வெள்ளி, 19 ஜூலை, 2024

யாரிடம் பணம் தங்காது ?.

 


யாரிடம் பணம் தங்காது? என்பதைப் பற்றி இங்கு கூற நான் வந்துள்ளேன்.

அன்பிற்கினிய அல்லாஹ்வின் நல்லடியார்களே...

எதை பார்த்தாலும் அது தேவை இல்லாவிட்டாலும் அதை உடனே வாங்க வேண்டும் என்று ஆசைப்படுபவர்களிடம் பணம் தாங்காது.


கடன் வாங்கி ஆடம்பர செலவு செய்பவர்களிடம் பணம் தாங்காது.


தன்னை கட்டுப்படுத்தும் திறமையில்லாதவர்களிடம் பணம் தாங்காது.


போதும் என்ற மனம் இல்லாதவர்களிடம் பணம் தாங்காது.


அடுத்தவர்களை போல வாழ நினைப்பவர்களிடம் பணம் தங்காது.


யோசித்து முடிவு எடுக்காதவர்களிடம் பணம் தங்காது.


அடுத்தவரின் ஆசை வார்த்தைக்கு எளிதில் மயங்குபவர்களிடம் பணம் தங்காது.


எது தேவை, எது தேவையில்லை என்று முன்னதாகவே கணக்கிட தெரியாதவர்களிடம் பணம் தங்காது.


சிக்கனம், சேமிப்பு என்றால் என்னவென்று தெரியாதவரிடம் பணம் தங்காது.


பணத்தை எப்படி பெருக்குவது என்ற அறிவு இல்லாவரிடம் பணம் தங்காது.


கடைசியாக பணத்தின் மதிப்பை அடுத்தவரிடம். பணம் கேட்டும் போது தான் அதன் மதிப்பு தெரியும். 


கண்ணியத்திற்குரிய அல்லாஹ்வின் நல்லடியார்களே…


அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான்.


وَلَا تُسْرِفُوا ۚ إِنَّهُ لَا يُحِبُّ الْمُسْرِفِينَ



''அளவு கடந்து (வீண்) செலவு செய்யாதீர்கள். ஏனென்றால். அளவு கடந்து (வீண்) செலவு செய்பவர்களை நிச்சயமாக அல்லாஹ் நேசிப்பதில்லை. (அல்குர்ஆன் 6 : 141)


இந்த உலகத்தில் எல்லோரும் நேசித்து, அல்லாஹ் நேசிக்கவில்லை என்றால் அந்த மனிதனின் நிலை என்ன ஆகும் என்பதை நாம் கொஞ்சம் யோசித்துப் பார்க்க வேண்டும்



நீங்கள் அல்லாஹ்வை நேசிப்பதைவிட அல்லாஹ் உங்களை நேசிப்பது மிகச் சிறந்து! 


அல்லாஹ்வின் நேசமும், அருளும் ஒரு அடியானுக்கு வேண்டும் அதனால் தான் நமது.


அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறுகின்றார்கள்;


''நீங்கள் விரும்புவதை உண்ணுங்கள்! விரும்புவதை அணியுங்கள்! ஆனால், ஒரு நிபந்தனை. உங்களிடம் கர்வமும், வீண்விரயமும் இருக்ககூடாது. (நூல்: புகாரி


எனவே இந்த உலகத்தில் நாம் வாழும் காலம் எல்லாம் வீண்விரயம் செய்யாதவர்களாக அல்லாஹ்வின் பொருத்தம் பெற்று வாழ கூடியவர்களாக வல்லோன் அல்லாஹ் நம்மையும் நமது குடும்பத்தினர்களை ஆக்கி அருள் புரிவானாக. 


அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக