அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....
நஹ்மதுஹு வநுஸல்லி அலா ரசூலிஹில் கரீம் அம்மா பஃத்.
ஃபகத் காலல்லாலாஹு தஆலா ஃபில் குர்ஆனில் மஜீத் வல் ஃபுர்கானில் மஜீத் அவூது பில்லாஹி மினஷ் ஷெய்தானிர் ரஜீம். பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.
خَلَقَ السَّمٰوٰتِ وَالْاَرْضَ بِالْحَـقِّ وَصَوَّرَكُمْ فَاَحْسَنَ صُوَرَكُمْۚ وَاِلَيْهِ الْمَصِيْرُ
நமது உயிரினும் கண்மணி நாயகம் ஸல் அவர்கள் மீதும் அவர்களின் தோழர்கள் மீதும் நாதாக்கள் நல்லோர்கள் அனைவரின் மீதும் குறிப்பாக இந்த மீலாது / எங்கள் ……….. ……… மதரஸாவின் ஆண்டு விழா நிகழ்வில் பங்கொண்டு அல்லாஹ்வையும் ரசூலையும் நினைவு கூர்ந்து நன்மையை அடைந்து கொள்ள இங்கு வந்திருக்கும் நம் அனைவரின் மீதும் அல்லாஹ்வின் அன்பும் அருளும் என்றும் நின்று நிலவட்டுமாக. ஆமீன்.
எனது பெயர் .................................................
நான் இங்கு .......................... தலைப்பில் பேச வந்திருக்கிறேன்.
அல்லாஹ்வின் நல்லடியார்களே...
இவ்வுலகில் எண்ணற்ற படைப்புகளை அல்லாஹ் படைத்திருந்தாலும் அவற்றில் மனிதனை ஓர் உன்னதமான, உயர்ந்த, சிறந்த படைப்பாக அல்லாஹ் படைத்துள்ளான்.
மனிதனைச் சிறந்த படைப்பென்று அல்லாஹ் கூறியிருப்பதற்கு எண்ணற்ற காரணங்கள் இருக்கிறது. மனித உடலிலுள்ள ஒவ்வொரு பகுதியும் அல்லாஹ்வின் அற்புதத்தை எடுத்து பறைசாற்றிக் கொண்டுதான் இருக்கின்றன.
தன் திருமறையில் அல்லாஹ் இப்படி கூறுகிறான்
وَصَوَّرَكُمْ فَاَحْسَنَ صُوَرَكُمْ
“உங்களை உருவாக்கி, உங்கள் உருவங்களையும் அழகாக்கினான்; அவனிடம்தாம் (யாவருக்கும்) மீளுதல் இருக்கிறது“ (064:003) என்று அல்லாஹ் கூறுகிறான்.
அப்படிப்பட்ட அழகிய படைப்பான இந்த மனித உடலை எந்த அளவுக்கு நுட்பமாக அல்லாஹ் படைத்திருக்கிறான் என்பதை நாம் சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்
அல்லாஹ்வின் நல்லடியார்களே மனித உடலை அல்லாஹ் எப்படிப்பட்டதாக படைத்திருக்கிறான் என்றால்
மனித_உடலில்
1: எலும்புகளின் எண்ணிக்கை: 206
2: தசைகளின் எண்ணிக்கை: 639
3: சிறுநீரகங்களின் எண்ணிக்கை: 2
4: பால் பற்களின் எண்ணிக்கை: 20
5: விலா எலும்புகளின் எண்ணிக்கை: 24 (12 ஜோடி)
6: இதய அறை எண்: 4
7: மிகப்பெரிய தமனி: பெருநாடி
8: சாதாரண இரத்த அழுத்தம்: 120/80 Mmhg
9: இரத்தம் Ph: 7.4
10: முதுகெலும்பில் உள்ள முதுகெலும்புகளின் எண்ணிக்கை: 33
11: கழுத்தில் உள்ள முதுகெலும்புகளின் எண்ணிக்கை: 7
12: நடுத்தர காதில் உள்ள எலும்புகளின் எண்ணிக்கை: 6
13: முகத்தில் உள்ள எலும்புகளின் எண்ணிக்கை: 14
14: மண்டையில் உள்ள எலும்புகளின் எண்ணிக்கை: 22
15: மார்பில் உள்ள எலும்புகளின் எண்ணிக்கை: 25
16: கைகளில் உள்ள எலும்புகளின் எண்ணிக்கை: 6
17: மனித கையில் உள்ள தசைகளின் எண்ணிக்கை: 72
18: இதயத்தில் உள்ள பம்புகளின் எண்ணிக்கை: 2
19: மிகப்பெரிய உறுப்பு: தோல்
20: மிகப்பெரிய சுரப்பி: கல்லீரல்
21: மிகப்பெரிய செல்: பெண் கருமுட்டை
22: மிகச்சிறிய செல்: விந்து
23: மிகச்சிறிய எலும்பு: நடுத்தர காது குத்துகிறது
24: முதல் மாற்று உறுப்பு: சிறுநீரகம்
25: சிறுகுடலின் சராசரி நீளம்: 7 மீ
26: பெரிய குடலின் சராசரி நீளம்: 1.5 மீ
27: பிறந்த குழந்தையின் சராசரி எடை: 3 கிலோ
28: ஒரு நிமிடத்தில் துடிப்பு விகிதம்: 72 முறை
29: சாதாரண உடல் வெப்பநிலை: 37 C ° (98.4 f °)
30: சராசரி இரத்த அளவு: 4 முதல் 5 லிட்டர்
31: வாழ்நாள் சிவப்பு ரத்த அணுக்கள்: 120 நாட்கள்
32: வாழ்நாள் வெள்ளை இரத்த அணுக்கள்: 10 முதல் 15 நாட்கள்
33: கர்ப்ப காலம்: 280 நாட்கள் (40 வாரங்கள்)
34: மனித பாதத்தில் உள்ள எலும்புகளின் எண்ணிக்கை: 33
35: ஒவ்வொரு மணிக்கட்டில் உள்ள எலும்புகளின் எண்ணிக்கை: 8
36: கையில் உள்ள எலும்புகளின் எண்ணிக்கை: 27
37: மிகப்பெரிய நாளமில்லா சுரப்பி: தைராய்டு
38: மிகப்பெரிய நிணநீர் உறுப்பு: மண்ணீரல்
40: மிகப்பெரிய மற்றும் வலிமையான எலும்பு: Femur
41: மிகச்சிறிய தசை: ஸ்டேபிடியஸ் (நடுத்தர காது)
41: குரோமோசோம் எண்: 46 (23 ஜோடி)
42: பிறந்த குழந்தை எலும்புகளின் எண்ணிக்கை: 306
43: இரத்த பாகுத்தன்மை: 4.5 முதல் 5.5
44: உலகளாவிய நன்கொடையாளர் இரத்தக் குழு: ஓ
45: உலகளாவிய பெறுநர் இரத்தக் குழு: ஏபி
46: மிகப்பெரிய வெள்ளை இரத்த அணு: மோனோசைட்
47: மிகச்சிறிய வெள்ளை இரத்த அணு: லிம்போசைட்
48: அதிகரித்த சிவப்பு இரத்த அணுக்களின் எண்ணிக்கை: பாலிசித்தீமியா
49: உடலில் உள்ள இரத்த வங்கி: மண்ணீரல்
50: வாழ்க்கை நதி என்று அழைக்கப்படுகிறது: இரத்தம்
51: சாதாரண இரத்தக் கொழுப்பு அளவு: 100 மிகி / டிஎல்
52: இரத்தத்தின் திரவப் பகுதி: பிளாஸ்மா
இப்படி சொல்வதென்றால் சொல்லிக் கொண்டே போகலாம் மனித உடல்களில் எண்ணற்ற உடல் உறுப்புகள் இருந்தாலும் ஒவ்வொரு உறுப்புகளும் ஒவ்வொருவிதமான அற்புதங்களை அள்ளிக் கொடுத்துக் கொண்டுதான் இருக்கின்றன என்பதில் யாருக்கும் மாற்ற கருத்து இருக்க முடியாது.
எனவே அற்புத படைப்பாக நம்மை படைத்த வல்லோன் அல்லாஹ்வை அனுதினமும் மறக்காமல் அவனுக்கு ஸஜ்தா செய்து வாழும் நல்லோர்களில் ஒருவராக நம்மை அல்லாஹ் வாழச் செய்வானாக.
எனக்கு இங்கு பேச வாய்ப்பளித்த எனது ஹஸ்ரத் அவர்களுக்கும் ஜமாத்தார்களுக்கும் உங்கள் அனைவருக்கும் ஸலாத்தைக் கூறி விடை பெறுகிறேன்.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக