வியாழன், 12 பிப்ரவரி, 2026

தஸ்பீஹ் தொழுகை. ( ஹனஃபி.)

 


*தஸ்பீஹ் தொழுகை ஹனபி*


முந்நூறு தஸ்பீஹ்களை நான்கு ரக்அத்தில் குறிப்பிட்ட முறையில் செய்வதுதான் தஸ்பீஹ் தொழுகையாகும்.



தினமும் தொழுகுங்கள் இயலாவிட்டால் வாரம் ஒரு முறை தொழுவீராக! 


ஒரு வாரத்தில் ஒரு முறை தொழ இயலாவிட்டால் ஒரு மாதத்தில் ஒரு தடவை தொழுவீராக!'' இவ்வாறு சொல்லிக் கொண்டே வந்து ஒரு வருடத்தில் ஒரு தடவை செய்யுமாறு கூறினார்கள்.


அறிவிப்பவர்:அபூராஃபிவு (ரலி), நூல் திர்மிதீ (444)

இதே செய்தி இப்னுமாஜா (1376) ஹதீஸாகவும் இடம்பெற்றுள்ளது.



*தொழும் முறை*

முதல் ரக்அத்தில் ஸனா ஓதியவுடன் 15 தடவை ஸுப்ஹானல்லாஹி வல்ஹம்து லில்லாஹி வலா இலாஹ இல்லல்லாஹு வல்லாஹு அக்பர் என்று கூறவேண்டும். 



பின்னர் கிராஅத் ஓதிய பிறகு ருகூவுக்கு முன்னர், நிலையில் 10 தடை மேற்சொன்ன தஸ்பீஹை ஓதவேண்டும். 


பின்னர் ருகூவில் எப்போதும் ஓதும் தஸ்பீஹுக்குப் பின் மேற்சொன்ன தஸ்பீஹை 10 தடவை ஓதவேண்டும். 


பின்னர் ருகூவிலிருந்து எழுந்து 10 தடவையும்,


பின்னர் ஸஜ்தாவில் 10 தடவையும் 


பின்னர் இரண்டு இருப்பிற்கு இடையில் 10 தடவையும்,


பின்னர் இரண்டாவது ஸஜ்தாவில் 10 தடவையும் மொத்தம் ஒரு ரக்அத்தில் 75 தடவை ஓத வேண்டும். 



இவ்வாறு ஒவ்வொரு ரக்அத்திலும் ஓதும் போது மொத்தம் நான்கு ரக்அத்தில் 300 தடவை ஏற்படும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக