*( உழ்ஹிய்யா )குர்பானியின் சட்டங்கள்*:
# *ஷாஃபிஈ - ஹனஃபி* #
===========================
உழ்ஹிய்யா *சுன்னத்தா* ? *வாஜிபா* ?
ஷாஃபிஈ மத்ஹப் : *சுன்னத் முஅக்கதா*
( வலியுறுத்தப்பட்ட சுன்னத் )
ஹனஃபி மத்ஹப் : *வாஜிப்*
(கடமை)
ஷாஃபிஈ மத்ஹபில் *யாருக்கு சுன்னத்?*
பெருநாள் தினத்தன்று ஒருவருக்கு தனக்கும் தன் பொறுப்பில் உள்ளவர்களுக்கும் உணவு மற்றும் உடைக்குப் போக வசதியிருந்தால் *உழ்ஹிய்யா கொடுப்பது சுன்னத்து*.
( பொறுப்பில் உள்ளவர்கள் : மனைவி ,பிள்ளைகள் மற்றும் பெற்றோர். )
ஹனஃபி மத்ஹபில் *யாருக்கு வாஜிப்*?
பெருநாள் தினத்தன்று ஜகாத்துடைய அளவு செல்வம் யாரிடம் உள்ளதோ அவருக்கு *உழ்ஹிய்யா கொடுப்பது வாஜிப்*.
(ஜகாத்துடைய அளவு :
*85 கிராம் தங்கம்* அல்லது *612 கிராம் வெள்ளி* அல்லது *612 கிராம் வெள்ளியின் மதிப்புள்ள பணம்* .)
( ஜகாத் கடமையாவதற்கு ஒரு வருடம் ஆகி இருக்க வேண்டும் என்ற நிபந்தனை இங்கு இல்லை. )
*தகுதி உள்ள பிராணிகள்*
=================
உழ்ஹிய்யா கொடுக்க தகுதியுள்ள பிராணிகள்: *மூன்று*.
1. *ஒட்டகம்*
2. *மாடு*
3. *ஆடு*
இம்மூன்றிலும் *ஆணினம்* *பெண்ணினம்* இரண்டினத்தையும் உழ்ஹிய்யா கொடுக்கலாம் .
இம்மூன்றிலும் *எல்லா வகையையும்* உழ்ஹிய்யா கொடுக்கலாம் .
*எருமை மாட்டையும்* உழ்ஹிய்யா கொடுக்கலாம் .
*வயது வரம்பு*
=============
*ஒட்டகம்* : *ஐந்து வயது* முழுமை பெற்றிருக்க வேண்டும்.
*மாடு* : *இரண்டு வயது* முழுமை பெற்றிருக்க வேண்டும்.
ஆனால் *ஆட்டின் வயதில்* மட்டும் கொஞ்சம் வித்தியாசம் உண்டு.
*ஹனஃபி மத்ஹப்*:
*வெள்ளாடாக* இருந்தாலும் *செம்மறி ஆடாக* இருந்தாலும் *ஒரு வருடம்* முழுமை பெற்றிருக்க வேண்டும் .
அதே நேரத்தில் *செம்மறி ஆடு ஆறுமாதம்* முழுமை அடைந்து *ஒரு வருடத்திற்குண்டான* வளர்ச்சியை பெற்றிருந்தால் அதை உழ்ஹிய்யா கொடுக்கலாம்.
*ஷாஃபிஈ மத்ஹப்*:
*செம்மறி ஆடாக* இருந்தால் *ஒரு வருடமும்*
*வெள்ளாடாக* இருந்தால் *இரண்டு வருடங்களும்* முழுமை பெற்றிருக்க வேண்டும்.
*கூட்டு குர்பானி*
===============
*ஆட்டை ஒருவருக்காக* உழ்ஹிய்யா கொடுக்க வேண்டும்.
ஆனால் *ஒட்டகத்திலும் மாட்டிலும் ஏழு பேர் சேர்ந்து* உழ்ஹிய்யா கொடுக்கலாம் .
ஏழு பேர் சேர்ந்துதான் கொடுக்க வேண்டும் என்று கட்டாயமில்லை .
ஏழுக்குக் குறைவானவர்களும் ஒட்டகத்தையும் மாட்டையும் உழ்ஹிய்யா கொடுக்கலாம்.
ஒரு தனிநபர் ஒட்டகம் மற்றும் மாட்டை உழ்ஹிய்யா கொடுக்கலாம்.
அந்த ஏழு பங்கில் குழந்தைகளுக்காக கொடுக்கக்கூடிய *அகீகாவையும்* சேர்த்துக்கொள்ளலாம்.
*பங்கீடு செய்தல்*
================
உழ்ஹிய்யா பிராணியின் மாமிசத்தை *மூன்று பங்குகளாக* பிரித்து வழங்குவது சிறந்தது.
ஒரு பங்கு :
*தன் குடும்பத்தினற்கு*.
இன்னொரு பங்கு :
*உறவினர்களுக்கு*
இன்னொரு பங்கு :
*ஏழை எளிய மக்களுக்கு*
=============================
உழ்ஹிய்யா கறியை *முஸ்லிம் அல்லாதவர்களுக்கு கொடுக்கக் கூடாது*.
*ஏனென்றால் இது முஸ்லிம்களுடைய ஹக்காகும்*
அக்கம்பக்கத்தில் மாற்றுமத சகோதரர்கள் இருந்து அவர்களுக்கும் கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் கடையில் தேவையான கறியை விலைக்கு வாங்கி அவர்களுக்கு வழங்கலாம்.
============================
*உழ்ஹிய்யாவின் நேரம்*:
======================
*ஹனஃபி மத்ஹப்* :
ஆரம்பம் :
*பெருநாள் தொழுகை நடந்ததற்குப் பிறகு*.
முடிவு :
*பிறை 12 - மஃக்ரிப் நேரம் வரும் வரை*
( அதாவது சூரியன் மறையும் வரை. )
*ஷாஃபிஈ மத்ஹப்* :
ஆரம்பம்:
*சூரியன் உதித்து 20 நிமிடங்கள் கழித்து - இரண்டு ரக்அத் தொழுகை மற்றும் இரண்டு ஃகுத்பாக்கள் - இதற்குண்டான நேரம் முடிந்ததற்குப்பிறகு*.
( தொழுகை நடந்திருக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. ஆனால் தொழுகைக்குப் பிறகு உழ்ஹிய்யா கொடுப்பதே சிறந்தது.)
முடிவு:
*பிறை 13 - மஃக்ரிப் நேரம் வரும் வரை*.
( அதாவது சூரியன் மறையும் வரை )
*இரவிலும்* கொடுக்கலாம்.
*பகலிலும்* கொடுக்கலாம் .
ஆனால் இரவில் கொடுப்பது ( மக்ரூஹ் ) வெறுக்கத்தக்கது.
*குர்பானி தோலின் சட்டம்*
=======================
குர்பானி தோலை *தனக்காக* உபயோகித்துக்கொள்ளலாம்.
*பிறருக்கும்* கொடுக்கலாம்.
(ஏழையாக இருந்தாலும் சரி. செல்வந்தராக இருந்தாலும் சரி.)
ஆனால் *விற்கக்கூடாது*.
*அறுப்புக் கூலியாகவும் வழங்கக்கூடாது*.
*பள்ளிவாசல்* மற்றும் *மத்ரஸாவின்* *கட்டிடப்பணிக்கோ* அல்லது *நிர்வாக செலவிற்கோ* கொடுக்கக்கூடாது.
பள்ளிவாசலில் *பைத்துல்மால்* இருந்தால் அதற்கு *கொடுக்கலாம்*.
பள்ளிவாசலின் *இமாம்* மற்றும் *முஅத்தின் சாகிபுக்கு* கொடுக்கலாம்.
மத்ரஸாவின் *ஆசிரியர்களுக்கும்* *கொடுக்கலாம்*.
ஆனால் இவர்களுக்கு *சம்பளம்* அல்லது *போனஸ்* கொடுப்பதற்கு *குர்பானி தோலை பயன்படுத்தக்கூடாது*.
மத்ரஸாவில் கல்வி பயிலும் *மாணவர்களுக்கு கொடுக்கலாம்*.
*தகுதியற்ற பிராணிகள்*
=====================
*கால்கள் முடமாகி ஊனமுற்றவை*
*கடுமையான நோய்வாய்ப்பட்டவை*
*எலும்பும் தோலுமாய் மெலிந்தவை*
*கண் குருடாகி போனவை*
*காது அறுந்து துண்டிக்கப்பட்டவை*
மேற்கூறப்பட்ட பிராணிகளை உழ்ஹிய்யா கொடுப்பது அறவே கூடாது.
*குறிப்பு*:
*கொம்பு முளைக்காத* அல்லது *கொம்பு உடைந்த* பிராணியை உழ்ஹிய்யா கொடுப்பது *கூடும்*.
*அறுக்கும் ஒழுங்குகள்*
===================
*அறுப்பவர் முஸ்லிமாக இருக்க வேண்டும்* .
( *ஆணும்* அறுக்கலாம் *பெண்ணும்* அறுக்கலாம் )
*கத்தியை கூர்மையாக்கிக் கொள்ள வேண்டும்* .
*உழ்ஹிய்யா கொடுப்பவரே அறுப்பது சிறந்தது*.
அறுக்கத் தெரியவில்லையென்றால் பிறர் அறுக்கலாம்.
அப்போது இவர் அந்த பிராணியை *பார்த்துக்கொண்டிருப்பது* சுன்னத்.
*அறுப்பதற்கு முன்பாக உழூ செய்துகொள்வது*.
*கிப்லாவை முன்னோக்குவது*.
*வஜ்ஜஹ்து வஜ்ஹிய.....*
*என்பதை ஓதிக் கொள்வது*.
(தெரியவில்லை என்றால் பரவாயில்லை.)
*உழ்ஹிய்யாவின் நிய்யத் செய்துகொள்ள வேண்டும்*.
*பிஸ்மில்லாஹி அல்லாஹு அக்பர்* என்று கூறி அறுக்க வேண்டும்.
உழ்ஹிய்யா கொடுக்க நாடியவர் *துல்ஹஜ் மாதம் பிறை ஒன்றிலிருந்து உழ்ஹிய்யா கொடுக்கும் வரை* *நகம்* மற்றும் *முடியை* வெட்டாமல் இருப்பது *சுன்னத்தாகும்*.
வீட்டில் உள்ள மற்றவர்களுக்கு இந்த சட்டம் இல்லை .
உழ்ஹிய்யா கொடுப்பவர்
*நகத்தையோ* அல்லது *முடியையோ* அகற்றி விட்டால் அதனால் உழ்ஹிய்யாவிற்கு எந்த *பாதிப்பும் இல்லை* .
ஆனால் இந்த *சுன்னத்தின் நன்மையை* அவர் இழந்து விடுவார் .
*கவனிக்க* :
===========
பல ஹதீஸ்களின் அடிப்படையில் *இறந்து போனவர்களுக்கு உழ்ஹிய்யா* கொடுப்பது நன்மைகளைப் பெற்றுத்தரும் *நற்செயலாகும்*.
*நிறைவு*
*எல்லாம் வல்ல இறைவன்* நமது உழ்ஹிய்யா வணக்கத்தை ஏற்று அதற்குண்டான *வெகுமதிகளையும் சன்மானங்களையும்* ஈருலகிலும் நமக்கு வாரி வழங்கிடுவானாக!
*ஆமீன்!*
வல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன்
🎓மௌலானா மௌலவி அல்லாமா அபுத்தலாயில் அல் ஹாபிழ்
M. *ஷைகு அப்துல்லாஹ்* *ஜமாலி* MA., Ph.D.
*(தலைவர், சுன்னத் ஜமாஅத் பேரியக்கம்)*
*(முதல்வர், கைருல் பரிய்யா மகளிர் அரபிக் கல்லூரி)*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக