ஹழ்ரத் அபூஹுரைரா
ரலி அவர்கள் கூறுகிறார்கள்.
பனூ இஸ்ராயிலின்
சந்ததியினரில் ஒருவர் மற்றொருவரிடம் ஆயிரம் பொற்காசுகள் கடன் கேட்டார். அதற்கு
அவர் சாட்சிக்காக எவரையாவது அழைத்து வாரும். நான் அவரை சாட்சியாக்கி பணமே
தருகிறேன் எனக்கூறினார். அதற்கு (கடன் கேட்பவர்) அல்லாஹ் சாட்சியாக போதுமானவன் என்று
கூறினார்.