சோம்பேறித் தனத்தின் உச்சகட்டம் என்ன?
இரண்டு ஆண்கள் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தப்படி ஒரு சத்திரத்தில் படுத்திருந்தனர் .இரவு நேரம். அந்நாட்டு மன்னர் ,மாற்றுடையில் வீதியுலா வந்து கொண்டிருந்தார்.
அப்போது அந்தச் சத்திரத்தில் படுத்திருந்த நம் சகதாநாயர்களில் ஒருவன் தன் மூக்கின் மீது அமர்ந்திருந்த ஒரு "ஈ"யை விரட்டிவிடும்படி எதிரே படுத்திருந்தவனிடம் கேட்டுக்கொண்டிருந்தான்.
(தலையைச் சிறிது அசைத்தாலே பறந்து விடும்! ) அதைக் கண்ணுற்ற அரசருக்கு ஒரே கோபம். என்னடா இப்படிப்பட்ட ஒரு சோம்போறி இருக்கிறானே என்று தனது சாட்டையால் நையப் புடைக்கத்தகொண்டிருந்தார். அதைக்கண்ணுற்ற எதிரானவன்
அவனை நல்லா சாத்துங்கள் ஐயா!
போனவாரம் இப்படி நாங்கள் படுத்திருக்கும் போது ஒரு நாய் என்முகத்தில் சிறுநீர் கழித்தது. அவனிடம் அந்த நாயை விரட்டும்படிச் சொன்னேன்.அவன் நாயை விரட்டிவிடவில்லை என்றானாம் . மன்னர் மயங்கி விழுந்து விட்டார்!.
இந்நிகழ்ச்சியில் ,யார் சோம்பேறியின் உச்சக் கட்டம்,?