*முந்நூறு தஸ்பீஹ்களை நான்கு ரக்அத்துகள் இரண்டு ஸலாமில் (இரண்டு இரண்டு ரக்அத்துகளாக) குறிப்பிட்ட முறையில் தொழுவதுதான் தஸ்பீஹ் தொழுகையாகும்.*
*தினமும் தொழுகுங்கள் இயலாவிட்டால் வாரம் ஒரு முறை தொழுவீராக!*
*ஒரு வாரத்தில் ஒரு முறை தொழ இயலாவிட்டால் ஒரு மாதத்தில் ஒரு தடவை தொழுவீராக!' இவ்வாறு சொல்லிக் கொண்டே வந்து ஒரு வருடத்தில் ஒரு தடவை செய்யுமாறு கூறினார்கள்.*
*அறிவிப்பவர்:அபூராஃபிவு (ரலி), நூல்* *திர்மிதீ* *(444)*
*இதே செய்தி இப்னுமாஜா (1376) ஹதீஸாகவும்* *இடம்பெற்றுள்ளது.*
*தொழும் முறை*
*முதல் ரக்அத்தில் வஜ்ஜஹ்த்து ஓதியவுடன் ஸூரத்துல் பாத்திஹாவையும் மற்றொரு ஸூராவையும் ஓத வேண்டும்.*
*முதல் ரக்அத்திலே ஓதி முடிந்ததும் நிற்கும் நிலையிலேயே 15 தடவை ஸுப்ஹானல்லாஹி வல்ஹம்து லில்லாஹி வலா இலாஹ இல்லல்லாஹு வல்லாஹு அக்பர் என்று கூறவேண்டும்.*
*பின்னர் ருகூவில் எப்போதும் ஓதும் தஸ்பீஹுக்குப் பின் மேற்சொன்ன தஸ்பீஹை 10 தடவை ஓதவேண்டும்.*
*பின்னர் ருகூவிலிருந்து எழுந்து 10 தடவையும்,*
*பின்னர் ஸஜ்தாவில் 10 தடவையும்*
*பின்னர் இரண்டு இருப்பிற்கு இடையில் 10 தடவையும்,*
*பின்னர் இரண்டாவது ஸஜ்தாவில் 10 தடவையும்*
*இரண்டாவது ஸஜ்தாவில் இருந்து எழுந்து தக்பீர் கூறி அமர்ந்து 10 தடவை ஓதி விட்டு தக்பீர் கூறாமல் இரண்டாவது ரக்அத்திற்கு எழ வேண்டும்*
*மொத்தம் ஒரு ரக்அத்தில் 75 தடவை ஓத வேண்டும்.*
*இரண்டாவது ரக்அத்தில் அத்தஹிய்யாத் ஓதும் முன்பு 10 தடவை இந்த கலிமாவை ஓதிவிட்டு அத்தஹிய்யாத் ஓத வேண்டும்*
*இவ்வாறு ஒவ்வொரு ரக்அத்திலும் ஓதும் போது மொத்தம் நான்கு ரக்அத்தில் 300 தடவை ஏற்படும்.*
*முதல் ஸலாமின் முதல் ரக்அத்தில் சூரா அல்ஹாக்கு முத்தகாஷுர் சூராவும் இரண்டாவது ரக்அத்தில் சூரா அல்அஸ்ரு சூராவும் ஓதுவது*
*இரண்டாவது ஸலாமில் முதல் ரக்அத்தில் குல் யாஅய்யுகல் காஃபிரூன் சூராவும் இரண்டாவது ரக்அத்தில் சூரா இக்லாஸ் குல்ஹூ வல்லாஹ் சூராவும் ஓத வேண்டும்*

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக