புதன், 3 ஜூலை, 2024

வாழ்க்கை கணக்கு.

 

வாழ்க்கையே கணக்கு! கணக்கே வாழ்க்கை !!


(கழித்தல், கூட்டல், பெருக்கல், வகுத்தல் )


நாம் வாழும் வாழ்க்கையில் செய்ய வேண்டிய மற்றும் செய்யக்கூடாத காரியங்களை கணக்கு பாடத்தின் அடிப்படையில் சொல்ல நான் இங்கு வந்துள்ளேன். 


அல்லாஹ்வின் நல்லடியார்களே…


10 வயது முதல் 25 வயது வரை


தீய பழக்கங்களை   (கழிக்க வேண்டும்) 

நல்ல பழக்கங்களை கூட்ட வேண்டும்.

(திறமையை பெருக்க வேண்டும் .

நல்ல வாழ்க்கையை வகுத்துக் கொள்ள வேண்டும் .


26 வயது முதல் 40 வயது வரை.


செலவை குறைத்துக் கொள்ள வேண்டும்.

 (அதாவது வீண் செலவு செய்யும் பழக்கத்தை கழிக்க வேண்டும்.) 

வருமானத்தைக் கூட்டிக் கொள்ள வேண்டும் .

சேமிப்பை பெருக்கிக் கொள்ள வேண்டும் .

செழிப்பான வாழ்க்கையை வகுத்துக் கொள்ள வேண்டும்.


41 வயது முதல் 55 வயது வரை.


(அதிக உணவு உண்ணும் ஆசையை கழிக்க வேண்டும்.) 

நடையை கூட்டிக் கொள்ள வேண்டும்

 சிரிப்பை பெருக்கிக் கொள்ள வேண்டும் .

உடல் ஆரோக்கியத்திற்கான வழியை வகுத்துக் கொள்ள வேண்டும்.

 

55 வயது முதல்.....


பேராசையை, கோபத்தை, பகைமையை வளர்க்கும்  குணத்தை கழிக்க வேண்டும்.


அன்பைக் கூட்டிக் கொள்ள வேண்டும். ஆன்மீகத்தை பெருக்கிக் கொள்ள வேண்டும்.

நோயற்ற வாழ்வை வாழ வழி வகுத்துக் கொள்ள வேண்டும்.

+ × – ÷ இது தான் வாழ்க்கை முறை......


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக