வெள்ளி, 5 ஜூலை, 2024

அறிவு, செல்வத்தை விட சிறந்ததா?

ஒருமுறை பத்து அறிஞர்கள் 

ஹஜ்ரத் அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்களிடம் வந்து


 "அறிவு, செல்வத்தை விட சிறந்ததா?'' என்ற ஒரே கேள்வியைக் கேட்டு இதற்கு பத்து பதில்களைத் தருமாறு வேண்டினர். 


ஹஜ்ரத் அலி ரலியல்லாஹு அன்ஹு அளித்த பதில்கள்.


1. அறிவு இறைதூதர்களின் வாரிசுகளுக்கு உரியது. ஆனால் செல்வம் செருக்குற்ற பிர்அவ்னிடமிருந்து பெறப்படுவது. 


2. செல்வத்தை நீங்கள் பாதுகாக்கிறீர்கள். ஆனால் அறிவு உங்களைப் பாதுகாக்கிறது. 


3. செல்வந்தருக்குப் பகைவர்கள் பலர் இருப்பர். ஆனால் அறிஞர்கள் நண்பர்களைப் பெற்றிருப்பர். 


4. செல்வம் கொடுக்க கொடுக்க குறையும். ஆனால் அறிவு கொடுக்க கொடுக்க கூடும்.  


5. செல்வன் கருமி கஞ்சன் ஆவதும் உண்டு. ஆனால் அறிஞன் தாராள தன்மையில் குறைய மாட்டான்.  


6. செல்வம் திருடப்படும். ஆனால் அறிவைக் களவாட முடியாது. 


7. மறுமையில் செல்வம் செலவழித்ததை பற்றி கேள்வி  கணக்கிற்கு உள்ளாகும். ஆனால் அறிவின் செலவு சிறப்பு பெறும். 


8. செல்வம் காலத்தால் அழியும். ஆனால் அறிவு காலத்தை வெல்லும். 


9. அறிவால் செல்வம் பெருகும். ஆனால் செல்வம் அறிவை அழிக்கும். 


10. அறிவால் அல்லாஹ்வை அறியலாம். ஆனால் செல்வச் செருக்கு இறைவனிடமிருந்து மனிதனை விலக்கி வேதனையில் வீழ்த்தும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக