செவ்வாய், 9 ஜூலை, 2024

கொஞ்சம் பொறுமையா இரு. (கதை)

 


அறுவடைக்கு தயாராக இருந்த சோளக் காட்டில ஒரு தாய் பறவையும் குஞ்சு பறவையும் கூடு கட்டி இருந்தது. அறுவடைக்கு ஆட்களோடு வந்த தோட்டக்காரனை பார்த்த குஞ்சு பறவை தாய் பறவையிடம் “நாம் வேறு இடம் பாரத்துக் கொள்ளலாம்” அன்று சொல்ல தாய் பறவை."கொஞ்சம் பொறு” என்று சொன்னது. 


தோட்டக்காரனுக்கும், வேலையாட்களுக்கும் கூலிப் பிரச்சினையில் சண்டை ஏற்பட்டு அறுவடை செய்யாமல் கிளம்பி விட்டனர். தோட்டகாரன் நாளை வெளியூர் ஆட்களை வைத்து அறுவடை செய்து கொள்கிறேன் என சவால் விட்டுச் சென்று விட்டான். குஞ்சு பறவை புன்னகையோடு தாய் பறவையை பார்த்தது. 


மறு நாள் தோட்டக்காரன் வெளியூர் ஆட்களோடு வருவதை பார்த்த குஞ்சு பறவை தாய் பறவையிடம "நாம் இப்போது வேறு இடம் தேடிச் சென்று விடலாம்”எனச் சொல்ல "கொஞ்சம் பொறுமையாய் இரு என்றது தாய் பறவை" தோட்டக்காரனுக்கு இப்போது பிரச்சனை வேறு ரூபத்தில் வந்தது. வெளியூர் ஆட்கள் உள்ளூர்காரர்கள் வேலை செய்யாத காரணத்தை தெரிந்து கொண்டு கடைசி நேரத்தில் அதிகமாக கூலி கேட்க அன்றும் அறுவடை நடக்கவிலலை. தோட்டக்காரன் நீங்கள் வேலை செய்யா விட்டால் என்ன "நாளை எனது சொந்த கார்களை அழைத்து வந்து அறுவடை செய்கிறேன்" என்று சொல்லி சென்று விட்டான். குஞ்சு பறவை தாய்ப் பறவையை ஆச்சரியத்தோடு பார்த்தது.


மறுநாள் தோட்டக்காரன் சீக்கிரமே வந்து விட ”குஞ்சு பறவை தாய் பறவையை பார்க்க கொஞ்சம் பொறு பார்ப்போம்" என்றது. வெவ்வேறு காரணங்களை சொல்லி சொந்த காரர்கள் வரவில்லை. அன்றும் அறுவடை நடக்க வில்லை. கோபம் அடைந்த தோட்டக்காரன் ”நாளை யார் வந்தாலும் வரா வட்டாலும் நானே இறங்கி அறுவடை செய்யப் போகிறேன்" என்று சொல்லி விட்டு சென்றான். 


இப்போது தாய் பறவை குஞ்சு பறவையிடம் "நாம் இப்போதே வேறு இடம் தேடிச் சென்று விடுவோம்". குஞ்சு பறவை புரியாமல் பார்க்க தாய் பறவை இதுவரை அவன் அடுத்தவர்களை நம்பி இருந்து விட்டான். ஒருவன் எப்போது சுயமாக முடிவு எடுத்து விட்டானோ அப்போது அவன் அந்த முடிவில் இருந்து மாற மாட்டான் என்று சொல்லிப் பறந்து சென்றது பறவை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக