திங்கள், 9 செப்டம்பர், 2013

எறும்பு தின்றால் கண் தெரியும்





புற்றில் வாழுகின்ற இந்த சிறிய எறும்புகளுக்கும் நமக்கும் என்ன தொடர்பு...?  எறும்பு தின்றால் கண் தெரியும் என்று ஏன் கூறுகிறார்கள். இதனை ஓரு பழைய பாடல் உணர்த்துகிறது.



ஓரு ஊரில் மிகவும் வறுமைப்பட்ட பிச்சைக்காரன் ஓருவன் இருந்தான். அந்த ஊரில் அவனால் திருப்தியாக வாழ முடியவில்லை என்றாலும் இறைவனை வேண்டியபடி தன் வாழ்நாளைக் கடத்தி வந்தான். அந்தப் பிச்சைக்காரனுக்கு அருகில் வாழ்ந்த பெரியவர் ஓருவர் வெளியூர் சென்று சில காலம் கழித்து ஊர் திரும்பினார். ஊர் திரும்பியவருக்கு ஓரே அதிர்ச்சி...  அந்த பிச்சைக்காரன் பணக்காரனாகியிருந்தான். காரணம் கேட்ட பெரியவரிடம் அவன் பாடியது என்ன தெரியுமா...?


கட்ட துணியற்று காந்த பசிக்கு அன்னமற்று எட்டிமரம் ஓத்திருந்த யான்.
எறும்புக்கு நொய்யரிசி இட்டேன்.அதனால் சிறிது பொருள் தந்தான் சிவன்.
அப்பொருள் கொண்டு அடியவர்க்கு அன்னமிட்டேன் ஓப்புவமை இல்லான் உள முவந்தே இப்பார் அளகேசன் என்றே அதிக செல்வம் அளவிலாது ஈந்தான் அவன்



அதாவது எறும்புகளுக்கு உணவளித்ததால் இறைவன் கண் திறந்து தனக்கு உதவினான் என்று பொருள் படப் பாடியுள்ளான்.


நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.

ஓரு முஸ்லிம் மரம் ஓன்றை நட்டு அதிலிருந்து ஓரு மனிதனோ அல்லது மற்ற உயிரனமோ உண்டால் அதன் காரணத்தால் ஓரு தர்மம் செய்ததற்க்கான பிரதிபலன் அவருக்கு கிடைக்காமல் இருப்பதில்லை.
அறிவிப்பாளர். அனஸ் ரலி. நூல் புஹாரி. 6012.


நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.

படைப்பினங்கள் மீது கருணை காட்டாதவர் படைத்தவனால் கருணை காட்டப்படமாட்டார்.
அறிவிப்பாளர். ஜரீர் ப்னு அப்தில்லாபஹ். நூல். புஹாரி. 6013


நபி மூஸா அலை அவர்கள் உயிர்களின் மேல் காட்டிய இரக்கம்.


நபி மூஸா அலை அவர்கள் ஆடுகளை விரட்டிக் கொண்டு அடவிச் சென்ற பொழுது ஓரு ஆடு தனியாக பிரிந்து எங்கோ விரைந்தோடியது. 

மூஸா அலை அவர்கள் அதனைப்பிடிக்க இயலவில்லை.  இறுதியாக அது ஓரு நீர்ச் சுனையை அடைந்து தன் தாகம் தீர நீர் அருந்தியது. அது கண்ட மூஸா அலை அவர்கள் அவ்வாட்டின் மீது இரக்கம் கொண்டு ஆடே ...  உன் தாகத்தை நான் அறிந்திருந்தால் நான் உன்னை என் தோள் மீது சுமந்து இங்கு கொண்டு வந்திருப்பேனே. நீ இப்பொழுது நெடுந் தொலை ஓடி மிகவும் களைத்துவிட்டதால் நான் மேற்க்கொண்டு உன்னை நடக்க விடமாட்டேன். என்று கூறி அதனைத் தம் தோள் மீது சுமந்து திரும்பக் கொண்டு வந்தார்கள்.

1 கருத்து: