திங்கள், 18 மார்ச், 2024

மூன்று அரசியல்வாதிகள். (கதை)

 

மூன்று அரசியல் வாதிகள் நன்றாக வாழ்ந்து வந்தார்கள். அவர்கள் மக்களுக்கு தொண்டு செய்து கொண்டு வந்தார்கள். அவர்கள் மூவரும் தீடிரென்று ஒரு நாள் இறந்து விட்டார்கள்.

மக்களுக்கு சோகம் தொண்டையை அடைத்தது.

மூவரும், மேலோகம் சென்றார்கள் அங்கு யமதர்ம ராஜா அமர்ந்து எல்லோருடய பாவ, புன்ய கணக்குகளுக்கு ஏற்ப தண்டனை வழங்கி கொண்டு இருந்தார். அவரை பார்ப்பதற்கு மிகவும் பயமாகவும், பகட்டான தோற்றம் அளித்தார். பயந்து கொண்டே இந்த மூவரும் தனித் தனியே அவர் அருகே செல்ல…


முதல் இருவரையும் சொர்க்கத்துக்கு போக சொன்னாரு… இருவருக்கும் சந்தோஷம் தாங்க முடிய வில்லை. ஆனால்,


மூன்றாவதாக உள்ளவரை நரகத்துக்கு அனுப்பிவிட்டார். அவருக்கு ஆத்திரம் தாங்க முடிய வில்லை. அவர் யமதர்ம ராஜா விடம் சென்று நாங்கள் மூவரும் மக்களுக்கு தொண்டு புரிந்துள்ளோம் அப்படி இருந்தும் ஏன் எனக்கு மட்டும் இந்த தண்டனை ? என்று வினவ ?….


உடனே


யமதர்ம ராஜா அவர் கேட்டுக்கொண்டமைக்கு, உங்கள் மூவருக்கும் போட்டி வைக்கிறேன் நீயே போட்டியின் முடிவில் தெரிந்து கொள்வாய் என்று மூன்றாவது நபரிடம் யமதர்ம ராஜா உரைத்தார்.


நான் உங்கள் மூவருக்கும் முதலில் எழுத்து முறை தேர்வு வைக்கிறேன்.


முதல் போட்டி ஆரம்பம்


நபர் 1 – ஆங்கிலத்தில் INDIA என்று எழுத சொன்னார் – பாஸ் பண்ணிவிட்டார்.


நபர் 2 – ஆங்கிலத்தில் ENGLAND என்று எழுத சொன்னார் – பாஸ் பண்ணிவிட்டார்.


நபர் 3 – ஆங்கிலத்தில் CZECHOSLOVAKIA என்று எழுத சொன்னார் அந்த


தலைவருக்கு தெரிய வில்லை பாஸ் அகவில்லை.


மறுபடியும் அந்த மூன்றாவது நபர் மன்றாடி யமதர்ம ராஜாவிடம் ஒரு சான்ஸ் கேட்டார்.


அதற்கும், அப்படியை ஆகட்டும் என்று சொன்னார் .


இது தான் கடைசி சான்ஸ் என்பதால், இந்த போட்டியில் எப்படியும் ஜெய்த்துவிட வேண்டும் என்று அவர் மனதில் ஒரு வெறி …..


இரண்டாவது போட்டி தொடங்கியது,


நபர் 1 – எப்பொழுது இந்தியாக்கு சுதந்திரம் கிடைத்தது ? 1947 என்று சொல்லி

- பாஸ் பண்ணிவிட்டார்.


நபர் 2 – அந்த போராட்டத்தில் எவ்வளவு வீரர்கள் இறந்தார்கள் என்று கேட்டார் ?

அதற்க்கு அவர் மூன்று ஆப்ஷன் தந்தார் . 1,00,000 – 2,00,000 – 3,00,000.

2,00,000 என்று சொல்லி பாஸ் பண்ணிவிட்டார் நபர் 2.


நபர் 3 – அந்த 2,00,000 வீரர்களுடைய விலாசம் கேட்டார் ?


அந்த மூன்றாவது நபர் அதிர்ந்து தோல்வியை ஒப்பு கொண்டு நரகத்தை அடைந்தார்.


#நீதி

“மானேஜ்மென்ட் ஸ்கெட்ச் போட்டுட்டாங்கனா தூக்காமா விட மாட்டாங்க”


ஹா...ஹா

..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக