திங்கள், 23 ஜூன், 2014

இந்த உலகம் ஒரு கண்ணாடி போன்றது.





தெருவிலே சுற்றிக் கொண்டிருந்த நாய் ஒன்று தவறிப் போய் அரண்மனைக்குள் நுழைந்தது.
அந்த அறைக்குள் நுழைந்த நாய்க்கு அதிரிச்சி ஏனெனில் சுற்றியும் நூற்றுக் கணக்கான நாய்கள் இருந்தன.
சற்று எரிச்சலடைந்து "உர்ர்.. உர்ர்.." என்றது, அந்த நூறு நாய்களும் பதிலுக்கு "உர்ர்.. உர்ர்.." என்றது.



அந்த நாய் கொஞ்சம் பயந்து விட்டது இருந்தும் கோபம் தாளாமல் "லொள் லொள்" என குறைக்க ஆரம்பித்தது.
எல்லா நாய்களும் சேர்ந்து குறைத்து. அந்த நாய் குறைப்பதை நிறுத்தியவுடன் எல்லா நாய்களும் குறைப்பதை நிறுத்திகொண்டது.


மறுபடியும் கோபமும் பயமும் அதிகமானது.
உடனே வெறி பிடித்ததை போல் தொடர்ந்து குறைக்க ஆரம்பித்தது பதிலுக்கு அந்த நாய்களும் குரைத்தன.
இறுதியில் அந்த நாய் பயத்தில் இறந்தே போய் விட்டது.


அந்த நாய் கொஞ்சம் கவனித்து இருந்தால் அதற்க்கு புரிந்திருக்கும்.

1.
தான் நுழைந்தது நூற்றுக் கணக்கான கண்ணாடிகளை கொண்ட அறை என்று

2.
தன்னை சுற்றி இருந்தது தனது பிம்பங்கள் என்று

3.
குறைத்து சுற்றி இருந்த நாய்கள் அல்ல தன் எதிரொலி என்று


நீதி:
இந்த உலகம் ஒரு கண்ணாடி போன்றது.
நாம் கோபப்பட்டால் பதிலுக்கு கோபம் கிடைக்கும். அன்பு செலுத்தினால் அன்பு கிடைக்கும்.


-- 
There is no more  noble occupation in the world
Than ,to assist another human being,to help someone,IT COMESBACK TO HIS OWN
 LIFE.

MJF.Ln.P.Jayakumaran,


1 கருத்து: