அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ
கண்ணியம் நிறைந்த அல்லாஹ்வின் நல்லடியார்களே நாம் எதிர்பார்த்துக் கொண்டிருந்த ரமலான் ஆரம்பமாக இருக்கின்றது. நாளை இரவு ஷக்குடைய இரவாகவும் இருக்கின்றது.
நாளை பிறை தெரிந்து விட்டால் அல்ஹம்துலில்லாஹ் ரமலான் ஆரம்பமாகிவிடும் எல்லா பள்ளிவாசல்களிலும் தராவீஹ் தொழுகையும் நடைபெற்று விடும்.
كلوا وشربوا حتى يتبين لكم الخيط الابيض من الخيط الاسود من الفجر ثم اتموا الصيام الى الليل 2:187
பஜ்ரின் கருப்பு கயிற்றிலிருந்து வெள்ளை கயிறு வெளித் தோன்றும் வரையிலும் அதாவது கிழக்கு வெளுக்கும் வரையிலும் நீங்கள் சாப்பிடுங்கள் குடியுங்கள் பிறகு இரவு வரை நோன்பை பூர்த்தி செய்யுங்கள்.
அல்குர்ஆன்:2:187
நாம் நோன்பு நோற்பதற்காக ஸஹருடைய நேரத்தில் எழுவோம் ஆனால் அந்த ஸஹ்ர் உடைய நேரம் மிக பரக்கத்தான ஒரு நேரம் அதில் பரகத் இருக்கிறது என்பதாக நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக ஹதீஸ்களில் பதிவாகி உள்ளது
وعن انس رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم تسحرو فان في السحور بركة
ஸஹர் செய்யுங்கள் அதில் பரக்கத் உள்ளது என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.
ஆதார நூல் மிஷ்காத்துல் மஸாபீஹ்
விளக்கம்:
ஒரு மனிதர் இரவின் கடைசி பகுதியில் உண்ணுகின்ற உணவிற்கும் குடிக்கின்ற பானத்திற்கும் ஸஹர் என்று பெயர் இந்த நேரத்தில் ஸஹர் செய்வதற்கு கூடுதல் சிறப்பு உள்ளது காரணம் பரக்கத்தும் நன்மையும் சுன்னத்திற்கு நேர்படுவதினால் ஏற்படுகிறது.
ஆதார நூல் மிர்காத்
دعان رسول الله صلى الله عليه وسلم الى سحور في رمضان هلم الى الغداء المبارك رواه ابو داوود
அதாவது இந்த ஹதீஸில் ஸாரியா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள் ரமலான் மாதத்தில் ஸஹர் செய்வதற்காக என்னை அழைத்த நபியவர்கள் பரக்கத் நிறைந்த உணவின் பக்கம் வாருங்கள் என்று கூறினார்கள்.
ஆதார நூல் அபூதாவூத்
ஸஹர் நேரத்தில் பாவமன்னிப்பு அதிகமாக தேடுங்கள்....!
இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள் மூன்று பேர் இப்லீஸ் மற்றும் அவனது கூட்டத்தை விட்டும் பாதுகாக்கப்பட்டவர்கள்
1) அல்லாஹ்வை திக்ரு செய்பவர்கள்
2) அல்லாஹ்வின் அச்சத்தால் அழுதவர்கள்
3) சஹர் நேரங்களில் பாவமன்னிப்பு தேடுபவர்கள்
ஆதார நூல் கன்ஜுல் உம்மால் பாகம் 15 பக்கம் 841 📚📚📚
அதேபோன்று மூன்று சப்தங்களை இறைவன் விரும்புகின்றான்
ஸஃலபீ ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள் சேவல் கூவும் சத்தம் 2) குர்ஆன் ஓதுபவரின் சப்தம் 3) ஸஹர் நேரங்களில் பாவமன்னிப்பு தேடுபவர்களின் சப்தம்
*(ஆதார நூல் ஹயாத்துல் ஹயவான் பாகம் 2 பக்கம் 439*
*باب ديك பாடம் சேவல்*
ஆனால் நாம் இத்தனை நாட்களாக இத்தனை வருடங்களாக ஸஹர் நாம் செய்கின்றோம் ஆனால் அந்த சஹர் செய்வதனுடைய முக்கியமான நோக்கம் என்ன என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும் அதையும் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஹதீஸின் வழியாக நமக்குச் சொல்லிக் காட்டுகிறார்கள்
وعن عمرو بن العاص قال قال رسول الله صلى الله عليه وسلم فصل ما بين صيامنا وصيام اهل الكتاب اكله السحر رواه مسلم
அம்ருப்னு ஆஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள் நம்முடைய நோன்பிற்கும் வேதவாசிகளின் நோன்பிற்கும் மத்தியில் உள்ள வித்தியாசம் ஸஹர் நேரத்தில் சாப்பிடுவதாகும் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.
நோன்பு வைக்கக் கூடிய நோன்பாளிகள் அந்த நோன்பு திறப்பதை தாமதப்படுத்தக் கூடாது
அதையும் நபியவர்கள் சொல்லிக் காட்டுகிறார்கள்
وعن سهل رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم لا يزال الناس بخير ما عجلوا الفطر
நேரம் வந்த உடனே மக்கள் நோன்பு திறக்கும் காலம் எல்லாம் நளவில் நீங்காமல் இருப்பார்கள் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்
இதனுடைய விளக்கம் வேதவாசிகள் நோன்பு திறப்பதை தாமதப்படுத்துவதினால் அவர்களுக்கு முரண்படுவது முஸ்லிம்களுக்கு சிறப்பை தேடி தரும் அது மட்டுமில்லாமல் ஒரு மனிதர் தாமதமாக நோன்பை திறப்பது அவருக்கு எந்தவித நன்மையும் தரப்போவதில்லை காரணம் இறைவனுக்கு கட்டுப்படுவது என்பது அவன் சொன்ன அந்த நேரத்தில் செயல்படுவதில் தான் இருக்கிறது அவன் நோன்பு வைக்க சொல்லும் நேரத்தில் நோன்பு வைப்பதும் திறக்க சொல்லும் நேரத்தில் அந்த நோன்பை விடுவதும் அவனுக்கு மகிழ்வை தேடி தரக்கூடியதாகும் அதனால் நோன்பை தாமதமாக திறப்பது முறையற்ற செயலாகும்.
ரமலானின்
நிய்யத் எப்போது வைக்க வேண்டும் என்றால் பஜ்ருக்கு முன்பாகவே வைத்துக் கொள்ள வேண்டும்.
சரியான அந்த நேரத்தில் நோன்பை திறக்கின்றவர் அல்லாஹ்விற்கு மிகப்பெரிய முள்ளவராக இருக்கின்றார்.
அபூ ஹூரைரா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்
எனது அடியார்களில் எனக்கு மிக பிரியமானவர் நேரம் வந்த உடனே நோன்பை திறப்பவர் என்று இறைவன் சொல்வதாக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.
ஆதார நூல் திர்மிதீ ஷரீஃப்
எதை வைத்து நோன்பு திறந்தால் பரக்கத் ...!ஏற்படும்
ஸல்மான் பின் ஆமீர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள் உங்களில் யாராவது நோன்பு திறப்பதாக இருந்தால் பேரீத்தம் பழத்தை வைத்து திறக்கட்டும் காரணம் அது பரக்கத் அது கிடைக்கவில்லை என்றால் தண்ணீரை வைத்து தரட்டும் காரணம் அது சுத்தப்படுத்தக் கூடியதாகும் என நபி ஸல்லல்லாஹு அலைஹிஸ்ஸலாம் அவர்கள கூறினார்கள்.
ஆதார நூல் தாரமீ
அதேபோன்று ஸஹருடைய நேரத்திலேயும் இரண்டு பேரித்தம் பழங்களையும் சாப்பிட வேண்டும் அவர் உண்ணுகின்ற அந்த பேரீத்தம் பழம் நல்லது என்கிறார்கள் நபியவர்கள்.
ஆனால் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் நடைமுறை பேரீத்தம் பழத்தை வைத்து நோன்பு திறப்பார்கள்
நாமும் நபியவர்களின் உடைய சுன்னத்தை பின்பற்றப்பட வேண்டும் எதுவும் இன்றைய காலகட்டத்தில் எல்லா பள்ளிகளிலேயும் பேரீத்தம் பழங்கள் கிடைக்காமல் இல்லை கிடைக்கின்றது ஆனால் அதனுடைய அந்த சிறப்பை யாரும் தெரிந்து கொள்வதில்லை.
சில நபர்களை நாம் பார்க்கப்படுகிற பொழுது இமாம் அவர்கள் நிய்யத் சொன்ன உடனே பள்ளிவாசலில் வைக்கப்படுகிற கஞ்சியை எடுத்து கொடுக்கின்றார்கள் அருமையானவர்களே நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நமக்கு சொல்லிக் காட்டுகின்றார்கள் பேரீத்தம் பழத்தில் பரக்கத் இருக்கிறது என்பதாக.
நமக்கு இந்த ஹதீஸ் ஆதாரமானதாக இருக்கின்றது.
அனஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்
நபியவர்கள் மஃரிப் தொழுவதற்கு முன்பு சில ஈர பேரீத்தம் பழங்களை வைத்து நோன்பு திறப்பார்கள் ஈர பேரீத்தம் பழங்கள் இல்லை என்றால் காய்ந்த சிறிய பேரித்தம் பழங்களை வைத்து நோன்பு திறப்பார்கள் அதுவும் இல்லாத போது சில மடக்கு தண்ணீரை வைத்து நோன்பு திறப்பார்கள்.
ஆதார நூல் அபூதாவூத்,மிஷ்காத்துல் மஸாபீஹ்
சில முக்கியமான ஒரு செய்தி இங்கே பதிவு செய்கின்றேன்
நாம் நிறைய பள்ளிவாசல்களில் பார்க்கலாம் அந்த நோன்பு திறப்பதற்கு உண்டான நேரத்தில் யாராவது சில இஸ்லாமிய சகோதரர்கள் நோன்பை திறப்பதற்காக வேண்டி ஏற்பாடு செய்து கொடுத்து கொண்டு இருப்பார்கள் ஆனால் இறைவன் அவர்களுக்கு மிகப்பெரிய கூலியை வழங்குகின்றான்.
ஜைத் இப்னு ஹாலித் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள் நோன்பாளிக்கு நோன்பு திறப்பதற்கு ஒருவர் ஏற்பாடு செய்தாலோ அல்லது ஒரு போராளிக்கு அவர் போர் செய்வதற்கு தயார் செய்து ஒருவர் கொடுத்தாலோ அவருடைய கூலி போன்றது இவருக்கும் உண்டு என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.
ஆதார நூல் ஃபீ சுஃபில் ஈமான்
இறைவன் அந்த நோன்பாளிகளுக்கு நோன்பு திறப்பதற்கு தயார் செய்து ஏற்பாடு செய்து கொடுப்பவர்களுக்கு இறைவன் எவ்வளவு ஒரு மகத்தான ஒரு கூலியை வழங்குகின்றான் என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும் இந்த மாதம் நன்மைகளை வாரி வழங்குகின்ற மாதம் அதனால் இந்த மாதத்தை சரியான முறையில் இஸ்லாமியர்கள் பயன்படுத்தி இதேபோன்று நோன்பாளிகளுக்கு நோன்பு திறப்பதற்கு உண்டான ஏற்பாடுகளை செய்து கொடுக்கவும் அப்படி செய்து கொடுத்தால் மேலே ஹதீஸில் கூறப்பட்ட நன்மை அந்த மனிதருக்கு கிடைக்கின்றது எல்லாம் வல்ல இறைவன் இது போன்ற மிகப்பெரிய நன்மை அடையக்கூடிய பாக்கியத்தை தருவானாக
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
ஹாஃபிழ் முஹம்மது ஜமீல் ஸிராஜி
ஆசிரியர் அல்மதரஸத்துர் ரஹ்மானிய்யா மக்தப் மதரஸா பெருந்துறை
வாட்ஸ் அப் நம்பர்
9025116966
முந்தைய பதிவுகளை வாசிக்க 👇🏻 கிளிக் செய்யவும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக