கடமையைத் தாண்டி ஒரு நற்செயலை எவர் செய்தாலும் அல்லாஹ் நிச்சயமாக நன்றி பாராட்டுகிறவனாகவும் மிக்க அறிந்த வனாகவும் இருக்கிறான்.
அல்குர் ஆன் : (2 : 158)
இறைவனால் நம் மீது கடமையாக்கப்பட்ட செயல் முறைகளுக்கு பர்லு
வாஜிபு என்று கூறப்படும். அந்த கடமைகளைத் தழுவி கன்னத், நபில், முஸ்தஹப்பு என்று வகைப்படுத்தபட்ட செயல் முறைகளும் கூறப்பட்டிருப்பதை நாம்
அறிவோம்
தொழுகைகளில் பர்லான ரக்அத்துகளுக்கு முன்னும், பின்னும்
சுன்னத்து, நபிலான ரக்அத்துக்கள் இருக்கின்றன. நோன்பிலும் கன்னத்து
நபிலான நோன்புகள் உள்ளன. சன்னத்தான நபிலான தருமங்களுக்கு ஸதக்கா
என்று குறிக்கப்படுகிறது. உம்ரா என்பது ஹஜ் வகையைச் சார்ந்த கன்னத்தான
வணக்க முறையாகும்
இந்த அவசர காலத்தில் பர்லு அல்லாத மற்ற செயல் முறைகளின்
முக்கியதுவம் குறைந்து காணப்படுகிறது. குறிப்பாக நபிலான தொழுகை
விஷயத்தில் அக்கறை மிகவும் குறைந்துள்ளது. இக் காலகட்டத்தில் அவற்றின்
சிறப்புகளைப் புரிய வைப்பதே இக் கட்டுரையின் நோக்கமாகும்.)
இறை நெருக்கம் பெற இனிய வழி.
முற்காலத்தில் அரபகத்தின் ஒரு பகுதியில் கனி மரங்கள் அடர்ந்த தோப்புஅமைந்திருந்தது, முபாரக் என்பவர் அதன் காவலராக பணிபுரிந்து வந்தார் அத்தோப்பின் சொந்தக்காரர் ஒரு நாள் தனது நண்பர்கள் புடை சூழ அங்கே
வருகை தருகிறார். காவலரை அழைத்து மதுரமான கனிகளை பறித்து வரக் கூறினார். ஆணையேற்ற முபாரக் சில கனிகளைக் கொணர்ந்து எஜமானர் முன் வைக்கிறார். அவற்றை பரிசோதித்துப் பார்த்த சொந்தக்காரரின் முகத்தில்
கோபக்கனல் தெறிக்கின்றது, வார்த்தை வெடிக்கிறது. "முபாரக்! சுவையானபழத்தை பறித்துக் கொண்டு வரச் சென்னால் புளிப்பான பழத்தைக் கொண்டு வருகிறீரே! “சொந்தக் காரரின் கோபத்துக்கான காரணத்தைப் புரிந்து கொண்ட காவல்காரர் மீண்டும் ஒடுகிறார். வேறு மரத்திலிருந்து பழங்கள்
பறித்துக் கொண்டுவருகிறார். அதையும் கவைத்துப் பார்த்த சொந்தக்காரரின் முகம் மீண்டும் சிவக்கிறது. முபாரக்! என் நண்பர்கள் முன்னால் என்னைக்
கோப்படுத்த முடிவு செய்துவிட்டீரா? முதலில் புளிப்பான பழங்களைக் கொண்டுவந்தீர், இப்போது சப்பென்றிருக்கும் பழங்களைக் கொண்டு வந்திருக்கிறீர்"
சுடு சொல்லைத் தாங்காத முபாரக் பேசினார்; “எஜமானரே! எந்த
மரத்துப் பழம் புளிக்கும்? எந்த மரத்துப் பழம் இனிக்கும் என்ற விபரம் எனக்குத்
தெரியாது. அதனால் தவறு நடந்து விட்டது. தங்களை வருத்தப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் நான் செய்யவில்லை பதிலைச் செவியுற்றதும், சொந்தக்காரர் ஆச்சரியத்தின் எல்லையை அடைந்தார் என்ன...? இத்தனை ஆண்டுகளாக இந்தத் தோப்பில் வேலை செய்கிறீர். இந்த விபரம் கூடத் தெரியாதா? என வினவினார். ஆம்! எனக்குத் தெரியாது தோப்பைக் காக்கும் பணியைத்தான் எனக்கு தாங்கள் தந்தீர்கள் அஃதில்லாமல் பழங்களை உண்டு பார்க்கத் தாங்கள் இதுவரை கூறியதில்லையே! நான் எனக்கிடப்பட்ட பணியை முறையாகச் செய்து வருகிறேன். ஆனால் இத்தனை ஆண்டு காலங்களில் எந்த மரத்துப் பழத்தையும் நான் சுவைத்துப் பார்த்ததில்லை” என்று கூறினார்.
காவல்காரரின் பதில் சொந்தக்காரருக்கு அதிர்ச்சியைத் தந்தது
என்றாலும், அவரைப் பற்றி தான் ஏற்கனவே அறிந்திருந்த விபரங்கள் அந்த
பதிலை உண்மை என்றே நம்பச் செய்தன. ஆம்! அவர் காவல்காரர்களில் ஒரு
அதிசய மனிதர். தனது கடமைகளுக்கு அதிகமாக உழைத்து தோப்பை
அழகுபடுத்தியிருந்தார். விளைச்சலை அதிகப்படுத்தியிருந்தார். அத்தகைய
மனிதர் நாணயத்திலும் சிறந்து விளங்குவதைப் பார்த்த எஜமானருக்கு அவரின்
மீது மட்டற்ற பாசம் ஏற்பட்டது. அவருக்கு பரிசில் கொடுக்க ஆவல் கொண்டார்
ஆம். அவரை தன் மகளுக்கு மணாளராக்கிக் கொண்டார்.
நபி மொழித் திரட்டுக் கலையில் சிறந்து விளங்கிய ஹளரத் அப்துல்லாஹ்இப்னு முபாரக் (ரலி) அவர்கள் அந்த அதிசயத் தம்பதிகளக்குப் பிறந்தவராவார்.
இந்த சரித்திரம் போன்ற பல நிகழ்வுகளை இன்றும் நாம் காணலாம் கடமையைத் தாண்டி பணி செய்பவர்களுக்கு இத்தகைய பரிசில்கள் கிடைப்பதுண்டு.
தனது கடமையை ஊதியத்துக்குத்தக்க பணி செய்யும் தொழிலாளி
முதலாளியால் நேசிக்கப்படமாட்டார். கடமையைத் தாண்டி பணி செய்பவர்களே
நன்றிக்குரியவர் ஆவார்கள்.
இறைவனும், தான்விதித்த கடமைகளைவிட அதிகமாகச் செய்பவர்களையே விரும்புகிறான். அத்தகையோருக்கு, தான் நன்றியும் தெரிவிப்பதாக அறிவிக்கிறான். அந்த அறிவிப்பையே மேற்காணும் வசனம் வெளிப்படுத்துகிறது. கடமையை மட்டும் செய்பவர்கள் பற்றி அத்தகைய அறிவிப்பைக் காணோம்
அல்லாஹ் கூறுவதாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நவின்றார்கள்
எனது அடியான் நபிலான வணக்கங்கள் புரிவதன் மூலம் என் அருகே நெருங்கி
கொண்டே இருப்பான், இறுதியில் நாள் அவனை நேசிக்க ஆரம்பித்து
விடுவேன்.
நூல் : புகாரி அறிவிப்பவர் : ஹளரத் அபூஹுரைரா (ரலி).
மனமே இறங்கு.
மனித மனத்தை கட்டுக்கடங்காத குதிரைக்கு ஒப்பிடலாம். அது உலக
சுகங்களில் இன்பத்தைக் கண்டு கொண்டிருக்கும். அதைத் தடுத்து
ஆன்மீகத்தின் பால் திருப்புவதாக இருந்தால் மிக்க தந்திரத்தைக் கையாள வேண்டும், கட்டுக் கடங்காத குதிரையை தன் வழிக்குக் கொண்டுவர முயலும்
குதிரையோட்டியைப் போன்ற மனதுடன் இதமாகவும் பதமாகவும் நடந்து கொள்ளல் வேண்டும்.
ஒரு சமயம் நபிகள் நாயகம். (ஸல்) அவர்கள் தன்னை ஒரு ஒட்டகை ஓட்டியாக சித்தரித்துக் காட்டினார்கள். ஒட்டகம் ஒன்று கட்டுக்கடங்காமல் ஒடிக் கொண்டிருக்கிறது. அதைப் பிடிக்க பலர் முயலுகிறார்கள், அவர்கள் விரட்ட விரட்ட அது மேலும் விரண்டோடிக் கொண்டிருக்கிறது. அப்போது ஒட்டகை ஓட்டி வந்தான். அவன் அந்த ஒட்டகத்தை விரட்டவில்லை. மாறாக மிக மிக மெதுவாக நடந்து அதன் அருகில் சென்றான். அதைத் தடவிவிட்டான். அதன் திமிளை பிடித்துவிட்டான், அதன் வாலை நீவி விட்டான் இறுதியில் தந்திரமாக அதை அவன் தன்வசப்படுத்திக் கொண்டான்.
அந்த ஒட்டகை ஓட்டியைப் போன்றே நான் பிற மக்களை இதமாக அணுகி அவர்கள் தரும் துன்பத்தை சகித்துக் கொண்டு, அவர்கள் குற்றத்தை மன்னித்து, மறந்து அவர்களை என் வழிக்குக் கொண்டு வருகிறேன் என நபிகள்
நாயகம் (ஸல்) அவர்கள் விளக்கம் தந்தார்கள்.
பிற மக்களிடம் பெருமானார் (ஸல்) அவர்கள் நடந்துகொண்ட விதத்தைப் போன்றே நமது மனத்திடமும் நாம் நடந்து கொள்ளல் வேண்டும்
அப்போதுதான் அதை நமது ஆதிக்கத்துக்குள் கொண்டு வர முடியும்.
உலகத்தின் சுகங்களில் இன்பம் கண்ட மனதை, எடுத்தவுடன் நாம்
பர்லான தொழுகைகளில் ஈடுபடுத்தினால், அது உலக ஈடுபாட்டிலிருந்து தன்னை விடுவித்து, ஆன்மீகத்துக்கு தன்னை தயார்படுத்திக் கொள்வதற்குள் பர்லான தொழுகை முடிந்துவிடும். எனவே மன ஓர்மையைப் பெற சந்தர்ப்பமே
கிடைக்காமல் போய் விடுகிறது. மனம் என்ற குதிரையை முதலில் சுன்னத்தான் தொழுகையில் ஈடுபடுத்தி அதை ஆகுவாசப்படுத்த வேண்டும்.
அத்தொழுகை முடிவடைவதற்குள் அது ஓர் நிலைப்படலாம். பின்னர் பர்லான தொழுகையில் ஈடுபட்டால் மனம் ஓரளவுக்கு நம்முடன் ஒத்துழைக்கும், வணக்கத்தின்பயனையும் நாம் பெறலாம்.
ஒரு முறை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொழுகை நடத்திக்
கொண்டிருக்கும் போது "ருகூஉ” விற்குச் சென்றார்கள். அப்போது ஒரு மனிதர் ஒடோடி வந்து தொழுகையில் சேர்ந்தார். தொழுகை முடிந்ததும், அம்மனிதரை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அழைத்து "நண்பரே! அல்லாஹ் உமது ஆவலை அதிகரிக்கச் செய்வானாக! ஆனாலும் இனியொரு முறை இப்படிச் செய்யாதீர் அமைதியையும் கண்ணியத்தையும் கடைடைப்பிடியுங்கள். ஜமாஅத்துடன் கிடைத்த ரக் அத்துக்களை தொழுது கொள்ளுங்கள் என்று உபதேசித்தார்கள்.
பெருமானாரின் அந்த கூற்றிலிருந்து தொழுகை துவங்கும் தருணத்தில் மனதில் அமைதியும் கண்ணியமும் நிறைந்திருக்க ஆவன செய்ய வேண்டுமென்ற கருத்து தொனிக்கவில்லையா..?
மனோதத்துவம்.
மனிதனுக்கு சோர்வு, அயர்வு ஏற்படும் போது அவன் வழமையாகச் செய்து வரும் காரியங்களில் குறைவை ஏற்படுத்துவான். இது மனித இயற்கை தொழுகைகளில் பர்லானவற்றை மட்டுமே தொழுவதை வழக்கப்படுத்திச்
கொண்டவனுக்கு சோர்வு, அயர்வு ஏற்படும்போது அவன் அந்த பார்லையும் விட்டுவிடும் அபாயம் நேரிடுகிறது. அஃதின்றி பர்லுடன், சுன்னத்து, நபில்களும்
சேர்த்தே தொழுவதை வழக்கமாகக் கொண்டவனுக்கு மேற்கண்ட நிலைகள் குறிக்கிடும் போது சுன்னத்து, அல்லது நபில்களை மட்டும் குறைக்கத்
தோன்றும், இதனால் பர்லு பாதிக்கப்படுவதில்லை
இந்த மனோ தத்துவத்தின் நிகழ்வுகளை வியாபாரத்தலங்களிலும் நாம்
காணலாம். ஜவுளிக் கடைக்கு நாம் ஒரு குறிப்பிட்ட ரக சேலையை வாங்கச்
செல்லுவோம். நாம் சொல்லும் அடையாளங்களை வைத்து அச்சேலையை
கடைக்காரரும் புரிந்து கொள்ளுவார். இருப்பினும் அந்த ஒரு சேலையை மட்டும்
அவர் நம்மிடம் எடுத்துக் காட்டமாட்டார். குறிப்பிட்ட சேலையுடன், அதன் மேல்தரத்தில் சில சேலைகளையும், கீழ்த்தரத்தில் சில சேலைகளையும் அவர் எடுத்துக் காட்டுவார்.
குறிப்பிட்ட சேலையை மட்டும் காட்டினால், அதை வாங்க வந்த வருக்கு ஒரு சமயம் அதுபிடிக்காமல் போகலாம். அப்போது அவர் அதையும் வாங்காமல் சென்று விடலாம். மேல் தரம், கீழ்த்தரத்து சரக்குகளையும் காட்டும் போது வாங்க வந்தவர் சிந்திப்பார். மேல் தரத்துச் சரக்கு தனது குறியீட்டுக்கு மிஞ்சிய விலையாகத் தோன்றும், கீழ்த்தரத்துச் சரக்கு தரம் குறைந்ததாகத் தோன்றும்
எனவே தான் வாங்க வந்ததையே வாங்கிச்செல்வார் இந்த மணாத்ததுவத்தைப் புரிந்து கொண்ட வியாபாரி சரக்குகளை அதிகமாக எடுத்துக் காட்டுவதில் சோம்பல் படுவதில்லை.
சரக்கு செலாவணியில் கடைப்பிடிக்கப்படும் இந்த நியதியை மறுமைச் சரக்கு செல்லுபடியாக்குவதிலும் கடைப் பிடிக்கப்படுகிறது.
மாங்காய் ஊட்டாத சோற்றை மாதா ஊட்டமாட்டாள். என்றொரு
பழமொழி வழக்கில் உள்ளது. ஒரு பானை சோற்றை உள்ளே தள்ள ஒரு துண்டு
ஊருகாய் கருவியாக பயன்படுவது போன்று பர்லென்ற கடமையைச் செய்யவைக்க சுன்னத்து நபில்களின் துணை மிக்கத் தேவையே.
குறைவு - நிறைவு.
கடமையான வணக்கங்களை நிறைவேற்றும் போது அதன் நன்மைகளை குறைக்கும் ஏதாவது குறைபாடுகள் நிகழ வாய்ப்புண்டு. கவனக் குறைவினால் ஒத வேண்டிய இடத்தில் ஒதாமல் இருப்பது, ஒதக்கூடாத இடத்தில் ஒதுவது முந்திச் செய்ய வேண்டிய கடமைகளை பிந்திச் செய்வது, பிந்திச் செய்ய வேண்டியதை முந்திச் செய்வது போன்ற தவறுகளும், மனஓர்மை இழப்பால் உறுப்புக்கள், ஆடைகள் மற்றும் இடங்களுடன் விளையாடுவது, கண்பார்வையை ஓர் நிலைப்படுத்தாமலிருப்பது, துரித கதியில் காரியமாற்றுவது போன்ற
குற்றங்களும் நிகழ்ந்துவிடலாம்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பள்ளிவாசலில் அமர்ந்திருக்கும்
வேளையில் ஒரு கிராமவாசி பள்ளியினுள் சென்று தொழுது திரும்பினார் பெருமானாரின் அருகில் வந்ததும் அவர் ஸலாம் கூறினார். அவருக்கு பதிலளித்த பெருமானார் (ஸல்) அவர்கள் “ஸல்லிபஇன்னக்க லம் துஸல்லி
(மீணடும் ஒரு முறை தொழுது வாருங்கள் நீங்கள் முறையாகத் தொழுக வில்லை) என்று கூறினார்கள், அவர் உடனே திரும்பிச் சென்று தொழுது வந்தார். முன் போன்றே பெருமானாருக்கு ஸலாம் உரைத்தார். பெருமானார் (ஸல்) அவர்களும் அவருக்கு பதிலளித்துவிட்டு முன்பு போன்றே மீண்டும் தொழுகச் சொன்னார்கள். மூன்றாவது முறை அவர் தொழுது திரும்பியதும் அவ்வாறே கூறினார்கள்
பெருமானாரின் கட்டளைக்கு அப்படியே கீழ்ப்படிய வேண்டும் என்ற எண்ணத்தால், எதைப் பற்றியும் சிந்திக்காமல் மீண்டும், மீண்டும் தொழுது திரும்பிய அந்த நண்பருக்கு இம்முறையும் பெருமானார் திரும்பத் தொழுக்கோரியது மன உறுத்தலை ஏற்படுத்தியது. எனவே "அண்ணலே பெருமானே! நான் எப்படித் தொழுக வேண்டும்" என்று கேட்டார். அப்போது அவருக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொழுகையின் நிலைகளை நிதானமாகச் செய்யக் கற்றுக் கொடுத்தார்கள்
அமைதியின்றித் தொழுவது, அதன் நன்மையை இழக்கச் செய்துவிடும்
என்ற உண்மை இந்த சம்பவம் மூலம் படம் பிடித்துக் காட்டப்படுகிறது. நம் அல்லாஹ்தானே! அவன் அர்ஹமுர் ராஹிமீன் ஆயிற்றே! அவன் நம
தொழுகையில் உள்ள குற்றங் குறைகளை கண்டு கொள்ளமாட்டான் என்ற நமது
மனப்பான்மைக்கு இந்த சம்பவம் சாவுமணி அடிக்கிறது.
சாதாரணமாக தபால் மூலம் ஒருவருக்கு பணம் அனுப்புவதாக
இருந்தாலும், பணம் அனுப்பும் படிவத்தில் முறை மீறும்போதும் அந்தப் பணம்
ஏற்றுக் கொள்ளப்படுவதில்லையல்லவா? அது போன்றே அலட்சியப் போக்கால், குறைபாடுகளுடன் நிறைவேற்றப்படும் வணக்க வழிபாடுகள் இறைவனால்
ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை.
அத்தகைய நிகழ்வுகளால் பர்லுவின் நன்மைகள் பழுதுபட்டு நிற்கும்போது
அதன்முன், அதன் பின் நிறைவேற்றப்படும் சுன்னத்தான வணக்கங்கள் அக்குறைகளை, நிறைவு செய்கின்றன.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நவின்றுள்ளார்கள்.
மறுமை நாளையில் முதன் முதலாக பர்லான வழிபாடுகள் பற்றித்தான் விசாரணை துவக்கப் படுகிறது. அவைகளில் மனிதன் முறையாக நடந்து கொண்டால் தப்பிவிடலாம். பர்லை அவன் பாழ்படுத்தியிருந்தால் பேரிழுப்புக்கு ஆளாவான். அவனது பர்லுகள் ஏதாவது குறைபாடு உடையதாக இருந்தால் எனது அடியான் நபிலான வணக்கங்கள் நிறைவேற்றியிருக்கிறானா பாருங்கள் என்று இறைவன் கேட்பான். நபிலான வணக்க வழிபாடுகள் இருந்தால், அதை கொண்டு பர்லின் குறைகளை நிறைவு செய்யப்படும். ஜகாத்து இன்னும் பிற அமல்களிலும் இந்த நியதியே பின்பற்றப்படும்
நூல் : அஹ்மது அறிவிப்பவர் : ஹளரத் அபூஹுரைரா (ரலி).
சுன்னத்தான வணக்கமுறைகளால் பர்லின் குறைகளை நிறைவு செய்யும் பயன்பாடும் உள்ளது என்ற கருத்துக்கு மேற்காணும் நழிமொழி வலுவூட்டுகிறது.
சுன்னத்தின் சிறப்புக்கள் பற்றி சில வரிகள்.
பஜ்ரின் முன் சுன்னத்து இரண்டு ரக்அத்துக்களும் இவ்வுலகம்
உலகத்தில் உள்ளவற்றைக் காண மேன்மையுடையதாகும்
அறிவிப்பவர் : ஹளரத் ஆயிஷா (ரலி) நூல் : முஸ்லிம்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் லுஹருக்கு முன்னால் நான்கு ரக்அத்து தொழுவார்கள். இது வானத்தின் கதவுகள் திறக்கபடும் நேரமாகும். இந்நேரத்தில் என்னிடமிருந்து ஒரு நற்செயல் மேல்நோக்கிச் செல்வதை நான்
விரும்புகிறேன் என்று கூறவும் செய்வார்கள்
அறிவிப்பவர் : ஹளரத் அப்துல்லாஹ் பின் அஸ்ஸாயிப் (ரலி). நூல்:திர்மிதி.
அசருக்கு முன் நான்கு ரக்அத்து தொழுவோருக்கு அல்லாஹ் அருள்
புரிகிறான் அறிவிப்பவர் : ஹளரத் இப்னு உமர் (ரலி). நூல் : திர்மதி.
மஃரிபு பர்ளு தொழுதவுடன் யாரிடமும் பேசாமல் இரண்டு ரக்அத் தொழுதால் அத்தொழுகை இல்லிய்யின் என்ற ஏழாவது சுவனத்திற்கு உயர்த்தப்படுகிறது.
அறிவிப்பவர் : ஹளரத் மக்ஹீல் (ரலி) நூல் : பைஹகீ.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இஷா தொழுத பின் என்னிடம் வந்தால் நான்கு ரக்அத்து தொழுகாமல் இருந்ததில்லை
அறிவிப்பவர்: ஹளரத் ஆயிஷா (ரலி).
நூல் : அபூதாவூது.
சுன்னத்து நபிலை பேணி வருவோமாக! குறை நீக்கம் பெற்று
இறையன்பைப் பெறுவோமாக.
இது மதிப்பிற்குரிய அல்ஹாஜ் அல்ஹாபிழ் O.M.அப்துல் காதிர் பாகவி ஹழ்ரத் அவர்கள் எழுதிய தேன் துளிகள் புத்தகத்தில் இடம் பெற்றுளள கட்டுரை. பல ஆலிம் பெருமக்களுக்கு பயனளித்த பயனுள்ள புத்தகம்.
ஜும்ஆ உரையாற்றுவதற்கு குறிப்பு தேடும் ஆலிம்கள் இதை பயன்படுத்திக் கொள்ளவார்கள் என்ற நன்நோக்கில் இங்கே பதியப்பட்டுள்ளது.
ஹழ்ரத் பெருந்தகை அவர்களுக்கு அல்லாஹ் எல்லா வளமும் நலமும் நிறைவாக தந்தருள்வானாக.
BY. A.காதிர் மீரான் மஸ்லஹி.
ஜாமிஆ பள்ளிவாசல்.
அசநெல்லி குப்பம்.
அரக்கோணம்.
9952129706.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக