அண்ணல் நபி (ஸல்)
அவர்களின் இரண்டு தனித்தன்மைகள்.
( உரை ஆடியோ : மௌலானா மௌலவி அல்ஹாஜ் காஜா முயீனுத்தீன் பாகவி ஹழ்ரத் அவர்கள்.
مَّا
كَانَ مُحَمَّدٌ أَبَا أَحَدٍ مِّن رِّجَالِكُمْ وَلَٰكِن رَّسُولَ اللَّهِ
وَخَاتَمَ النَّبِيِّينَ ۗ وَكَانَ اللَّهُ بِكُلِّ شَيْءٍ عَلِيمًا
عَنْ أَبِيهِ
، عَنْ أَبِي
هُرَيْرَةَ ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ , قَالَ : "
فُضِّلْتُ عَلَى الأَنْبِيَاءِ بِسِتٍّ : أُعْطِيتُ
جَوَامِعَ الْكَلِمِ ، وَنُصِرْتُ بِالرُّعْبِ ، وَأُحِلَّتْ لِيَ الْغَنَائِمُ ،
وَجُعِلَتْ لِيَ الأَرْضُ طَهُورًا وَمَسْجِدًا ، وَأُرْسِلْتُ إِلَى النَّاسِ
كَافَّةً ، وَخُتِمَ بِيَ الأَنْبِيَاءُ صَلَّى اللَّهُ عَلَيْهِمْ "
மனித புனிதராம்
அல்லாஹ்வின் தனிப்பட்ட விசேஷ தன்மைபெற்ற கண்மணி நாயகம் (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ்
எத்தனையோ விசேஷ பண்புகளை அளித்திருந்தாலும், குறிப்பாக அல்லாஹ் அவர்களுக்கு
அருளியிருக்கும் இரண்டு பண்புகளை நாம் நம்புவது நம்மீது கடமையாக
ஆக்கப்பட்டிருக்கிறது.
அந்த இரண்டு
சிறப்பம்சங்களை நாம் நமது உள்ளத்தில் ஆழப்பதிய வைத்துக் கொள்ளவேண்டும்.
முதலாவது உலகத்தில் வந்த
எல்லா நபிமார்களும் குறிப்பிட்ட காலகட்டத்திற்கு குறிப்பிட்ட சமூகத்திற்கு
குறிப்பிட்ட ஒரு இனத்திற்கு தான் நபியாக அனுப்பபட்டார்கள். ஆனால் அருமை நாயகம் (ஸல்)
அவர்கள் உலகபொது நபியாக அனுப்பபட்டார்கள்.
குறிப்பிட்ட ஒரு இனத்தினுடைய
நபியல்ல குறிப்பிட்ட ஒரு காலத்திற்கு அனுப்பப்பட்ட நபியல்ல குறிப்பிட்ட ஒரு
ஊருக்கு அனுப்பபட்ட நபியுமல்ல. "உலகப் பொது நபியாக" அல்லாஹ் அவர்களை அனுப்பினான். கியாமத் நாள் வரையுள்ள ஆக
கடைசி மனிதனுக்கும் கண்மணி நாயகம் (ஸல்) அவர்கள் நபியாக அனுப்பபட்டிருக்கிறார்கள்.
இது நபி (ஸல்)
அவர்களுக்கே உரிய விசேஷ தன்மையாகும்.
இரண்டாவது விசேஷ தன்மை
என்னவென்றால் அவர்கள் தான் "உலகத்தின் இறுதி
நபி." அவர்களோடு நபித்துவம் முடிந்து விட்டது.
அதற்கு பிறகு உலகத்தில் நபித்துவம் என்பது இல்லை.
இந்த தீனை நான்
நிறைவாக்கி விட்டேன். இஸ்லாமை எனது மார்க்கமாக நான் பொருந்திக்கொண்டேன் என்று
அல்லாஹுதஆலா அருமை நாயகம் (ஸல்) அவர்களின் நுபுவ்வத்தோடு நபித்துவத்தை முடித்து
வைத்து விட்டான்.
நாயகம் (ஸல்) அவர்கள்
தான் உலகத்தின் இறுதி நபி அவர்களுக்கு பின் நபிக்கான தேவையையும் அல்லாஹ்
வைக்கவில்லை. அதன் பிறகு உலகத்தில் அல்லாஹ் யாரையும் நபியாக அனுப்பவும் இல்லை.
இந்த இரண்டையும் நம்புவது
அது நமது ஈமான் சம்பந்தப்பட்ட விசயம்.
ஒரு இறுதி நபிக்கு
கொடுக்கவேண்டிய எல்லா அம்சங்களையும் தொகுத்து
அல்லாஹ் அண்ணல் நபி (ஸல்) அவர்களுக்கு வழங்கி விட்டான்.
وَّهُوَ الَّذِىْۤ اَنْزَلَ اِلَيْكُمُ الْـكِتٰبَ مُفَصَّلاً ؕ
அவன்தான் உங்களுக்கு
(விரிவான) விளக்கமான வேதத்தை இறக்கியுள்ளான்; 6:114
உலகத்திற்கு வந்த எல்லா
நபிமார்களும் குறிப்பிட்ட ஒரு துறைசார்ந்த காரியத்திற்குதான் பாடுபட்டார்கள்.
செய்யதினா சுஐபு (அலை)
அவர்கள் பொருளாதார ரீதியாக உலகத்தில் என்னென்ன சீரழிவு ஏற்பட்டிருந்ததோ
அதையெல்லாம் நீக்குவதற்காக பாடுபட்டார்கள் என குர்ஆன் கூறுகிறது.
وَاِلٰى مَدْيَنَ اَخَاهُمْ شُعَيْبًا ؕ قَالَ يٰقَوْمِ اعْبُدُوا
اللّٰهَ مَا لَـكُمْ مِّنْ اِلٰهٍ غَيْرُهٗ ؕ وَلَا تَـنْقُصُوا الْمِكْيَالَ
وَالْمِيْزَانَ اِنِّىْۤ اَرٰٮكُمْ بِخَيْرٍ وَّاِنِّىْۤ اَخَافُ عَلَيْكُمْ
عَذَابَ يَوْمٍ مُّحِيْطٍ
11:84. மத்யனி
(நகரத்தி)லுள்ளவர்களுக்கு,
அவர்களுடைய
சகோதரராகிய ஷுஐபை (நம் தூதராக) அனுப்பிவைத்தோம். அவர் (அவர்களிடம்: “என்)
சமூகத்தவர்களே! அல்லாஹ் (ஒருவனையே) நீங்கள் வணங்குங்கள். அவனைத்தவிர உங்களுக்கு வேறு
நாயனில்லை; அளவையிலும் நிறுவையிலும்
நீங்கள் குறைவு செய்யாதீர்கள்; நீங்கள் நல்ல நிலைமையிலிருப்பதை (இப்பொழுது) நான் காண்கின்றேன்; ஆனால் (அளவிலும், நிறுவையிலும்
நீங்கள் மோசம் செய்தால்) நிச்சயமாக உங்களைச் சூழ்ந்து கொள்ளக்கூடிய
வேதனை ஒரு நாள் உங்களை வந்தடையும் என்று நான் பயப்படுகிறேன்.
அல்குர்ஆன். 11: 84
பொருளாதார ரீதியாக
குறிப்பிட்ட ஒருபகுதியில் உள்ள சீரழிவுகளை கண்டித்தும் அதை சீர்படுத்தவும் தான் சுஐபு
(அலை) அவர்கள் நபியாக அனுப்பபட்டார்கள்.
செய்யதினா லூத் நபி (அலை)
அவர்கள் இழிவான அருவறுப்பான செயல்பாடுகளில் மூழ்கி ஒழுக்கம் கெட்டுப்போய் இருந்த
சமூகத்தை சீர்படுத்துவதற்காக ஒழுக்கத்தை சீராக்கும் பணிகளுக்காக நபி லூத் (அலை)
அவர்கள் நபியாக அனுப்பப்பட்டார்கள்.
செய்யதினா மூஸா (அலை)
அவர்கள் அரசியல் ரீதியாக உள்ள காரியத்தில் ஒரு தெளிவை ஏற்படுத்த நபியாக
அனுப்பப்பட்டார்கள்.
ஒவ்வொரு காலகட்டத்தில்
வந்த நபிமார்களும் குறிப்பிட்ட ஒரு துறைசார்ந்த விசயங்களை தெளிவுபடுத்துவதற்கும்
சீர்திருத்துவதற்குதான் நபியாக அனுப்பப்பட்டார்கள்.
ஆனால் உயிரினும் மேலான
கண்மணி நாயகம் (ஸல்) அவர்களை அல்லாஹ் உலகத்தின் எல்லா காரியங்களுக்கும்
வழிகாட்டுதலாக ஆக்கினான்.
لَقَدْ كَانَ لَكُمْ فِىْ رَسُوْلِ اللّٰهِ اُسْوَةٌ حَسَنَةٌ لِّمَنْ
كَانَ يَرْجُوا اللّٰهَ وَالْيَوْمَ الْاٰخِرَ وَذَكَرَ اللّٰهَ كَثِيْرًا ؕ
33:21. அல்லாஹ்வின்
மீதும், இறுதி நாளின் மீதும் ஆதரவு
வைத்து, அல்லாஹ்வை அதிகம்
தியானிப்போருக்கு நிச்சயமாக அல்லாஹ்வின் தூதரிடம் ஓர் அழகிய முன்மாதிரி உங்களுக்கு
இருக்கிறது.
அல்குர்ஆன். 33:21
நபியவர்களின் வாழ்வில்
ஒரு துறையில் வழிகாட்டுதல் இருக்கிறது மற்றொரு துறையில் இல்லை என்று
சொல்லமுடியாது. வாழ்க்கையில் என்னென்ன துறைகள் இருக்கிறதோ அவ்வனைத்து
துறைகளுக்கும் வழிகாட்டுதல்களை நபி (ஸல்) அவர்கள் சொல்லிச் சென்றார்கள்.
உலகத்தில் வந்த எல்லா
நபிமார்களுக்கும் அல்லாஹ் வழங்கிய அற்புதங்களும் கண்கூடாக காணக்கூடிய அற்புதமாக
இருந்தது. ஆனால் அண்ணலம் பெருமானார் (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் வழங்கிய அற்புதம்
என்பது கண்களால் காணப்படக்கூடியதாக இருந்தது.
நபி மூஸா (அலை) அவர்களின்
கைத்தடி அவர்களின் காலத்தோடு தொடர்புடையது.
நபி ஈஸா (அலை) அவர்களை
இறந்தவர்களை உயிர்பிப்பார்கள் என்பது குறிப்பிட்ட காலத்தோடு தொடர்புடையது.
ஆனால் கண்மணி நாயகம் (ஸல்)
அவர்களுக்கு அல்லாஹ் வழங்கிய பேரற்புதமான அந்த அல்குர்ஆன் குறிப்பிட்ட காலத்திற்கு
மட்டுமல்ல.
மாதிஹுர் ரஸூல் இமாம்
முஹம்மது ஷர்புத்தீனுல் பூசிரி ரஹ் அவர்கள் கவிதை வடிவில் அழகாக சொன்னார்கள்.
93- دامت لدينا ففاقت كلّ معجزة ...
அல்லாஹ் நமது நாயகம் (ஸல்)
அவர்களுக்கு வழங்கிய அற்புதம் காலங்களையெல்லாம் கடந்து கியாமத் வரை நிற்ககூடிய ஒரு
அற்புதம்.
மற்ற நபிமார்கள்
குறிப்பிட்ட காலம் குறிப்பிட்ட பகுதி குறிப்பிட்ட ஊருக்கு என்றால் நபி (ஸல்)
அவர்கள் கியாமத் நாள் வரை நபியாவர்கள். அவர்கள் இறுதி நபி என்பதால் இறுதிநாள்வரை
இருக்கவேண்டிய அற்புதமாக குர்ஆன் ஷரீபை அல்லாஹ் அனுப்பினான்.
குறிப்பட்ட காலத்தோடு
முடிந்து விடும் அற்புதங்களையும் நபி (ஸல்) அவர்கள் செய்திருக்கிறார்கள்.
இமாம் புகாரி ரஹ் அவர்கள்
தனது கிரதங்களில் பதிவு செய்திருக்கிறார்கள்.
فُضِّلْتُ عَلَى الأَنْبِيَاءِ بِسِتٍّ : أُعْطِيتُ
جَوَامِعَ الْكَلِمِ ، وَنُصِرْتُ بِالرُّعْبِ ، وَأُحِلَّتْ لِيَ الْغَنَائِمُ ،
وَجُعِلَتْ لِيَ الأَرْضُ طَهُورًا وَمَسْجِدًا ، وَأُرْسِلْتُ إِلَى النَّاسِ
كَافَّةً ، وَخُتِمَ بِيَ الأَنْبِيَاءُ صَلَّى اللَّهُ عَلَيْهِمْ
மற்ற நபிமார்களை விட
அல்லாஹ் என்னை ஆறு தனித்தன்மைகளைக் கொண்டு என்னை சிறப்புபடுத்தியிருக்கிறான்.
1. நிறைந்த அர்த்தங்கள்
பொருள்கள் கொண்ட குறைந்த வார்த்தைகளை அல்லாஹ் எனக்கு வழங்கியிருக்கிறான்.
நபியவர்களின் பேச்சில்
குறைந்த வார்த்தையில் நிறைந்த அர்த்தங்கள் இருக்கும். இப்படிப்பட்ட ஆற்றலை மாநபி (ஸல்)
அவர்களுக்கு அல்லாஹ் வழங்கினான்.
ஒரு மனிதர் நபியவர்களிடம்
வந்து எனக்கு ஏதாவது உபதேசம் செய்யுங்கள் என்றார். நபியவர்கள் நீங்கள் கோபப்படாதீர்கள்
என்றார்கள்.
அந்த மனிதரின் தனிப்பட்ட
வாழ்க்கையை எந்த உபதேசம்
சீர்படுத்துமோ அப்படிப்பட்ட உபதேசத்தை குறைந்த வார்த்தையை கொண்டு
சுருக்கமாக நபியவர்கள் சொன்னார்கள். அதன் பிறகு அந்த மனிதர் கோபப்படுவதை
விட்டொழித்தார்.
இது தனி நபருக்கு சொன்னது
என்றால் இந்த உம்மத்திற்கும் நபியவர்கள் சொல்லியிருக்கிறார்கள்.
முஃமின்களுக்கு இந்த உலகவாழ்க்கை ஒரு சிறைச்சாலை போன்றது
என்றார்கள்.
இந்த வார்த்தை அதிக
பொருள் கொண்டது. இந்த உலகம் ஒரு வகையான சிறைச்சாலையை போன்றது. இந்த உலகம் முஃமின்களுக்கு
நினைத்தபடியெல்லாம் வாழ்வதற்கான இடமல்ல . ஒரு வகையான சிறைச்சாலையை போன்ற
வாழ்கையாகதான் ஒரு முஃமினுடைய வாழ்க்கை இருக்கவேண்டும் என்ற விரிந்த கருத்துக்களை
அர்த்தங்களை கொண்ட விசயங்களை நபியவர்கள் சுருக்கமான வார்த்தையாக சொல்லித்
தந்திருக்கிறார்கள்.
2. நான் பயத்தைக்கொண்டு
உதவி செய்யப்படிருக்கிறேன்.
அண்ணலம் பெருமானார் நபி (ஸல்)
அவர்களைப்பற்றி பின்னால் குறைகூறுபவர்கள் நபிக்கு முன்னால் வந்தால் பயந்து
போவார்கள். அப்படிப்பட்ட சிறப்பை அல்லாஹ் நபிக்கு வழங்கியிருந்தான்.
மிகப்பெரும் எதிரியாக
இருந்தாலும் சரி, மாறுபட்ட கருத்துடையவராக
இருந்தாலும் சரி அவர்கள் நபியவர்களின் முன்னால் வந்தால் ஒருவிதமான பயம் அவர்களின்
உள்ளங்களில் ஏற்படும்.
ஒரு மாத தொலைதூரத்திற்கு
நான் பயத்தால் உதவி செய்யப்பட்டுள்ளேன் என்றார்கள் மாநபி (ஸல்) அவர்கள் என்
இறைவனின் புறத்திலிருந்து எனக்கு இது அருளப்பட்டுள்ளது என்றார்கள்.
3. யுத்தகளத்தில்
எதிரிகள் விட்டுச்சென்ற பொருளை அல்லாஹ் எனக்கு ஹலாலாக ஆக்கியுள்ளான்.
முன் சென்ற காலத்தில்
யுத்தகளத்தில் எதிரிகள் விட்டுச்சென்ற பொருட்களை தீயிட்டு கொளுத்தி விடவேண்டும்.
4. இந்த பூமி முழுவதையும்
சுத்தமானதாக மஸ்ஜிதாக ஆக்கித் தந்துள்ளான்.
உலகத்தின் எந்த பகுதியாக
இருந்தாலும் சரி அங்கே நஜீஸ் இல்லை என்று உறுதியாக தெரிந்தால் தாராளமாக நாம் அங்கே
தொழலாம்.
முன் சென்ற காலத்தில்
அப்படியல்ல. குறிப்பிட்ட இடத்திற்கு சென்று தான் வணங்க வேண்டும் அது தான் அன்றய
மார்க்கம்.
5. உலக மாந்தர்கள்
எல்லோருக்கும் நான் நபியாக ஆக்கப்பட்டுள்ளேன்.
முன் வந்த நபிமார்கள்
அனைவரும் ஒரு பகுதிக்கு காலத்திற்கு அல்லது ஊருக்கு மட்டும் தான் நபியாக
அனுப்பபட்டார்கள் ஆனால் நான் உலக மாந்தர் அனைவருக்கும் படைப்பினங்கள் அனைவருக்கும்
ரசூலாக அனுப்பபட்டுள்ளேன்.
6. அல்லாஹ் என்னை கொண்டு
நபித்துவத்தை முடித்து வைத்து விட்டான். என்றார்கள்.
மன்னர் நபி (ஸல்)
அவர்களோடு நபித்துவத்தை முடித்து அல்லாஹ் வைத்து விட்டான்.
இதை மாநபி (ஸல்) அவர்கள்
ஒரு அழகான உதாரணம் கூறி சொல்வார்கள்.
ஒரு அழகான கட்டடம்
கட்டப்பட்டிருந்தது. அந்த கட்டிடத்தை சுற்றிபார்ப்பவர்கள் அதன் அழகை கண்டு
வியந்தார்கள் ஆனால் அங்கே ஒரு ஒரு பகுதி மட்டும் காலியாக இருந்தது. அதை
பார்ப்பவர்கள் அனைவரும் இந்த இடம் மட்டும் நிறைவுபடுத்தியிருந்தால் இந்த கட்டடம்
நிறைவாகி இருக்குமே என்றார்கள். இதை சொல்லிவிட்டு மாநபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள்
அந்த கட்டிடம் நபித்துவம். என்னுடைய இடம் மட்டும் தான் காலியாக இருந்தது. நான்
தான் அந்த காலியான பகுதி என்னோடு நபித்துவம் நிறைவு பெற்று விட்டது எனக்கு
பின்னால் நபி கிடையது என்று கண்மணி நாயகம் (ஸல்) அவர்கள் தெளிபடுத்திச்
சொன்னார்கள்.
எனவே நபி (ஸல்)
அவர்களுக்கு அல்லாஹ் பல்வேறு சிறப்பம்சங்களை வழங்கியிருந்தாலும் குறிப்பான இந்த
இரு விசயங்களை நம்புவது முஃமின்களுடைய கடமை என்பது மட்டுமல்ல. அப்படி நம்பாமல்
இருப்பது தீனை விட்டும் வெளியாக்கி விடும்.
1. நபி (ஸல்) அவர்கள் உலகப்
பொது நபி.
2. நபித்துவத்தின் இறுதி
நபி.
அதனால் தான் மற்ற
நபிமார்களைப்பற்றி குர்ஆனில் கூறும்போது அவர்களுக்கு அல்லாஹ் குறிப்பான ஒரு
துறைசார்ந்த சார்ந்த கல்வியை கற்றுக்கொடுத்ததாக அல்லாஹ் கூறுகிறான்.
وَعَلَّمْنٰهُ صَنْعَةَ لَبُوْسٍ لَّـكُمْ لِتُحْصِنَكُمْ مِّنْۢ
بَاْسِكُمْۚ فَهَلْ اَنْـتُمْ شٰكِرُوْنَ
இன்னும் நீங்கள் போரிடும்
போது உங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கான கவசங்கள் செய்வதை, அவருக்கு நாம்
கற்றுக் கொடுத்தோம் - எனவே (இவற்றுக்கெல்லாம்) நீங்கள் நன்றி
செலுத்துகிறவர்களாக இருக்கிறீர்களா? அல்குர்ஆன். 21:80
இரும்பை வசப்படுத்தும்
கலையை நாம் தாவூத் (அலை) அவர்களுக்கு நாம் கற்று கொடுத்தோம் என்பதாக கூறுகிறான்.
عُلِّمْنَا
مَنطِقَ الطَّيْرِ
பின்னர், ஸுலைமான்
தாவூதின் வாரிசானார்; அவர் கூறினார்: “மனிதர்களே! பறவைகளின் மொழி
எங்களுக்குக் கற்றுக் கொடுக்கப்பட்டிருக்கிறது; மேலும், நாங்கள் எல்லா விதப் பொருள்களிலிருந்தும் (ஏராளமாக)
அளிக்கப்பட்டுள்ளோம்; நிச்சயமாக இது
தெளிவான அருள் கொடையாகும்.
(அல்குர்ஆன் 27:16)
நபி சுலைமான் (அலை)
அவர்களுக்கு பறவைகளின் மொழியை கற்றுக்கொடுத்தோம் என்று அல்லாஹ் கூறுகிறான்.
ஆனால் நபி (ஸல்)
அவர்களைப்பற்றி அல்லாஹ் கூறும்போது
وَعَلَّمَكَ
مَا لَمْ تَكُن تَعْلَمُ
நாயகமே தாங்கள் அறியாத
எல்லா துறைகளையும் அறிவுகளையும் எல்லா இயல்களையும் நாம் உங்களுக்கு கற்றுத் தந்தோம்
என்று அல்லாஹு தஆலா கூறுகிறான். (அல்குர்ஆன். 4:113)
எல்லா கலகட்டத்திற்கு
தெளிவை கொடுக்கவேண்டிய பொறுப்பு நபி (ஸல்) அவர்களுக்கு இருந்த காரணத்தால் அல்லாஹ்
வழங்கினான் என்பது மேற்கூறிய வசனம் விளக்கி காட்டுகிறது.
அல்லாஹ் நமது நாயகம் (ஸல்)
அவர்களின் அந்தஸ்தை உயர்வாக்கி அருள்வானாக.
அவர்களை நாம்
எப்படியெல்லாம் ஈமான் கொள்ளவேண்டுமோ எப்படியெல்லாம் பிரியம் வைக்கவேண்டுமோ அப்படி
பிரியம் வைத்து உலகிலும் மறுமையிலும் மகத்தான வெற்றியை பெற்ற ஸாலிஹீன்களில்
ஒருவராக அல்லாஹ் நம் எல்லோரையும் கபூல் செய்வானாக.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக