ஒரு பஸ் கண்டக்டர்
இருந்தார்.. தினமும் அவருக்கு ஒரே ரூட் தான்.
ஒரு
நாள் வழக்கமான பாதையில் பஸ் பயணித்துக் கொண்டிருந்தது.
நிறுத்தங்களில்
நிறுத்தி பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்றது.. ஒரு நிறுத்தத்தில் முரட்டுத்தனமான
மனிதன் ஒருவன் ஏறினான். பெரிய மீசையும் தடித்த உருவமுமாய் இருந்தவனைப் பார்த்த
எல்லோரு க்குமே கொஞ்சம் அச்சமாய் தான் இருந்தது.
கண்டக்டர்
அவனிடம் சென்று, “டிக்கெட்’ என்று கேட்டார். அவன்
உடனே, “எனக்கு டிக்கெட் வேண்டாம்’ என்று சொல்லி சட்டென்று முகத்தை ஜன்னல் பக்கம் திருப்பிக் கொண்டான்.
“ஏன் டிக்கெட் வேண்டாம்’ என்று கேட்க கண்டக்டருக்கு பயம், தள்ளி வந்து
விட்டார்.
மறுநாளும் இதே கதை. “எனக்கு டிக்கெட் வேண்டாம்’ என்று முறைத்தக் கொண்டோ சொல்லக் கண்டக்டர்
வந்து விட்டார். இப்படியே ஒரு வாரம் கழிந்தது..
கண்டக்டருக்கு எரிச்சல் அதிகரித்தக்
கொண்டே இருந்தது.. இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் என்று எண்ணினார்.