அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..
எனது பெயர்…….
எகிப்து நாட்டின் புகழ்மிக்க பேரறிஞர் இமாம் ஷஅராவி அவர்கள் கூறிய ஏழு பொன்மொழிகளை சொல்ல நான் இங்கு வந்துள்ளேன்.:
கண்ணியத்திற்குரிய அல்லாஹ்வின் நல்லடியார்களே…
பேரறிஞர் இமாம் ஷஅராவி அவர்கள் கூறினார்கள்.
1) உன்னால் உண்மையை உரைக்க முடியாவிட்டால் பொய்க்கு கை தட்டாமல் இரு.
2) உன்னைப் பார்த்து யாரும் பொறாமைப் படவில்லை என்றால் நீ தோற்றுப்போன மனிதன் என்று புரிந்து கொள்.
3) உனக்கு எதிராக சதி செய்யும் மனிதர்களைக் கண்டு கலங்காதே. எவ்வளவு பிரயத்தனம் முயற்சி செய்தாலும் அல்லாஹ்வின் நாட்டத்தையே அவர்கள் செயல்படுத்துவார்கள்.
4) அல்லாஹ்வின் அதிகாரத்தில் அவன் நாடியதைத் தவிர வேறுஎதையும் யாராலும் செய்யமுடியாது.
5) (நீங்கள் விரும்பியதைப்) பெறுவதற்காக அல்லாஹ்வை வணங்காதீர்கள். அவனை திருப்திப் படுத்துவதற்காக வணங்குங்கள். அல்லாஹ்வுக்கு திருப்தி வந்துவிட்டால் உங்களுக்கு வியப்பூட்டும் வகையில் வழங்குவான்.
6) முஸ்லிம்களின் ஊரில் ஓர் ஏழையை நீங்கள் கண்டால் அவன் செல்வத்தைத் திருடிய ஒரு செல்வந்தன் அங்கே இருக்கிறான் என்று புரிந்து கொள்ளுங்கள்.
7) யாரின் தந்தை (உயிரோடு) இருக்கிறாரோ அவன் கலங்கமாட்டான் எனும் போது
யாருக்கு ‘ரப்பு’ இருக்கிறானோ அவன் எப்படி கலங்கலாம்!
தமிழில்: இல்யாஸ் ரியாஜி.
أشهر 7 مقولات للشيخ “الشعراوي
1. إن لم تستطع قول الحق فلا تصفق للباطل
2. إذا لم تجد لك حاقدا فاعلم أنك إنسان فاشل
3. لا تقلق من تدابير البشر فأقصى ما يستطيعون هو تنفيذ إرادة الله
4. لن يحكم أحد فى ملك الله إلا بما اراد الله
5. لا تعبدوا الله ليعطى بل اعبدوه ليرضى فإن رضى أدهشكم بعطائه
6. إذا رأيت فقيرا فى بلاد المسلمين فاعلم أن هناك غنيا سرق ماله
7. لا يقلق
من كان له أب.. فكيف يقلق من كان له رب
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக