அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உலகின் (அன்றைய) பெண்களிலேயே சிறந்தவர் மர்யம் பின்த் இம்ரான் ஆவார். (இன்று) உலகப் பெண்களிலேயே சிறந்தவர் கதீஜா பின்த் குவைலித் ஆவார்.68
இதை அலீ (ரலி) அவர்கள் கூஃபா நகரில் குறிப்பிட்டதாக அப்துல்லாஹ் பின் ஜஅஃபர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸ் எட்டு அறிவிப்பாளர்தொடர் களில் வந்துள்ளது. இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான அபூகுரைப் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: இதைக் கூறியபோது அறிவிப்பாளர் வகீஉ (ரஹ்) அவர்கள் வானத்தையும் பூமியையும் நோக்கி (இம்மையிலும் மறுமையிலும் சிறந் தவர்) என்று சைகை செய்தார்கள்.
இதை அலீ (ரலி) அவர்கள் கூஃபா நகரில் குறிப்பிட்டதாக அப்துல்லாஹ் பின் ஜஅஃபர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸ் எட்டு அறிவிப்பாளர்தொடர் களில் வந்துள்ளது. இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான அபூகுரைப் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: இதைக் கூறியபோது அறிவிப்பாளர் வகீஉ (ரஹ்) அவர்கள் வானத்தையும் பூமியையும் நோக்கி (இம்மையிலும் மறுமையிலும் சிறந் தவர்) என்று சைகை செய்தார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஆண்களில் பலபேர் முழுமை பெற்றிருக் கிறார்கள். ஆனால், பெண்களில் இம்ரானின் புதல்வி மர்யமையும், ஃபிர்அவ்னின் துணை வியார் ஆசியாவையும் தவிர வேறெவரும் முழுமை பெறவில்லை. மற்றப் பெண்களை விட ஆயிஷாவுக்கு இருக்கும் சிறப்பானது, எல்லா வகை உணவுகளையும்விட "ஸரீத்' (தக்கடி) எனும் உணவுக்கு இருக்கும் சிறப்பைப் போன்றதாகும். இதை அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.69 இந்த ஹதீஸ் ஐந்து அறிவிப்பாளர்தொடர் களில் வந்துள்ளது.
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறிய தாவது: (ஒரு முறை) நபி (ஸல்) அவர்களிடம் (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள் வந்து, "அல்லாஹ்வின் தூதரே! இதோ! கதீஜா தம்மு டன் குழம்பு, அல்லது உணவு, அல்லதுகுடி பானம் உள்ள பாத்திரத்தை எடுத்துக்கொண்டு உங்களை நோக்கி வந்துகொண்டிருக்கிறார். அவர் உங்களிடம் வந்தவுடன் அவருக்கு அவருடைய இறைவனின் தரப்பிலிருந்தும் என் தரப்பிலிருந்தும் முகமன் (சலாம்) கூறி, அவருக்குச் சொர்க்கத்தில் கூச்சல் குழப்பமோ களைப்போ காண முடியாத முத்து மாளிகை ஒன்று தரப்படவிருப்பதாக நற்செய்தி சொல்லுங்கள்'' என்று கூறினார்கள்.70 இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் அபூபக்ர் பின் அபீஷைபா (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "என் தரப்பிலிருந்தும்' எனும் சொற்றொடர் இடம்பெறவில்லை.
இஸ்மாயீல் பின் அபீகாலித் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் அப்துல்லாஹ் பின் அபீஅவ்ஃபா (ரலி) அவர்களிடம், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கதீஜா (ரலி) அவர்களிடம், அவருக்குச் சொர்க்கத்தில் முத்து மாளிகை ஒன்று கிடைக்கவிருப்பதாக நற்செய்தி கூறிவந்தார்களா?'' என்று கேட் டேன். அதற்கு அப்துல்லாஹ் பின் அபீஅவ்ஃபா (ரலி) அவர்கள், "ஆம்; சொர்க்கத்தில் கூச்சல் குழப்பமோ களைப்போ இல்லாத முத்து மாளிகை ஒன்று அவர்களுக்குக் கிடைக்க விருப்பதாக நற்செய்தி சொன்னார்கள்'' என்று பதிலளித்தார்கள்.71 இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர் களில் வந்துள்ளது. - மேற்கண்ட ஹதீஸ் மேலும் ஐந்து அறிவிப் பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறிய தாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கதீஜா பின் குவைலித் (ரலி) அவர்களுக்குச் சொர்க்கத்தில் மாளிகை ஒன்று கிடைக்க விருப்பதாக நற்செய்தி சொன்னார்கள்.
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறிய தாவது: (தன்மான உணர்ச்சியால்) கதீஜா (ரலி) அவர்களின் மீது நான் வைராக்கியம் கொண்டதைப் போன்று (நபி (ஸல்) அவர்களின் துணைவியரில்) எந்தத் துணைவியரின் மீதும் நான் வைராக்கியம் கொண்டதில்லை. ஏனெனில், கதீஜா (ரலி) அவர்களை நபி (ஸல்) அவர்கள் (அடிக்கடி) நினைவுகூர்வதை நான் கேட்டுவந்தேன். -என்னை நபி (ஸல்) அவர்கள் மணம் புரிந்து கொள்வதற்கு மூன்று வருடங்களுக்கு முன்பே கதீஜா இறந்துவிட்டிருந்தார்.- மேலும், முத்து மாளிகை ஒன்று சொர்க்கத்தில் கதீஜாவுக்கு கிடைக்கவுள்ளது என்று அவர்களுக்கு நற்செய்தி சொல்லும்படி நபி (ஸல்) அவர்களுக்கு அவர்களுடைய இறைவன் கட்டளையிட்டிருந் தான். நபி (ஸல்) அவர்கள் ஆட்டை அறுத்து (அதன்இறைச்சியில் சிறிதளவை) கதீஜா (ரலி) அவர் களின் தோழியருக்கு அன்பளிப்பாகக் கொடுத்தனுப்புவார்கள்.72
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறிய தாவது: கதீஜா (ரலி) அவர்கள்மீது நான் வைராக்கி யம் கொண்டதைப் போன்று நபி (ஸல்) அவர் களின் வேறெந்த துணைவியர்மீதும் வைராக் கியம் கொண்டதில்லை. அவர்களைநான் சந்தித்ததில்லை. நபி (ஸல்) அவர்கள் ஆட்டை அறுத்தால், "கதீஜாவின் தோழியருக்கு இதைக் கொடுத்தனுப்புங்கள்'' என்று கூறுவார்கள். ஒரு நாள் நான் வைராக்கியம் கொண்டு, "(பெரிய) கதீஜா!'' என்று நபி (ஸல்) அவர்களி டம் கூறினேன். அப்போது நபி (ஸல்) அவர் கள், "(நான் என்ன செய்ய?) அவர்மீது எனக்கு அன்பு ஏற்படுத்தப்பட்டுவிட்டதே!'' என்று சொன்னார்கள். - மேற்கண்ட ஹதீஸ் ஆயிஷா (ரலி) அவர் களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் ஆட்டை அறுக்கும் செய்தி வரையே இடம்பெற்றுள்ளது. அதற்குப் பின்னுள்ள விவரங்கள் இடம்பெறவில்லை.
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறிய தாவது: நான் கதீஜா (ரலி) அவர்கள்மீது வைராக்கி யம் கொண்டதைப் போன்று, நபி (ஸல்) அவர் களின் வேறெந்த துணைவியர்மீதும் வைராக்கி யம் கொண்டதில்லை. ஏனெனில்,நபி (ஸல்) அவர்கள் கதீஜா அவர்களைப் பற்றி அடிக்கடி நினைவு கூர்ந்துவந்தார்கள். ஆனால், நான் கதீஜா அவர்களைப் பார்த்ததே கிடையாது.
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: கதீஜா (ரலி) அவர்கள் இறக்கும்வரை நபி (ஸல்) அவர்கள் வேறு யாரையும் மணமுடிக்கவில்லை.
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: கதீஜா (ரலி) அவர்களின் (இறப்புக்குப்பின் அவர்களுடைய) சகோதரி ஹாலா பின்த் குவைலித் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வர அனுமதி கேட்டார். உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (கதீஜா அவர்களைப் போன்ற குரலில் ஹாலாவும் அனுமதி கேட்ட காரணத்தால்) கதீஜா (ரலி) அவர்கள் அனுமதி கேட்கும் விதத்தை நினைவு கூர்ந்து மகிழ்ச்சியால் (உணர்ச்சிவசப்பட்டு) "இறைவா! இவர் ஹாலா பின்த் குவைலித்'' என்று கூறினார்கள். உடனே நான் ரோஷமடைந்து, "எப் போதோ இறந்துவிட்ட தாடைகள் சிவந்த ஒரு குறைஷி மூதாட்டியை ஏன் (எப்போது பார்த்தா லும்) நினைவுகூர்கிறீர்கள்? அவருக்குப் பதிலாக (பருவத்தாலும் அழகாலும்) அவரை விடச் சிறந்த மனைவியை உங்களுக்கு அல்லாஹ் கொடுத்துவிட்டானே! (அப்படி யிருக்க இன்னும் ஏன் அவரையே நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்?)'' என்று கேட்டேன்.73
(ஆதாரம் ஸஹீஹ் முஸ்லிம் ஹதீஸ்கள்:4815 - 4824)
கதீஜா நாயகியும் கவ்லா நாயகியும்!
கதீஜா நாயகியின் சோதரி
கவ்லா பின்த் குவைலிது!
அன்னை கதீஜாவின்
மறைவுக்குப் பிறகும்
அவ்வப்போது அவர்
அண்ணல் பெருமான் இல்லத்துக்கு
வருவதுண்டு
வருகின்ற அவரை
அகமும் முகமும் மலர்ந்து
அண்ணலும் குடும்பமும்
வரவேற்று உபசரிப்பதுண்டு!
சகோதரிகள் இருவருக்கும்
ஒன்றுபோல் ரத்தம்
அதுபோல்
ஒன்றுபோல் சத்தம்!
அதனால்
கவ்லா நாயகி பேசினால்
கேட்பவர் எவர்க்கும்
அது கதீஜா நாயகி
பேசுவது போன்றே கேட்கும்!
அது கேட்கும்
அண்ணல் நபிகளின் மனமும்
அன்னை கதீஜாவுடன் வாழ்ந்த
பழைய நினைவுகளில் மூழ்கும்!
ஒருதரமா இருதரமா
அன்னை கவ்லா பேசும்
ஒவ்வொரு தரமும்
அவர் குரல்
இழுத்து வரும்
அண்ணலின் முன்
அவர்
கதீஜா பெருமாட்டியுடன் வாழ்ந்த
பழைய நிகழ் நிரல்!
அன்னை மேல் கொண்ட
அன்பின் உச்சமாய்
அவ்வேளைகளில் எல்லாம்
அண்ணல் நாவில்
அன்னையார் பெயர் புரளும்
அவர்
அந்நேரம்
இல்லாதததை எண்ணி
கருணை விழிகளில்
கண்ணீர் திரளும்!
அதைப் பார்த்திருக்கும்
அன்னை ஆயிஷா விழிகளில்
வேகமும் தாகமும் பெருகும்!
இருப்பினும்
கதீஜா பெருமாட்டி
அண்ணலின் உள்ளத்தில் எழுதிய
அப்பழுக்கிலாத அகப்பாட்டை
எவராலும் அழிக்க முடியவில்லை
அண்ணல் நெஞ்சத்தில் இருந்து
அவர் போட்டு வைத்த
ஒப்பற்ற நினைவை
ஒரு சிறிதேனும்
ஒழிக்க முடியவில்லை!
எத்தனையோ விஷயங்களில்
எம்பெருமான் நபிகளின்
இளையமான்
அன்னை ஆயிஷா நாயகி
வெற்றி பெற்றும்
இந்த ஒரு விஷயத்தில் மட்டும்
அவரால் அந்த உயரத்தை
எட்ட முடியவில்லை!
அண்ணல் மிக மிக நேசித்த
அவருக்கே அப்படியெனில்
பிறருக்கு எப்படி
அவர் உயரத்தை எட்ட முடியும்?
அதனை
இவ்விதம் என்று
எடுத்துக்காட்டி
என்பாட்டில் மட்டும்
எப்படிச் சுட்ட முடியும்?
ஆயிரம் காரணம் கொண்டு
அவன் அன்னையாரை
அண்ணலோடு ஒட்டி வைத்தான்
அகிலத்தின் அருட்கொடை
அண்ணல் நபிகள் நாயகக் காவியத்தின்
பாயிரம்போல் அவர் புகழைக்
கவிதையில் கொட்ட வைத்தான்!
குவைலிதின் குலக்கொடி
அன்னை கதீஜா போல் - இந்த
குவலயத்தில் யாரும் சிறப்புறவில்லை
வானமே வந்து - அந்த
வான் மகளை வாழ்த்தும்
அப்படி
வானமே வாழ்த்தும்
வகைக்கேது எல்லை!
Engr.Sulthan
ok, masha allah
பதிலளிநீக்குNanru
பதிலளிநீக்கு