மறதி என்பது மனித இயல்பாகும். அதனால்தான், "
மக்களுள் முதலாமவர் மறதியில் முதல்வர்''
என்று ஓர் அரபுப்
பழமொழி உண்டு. முதல் மனிதர் ஆதம் (அலை)
அவர்கள்தாம் அல்லாஹ்வின் கட்டளையை மறந்து,
தடை செய்யப்பட்ட
மரத்திலிருந்து உண்டுவிட்டார். அதனால்தான் அவர் சொர்க்கத்திலிருந்து
வெளியேற்றப்பட்டார் என்பது வரலாறு.