வியாழன், 19 பிப்ரவரி, 2026

ரமளானின் சிறப்புகள்.

 


شَهْرُ رَمَضَانَ الَّذِىْٓ اُنْزِلَ فِيْهِ الْقُرْاٰنُ هُدًى لِّلنَّاسِ وَ بَيِّنٰتٍ مِّنَ الْهُدٰى وَالْفُرْقَانِ فَمَنْ شَهِدَ مِنْكُمُ الشَّهْرَ فَلْيَـصُمْهُ وَمَنْ کَانَ مَرِيْضًا اَوْ عَلٰى سَفَرٍ فَعِدَّةٌ مِّنْ اَيَّامٍ اُخَرَ يُرِيْدُ اللّٰهُ بِکُمُ الْيُسْرَ وَلَا يُرِيْدُ بِکُمُ الْعُسْرَ وَلِتُکْمِلُوا الْعِدَّةَ وَلِتُکَبِّرُوا اللّٰهَ عَلٰى مَا هَدٰٮكُمْ وَلَعَلَّکُمْ تَشْكُرُوْنَ‏


ரமளான் மாதம் எத்தகையதென்றால் அதில் தான் மனிதர்களுக்கு (முழுமையான வழிகாட்டியாகவும், தெளிவான சான்றுகளைக் கொண்டதாகவும்; (நன்மை - தீமைகளைப்) பிரித்தறிவிப்பதுமான அல் குர்ஆன் இறக்கியருளப் பெற்றது; ஆகவே, உங்களில் எவர் அம்மாதத்தை அடைகிறாரோ, அவர் அம்மாதம் நோன்பு நோற்க வேண்டும்; எனினும் எவர் நோயாளியாகவோ அல்லது பயணத்திலோ இருக்கிறாரோ (அவர் அக்குறிப்பிட்ட நாட்களின் நோன்பைப்) பின்வரும் நாட்களில் நோற்க வேண்டும்; அல்லாஹ் உங்களுக்கு இலகுவானதை நாடுகிறானே தவிர, உங்களுக்கு சிரமமானதை அவன் நாடவில்லை; குறிப்பிட்ட நாட்கள் (நோன்பில் விடுபட்டுப் போனதைப்) பூர்த்தி செய்யவும், உங்களுக்கு நேர்வழி காட்டியதற்காக அல்லாஹ்வின் மகத்துவத்தை நீங்கள் போற்றி நன்றி செலுத்துவதற்காகவுமே (அல்லாஹ் இதன் மூலம் நாடுகிறான்).

(அல்குர்ஆன் : 2:185)


عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ :


أَتَاكُمْ رَمَضَانُ شَهْرٌ مُبَارَكٌ، فَرَضَ اللَّهُ عَزَّ وَجَلَّ عَلَيْكُمْ صِيَامَهُ، تُفْتَحُ فِيهِ أَبْوَابُ السَّمَاءِ، وَتُغْلَقُ فِيهِ أَبْوَابُ الْجَحِيمِ، وَتُغَلُّ فِيهِ مَرَدَةُ الشَّيَاطِينِ، لِلَّهِ فِيهِ لَيْلَةٌ خَيْرٌ مِنْ أَلْفِ شَهْرٍ مَنْ حُرِمَ خَيْرَهَا فَقَدْ حُرِمَ 


رواه أحمد (9213)، والنسائي (2106)


நபி (ஸல்லல்லாஹூ அலைஹி வ ஸல்லம்) அவர்கள் கூறினார்கள் : "உங்களிடம் பரகத் நிறைந்த ரமலான் மாதம் வந்திருக்கிறது.


அல்லாஹு தஆலா உங்களின் மீது அதன்( ரமளான் மாத)நோன்பை கடமையாக்கியிருக்கிறான்.அம்மாதம் வானங்களின் கதவுகள் திறக்கப்படும். அ(ம்மாதத்)தில் நரகின் கதவுகள் தாழிடப்படும். அ(ம்மாதத்)தில் முரண்டுப்பிடிக்கும் ஷைத்தான்கள் விலங்கிடப்படுவார்கள். அ(ம்மாதத்)தில் அல்லாஹ் இரவு ஒன்றை வைத்திருக்கிறான்.அது ஆயிரம் மாதங்களை விடவும் சிறந்தது.அதன் சிறப்புக்களை இழந்தவன் அனைத்தையும் இழந்துவிட்டான்.


(நூல் : நஸாஈ)


وَأخرج ابْن عَسَاكِر فِي تَارِيخه عَن ابْن عمر قَالَ: إِنَّمَا سمي رَمَضَان لِأَن الذُّنُوب ترمض.


(تفسير الدر المنثور، ج : ١، ص : ٤٤٤)


இப்னு உமர் (ரளியல்லாஹு அன்ஹுமா) அவர்கள் கூறினார்கள் : ரமளான் என்று பெயர் வரக் காரணம், அது பாவங்களை அழிப்பதினால்.


(நூல் : தப்ஸீர் அத்துர்ருல் மன்ஸூர், பாகம் : 1, பக்கம் : 444)


وَذَكَرَ الطَّالَقَانِيُّ أَنَّ لِرَمَضَانَ سِتِّينَ اسْمًا وَهُوَ مِنْ خَصَائِصِ هَذِهِ الْأُمَّةِ بِخِلَافِ مُطْلَقِ الصَّوْمِ.


(حاشية الجمل علي شرح المنهج، ج : ٢، ص : ٣٠٢)


தாலிகானீ (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் கூறுகிறார்கள் : ரமளானுக்கு "சவ்ம்" (الصوم) என்ற பெயரைத் தவிர 60 பெயர்கள் இருக்கின்றது. இது இந்த உம்மத்திற்கு கிடைத்த சிறப்பு.


(நூல் : ஹாஷியத்துல் ஜமல், பாகம் : 3, பக்கம் : 302)


عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ: مَنْ صَامَ رَمَضَانَ إِيمَانًا وَاحْتِسَابًا غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ


நபி (ஸல்லல்லாஹூ அலைஹி வ ஸல்லம்) அவர்கள் கூறினார்கள் : நன்மையை நாடியும் ஈமானுடனும் யார் ரமளான் நோன்பை வைக்கிறார்களோ அவருடைய முன் சென்ற பாவங்கள் மன்னிக்கப்படும்.


(நூல் : புகாரி)


★. ரமளான் மாதத்தில் வேதம் இறக்கப்பட்டது.


قال الإمام بن الكثير رحمه الله في تفسيره : يمدح تعالى شهر الصيام من بين سائر الشهور ، بأن اختاره من بينهن لإنزال القرآن العظيم فيه ، وكما اختصه بذلك ، قد ورد الحديث بأنه الشهر الذي كانت الكتب الإلهية تنزل فيه على الأنبياء


(تفسير إبن كثير، ج : ٢، ص : ٥٧)


இமாம் இப்னு கஸீர் (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் கூறினார்கள் : அல்லாஹ் ரமளானை மாதங்களில் போற்றுகிறான். காரணம், ரமளான் என்பது அல்லாஹ்வின் மகத்துவமிக்க அல்குர்ஆனை இறக்க தேர்ந்தெடுத்த மாதம். இந்த அம்சத்துடன் அல்லாஹ்வின் வேதங்கள் ரமளானில் நபிமார்களுக்கு இறக்கப்பட்டதாக ஹதீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது.


(நூல் : தஃப்ஸீர் இப்னு கஸீர், பாகம் : 2, பக்கம் : 57)


عن أبي ذر رضي الله قال: قلت: يا رسول الله، كم أنزل الله تعالى من كتاب؟ قال: «مائة كتاب وأربعة كتب، أنزل على شيث خمسين صحيفة، وعلى إدريس ثلاثين صحيفة، وعلى إبراهيم عشر صحائف، وعلى موسى قبل التوراة عشر صحائف، وأنزل التوراة والإنجيل والزبور والفرقان»


(تفسير روح المعاني ، ٣٢٣/١٠)


روى وهب أن صحف إبراهيم أنزلت في الليلة الأولى من رمضان والتوراة ليست ليال مضين من رمضان بعد صحف إبراهيم بسبعمائة سنة، وأنزل الزبور على داود لينتي عشرة ليلة خلت من رمضان بعد التوراة بخمسمائة عام وأنزل الإنجيل على عيسى لثمان عشرة ليلة خلت من رمضان بعد الزبور بستمائة عام وعشرين عاما،


(تفسير الرازي : ٣٢ / ٢٣٠)


அபூதர் (ரளியல்லாஹு அன்ஹு) அவர்கள் அறிவிக்கிறார்கள் : நான் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம்) அவர்களிடம், எத்தனை ஏடுகளை அல்லாஹ் இறக்கினான்? என கேட்டேன். அதற்கு நபியவர்கள், 100 ஏடுகளும் 4 வேதங்களும் இறக்கப்பட்டது என்று கூறினார்கள். "ஷீது" நபிக்கு 50, இத்ரீஸ் நபிக்கு 30, இப்ராஹீம் நபிக்கு 10, மூஸா நபிக்கு தவ்ராத் வேதம் இறக்குவதற்கு முன்னால் 10 ஏடுகள் இறக்கினான். அதற்கு பிறகு தவ்ராத், இன்ஜீல், ஜபூர், குர்ஆன் இறக்கினான்.


(நூல் : தஃப்ஸீரு ரூஹுல் மஆனீ, பாகம் : 10, பக்கம் : 323)


இப்ராஹிம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களுடைய 10 ஏடுகள் ரமளான் பிறை 1- ல் இறங்கியது. இப்ராஹீம் நபி அவர்களின் ஏடுகள் இறங்கி 700 வருடங்கள் கழிந்து மூஸா நபிக்கு தவ்ராத் வேதம் ரமளான் பிறை 6 - ல் இறங்கியது. மூஸா நபியவர்களின் தவ்ராத் இறங்கி 500 வருடங்கள் கழித்து ஜபூர் வேதம் ரமளான் பிறை 12 - ல் இறங்கியது. ஜபூர் வேதம் இறங்கி 620 வருடங்கள் கழிந்த பிறகு ரமளான் பிறை 18 - ல் ஈஸா நபியவர்களுக்கு இன்ஜீல் வேதம் இறங்கியது. இன்ஜீல் இறங்கி 540 வருடங்கள் கழித்து ரமளான் பிறை 27 - ல் லைலதுல் கத்ரில் குர்ஆன் இறங்கியது.


(நூல் : தஃப்ஸீருர் ராஜீ பாகம்: 32, பக்கம் : 230)


★. ரமளான் மாத பிறை பார்த்தால்


قال بعض العارفين من قرأ سورة الفتح عند الله رزقه رؤية هلال رمضان في أول ليلة وسع ذلك العام


(خزينة الأسرار، ص : ١٦٦)


ஆரிஃபீன்கள் கூறுகிறார்கள் : ரமளான் மாத பிறை பார்த்த முதல் இரவில் பார்க்கும்போது யார் "ஸூரதுல் ஃபத்ஹ்" (இன்னா ஃபதஹ்னா லக) என்ற ஸூராவை ஓதுகிறாரோ, அவ்வருடத்தில் அவருக்கும் அல்லாஹ் ரிஜ்கை விசாலபடுத்தி தருகிறான்.


(நூல் : ஹஸீனதுல் அஸ்ராருல் குப்ரா, பக்கம் : 166)


★. ரமளானே வருக!


وكان ابن عمر رضى الله عنهما يقول اذا دخل شهر رمضان مرحبا يمطهرنا خير كله صیام نهاره وقيام ليله والنفقة فيه كنفقة في سبيل الله.


(تحفة الإخوان، ص : ٩٦)


இப்னு உமர் (ரளியல்லாஹு அன்ஹுமா) அவர்கள் கூறினார்கள் : ரமளான் மாதம் வந்தால், "மர்ஹபன்" இம்மாதத்தில் பகலில் நோன்பு நோற்பது இரவில் நின்று வணங்குவதன் மூலம் இம்மாதம் முழுவதும் நல்லதை பொழிவாயாக! இம்மாதத்தில் செலவு செய்வது அல்லாஹ்லின் பாதையில் செலவு செய்வது போன்று.


(நூல் : துஹ்ஃபத்துல் இக்வான், பக்கம் : 96)


★. நோன்பின் சிறப்பு


: عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم كَانَ يَقُولُ: الصَّلَوَاتُ الْخَمْسُ وَالْجُمُعَةُ إِلَى الْجُمُعَةِ وَرَمَضَانُ إِلَى رَمَضَانَ مُكَفِّرَاتٌ مَا بَيْنَهُنَّ إِذَا اجْتَنَبَ الْكَبَائِرَ


நபி (ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம்) அவர்கள் கூறினார்கள் : ஐநேரத் தொழுகை ஒரு ஜும்ஆ முதல் அடுத்த ஜும்ஆ வரை, ஒரு ரமளான் முதல் அடுத்த ரமளான் வரை இதற்கு இடைப்பட்ட நாட்களில் பெரும்பாவங்கள் இல்லை என்றால் அனைத்து சிறு பாவங்களும் மன்னிக்கப்படும்.


(நூல் : முஸ்லிம்)


: عَنْ أَبِي هُرَيْرَةَ، – رضى الله عنه – قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ :‏ كُلُّ عَمَلِ ابْنِ آدَمَ يُضَاعَفُ الْحَسَنَةُ عَشْرُ أَمْثَالِهَا إِلَى سَبْعِمِائَةِ ضِعْفٍ قَالَ اللَّهُ عَزَّ وَجَلَّ إِلاَّ الصَّوْمَ فَإِنَّهُ لِي وَأَنَا أَجْزِي بِهِ.


நபி (ஸல்லல்லாஹூ அலைஹி வ ஸல்லம்) அவர்கள் கூறினார்கள் : மனிதன் செய்கிற அமலுக்கு பத்திலிருந்து 700 மடங்கு வரை நன்மை இருக்கிறது நோன்பு வைத்தவிர, ஏனெனில் நோன்பிற்கு நானே கூலி கொடுப்பேன் என்று அல்லாஹுதஆலா கூறுகிறான்.


(நூல் : முஸ்லிம்)


قال ابن رجب رحمه الله: اعلم أن المؤمن يجتمع له في شهر رمضان جهادان لنفسه : جهاد بالنهار على الصيام وجهاد بالليل على القيام فمن جمع بين هذين الجهادین، ووفی بحقوقهما ، وصبر عليهما ، وفي أجره بغير حساب


இப்னு ரஜப் (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் கூறினார்கள் : ஒரு முஃமின் ரமளான் மாதத்தில் இரண்டு ஜிகாத் என்னும் போரை சந்திக்கிறார். ஒன்று பகலிலே நோன்பு நோற்பது இரண்டு இரவிலே நின்று வணங்குவது. யார் இந்த இரண்டு போரையும் சந்திக்கிறார்களோ அதனுடைய கடமையை நிறைவேற்றுகிறார்களோ அதற்காக பொறுமையாக இருக்கிறார்களோ அதற்கு எண்ணில் அடங்கா கூலி அவருக்கு உண்டு.


(நூல் : லதாயிஃபுல் மஆரிஃப்)


عَنْ عُمَرَ بْنِ الْخَطَّابِ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «ذَاكِرُ اللَّهِ فِي رَمَضَانَ مَغْفُورٌ لَهُ، وَسَائِلُ اللَّهِ فِيهِ لَا يَخِيبُ» 


(الطبراني المعجم الأوسط، رقم الحديث : ٦١٧٠، ج : ٦، ص : ١٩٥)


நபி (ஸல்லல்லாஹூ அலைஹி வ ஸல்லம்) அவர்கள் கூறினார்கள் : ரமளானில் திக்ரு செய்பவர்களின் பாவம் மன்னிக்கப்படும், ரமளானில் அல்லாஹ்விடத்தில் யார் தன் தேவைகளை கேட்கிறாரோ அவர் ஏமாற்றப்பட மாட்டார்.


(அளிவிப்பாளர் : இப்னு உமர் (ரளியல்லாஹு அன்ஹுமா), நூல் : தப்ரானீ)


عن عبد الله بن أبي أوفى قال قال رسول الله - صلى الله عليه وسلم -: "نومُ الصائم عبادةٌ، وصمتُه تسبيح، وعملُه مضاعَفٌ، ودعاؤه مستجاب، وذنبُه مغفور". 


(شعب الإيمان - للبيهقي، ج : ٥، ص : ٤٢٢)


நபி (ஸல்லல்லாஹூ அலைஹி வ ஸல்லம்) அவர்கள் கூறினார்கள் : நோன்பாளியின் தூக்கம் இபாதத் ஆகும், நோன்பாளியின் மௌனம் தஸ்பீஹ் ஆகும், நோன்பாளியின் அமல் இரட்டிப்பான நன்மை கிடைக்கும், நோன்பாளின் துஆ செய்தால் அங்கீகரிக்கப்படும், நோன்பாளியின் பாவம் மன்னிக்கப்படும்.


(நூல் : ஷுஃபுல் ஈமான் பைஹகீ, பாகம் : 5, பக்கம் : 422)


وحكي عن بعض أهل العلم أنه قال: كان عندنا رجل اسمه محمد، وكان لا يصلي إلا قطعاً، فإذا دخل شهر رمضان زين نفسه بالثياب الفاخرة والطيب، ويصوم ويصلي ويقضي ما فاته. فقلت له في ذلك. فقال: هذا شهر التوبة والرحمة والبركة، عسى الله أن يتجاوز عني بفضله فمات فرأيته في المنام. فقلت له: ما فعل الله بك؟ قال: غفر لي لأجل حرمة شهر رمضان، غفر الله لنا ولجميع المسلمين.


(إرشاد العباد إلى سبيل الرشاد، ص : ٤٥)


உலமாக்களில் ஒருவர் கூறினார் : எங்கள் காலத்திலே ஒரு மனிதர் இருந்தார், அவர் பெயர் முஹம்மது. அவர் தொழவே மாட்டார், ஆனால் ரமளான் மாதம் வந்து விட்டால் புதிய ஆடை அணிந்து, நறுமணம் பூசி, நோன்பு நோற்று, தொழுவார் மேலும் தவறிப்போன தொழுகையும் தொழுவார். அப்போது அவர் கூறினார் : இது பாவங்கள் மன்னிக்கப்படும் மாதம், ரஹ்மத்து இறங்கும், மாதம் பரகத்து நிறைந்த மாதம். இந்த ரமளானின் சிறப்பால் அல்லா என்னுடைய பாவங்களை மன்னிப்பான். பிறகு அந்த மனிதர் மரணித்து ஒருவருடைய கனவிலே பார்க்கப்பட்டார். அல்லாஹ் வைத்திருக்கிறான்? என்பதாக கேட்டார்கள். ரமளுனுடைய பரகத்தினால் அல்லாஹ் என்னை மன்னித்து விட்டான். மேலும் முஸ்லிம்களின் அனைவரையும் மன்னித்து விட்டான் என்று கூறினார்.


(நூல் : இர்ஷாதுல் இபாத், பக்கம் : 45)


★. நோன்பில் இருக்கும் ஏழு ஹிக்தான விஷயங்கள் 


قال سليمان الجمل رحمه : وَلِوُجُوبِ صَوْمِهِ سَبْعُ حِكَمٍ إحْدَاهَا قَالَ الْحَسَنُ الْبَصْرِيُّ جَوِّعُوا أَنْفُسَكُمْ لِوَلِيمَةِ الْفِرْدَوْسِ، ثَانِيهَا أُلْزِمُهُمْ الْجُوعَ لِيَرْحَمُوا الْجَائِعِينَ، ثَالِثُهَا إنَّ الْأَشْيَاءَ الْمُعْوَجَّةَ كَالْقِسِيِّ، وَالرِّمَاحِ تُقَوَّمُ بِالنَّارِ كَذَلِكَ تُقَوَّمُ النُّفُوسُ الْمُعْوَجَّةُ عَنْ الطَّاعَةِ بِنَارِ الْجُوعِ لَا بِنَارِ الْعَذَابِ فَضْلًا مِنْهُ وَرَحْمَةً، رَابِعُهَا: أَنَّ الْمَلَائِكَةَ شَكَوْا مَعَاصِيَ كَثِيرَةً مِنْ الْمُؤْمِنِينَ فَإِذَا صَامُوا رَمَضَانَ قَالَ اللَّهُ تَعَالَى: يَا مَلَائِكَتِي إنْ عَصَوْنِي خَارِجَ رَمَضَانَ فَفِيهِ تَحَمَّلُوا مَشَقَّتَهُ لِأَجْلِي فَرَجَعَتْ الْمَلَائِكَةُ مِنْ الشِّكَايَةِ إلَى الشَّفَاعَةِ كَمَا فِي قَوْله تَعَالَى: {فَاغْفِرْ لِلَّذِينَ تَابُوا وَاتَّبَعُوا سَبِيلَكَ} [غافر: ٧]، خَامِسُهَا أَنَّ الصَّوْمَ يَحْصُلُ بِهِ الزُّهْدُ الْوَاجِبُ، وَالْمَسْنُونُ وَهُوَ الزُّهْدُ عَنْ الْحَرَامِ، سَادِسُهَا: أَنَّ الطَّبِيبَ النَّاصِحَ يَأْمُرُ بِالْحَمِيَّةِ فِي الْأَمْرَاضِ فَأَمَرَ اللَّهُ تَعَالَى مَنْ مَرَضَ بِالْمَعَاصِي بِالْحَمِيَّةِ رِفْقًا بِهِ وَرَحْمَةً، سَابِعُهَا: أَنَّ الشَّيْطَانَ عَدُوٌّ لِلْمُؤْمِنِ وَقَدْ خَاصَمَهُ وَخَرَجَ عَلَيْهِ فَسَبِيلُ الْمُؤْمِنِ أَنْ يُضَيِّقَ عَلَيْهِ الطَّرِيقَ بِمَنْعِ الطَّعَامِ، وَالشَّرَابِ وَهُوَ مَعْنَى قَوْلِهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ -: «إنَّ الشَّيْطَانَ يَجْرِي مِنْ ابْنِ آدَمَ مَجْرَى الدَّمِ فَضَيِّقُوا مَجْرَاهُ بِالْجُوعِ، وَالْعَطَشِ» اهـ


(حاشية الجمل علي شرح المنهج، ج : ٢، ص : ٣٠٣)


அல்லாமா ஸுலைமானுல் ஜமல் (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் கூறுகிறார்கள் : நோன்பில் இருக்கும் ஏழு ஹிக்தான விஷயங்கள் இருக்கின்றது.


1. ஹஸன் பசரி (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் கூறினார்கள் : ஜன்னத்துல் பிர்தௌஸ் விருந்துக்காக உங்கள் உடலைப் பட்டினி போடுங்கள். 


2. பசி பசித்தவர்களுக்கு கருணை காட்ட நினைவூட்டுகிறது.


3. வளைந்த ஈட்டி , அம்பு போன்ற பொருள்கள் நெருப்பில் பழுத்து நேராக்கப்படுவது போல, வழிபாட்டுக்கு அடிபணியாத உடல்கள் பசியின் நெருப்பில் பழுத்து நிமிர்கின்றன.


4. முஃமின்களிடையே பாவம் அதிகரித்து வருவதைப் பற்றி மலக்குகள் அல்லாஹ்விடம் முறையிடுவார்கள். முஃமின்கள் நோன்பு நோற்கத் தொடங்கும் போது, அல்லாஹ் வானவர்களிடம் கூறுவான்: "என் வானவர்களே, அவர்கள் ரமழானுக்கு முன் பாவம் செய்தவர்கள், ஆனால் இப்போது அவர்கள் என் இன்பத்திற்காகவும், கஷ்டங்களைத் தாங்குவதற்காகவும் நோன்பு நோற்றுள்ளனர்". அதுவரை குறை கூறிக் கொண்டிருந்த வானவர்கள் முஃமின்களுக்காக மன்னிப்புக்காகப் பரிந்து பேசத் தொடங்குவார்கள்.


5. நோன்பு என்பது வாஜிபான ஸுன்னத்தான உலக பற்றின்மையை உண்டாக்கி கொடுக்கிறது. இது ஹராமை விட்டும் தடுக்கும் உலக பற்றின்மை ஆகும்.


6. ஒரு நல்ல மருத்துவர் நோய்களுக்கான நல்ல உணவுகளை எடுத்துக் கொள்ளும் படி கூறுகிறார். அதுபோல், உடல் பாவம் அடையும் போது நோன்பு நோற்குமாறு அல்லாஹ் கட்டளையிடுகிறான். 


7. உணவையும், பானத்தையும் மறுப்பதன் மூலம் முஃமின்களின் எதிரியான ஷைத்தான் முஃமினின் உடலுக்குள் வரமுடியாமல் வழிகளைத் தடுக்கிறது. நபி (ஸல்லல்லாஹூ அலைஹி வ ஸல்லம்) அவர்கள் கூறினார்கள் : சைத்தான் மனிதனுடைய ரத்த நாளங்களில் உடலுறவு கொள்கிறான், மனிதன் சாப்பிடாமலும் குடிக்காமலும் நோன்பு நோற்பதின் மூலமாக நோன்பு நோற்பதினால் ஷைத்தான் மனிதனின் ரத்த நாளங்களில் போக முடியாமல் கஷ்டப்படுகிறான்.


(நூல் : ஹாஷியதுல் ஜமல், பாகம் : 2, பக்கம் : 303).


*♥︎ ✾‌ ᥫ᭡ •°•°•🆂︎•°•°• ᥫ᭡ ✾‌ ♥︎*


மவ்லவீ, S. அப்துல் பாஸித் நூரானீ, DCA. சுங்குவார்சத்திரம்

பேராசிரியர் : ஜாமிஆ மாஹதுல் ஹைராத் அரபிக் கல்லூரி ஆவணியாபுரம், தஞ்சை மாவட்டம் 

Cell: 6382621686


பழைய பதிவுகள் வாசிக்க 👇🏻 கிளிக் செய்யவும்.

ஜும்மா பயான்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக