.
وَمِنَ
النَّاسِ مَنْ يَشْتَرِي لَهْوَ الْحَدِيثِ لِيُضِلَّ عَنْ سَبِيلِ اللَّهِ
بِغَيْرِ عِلْمٍ وَيَتَّخِذَهَا هُزُوًا ۚ أُولَٰئِكَ لَهُمْ عَذَابٌ مُهِينٌ
அறிவில்லாமல், அல்லாஹ்வின்
பாதையை விட்டு தடுப்பதற்காகவும், அதைக் கிண்டல் செய்வதற் காகவும் வீணான பேச்சுக்களை விலை கொடுத்து வாங்குவோராக மனிதர்களில்
சிலர் இருக்கிறார்கள் கேவலமான தண்டனை உண்டு அவர்களுக்கு அல்குர்ஆன் : 931 : 60
ஹளரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்களின் மத்தியில்
இறையழைப்பு விடுத்துக் கொண்டிந்த காலையில், அவர்கள் கூறும் போதனைகளெல்லாம் புனையப்பட்ட கதைகள் என்று கூறிச் சிலர் அதற்கு எதிர்ப்புத்
தெரிவித்தார்கள். அந்த வரிசையில் "நஸ்ருபின் அல்ஹாரிது" என்பவன் கூபா
போன்ற நாகரீக நகரங்களுக்குச் சென்று பிற மொழிக் கதைகளை வாங்கி வந்து, அதை
மக்களுக்கு படித்துக் காட்டி, மக்களை திசை திருப்ப முயன்றான். முஹம்மது கூறுவது உப்புச் சப்பில்லாத
செய்திகள், நான் கூறும்
கதைகள் அப்படியல்ல, இந்தக்
கதைகளைக் கேட்கும் போது உங்களுக்கு எவ்வளவு இன்பமாகப் பொழுது கழியும் தெரியுமா? என்று அவன் கூறி வந்தான் அதுபோது
தான் மேற்காணும் திருவசனம் அருளப்பெற்றது
சரித்திரப் பின்னணி அவ்வாறு இருந்தாலும், நன்மை விளைவதைத் தடுக்கும் அனைத்து துற்செயல்களுக்கும் இந்த திருவசனம் பொருந்தும். இந்த நோக்கோடு
பார்த்தால் நவயுகத்தின் சினிமா, டீவி, விடியோக்களைச்
கட்டுவதாகவும் இத்திருவசனம் அமையப் பெறுகிறது. இவைகள் மூலம் வரும் திமைகள் கொஞ்சமா? எவ்வளவு நல்ல
காரியங்களைச் சிந்திக்க, செயல்படுத்த நேரம் கொடுக்காமல் நமது பொழுதையெல்லாம் அவை பாழ்படுத்தி விடுகின்றன
தஸ்பீஹ் மணி உருட்டிக் கொண்டே மரண தூதரை எதிர் நோக்கிக் கொண்டிருந்த வயோதிகத் தாய்மார்களைக் கூட இந்த டீ.வி-விடியோ கெடுத்துவிட்டது.
சிலர் தஸ்பீஹ் மணியைக் கிழே போட மனமில்லாது சின்னத்திரையை நோக்கிக் கொண்டிருப்பது
வெட்கக் கேடாகும். அவர்களின் நிலையே அப்படி மாறிவிட்டபோது, ஆடவர்களின்
நிலை, இளசுகளின்
நிலை பற்றி சொல்லவும் வேண்டுமோ..?
டீவியில் "ஒளியும்-ஒலியும்” நிகழ்ச்சி ஒலிபரப்பாகும்
நேரங்களில் மருத்துவர்கள் கூட தாங்கள் வேலையில்லாது இருப்பதாகக் கூறுகிறார்கள் தங்களின், தங்களைச்
சார்ந்தோர்களின் உடல் நலக்குறைவைக் கூட பொருட்படுத்தாத
அளவுக்கு மக்களை டீவி மாற்றியிருக்கிறது. அப்படியெனில் வணக்க வழிபாடுகளின் நிலைபற்றி குறிப்பிடவும் வேண்டுமோ..?
ஒரு காலம் இருந்தது. விண்முட்டும் மினாராக்களை வைத்து
முஸ்லிம்கள் வாழும் பகுதியைக் கண்டறியப்பட்டது. இன்று அதிகமான ஆண்டெனாக்கள் இனங்காணப்படுகின்றன. இருப்பதை அந்த அளவிற்கு இஸ்லாமியர் கள் தங்கள் வைத்து இஸ்லாமிய ஊர்கள் இல்லங்களை
மினிசினிமா தியேட்டராக மாற்றியமைத்து விட்டார்கள்
டீவியை பொழுது போக்கிற்காக நாங்கள் வைக்கவில்லை. அறிவைப் பெருக்குவதற்காக உலகச் செய்திகளை கண்டறிவதற்காகவே
பயன்படுத்துகிறோம் என்று கூறி சிலர் நியாயம் கற்பிக்க முனைகிறார்கள் ஆனால்
அதுபோன்ற நிகழ்ச்சிகள் அவர்கள் வீட்டுத்திரையில் தோற்றம் தரும் போது, போரடிக்கிறது
என்று கூறி, திரை
மூடப்படுவது அவர்களுக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை
சொல்ல வார்த்தை இல்லை
டீ.வி.யின் தீமைமைகளைச் சொல்ல வார்த்தைகளே இல்லே அதைக் கண்டு பிடித்த அறிவியலாரே அதன் விளைவு பற்றி அறிக்கைகளை அள்ளிக்
கொட்டுகிறார்கள். இளைஞர்களிடம் இருந்து கொஞ்ச நஞ்ச படிப்பார்வமும் இல்லாமல்
ஆக்கப்பட்டுவிட்டது ஒளி வட்டத்தை ஓய்வி
ஒளிச்சலின்றிப் பார்ப்பதால் பலருக்கு பார்வை கெட்டது. பார்வை கெட்டாலும் ஒளிவட்டத்தை
ஒய்வு பரவாயில்லை, தடித்த
மூக்குக் கண்ணாடிகளை அணிந்து சரி செய்து கொள்ளலாம். ஆனால் உயிரினும் மேலான
ஒழுக்கம் கெட்டு விட்டதே! சில குழந்தைகளுக்கு நேராக நிற்கவே தெரியவில்லை. உடலை ஒரு மாதிரி ஆட்டிக் கொண்டு
டிஸ்கோ ஸ்டைல் என்று கூறி ஒரு மாதிரியாக நிற்கிறார்கள். அவர்கள் வளர்ந்து ஆளாகும்
போது ஒழுக்கத்தை லட்சியமாகக் கொண்ட குடும்பத்தை எப்படி யெல்லாம் ஆட்டுவிக்கப்
போகிறார்களோ...?
இன்று நாட்டில் இளங்குற்றவாளிகள் பெருகிவருகிறார்கள் ஒளித் திரையில்
காட்டப்படும் கொலை, கற்பழிப்பு
போன்ற காட்சிகள் மட்டும் காரணமல்ல, பெற்றோர்களிடம்
அவர்கள் எதிர்பார்க்கும் பாச உணர்வைப் பெற முடியாமற்
போவதே காரணமாகும். பள்ளிக் கூடம் சென்று வந்த குழந்தையைத் தூக்கி உச்சி மோந்து இன்முகத்துடன் வரவேற்க
வீட்டிலுள்ளவர்கள் தயாராக இல்லை, அவர்களுக்கு
அதைவிட வெள்ளித் திரையிலோடும் வண்ணக் கலவையே முக்கியமாகத் தோன்றுகிறது இதனால்
குழந்தை தனித்து விடப்பட்டதாக
உணருகிறது. தாழ்வு மனப்பான்மை அடைகிறது. காலப் போக்கில் தன்மீது பாசம் செ லுத்த உலகில் யாருமில்லை, தன்னைக் கட்டுப்படுத்தவும்
யாருக்கும் உரிமை இல்லை என்று எண்ணத்தலைப்பட்டு விடுகிறது. இதனால் மலர் போன்ற மென்மையான உணர்வுகளைப்
பெற்றிருக்க வேண்டிய
இளமைப் பருவம் வெறித்தனமும், முரட்டு சுபாவமும் நிறைந்ததாக மாறிவிடுகிறது
குழந்தைகளை தாழ்வு மனப்பான்மை தோன்றாமல் வளர்க்க வேண்டு மென்பதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கீழ்க் கண்ட பொன்மொழியில் சூசகமாக உணர்த்தியுள்ளார்கள்
பெண் குழந்தை பெற்ற ஒருவர் அக்குழந்தையை அவர் உயிரோடு
புதைக்காமல், தாழ்வு
படுத்திப் பேசாமல், தனது ஆண்
மகனை, அக்குழந்தையை விட
சிறப்புப் படுத்தாமல் வளர்த்து வந்தால் அல்லாஹ் அவரை சுவனத்தில் நுழையச்
செய்வான்
அறிவிப்பவர்: ஹளரத் இப்னு அப்பாஸ் (ரலி) நூல் :(அபூதாவூது)
டீவி மோகத்தால் குழந்தைகளின் நிலை அப்படியானது என்றால், வயது முதிர்ந்த
பெற்றோர்களின் நிலை அதைவிட பரிதாபத்துக்குரியதாக மாறியுள்ளது. முதியோர்களைக் கவனிக்க நாதியில்லை. தமது
குடும்ப கவுரவம் பாதித்து
விடுமென்பதற்காகவே பல முதியோர்கள், "முதியோர் ஆதரவு இல்லத்தை” நாடாமலிருக்கிறார்கள்
கேவலமான உண்மை
தியேட்டரிலாவது காட்சிகளை இருளில் பார்க்கிறார்கள்.தன் அந்தஸ்த்துக்கு ஒத்தவர்களோடு பார்க்கிறார்கள். ஆனால், வீடுகளில் வெளிச்சத்தில் பார்க்கிறார்கள்! தாயும் இருக்கிறாள், தந்தையும்
இருக்கிறார் மகளும்
இருக்கிறாள், மருமகளும்
இருக்கிறாள், பக்கத்து
வீட்டு விடலைப் பையன்களும்
இருக்கிறார்கள், இன்றைய
காட்சிகளில் ஆபாசத்திற்குக் குறைவில்லையென்பது அனைவரும் அறிந்ததே அவ்வாறு ஆபாசமான காட்சி சின்னத் திரையில் தோற்றம் தரும்போது தந்தை மகன்
முகத்தைப் பார்த்தால் எப்படி இருக்கும். மகன் தாய் முகத்தைப் பார்த்தால் எப்படி இருக்கும். பருவமடைந்த பெண்
பக்கத்து வீட்டுப் பையன் முகத்தைப்
பார்த்தால் எப்படி இருக்கும்
எந்த சலனமும் ஏற்படவில்லையாயின், மனித ஜென்மங்களிடம் வெட்கம் மானம்
அனைத்தும் அகன்றுவிட்டது என்பது பொருளாகும். அல்லாஹ் தான் அவர்களைக் காப்பாற்ற வேண்டும்
வீடியோ..!
இறைச்சி இல்லாத விருந்தா? பருப்பு இல்லாத சாம்பாரா? என்று
வியப்படைவதைப்போன்று போட்டோ, வீடியோ இல்லாததிருமணமா? என்று வியப்படையும்
காலம் இது இன்று இஸ்லாமியர்களில் பெரும்பாலானோர் தங்கள் செயல்கள் ஹலாலா? ஹராமா? என உரசிப்
பார்ப்பதற்கு பதிலாக தங்கள் செயல்களால்
பெருமை கிடைக்குமா? வென
அலசிப்பார்க்கிறார்கள். மக்காவில் இல்லையா? மதீனாவில்
இல்லையா? என்று சிலர்
கூறி, அல்லாஹ்வையும் ரஸுலையும்
விட்டு சவூதியையும், அமெரிக்காவையும்
மேற்கோள் காட்டுகின்றனர்.
திருமண நிகழ்சிகளை ஒரு நினைவுச் சின்னமாகத்தானே எடுத்து வைக்கிறார்கள். அதை வணங்கவா போகிறார்கள்
என்று அவர்களுக்காக வக்காலத்து வாங்கக் கூடியவர்களும் இக்காலத்தில் உண்டு
ஆனால் பின்வரும் ஒரு நிகழ்வை சிந்தனை செய்தாலேயே இந்த சட்டத்திற்கு தெளிவு பிறக்கும்
ஹளரத் ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:- நான் உருவப்படம் பொறித்த ஒரு
தலையணையை விலைக்கு வாங்கியிருந்தேன். அந்த தலையணையை
முதன்முதலாகப் பார்த்ததும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வாசலுக்கு விரைந்து சென்றார்கள். அவர்களின் முகத்தில்
கோபத்தின் ரேகைகள்
படருவதை நான் கண்டதும், யாரஸுலல்லாஹ்!
அதூபு இலல்லாஹி வஇலா ரஸுலிஹி (.அல்லாஹ் விடமும், அவன து தூதரிடமும் மன்னிப்புக் கேட்கிறேன்
என்று கூறினேன். அதைச் செவியுற்றதும் நபிகள் நாயகம் (ஸல்) திரும்பி வந்தார்கள். இது என்ன தலையணை எனக்
கேட்டார்கள் "தாங்கள் அதன் மீது
அமருவதற்காகவும், அதை தலையில்
வைத்துபடுத்துக் கொள்ளுவதற்காகவும்தான்
விலைக்கு வாங்கினேன் என்று நான் பதிலுரைத்தேன்
இந்த உருவப் படங்களை வரைபவர்கள் மறுமையில் வேதனைப் படுத்தப்படுவார்கள். நீங்கள் வரைந்தவற்றுக்கு உயிர் கொடுங்கள் என்று அவர்களிடம்
கூறப்படும். மேலும் உருவப்படங்கள் இருக்கும் வீட்டிற்கு மலாஇகத்துகள்
வரமாட்டார்கள்” என்று நபிகள்
நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்
ஒருவருடைய ஆசையும், விருப்பமும்
நான் கூறுவதற்கு ஒத்ததாக ஆகும் வரை, அவர் ஈமான்
கொண்டவராக ஆக மாட்டார்" என்ற நபி மொழியையும் மேற்காணும் சம்பவத்தையும் கூட்டிக் கழித்துப்
பார்த்தால் வீடியோக்களின் நிலை வெட்ட
வெளிச்சமாகும்
ஒரு தடவை ஒளியைப் பாய்ச்சி ஒரே ஒரு கோணம் மட்டும் பதிவு செய்யப்படும் உருவப்படமே தடை செய்யப்பட்டதென்றால், ஒளியைப்
பாய்ச்சி நீண்ட நெடிய
நேரம் பற்பல கோணங்களைப் பதிவு செய்யும் விடியோக்கள் எவ்வளவு பெரிய தடைக்குரியதாகும்
வீணடிக்கும் வீடியோ
உலகத்தில் ஒரு சிலர் தான் நடிகர்கள் என்று கூறப்பட்டு வந்தது போக உலகத்திலுள்ள
அத்துணை பேர்களையும் நடிகைகளாக்க வந்துதித்துள்ளது இந்த வீடியோ
மணவிழா முடிந்த உடன் முதன்முதலாக கணவன் முகத்தை நோக்க வேண்டிய காரிகை வீடியோக்காரன் முகத்தில் விழித்து
தனது இவ்வாழ்வுக்கு பிஸ்மில்லாஹ்” சொல்ல
வேண்டிய கதிக்குள்ளாக்குகிறது இந்த வீடியோ
கண்ணியமாக குடும்பம் நடத்தும் பெண்கள் கூட, அடுத்தவன் திருமண அழைப்பை
ஏற்றதால் - பாழாய்ப்போன வீடியோவில் படமெடுத்து பதிவு செய்து பத்திரப்படுத்தப்பட்டு விட்டாள்
ஒழுங்காக வீட்டில் இருக்க முடியவில்லையா? ஊரில் உள்ள
திருமணத்திற்கெல்லாம் உன்னை யார் போகச் சொன்னது? உன்னையும் படமெடுத்து, இங்கே அந்த வீடியோ கேசட்டைப்
போட்டுக் காட்டி என் நண்பர்கள் என்னைக்
கிண்டல் செய்கிறார்கள் என்று பயணத்திலுள்ள எத்தனையோ கணவன்மார்கள் தங்கள் இல்லத்தாரசிகளுக்கு
எழுதுகிறார்கள். இதனால் சில குடும்பங்களுக்கிடையே
பிணக்குகளும் நிகழ்ந்ததுண்டு
கூட்ட நெரிசலில் முறையான பர்தா சற்று விலகினால் அதையும் அந்த வீடியோ படம்
எடுத்து விடுகிறது. அந்த வீடியோ அந்தக் காட்சியைத் தானே எதிர்பார்த்தது. அந்த கேஸட்டை பதிவு பண்ணுபவர்கள், அதைப் பிரதி எடுப்பவர்கள், அதைப்
போட்டுப் பார்ப்பவர்கள் அனைவரின் கண்களையும் அந்தக் காட்சி உறுத்துகிறது
பெட்டியின் அடியிலிருந்த நகைகள், போதாக் குறைக்கு அண்டை அயலாரிடம் இரவல் வாங்கிய நகைகள் அனைத்தையும் போட்டு அலங்கரித்து விலையுபர்ந்த
வண்ணப் பட்டாடைகளை பகட்டாக அணிந்து பெண்கள் வளைய வளைய வருவதை வீடியோவின் பதிப்பில் கண்ட சில பொறாமைக்
கண்கள் ஒரு கை வளையலை
திருடினால் போதும் அதை விற்றே காலம் தள்ளலாம் என்று எண்ணுவதும், இவ்வளவையும்
எங்கே சம்பாதிக்கிறார்கள் என்று பொறுமுவதும், அதன்
பின்னணியில் சூட்சி வலைகள் பின்னப் படுவதும் ஊகிக்கப்படும்
உண்மைகளாகும்
இவளைப் போய் மணந்து கொண்டேனே! வீடியோவில் பார்த்த அந்த உறவுக்காரப் பெண்ணை மணந்திருக்க வேண்டும் என்று மனத்தால் விபச்சாரம் செய்து
கொண்டிருப்பவர்கள் எத்தனயோ
இவைகள் எழுத்தில் வடிக்க முடிந்த காட்சிகள் இது தவிர வார்த்தையால் தெரிவிக்க முடியாத தீமைகள்
எத்தனை எத்தனையோ
அல்லாஹ் கூறுகிறான்
يَسْأَلُونَكَ
عَنِ الْخَمْرِ وَالْمَيْسِرِ ۖ قُلْ فِيهِمَا إِثْمٌ كَبِيرٌ وَمَنَافِعُ
لِلنَّاسِ وَإِثْمُهُمَا أَكْبَرُ مِنْ نَفْعِهِمَا ۗ وَيَسْأَلُونَكَ مَاذَا
يُنْفِقُونَ قُلِ الْعَفْوَ ۗ كَذَٰلِكَ يُبَيِّنُ اللَّهُ لَكُمُ الْآيَاتِ
لَعَلَّكُمْ تَتَفَكَّرُونَ
மதுபானம், சூதாட்டம்
பற்றி, அவர்கள்
உம்மிடம் வினவுகிறார்கள் அவற்றால் பெரும் பாவங்கள் விளைகின்றன, சில
பலன்களும் உள்ளன, அவற்றிலுள்ள
பாவங்கள் தான் பலன்களை விட அதிகமானவை' அல்குர்ஆன் : (2 : 217)
என திருக்குர் ஆன் குறிப்பிட்டு குறைந்த பயனும், நிறைந்த பாதிப்பும் விளைவிக்கும் பொருட்கள் தவிர்க்கப்பட வேண்டியவையே! என்ற நியதியை ஏற்படுத்துகிறது.
சிந்திப்போமா...?
இது
மதிப்பிற்குரிய அல்ஹாஜ் அல்ஹாபிழ் O.M.அப்துல் காதிர் பாகவி ஹழ்ரத் அவர்கள் எழுதிய தேன் துளிகள் புத்தகத்தில் இடம்
பெற்றுள்ள கட்டுரை. பல ஆலிம் பெருமக்களுக்கு பயனளித்த பயனுள்ள புத்தகம்.
ஜும்ஆ
உரையாற்றுவதற்கு குறிப்பு தேடும் ஆலிம்கள் இதை பயன்படுத்திக் கொள்வார்கள் என்ற
நன்நோக்கில் இங்கே பதியப்பட்டுள்ளது.
ஹழ்ரத் பெருந்தகை
அவர்களுக்கு எல்லா வளமும் நலமும் அல்லாஹ்
நிறைவாக தந்தருள்வானாக.
BY. A.காதிர் மீரான் மஸ்லஹி.
ஜாமிஆ
பள்ளிவாசல்.
அசநெல்லி
குப்பம்.
அரக்கோணம்.
9952129706.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக