வியாழன், 6 பிப்ரவரி, 2014

வலிமார்களின் வழிகாட்டுதல்



இப்ராஹிம் இப்னு அத்ஹம் ரஹ் அறிவிக்கிறார்கள்.


நான் காடு வனங்களில் சுற்றித் திரிகையில் ஜபல் லுப்னா என்ற மலையில் இருந்த வலிமார்களை கண்டு அவர்களுடன் சேர்ந்திருந்தேன். அந்த வலிமார்கள் என்னிடம் நான்கு உபதேசம் செய்து அந்நான்கினையும் மக்களுக்கு அறிவிக்கும் படி சொன்னார்கள்.


1.சுவையான உணவை அடைவதை ஆசைப்படுபவன், இறை வணக்கத்தில் இன்பம் பெற மாட்டான்.


2.அதிகமாக தூங்குபவன், வாழ்நாளில் பரக்கத் அபிவிருத்தி அடையமாட்டான்.


3.மனிதர்களின் புகழைத் தேடுபவன் இறைவனின் பொருத்தத்தை அடைய முடியாது.


4.புறமும், வீண் பேச்சும் அதிகமாக பேசுபவன் தீனுல் இஸ்லாத்தில் மரணிக்கமாட்டான்

5 கருத்துகள்: