செவ்வாய், 30 டிசம்பர், 2014

அண்ணல் நபி ஸல் அவர்களின் அழகிய பதில்.







அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் அடிமையாயிருந்த ஸவ்கான் (ரலி) அவர்கள் கூறியதாவது.


ஒரு நாள் நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு அருகில் நின்று கொண்டிருந்தேன். அப்போது யூத அறிஞர் ஒருவர் வந்து முஹம்மதே...! அஸ்ஸலாமு அலைக்க..! என்று கூறினார். உடனே நான் அவரை பிடித்து ஒரு தள்ளு தள்ளினேன். அவர் நிலை தடுமாறி விழப்போனார். அவர் ஏன் என்னை தள்ளுகிறாய்..? என்று கேட்டார்.

வியாழன், 25 டிசம்பர், 2014

சமுதாய காவலர் சர்தார் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்



لقد جاءكم رسول من انفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رءوف رحيم




இறை நம்பிக்கையாளர்களே... நிச்சயமாக உஙகளிலிருந்தே ஒரு தூதர் உங்களிடம் வந்திருக்கிறார். நீங்கள் துன்பத்திற்குள்ளாகி விட்டால் அது அவருக்கு மிக்க வருத்தத்தை கொடுக்கிறது. அன்றி உங் (கள் நன்மைக) ளையே பெரிதும் விரும்புகிறார். இன்னும் இறை நம்பிக்கையாளார்கள் மீது மிக்க அன்பும், இரக்கமும் உடையோராகவும் இருக்கிறார்.
                                         ( திருக்குர்ஆன். 9-128.)

செவ்வாய், 9 டிசம்பர், 2014

ஆடை அழுக்கிலும் பாடம் அறியலாம்





ஆடைகளில் அழுக்கு படியும். சிலர் அன்றாடம் தூய்மை செய்து அணிவர் , சிலர் இரண்டு நாட்களுக்கு ஒருமுறை தூய்மை செய்வர் , சிலர் வாரம் ஒருமுறை தூய்மை செய்வர்.

 
அன்றாடம் தூய்மை செய்யும் ஆடையில் அழுக்கு எளிதில் நீங்கிவிடும் . இரண்டு நாட்களுக்கு ஒருமுறை சலவை செய்கிற துணியில் அழுக்கு நீங்க சற்று கூடுதல் முயற்சி செய்ய வேண்டும் , வாரம் ஒருமுறை துவைத்தால் மிகவும் சிரமப்பட்டே அழுக்கை நீக்க முடியும் அளவுக்கு மீறி முயற்சி செய்தால் ஆடை கிழி யுமே தவிர அழுக்கு நீங்காது.