நஹ்மதுஹு வநுஸல்லி அலா ரசூலிஹில் கரீம். அம்மா பஃத். பகத் காலல்லாஹு த ஆலா பில் குர்ஆனில் அழீம் வல்புர்கானில் மஜீத். அவூது பில்லாஹி மினஷ் ஷொய்தானிர் ரஜீம். பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம். ...............
எல்லா புகழும் அல்லாஹ் ஒருவன் மீதே நிலவட்டுமாக.... நபிகள் நாயகம் நற்குணத்தின் தாயகம் கண்மணி நாயகம் ஸல் அவர்கள் மீதும் அவரது தோழர்கள் மீதும் வலிமார்கள் நல்லோர்கள் மீதும் குறிப்பாக இங்கு வந்திருக்கும் நம் அனைவரின் மீதும் அல்லாஹ்வின் அன்பும் அருளும் என்றென்றும் நின்று நிலவட்டுமாக. ஆமீன்.
அன்பிற்கினிய அல்லாஹ்வின் நல்லடியார்களே நமது உயிரினும் மேலான கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் மறுமை நாளில் மனிதர்களின் நன்மை தீமைகளை நிறுத்தப்படும் மீசான் எனும் தராசில் அவனுடைய நற்குணமே அதிக நன்மையும் எடையை தரக்கூடியது என்பதாக கூறினார்கள்.
என் அன்பிற்கினிய அல்லாஹ்வின் நல்லடியார்களே இவ்வுலகில் ஒரு மனிதன் எந்த நேரமும் வணக்க வழிபாடுகளில் ஈடுபட கூடியவராக இருந்து அவருடைய குணம் மிக கெட்டதாக இருந்தால் நாளை மறுமையில் அவர் மிகுந்த கைசேதம் அடைவார். உலகில் நாம் செய்த நல்ல அமல்களுக்கு நற்கூலியை பெறக்கூடிய அதேநேரத்தில் இவருடைய கெட்ட குணத்தால் மனமுடைந்த நபர்கள் இவரைப்பற்றி அல்லாஹ்விடம் முறையிடுவார்கள்.
யா அல்லா இவருடைய சொல்லால் நான் பாதிக்கப்பட்டேன் யாஅல்லாஹ் இவருடைய செயலால் நான் பாதிக்கப்பட்டேன் அனேறொரு நாள் இவன் என்னை கெட்ட வார்த்தைகளால் திட்டினான் மற்றொருவர் யாஅல்லாஹ் இவன் என்னிடம் இவ்வளவு ரூபாய் கடன் வாங்கினான் ஆனால் அதை திருப்பித்தரவில்லை என்பதாக பலரும் அல்லாஹ்விடம் முறையிட்டுவார்கள்.
அப்போது அல்லாஹ் இவர் செய்த தீமைக்கு பகரமாக அவரது நன்மைகள் பிடுங்கி இவரால் பாதிக்கப்பட்ட அவருகளுக்கு கொடுப்பான். இப்போது இவர் தன் வாழ்நாளில் செய்த நன்மைகள் அனைத்தையும் தனது கெட்ட குணத்தால் நாளை மறுமையில் இழந்து தலை குனிந்த நிலையில் அவர் நின்று கொண்டிருப்பார்.
அன்பிற்கினிய அல்லாஹ்வின் நல்லடியார்களே இந்த உலகத்தில் நாம் வாழுகின்ற பொழுது பிறர் மனம் நோகாத வகையில் நாம் நடந்துகொள்ள வேண்டும் அப்படி நடந்து கொண்டால்தான் அப்படி வாழ்ந்தால் தான் அவ்வாழ்க்கை நாளை மறுமையில் நமக்கு மிகப்பெரிய பாதுகாப்பையும் அல்லாஹ்வினுடைய திருப்தியையும் பெற்றுத் தரும்.
தன் வாழ்வில் மக்களுக்கு அதிகமாக தீங்கினை செய்து கொண்டிருந்த ஒரு அரசன் ஒரு இறைநேசரிடம் சென்று தனக்கு ஏதாவது உபதேசம் செய்யுமாறு கேட்டுக் கொண்டான் அப்போது அந்த இறைநேசர் கூறினார் நீ இரவில் தூங்குவதை போல பகலில் தூங்கி விட்டால் மக்கள் நிம்மதியாக இருப்பார்கள் என்பதாக கூறினார் அதாவது அவனது கெட்ட நடத்தையையும் அவன் செய்யும் அநீதத்தையும் ஜாடையாக சுட்டிக்காட்டினார்.
அன்பிற்கினிய அல்லாஹ்வின் நல்லடியார்களே நல்ல மனிதர்கள் ஒரு பூந்தோட்டத்தை போன்றவர்கள் அவர்களிடம் சென்றாலும் அமர்ந்தாலும் நமது மனம் சுகம் பெறும் கெட்ட மனிதர்களுடைய அடையாளம் அவர்களை கண்டு பிற மக்கள் அஞ்சி விலகி செல்வார்கள்.
நாம் மற்றவர்களிடத்தில் பழகும்போது கொடுக்கல்-வாங்கலாக இருந்தாலும் சரி இன்னும் பல விஷயங்களாக இருந்தாலும் சரி குடும்பத்திலும் சரி சமுதாயத்திற்கு மத்தியிலும் சரி நாம் எங்கும் எப்போதும் நற்குணங்களை கையாள வேண்டும்.
கோபம் பொறாமை பெருமை போன்ற கெட்ட குணங்களோடு எப்பொழுது ஒரு மனிதன் வாழத் துவங்குகின்றன அப்போது அம்மனிதன் இம்மையில் மட்டுமல்ல நாளை மறுமையிலும் பாக்கியங்கள் அனைத்தையும் இழந்து விடுவான் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.
எனவே நற்குண தோடும் நல்லோர்களோடும் சேர்ந்து வாழக்கூடிய பாக்கியத்தை அல்லாஹ் நமக்கும் நமது குடும்பத்தினர்களுக்கும் நமது சந்ததியினருக்கும் உலகிலுள்ள முஃமினான முஸ்லிமான மக்கள் அனைவருக்கும் தந்தருள் புரிவானாக.
எனக்கு இங்கு பேச வாய்ப்பளித்த ஹழ்ரத் அவர்களுக்கும் ஜமாத்தார்களுக்கும் நன்றி கூறி உங்களிடமிருந்து விடை பெறுகிறேன்.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
மேலும் விபரங்களுக்கு A. காதிர் மீரான் மஸ்லஹி. 9952129706.
மேலும் விபரங்களுக்கு A. காதிர் மீரான் மஸ்லஹி. 9952129706.
ReplyForward
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக