ஒரு குட்டி கதை...
ஒரு சிறுமி தன் கைகளில் இரண்டு ஆப்பிள் வைத்திருந்தாள்...
அங்கு வந்த அவளின் தாய், நீ இரண்டு ஆப்பிள் வைத்திருக்கே ஒன்று எனக்கு கொடு என்றாள்…
தன் தாயை ஒரு வினாடி பார்த்த அந்த சிறுமி, உடனே ஒரு ஆப்பிளைக் கடித்து விட்டாள்… பின் இரண்டாவது ஆப்பிளையும் கடித்து விட்டாள்... தாயின் முகத்தில் இருந்த சிரிப்பு உறைந்து போனது. தன் ஏமாற்றத்தை வெளிப்படுத்த முடியாமல் தவித்தாள்…
உடனே அந்த சிறுமி, தாயிடம் "அம்மா இந்த ஆப்பிள் தான் இனிப்பாக இருக்கு நீ இதை எடுத்துக்க என்றாள்…"
நீஙகள் யாராக வேண்டுமானாலும் இருக்கலாம். எவ்வளவு அனுபவமும் உங்களுக்கு இருக்கலாம். அறிவு வீஸ்தீரமாகவும் இருக்கலாம்.
ஆனால், ஒருவரை பற்றிக் கணிப்பதை சற்று தள்ளிப்போட்டு கணிக்கவும். அடுத்தவருக்கு போதுமான அளவு இடைவெளி கொடுத்து அவரை அறியவும்.
நீங்கள் அவரைபற்றிக்கொண்ட கண்ணோட்டம் தவறாகவும் இருக்கலாம். எதையும் மேலோட்டமாக பார்த்து கணிக்காமல், அவசரப்படாமல் ஆழ யோசித்து கணியுங்கள்...
மனக்கணக்கு தவறலாம்... மனிதரை பற்றிய கணக்கு தவறக்கூடாது. ✨
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக