புதன், 9 ஜூலை, 2014

குருவுக்கே போதித்த குதிரைக்காரன்



ஒரு குரு இருந்தார். முற்றும் துறந்தவர். எல்லாம் கற்றவர். அவரை பிரசங்கம் செய்ய ஒரு ஊரில் கூப்பிட்டிருந்தார்கள். கூட்டத்திற்கு ஆயிரம் பேர் வருவார்கள் எனச் சொன்னார்கள். குறிப்பிட்ட தேதியில் குருவும் அவ்வூருக்கு வந்தார்.அன்று நல்ல மழை. கூட்டத்திற்கு வந்தவர்களும் கலைந்து சென்று விட்டார்கள்.
குரு வந்த போது யாருமில்லை. பேசுவதற்கு நிறைய தயார் பண்ணி வந்திருந்ததால் அவருக்கு ஏமாற்றம். அங்கு இருந்ததோ அவரை அழைத்து வந்த குதிரை வண்டிக்காரன் மட்டும் தான். என்ன செய்யலாம் என்று அவனையே கேட்டார்....


அவன் சொன்னான், ”ஐயாநான் குதிரைக்காரன். எனக்கு ஒன்றும் தெரியாது. அனால் ஒன்றே ஒன்று மட்டும் தெரியும். நான் முப்பது குதிரை வளர்க்கிறேன். புல்லு வைக்கப் போகும் போது,எல்லாக் குதிரைகளும் வெளியே சென்றிருக்க,ஒரே ஒரு குதிரை மட்டும் இருந்தாலும்நான் அந்தக் குதிரைக்குப் புல்லை வைத்து விட்டுத்தான் வருவேன்.


படாரென்று அறைந்தது போல் இருந்தது குருவுக்கு. அந்தக் குதிரைக் காரனைப் பாராட்டி விட்டுஅவனுக்கு மட்டும் தன் பிரசங்கத்தை ஆரம்பித்தார். தத்துவம்மந்திரம்பாவம்,புண்ணியம்சொர்க்கம்நரகம் என்று சரமாரியாகப் பேசிப் பிரமாதப் படுத்தி விட்டார். பிரசங்கம் முடிந்ததும்எப்படி இருந்தது என்று அவனைப் பார்த்துப் பெருமையாகக் கேட்டார்.


ஐயாநான் குதிரைக்காரன். எனக்கு ஒன்றும் தெரியாது. ஆனால் ஒன்று மட்டும் தெரியும். நான் புல்லு வைக்கப் போன இடத்தில் ஒரே ஒரு குதிரை தான் இருந்தது என்றால்அதற்கு மட்டும் தான் புல் வைப்பேன். முப்பது குதிரைக்கான புல்லையும் அந்த ஒரு குதிரைக்கே கொட்டி விட்டு வர மாட்டேன், ”என்றான் அவன். அவ்வளவு தான்! குரு அதிர்ந்து விட்டார்.

                                                  
                                        தென்றல் கமால்.

2 கருத்துகள்:

  1. Super touching story thambi.siruvar malar badikkuradhi innum vidavillaiyo?

    பதிலளிநீக்கு
  2. கண்ணியத்திற்குரிய உலாமப் பெருந்தகையின் சமூகத்திற்கு அஸ்ஸலாமு அலைக்கும் ,

    தமிழக இஸ்லாமிய சமூகத்தை கூறுபோடும் வஹாபிய இயக்கங்களில் தப்லீக் ஜமாஅத்தின் வஹாபிய மூகமூடியை தோலுரிக்கும் வண்ணம் ஒரு சிறிய முயற்சியாக ஒரு பதிவுதளம் உருவாக்கியுள்ளேன் . http://tableeghijamaathtamil.blogspot.com/

    இந்த பதிவில் ஏதேனும் எழுத்துப் பிழைகளோ அல்லது மொழிபெயர்ப்பு பிழைகளோ இருந்தால் வாசகர்களும் , சங்கைக்குரிய உலமாப் பெருமக்களும் சுட்டிக் காட்ட வேண்டுகின்றோம் .
    அவ்வண்ணமே திருத்தம் செய்ய கடமைப்பட்டுள்ளோம்.
    வல்ல ரஹ்மான் இந்த சிறிய முயற்சியை அவன் ஹபீபாகிய எம் உயிரினும் மேலான கண்மணி நாயகம்(ஸல்லலாஹு அலைஹிவஸல்லம்) அவர்கள் பொருட்டால் ஏற்றுக்கொள்வானாக .

    யா அல்லாஹ் ! உண்மையை உண்மை என்று நாங்கள் உணர்ந்து அவ்வுண்மையை நாங்கள் பின்பற்றி நடக்கும்படி உணர்த்தி நேர்வழி காட்டியருள் !
    பொய்யை பொய் என நாங்கள் உணர்ந்து அப்பொய்யை விட்டு அகன்று நடக்கும்படியாக விளக்கப்படுத்தி நேர்வழி காட்டியருள் !
    ஆமீன் !!!




    பதிலளிநீக்கு