: بكذا وكذا صاعا من تمر، قال فما استنقصنا ممّا قلنا له شيئًا، ثمّ ضرب بيده فأخذ خطام الجمل فأدبر به، فلمّا تولّى عنّا بالخطام قلنا: والله ما صنعنا شيئًا وما بِعْنا مَن لا يُعْرَف(*). قال: تقول المرأة الجالسة: لقد رأيتُ رجلًا كأنّ وجهه شقّة القمر ليلة البدر، لا يظلمكم ولا يغدر بكم وأنا ضامنة لثمن جملكم. فأتانا رجل فقال: أنا رسولُ رسولِ الله صَلَّى الله عليه وسلم، إليكم. هذا تمركم فكلوا واشبعوا واكتالوا. قال: فأكلنا واكتلنا واستوفينا وشبعنا، ثمّ دخلنا المدينة فأتينا المسجد فإذا هو يخطب على المنبر، فسمعنا من قوله يقول: "تصدّقوا فإنّ الصدقة خير لكم، واليد العُلْيا خير من اليد السّفْلى، وابْدَأ بمن تَعُول أمّك وأباك وأختك وأخاك ثمّ أدْناك فأدْناك


ஜாமிஃ ப்னு ஷத்தாது அவர்கள் கூறினார்கள். எங்களில் தாரிக் என்ற ஒரு மனிதர் இருந்தார் அவர் மதினாவில் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களைக் கண்டதைப் பற்றி சொன்னார். முதன்முதலாக நபியவர்களை தாரிக் (ரலி) அவர்கள் பார்த்த பொழுது முன்பின் அறிமுகமில்லாத எங்களைப் பார்த்து நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், உங்களிடம் விற்பனை செய்வதற்கு ஏதாவது பொருள் இருக்கிறதா என்று கேட்டார்கள் ஆம் இதோ எனது ஒட்டகம் விற்பனைக்கு உள்ளது என்றோம் இதன் விலை எவ்வளவு என்று கேட்டார்கள் நாங்கள் அதன் விலையை பேரீத்தம் பழத்தின் அளவைக் கொண்டு நிர்ணயித்துச் சொன்னோம்.

அதை பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஏற்றுக் கொண்டு அந்த ஒட்டகத்தை கைப்பற்றி மதினாவுக்கு கொண்டு சென்றார்கள். நபியவர்களை பார்த்ததும் இந்த வியாபாரத்தை நடத்தி முடித்து ஒட்டகத்தையும் அனுப்பி விட்டோம்.  அதன் பிறகு நாங்கள் பேசிக் கொண்டோம் முன்பின் அறிமுகமில்லாத ஒரு மனிதரிடம் நாம் ஒட்டகத்தை விற்றுவிட்டோம் அவரும் ஒட்டகத்தைக் கொண்டு சென்றுவிட்டார் அதனுடைய விலையை அவர் கொண்டு வருவாரா அல்லது வரமாட்டாரா...? என்று கூட நமக்குத் தெரியாது அவரை எங்கே போய் தேடுவது என்றும் முன்பின் தெரியாதவரிடம் ஒட்டகத்தை விற்று விட்டோமே என்று நாங்கள் சொன்ன பொழுது எங்களோடு இருந்த ஒரு பெண்மணி சொன்னாள் இந்த ஒட்டகத்தின் விலைக்கு நான் பொறுப்பேற்றுக் கொள்கிறேன். ஏனென்றால் அந்த முகம் பொய் பேசக்கூடிய முகம் அல்ல. 14 ஆம் இரவில் இலங்கக்கூடிய பூரண சந்திரனைப் போல அந்த மனிதருடைய முகத்தை நான் பார்த்தேன். அவர் உங்களை ஏமாற்றி விட மாட்டார் என்று சொன்னாள்.

காலையில் ஒரு மனிதர் பேரித்தம் பழங்களோடு வந்தார் நான் அல்லாஹ்வினுடைய ரசூலுடைய தூதனாக இங்கு வந்துள்ளேன் இதோ இங்கு இருக்கும் பேரித்தம் பழங்களை நீங்கள் முதலில் எடுத்து சாப்பிட வேண்டும் நன்றாக சாப்பிட்ட பிறகு ஒட்டகத்திற்கு பேசிய அந்த பேரித்தம் பழத்தை நீங்களே அளந்து எடுத்துக் கொள்ளுங்கள் என்று சொன்னார் நாங்களும் அவ்விதமே செய்தோம் என்று சொல்கிறார்.

ملك عمان ذكر وثيمة في الردة عن بن إسحاق أن النبي صلى الله عليه وسلم بعث إليه عمرو بن العاصي يدعوه إلى الاسلام فقال لقد دلني على هذا النبي الأمي إنه لا يأمر بخير الا كان أول آخذ به ولا ينهى عن شر إلا كان أول تارك له وأنه يغلب فلا يبطر ويغلب فلا يهجر وأنه يفي بالعهد وينجز الوعد وأشهد أنه نبي ثم أنشد أبياتا منها

உம்மான் நாட்டு அரசர் ஜுனந்தி (ரலி) அவர்கள் கூறுகிறார்கள். அல்லாஹ்வுடைய தூதர் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் அந்த மன்னரை இஸ்லாத்தின் பக்கம் அழைத்த பொழுது அவர் கூறினார். இந்த நபி உண்மையானவர் தான் என்பதற்கு எனக்கு அறிவித்த  சான்றுகள் என்னவென்றால்

இவர் எந்த ஒரு நன்மையை ஏவினாலும் முதலில் தான் பின்பற்றுபவராக அதை செயல்படுத்த கூடியவராக இருக்கிறார். எந்த ஒரு தீய காரியத்தை விட்டும் இவர் மக்களை தடுத்தாலும் முதலில் அதை செய்யாதவராக இவர் இருக்கிறார். வெற்றி வரும் பொழுது இவரிடம் ஆணவம் இருப்பதில்லை சில சமயங்களில் தோல்வி வரும்போது துவண்டு விடுவதுமில்லை வாக்குறுதிகளை நிறைவேற்றுகிறார் ஒப்பந்தங்களை நிறைவேற்றுகிறார். நான் இவர் நபிதான் என்பதற்கு சாட்சி பகர்கிறேன் என்று உம்மான் நாட்டு அரசர் ஜுனந்தி (ரலி) கூறினார்.

5860 - وعن ابن عباس رضي الله عنهما ، قال : إن ضمادا قدم مكة وكان من أزد شنوءة ، وكان يرقي من هذا الريح ، فسمع سفهاء أهل مكة يقولون : إن محمدا مجنون . فقال : لو أني رأيت هذا الرجل لعل الله يشفيه على يدي . قال : فلقيه . فقال : يا محمد ! إني أرقي من هذا الريح ، فهل لك ؟ فقال رسول الله - صلى الله عليه وسلم : ( إن الحمد لله ، نحمده ونستعينه ، من يهده الله فلا مضل له ، ومن يضلل فلا هادي له ، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ، وأشهد أن محمدا عبده ورسوله ، أما بعد ) فقال : أعد علي كلماتك هؤلاء فأعادهن عليه رسول الله - صلى الله عليه وسلم - ثلاث مرات فقال : لقد سمعت قول الكهنة وقول السحرة وقول الشعراء ، فما سمعت مثل كلماتك هؤلاء ، ولقد بلغن قاموس البحر ، هات يدك أبايعك على الإسلام ، قال : فبايعه . رواه مسلم .

ழிமாத் என்பவர் பெருமானாரை காண்பதற்கு தொலைதூரத்தில் இருந்து வருகை தந்து நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் காண்கிறார்கள். அப்போது நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள்

"நிச்சயமாக புகழ் அனைத்தும் அல்லாஹ்வுக்கே நாம் அவனை புகழ்கிறோம் அவனிடத்தில் உதவி தேடுகிறோம் எவருக்கு அல்லாஹ் நேர்வழி காட்டுவானோ அவரை வழி கெடுப்பார் யாருமில்லை. எவரை அவன் வழிதவறச்செய்வானோ அவருக்கு நேர்வழி காட்டுபவர் யாருமில்லை. வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை என்று சாட்சி கூறுகிறேன் நிச்சயமாக முஹம்மத் அவனது அடியாராகவும் தூதராகவும் இருக்கிறார்கள் என்று நான் சாட்சியம் பகருகிறேன்" என்ற இந்த பேச்சை கொண்டு அவரிடம் தொடங்கினார்கள்.

இதைக்கேட்ட லிமாத் (ரலி) அவர்கள் இப்போது சொன்ன அந்த வாசகங்களை திரும்பச் சொல்லுங்கள் இது கடலின் ஆழத்தை அடைந்துவிட்டது கைகளை நீட்டுங்கள் நான் உங்களை ஏற்றுக் கொண்டு உண்மை பிரமாணம் செய்கிறேன் என்று சொன்னார்கள்.

இப்படி பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களை பார்த்த உடனேயே அவர்களின் முகத்தைப் பார்த்தும் ஆரம்பமாக அவர்களின் பேச்சை கேட்டும், உடனடியாக ஏற்றுக்கொண்டவர்கள் அதிகமாக இருக்கிறார்கள்.


அப்துல்லாஹ் இப்னு ரவாஹா (ரலி) என்ற நபித்தோழர் (இஸ்லாத்திற்கு வருவதற்கு முன்பு) நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப் பார்த்து ஒரு கவி படித்தார்

لَو لَم تَكُن فيهِ آياتٌ مُبَيَّنَةٌ

كانَت بَداهَتُهُ تُنبيكَ بِالخَبَرِ

"இவரிடத்தில் தெளிவான அத்தாட்சிகள் இல்லை என்றாலும் கூட
அவருடைய முகமே இவர் உண்மையான நபி தான் என்பதற்கு சாட்சிகள் சொல்லும். என்று படித்தார்.

இப்படி பூமான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் முகமே ஒரு ஆதாரமாக அவர்கள் உண்மையான நபி தான் என்பதற்கு அத்தாட்சியாக இருந்தது என்பதை நாம் பார்க்கிறோம்.

பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் ஒரு அழகான மனிதராக இருந்தார்கள் என்பது மட்டுமல்ல சாந்தமான முகத்தை பெற்றவராகவும் திகழ்ந்தார்கள்.

பரா ப்னு ஆஸிப் (ரலி)யல்லாஹு தஆலா அன்ஹு அவர்கள் கூறுகிறார்கள். நபியவர்கள் சிகப்பு ஆடை உடுத்தி நான் கண்ட பொழுது அவர்களை விட அழகான ஒரு மனிதரை நான் கண்டதே இல்லை என்று கூறினார்கள்.

عَنْ أَبِي يُونُسَ مَوْلَى أَبِي هُرَيْرَةَ , أَنَّهُ سَمِعَ  أَبَا هُرَيْرَةَ , يَقُولُ :  " مَا رَأَيْتُ شَيْئًا أَحْسَنَ مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى  اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ، كَأَنَّ الشَّمْسَ تَجْرِي فِي وَجْهِهِ ، وَمَا رَأَيْتُ أَحَدًا فِي مَشْيِهِ مِنَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ، كَأَنَّ الأَرْضَ تُطْوَى لَهُ ، إِنَّا لَنَجْتَهِدُ ، وَإِنَّهُ لَغَيْرُ مُكْتَرِثٍ صَلَوَاتُ اللَّهِ عَلَيْهِ وَسَلَّمَ تَسْلِيمًا

அபூஹுரைரா (ரலி)யல்லாஹு தஆலா அன்ஹு அவர்கள் கூறுகிறார்கள். அல்லாஹ்வுடைய தூதரை விட மிக அழகான ஒருவரையும் நான் கண்டதே இல்லை சூரியனே அவர்கள் முகத்தில் இலங்குவது போன்று இருக்கும். அவர்கள் சிரித்தால் முத்துக்கள் ஜொலிக்கும் என்று கூறினார்கள்

ஜாமிர் ப்னு ஷம்ரா (ரலி) அவர்களிடம் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களது முகம் கத்தியைப் போன்று ஒடுக்கமானதாக நீளமானதாக இருக்கும் என்று கேட்கப்பட்டது அதற்கு அவர்  இல்லை சூரியன் சந்திரன் போன்ற வட்ட வடிவமாக இருக்கும் என்று கூறினார்கள்.

பெருமானாரை வர்ணிக்கும் உம்மு வஃபத் (ரலி) அவர்கள் கூறினார்கள். தூரத்தில் இருந்து பார்த்தால் மக்களில் அவர் ஆண் அழகராக இருக்கிறார் அருகில் வந்து நெருங்கி பழகினால் இனிமையானவராகவும் ரொம்ப அழகானவராகவும் அவர் திகழ்கிறார் என்று கூறினார்கள்.
இப்னு அபி ஹாலா (ரலி)யல்லாஹு தஆலா அன்ஹு அவர்களின் ஹதீஸிலும் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் முகம் 14.ம் பிறை சந்திரனைப் போல இலங்குகிறது என்று வர்ணித்திருக்கிறார்கள்.

ஹஜ்ரத் அலி (ரலி) அவர்கள் பெருமானாரைப் பற்றி வர்ணித்துக் கூறும் பொழுது யார் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம் அவர்களின் முகத்தை முதன் முதலில் பார்த்தாலும் கண்ணியம் காரணமாக அவருக்கு ஒரு வகையான பயம் ஏற்படும் ஆனால் அருகில் வந்து நெருங்கிப் பழக ஆரம்பித்து விட்டால் பெருமானாரை நேசிப்பார்கள் பிரியப்படுவார்கள்.

பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களை வர்ணிக்க கூடியவர்கலெல்லாம் சொல்லக்கூடிய ஒரு வார்த்தை என்னவென்றால் அவர்களைப் போன்ற ஒரு ஆணழகரை ஒரு சாந்த முகத்தை பெற்றவரை நாங்கள் பார்த்ததே இல்லை என்பதுதான் எல்லோருடைய ஏகோபித்த முடிவாக இருக்கிறது.

பூமான் நபி ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம் அவர்கள் ஒரு அற்புதமான வடிவத்தையும் எழிலான ஒரு தோற்றத்தையும் பெற்றிருந்தார்கள். அவர்களின் தோற்றமே அவர்கள் ஒரு சத்திய நபிதான் என்பதற்கு சான்றாக இருந்தது.

நபியவர்கள் எந்த அளவுக்கு அழகானவராக இருந்தார்கள் என்றால் உலகத்தின் மொத்த அழகும் அவர்களிடத்தில் கொட்டப்பட்டது என்று சொன்னால் அது உண்மையாகும்.

பூமான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்கள் ஒரு அற்புதமான தலைவர் என்ற ஆதாரத்தோடு அவர்கள் இவ்வுலகிற்கு வந்தார்கள் என்றாலும் கூட ஒருவேளை எவ்வித ஆதாரமும் இல்லாமல் அவர்கள் வந்திருந்தாலும் அவர்களை நேரில் பார்த்தாலே அவர்கள் உண்மையானவர்கள்தான் என்பதைப் புரிந்து கொண்டு சொல்லும் அளவிற்கு சொல்கிற அளவிற்கு அவர்களுடைய முகத்தோற்றம் அமைந்திருந்தது என்று அறிஞர்கள் கூறுகிறார்கள்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்களைப்பற்றி நபித்தோழர்கள் கூடுதல் குறைவின்றி அவர்களுடைய உடல் அம்சத்தையும் உடல் லட்சணத்தையும் தெளிவாக விரிவாக எடுத்துச் சொல்கிறார்கள்.

இவைகளெல்லாம் மிகைப்படுத்தப்பட்ட செய்திகள் அல்ல உண்மையான செய்திகள்.

கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களைப் பார்த்த கண்களே கண்கள்.

அவர்களைப் பருகிய கண்களே உண்மையான பாக்கியம் பெற்ற கண்கள்.

நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை காணக் கூடிய பாக்கியத்தை அல்லாஹ் நமக்கும் வழங்கி அருள் புரிவானாக.

( எழுத்தாக்கம்  :   A. முஹம்மது ஹதீஸ் மஸ்லஹி.
             A.காதிர் மீரான் மஸ்லஹி. )
                          
                                                    
  ( தொடர்புக்கு  :       9003609448  :     99521299706 )

ஆக்கம்  NO : 5

1 கருத்து:

  1. மகரந்தம் தேடி இந்த மலரில் அமர்ந்த வண்டுகளில் நானும் ஒருவன்

    பதிலளிநீக்கு