புதன், 20 மார்ச், 2024
கலங்கிய குட்டை. (கதை)
நீ ஒரு முட்டாள். (கதை)
ஒரு பழைய கதை
எனக்கு இந்த கதை எப்போதும் மிகவும் பிடிக்கும்.
ஒரு விறகுவெட்டி வயதானவன், ஏழை, அனாதை.
அவன் சாப்பாட்டிற்கு ஒரே வழி நாள்தோறும் காட்டிற்கு வந்து விறகு வெட்டி கொண்டு சென்று விற்று வரும் பணத்தில் சாப்பிடுவதுதான்.
காட்டிற்குள் நுழையும் இடத்தில் ஒரு அழகிய அரசமரம் இருந்தது.
திங்கள், 18 மார்ச், 2024
ஒரே ஒரு வரம் மட்டும் தான் (கதை)
👌ஒரு ஊரில் ஏழை மீனவன் ஒருவன் இருந்தான். அவனுடைய அம்மாவிற்குக் கண்பார்வை இல்லை. அவனுக்கு வெகு நாட்களாகக் குழந்தையும் இல்லை. ஒரு நாள் அவன் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றான். அப்போது, கரையில் ஒதுங்கிக் கிடந்த பெரிய மீனொன்று அவனைப் பார்த்துக் கெஞ்சியது:
மூன்று அரசியல்வாதிகள். (கதை)
மூன்று அரசியல் வாதிகள் நன்றாக வாழ்ந்து வந்தார்கள். அவர்கள் மக்களுக்கு தொண்டு செய்து கொண்டு வந்தார்கள். அவர்கள் மூவரும் தீடிரென்று ஒரு நாள் இறந்து விட்டார்கள்.
மக்களுக்கு சோகம் தொண்டையை அடைத்தது.
இது என்னுடையதல்ல (கதை)
"என்னால் நிம்மதியாக இருக்க முடியவில்லை" என்றான் ஒரு அரசன், ஞானியிடம்.
'உன் கடமையை நீ சரியாக செய்கிறாயா.?" என்று ஞானி கேட்டார்.
"என் நாட்டிற்கு அன்னியர் பகை இல்லை.
கள்வர் பயம் இல்லை.
எதிர்மறை உணர்வுகள் (கதை)
கவலையை விடுங்க சந்தோஷமாக இருங்கள்..
ஒரு ஊரில் ஒரு சிட்டுக் குருவி இருந்தது. அதற்கு வினோதமான பொழுதுபோக்கு...
ஒவ்வொருவரும் ஒவ்வொன்றை சேகரிப்பது போல, தனக்குப் பின்னால் ஒரு பை-யை கட்டிக் கொண்டு, வினோதமான உணர்வுகளை மனித இனத்திலிருந்து சேகரிக்க ஆரம்பித்தது.
பஞ்சவர்ணக்கிளி (கதை)
ஒரு ராஜாவுக்கு 2 பஞ்சவர்ண கிளி குஞ்சுகள் வெகுமதியாக வந்தன.
ராஜா அந்த ரெண்டையும் பறக்க வைத்து பேசப் பயிற்சி கொடுக்கச் சொன்னாரு.
அதில் ஒரு கிளி நல்லா பறந்து, வார்த்தைகளும் கத்துக்க ஆரம்பிச்சது.
ஆனால் இன்னொரு கிளி பறக்க கூடத் தெரியாம ஒரு கிளையில் உட்கார்ந்தது உட்கார்ந்தபடியே இருந்தது.
நான் ரொம்ப பெரிய ஆள் (கதை)
ஒரு நரி அதிகாலை எழுந்து மேற்கு நோக்கி வேட்டைக்குப் புறப்பட்டது. கிழக்கே இருந்து எழுந்த சூரிய ஒளியில் அதன் நிழல் வெகு நீளமாய் வெகு பிரமாண்டமாய்த் தெரிந்தது.
நரிக்கு ஏக குஷி…
“நான் ரொம்பப் பெரிய ஆளாக்கும். இவ்வளவு பெரிய எனக்குப் பசி தீர வேண்டும் என்றால் குறைந்தபட்சம் ஒரு யானை அல்லது ஒட்டகமாவது கிடைத்தால் தான் கட்டுப் படியாகும்!’ என்று ஊளையிட்டது.
ஞாயிறு, 17 மார்ச், 2024
வாக்குறுதியின் பலம்: (கதை)
ஒரு குளிர் நாள் இரவில் ஒரு கோடீஸ்வரர் ஒரு வயதான ஏழையை அவரது வீட்டிற்கு வெளியில் வெளியில் சந்தித்தார். அவர் அவரிடம், "வெளியில் குளிர் அதிகமாக இருக்கிறதே..உங்களுக்கு குளிரவில்லையா?என்று கட்டர்..அதோடு உங்களிடம் போர்வை, கம்பளி எதுவும் இல்லையா?" என்று கேட்டார்.
அனைத்தும் அல்லாஹ்வினுடையதே. (கதை)
வெளியூர் சென்றிருந்த ஒரு மனிதர் திரும்பிவந்து பார்த்த போது தனது அழகிய வீடு நெருப்பில் எரிந்துகொண்டிருப்பதைப் பார்த்தார்.
ஊரிலேயே அழகான வீடு அது. தனது வீட்டை அந்த மனிதர் மிகவும் விரும்பினார். ஊரில் பலரும் அந்த வீட்டுக்கு இரட்டை விலை கொடுத்துப் பெறத் தயாராக இருந்தனர்.
ஐயா இது முயல் கறி. (கதை)
ஒரு பணக்காரன் தெருவில் நடக்கும் போது
ஏழையின் வீட்டில் இருந்து இறைச்சி கறி சமைக்கும் மணம் வந்தது.
அந்த வாசனையை அவனால் கடந்து போகவே முடியவில்லை. அப்படியே
நின்று விட்டான்.
தற்செயலாக ஏழை வெளியே வர பணக்காரன் அங்கே நிற்பதைப்
பார்த்து வரவேற்றான்.
செவ்வாய், 5 மார்ச், 2024
வெள்ளி, 1 மார்ச், 2024
இனிமே தொழப் போக மாட்டேன் ( உரையாடல்.)
அத்தா அக்பர்
அம்மா ஆயிஷா
மகன் அன்வர்
அக்பர் அஸ்ஸலாமு அலைக்கும் யாஅல்லாஹ்....என்னா வெயிலு தாங்க
முடியல மண்டைய பொழக்குது ஜும்மா தொழுதுட்டு வீட்டுக்கு வற்றதுக்குள்ள ஒருமாதிரியா
ஆயிருது.
ஆயிஷா வஅலைக்கும் ஸலாம் வாங்கங்க உக்காருங்க. இந்தாங்க தண்ணீ
அக்பர் தண்ணீ கொஞ்சம் ஜில்லுன்னு கொண்டு வாமா
ஆயிஷா இந்தா கொண்டு வறேன்.
அக்பர் அன்வர் எங்க போனான்.