ஒரு சிலர் தான் எங்கு சேர்ந்து பழகுகிறார்களோ அதே இயல்பிற்கு ஏற்ப அப்படியே மாறிவிடுகின்றனர் . சிலர் தன்னைப் போல் பிறரை மாற்றுவார்களே ஒழிய பிறரைப் போல் தான் மாற மாட்டார்கள் . எந்த சூழலில் வாழ்ந்தாலும் எப்படிப் பட்டவர்களுடன் பழகினாலும் தன் இயல்பிலிருந்து சிறிதும் மாறாமல் அவர் அவராகவே இருப்பார் .
கரித்துண்டை மண்ணில் போட்டு உருட்டினால் அது எந்த மண்ணில் உருட்டப் படுகிறதோ அந்த மண்ணின் புழுதியை தன் மீது ஒட்டிக் கொண்டு உரு மாறும் நீரானது எந்த எந்த மண்ணில் சேருகிறதோ அந்த நிறத்தை பெறும், ஆனால் நெருப்பில் எதைப் போட்டாலும் அது போடப் பட்டதையும் தன்னைப் போல நெருப்பாகவே மாற்றும் , காந்தம் இருக்கிறதே அதை எந்த மண்ணில் புரட்டினாலும் அது மண்ணில் உள்ள இரும்பைத் தவிர வேறு எதையும் ஈர்க்காது .காந்தமாக நாம் இருந்து எந்த சூழலில் யாருடன் பழகினாலும் அங்குள்ள நல்லதைத் தவிர வேறு எதையும் எடுத்துக் கொள்ளக் கூடாது . அல்லது நெருப்பாய் நாம் நின்று நம்மைப் போன்று நம்முடன் சேறுபவர்களையும் நல்ல இயல்புடையவர்களாக மற்ற வேண்டும் .
நீர் சேருகின்ற மண்ணின் நிறத்தைப் பெறுவதை போல தன் நிறத்தை சுவையை மாற்றிக் கொள்வது போல நாமும் சேறுகிறவர் குணங்களைப் பெறக்கூடாது . நெருப்பாக சுடர்விட வேண்டும் அல்லது காந்தமாக நின்று தன தனித்தன்மையை காத்துக் கொள்ள வேண்டும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக