பக்கங்கள்
புதன், 18 டிசம்பர், 2024
மக்கள் சேவையே இறைவனுக்கான சேவை
செவ்வாய், 17 டிசம்பர், 2024
தொழுகைக்கு அல்லாஹ் வழங்கும் சிறப்புகள்!
💞அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..
எனது பெயர் ………
தொழுகைக்கு அல்லாஹ் வழங்கக்கூடிய சிறப்புகளை பற்றி சொல்ல நான் இங்கு வந்திருக்கிறேன்.
அன்பிற்கினிய அல்லாஹ்வின் நல்லடியார்களே….
💞தொழுகை என்பது இரு ஷஹாதாக்களுக்குப் பிறகு சிறந்த நற்செயலாகும்!
திங்கள், 16 டிசம்பர், 2024
ஆடையும் மனிதனும்.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..
நஹ்மதுஹு வநுஸல்லி அலா ரசூலிஹில் கரீம் அம்மா பஃத்.
ஃபகத் காலல்லாலாஹு தஆலா ஃபில் குர்ஆனில் மஜீத் வல் ஃபுர்கானில் மஜீத் அவூது பில்லாஹி மினஷ் ஷெய்தானிர் ரஜீம். பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.
ஞாயிறு, 15 டிசம்பர், 2024
கூடாப் பண்புகள்.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்…
எனது பெயர்………….
நான் ஒரு முஸ்லிம் இடம் எந்தெந்த பண்புகள் இருக்கக்கூடாது என்பதை பற்றி கூற இங்கு வந்துள்ளேன்.
அல்லாஹ்வின் நல்லடியார்களே நாம்
பிறர் வீட்டில் அனுமதி பெறாமல், உள்ளே நுழைவது கூடாது.
பேஸ்புக் மோகம் (உரையாடல்)
ராஷித் : ஆ….ஆ புடிச்சிட்டேன் புடிச்சிட்டேன்
இர்ஷாத் . : ஏதோ பெரிய கோட்டைய புடிச்ச மாதிரி குதிக்குற - அப்புடி என்னத்த புடிச்ச
பேஸ்புக்ல 3000 ஃப்ரெண்ட்ஸ புடிச்சிட்டேன்
ராஷித். எங்க மூஞ்சிய காட்டு face-ம் தெரில ஒழுங்கா பேசவும் தெரில உனக்குலாம் பேஸ்புக்ல ஒரு அக்கவுண்ட்
வெள்ளி, 13 டிசம்பர், 2024
பொண்ணு பாருங்க.. (உரையாடல்)
காதர் : வாங்க தரகர் நம்ம பையனுக்கு பொண்ணு ஒன்னு பார்க்கனும்
தரகர் : என்ன காதர் பாய் பாத்திட்டா போச்சி அது சரி ஒங்க பையன் என்ன பன்னுறான்
காதர் : என்ன அப்படி கேட்டுடிங்க என் பையன் (VIP யா இருக்கான்.
புதன், 11 டிசம்பர், 2024
வீண் விரயம்.
கண்ணியத்திற்குரிய ஹிதாயத்துல் இஸ்லாம் மதரஸா மற்றும் மஸ்ஜிதே முபாரக் பள்ளிவாசல் தலைவர் செயலாளர் மற்றும் நிர்வாக பெருமக்களே ஜமாஅத்தார்களே இவ்விழாவிற்க்கு சிறப்பு விருந்தினராக வருகை தந்த ஆலிம்களே சமூக சேவையாளர்களே….
திங்கள், 9 டிசம்பர், 2024
முள்ளம்பன்றிக் கோட்பாடு
முள்ளம்பன்றிகளால் ஒன்றோடு ஒன்று நெருங்கி வாழ முடியாது. அவற்றில் காணப்படும் முட்கள் காரணமாக எதிரிகள் மட்டுமல்ல, சொந்த குட்டிகளைக் கூட அரவணைக்க முடியாது.
புதன், 4 டிசம்பர், 2024
தொழுகை என்றால் என்ன?
தொழுகை இறைவனின் திருப்தியைப் பெற்றுத்தரும்
தொழுகை நபிமார்களின் உயர்ந்த வணக்கமாகும்.
தொழுகை இஸ்லாத்தின் அடிப்படையாகும்.
செவ்வாய், 19 நவம்பர், 2024
இவர்களை அல்லாஹ் பார்க்கமாட்டான்.
அல்லாஹ் மறுமை நாளில் இவர்களையெல்லாம் ஏறெடுத்தும் பார்க்க மாட்டான் என்று நபி அவர்கள் கொடுக்கும் பட்டியல் இதோ.
1. கணவனுக்கு நன்றி செலுத்தாத மனைவியை அல்லாஹ் ஏறெடுத்தும் பார்க்க மாட்டான்.
ஞாயிறு, 27 அக்டோபர், 2024
இல்லற இரகசியம். (கதை)
ஒரு சாது மரத்தடியில் அமர்ந்திருந்தார்.
ஒரு பறவை அவரிடம் சென்று பேசியது.
‘ஐயா! உலகை சுற்றிப் பார்க்க ஆசைப்படுகிறேன். முதலில் ஆயிரம் காத தூரம் கடலில் பறந்து அழகான ஒரு தீவை பார்க்க விரும்புகிறேன்', என்றது.
சனி, 26 அக்டோபர், 2024
நம்பிக்கையே வாழ்க்கை.
நம்பிக்கையின் அடிப்படையில் தான் மனித வாழ்வு இயங்கிக் கொண்டிருக் கிறது. இரண விஷயத்திலும் நம்பிக்கை முக்கிய பங்கை வகிக்கிறது. யானைக்கு தும் பிக்கை எவ்வளவு முக்கியமோ மனிதனுக்கு நம்பிக்கை அதை விட முக்கியம். அது இறை நம்பிக்கையாக பரிணமிக்கின்ற போது மனித வாழ்வு இலங்கத் துவங்குகிறது.
வெள்ளி, 25 அக்டோபர், 2024
ஏழு எட்டு என்பதின் விளக்கம்.
1. கண்,
2. காது,
3. நாவு.
4. கை.
5. வெட்கஸ்தலம்.
6. கால்.
7. வயிறு.
ஆகிய ஏழு அங்கங்களைக் கொண்டு அல்லாஹ தஆலாவுக்கு மாறு செய்தவர்கள்தாம் அவ்வேழு வாசல்கள் வழியாக நுழைய நிர்ணயிக்கப்படுவார்கள் என்று பஹ்ருல் உலூம் என்னும் கிரந்தத்தில் கூறப்பட்டிருக்கிறது.
"நரகத்துக்கு ஏழு தலைவாசல்கள் இருக்கின்றன என்பதானது நன்மை தீமைகளைப் புரிய ஏவல் விலக்கல் செய்யப்பட்டுள்ள அவயவங்களின் முறைப்படி இருக்கிறது.
அவைகளாவன:-கேள்வி, பார்வை, நா, கரங்கள். கால்கள். வெட்கஸ்தலம், வயிறு ஆகியவை களாகும்.
ஆகவே. ஏழு உறுப்புகளும் நரகத்தின் ஏழு தலைவாசல்களின் அந்தஸ்துகளாகும்.
அல்லாஹுதஆலா விலக்கலாக்கி இருப்பவற்றைச் செய்யாமல் அவற்றைப் பரிபூரணமாகக் காத்துக் கொள்.
இல்லையேல். உனக்கு நன்மையாக இருப்பது தீமையாக மாறிவிடும். உனக்கு பாக்கியமாக வந்து விட்டது வேதனையாக மாறிவிடும்"
என்பதாக இமாமுல் ஆரிஃபீன் இப்னுல் அரபிய்யி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களுடைய ஃபுத்தூஹாத்து என்ற கிரந்தத்தில் எழுதப்பட்டிருக்கிறது.
தவிர."பிரிவினையால் கரிவதால் தூரமாகுதல் என்ற நரகமானது அவர்கள் யாவருக்கும் வாக்களிக்கப்பட்டதாக இருக்கிறது.
அதற்கு
1. பேராசை,
2. தீங்கு,
3. மனப்புழுக்கம்,
4. பொறாமை,
5. கோபம்,
6. இச்சை (காமம்)
7. தற்பெருமை
என்ற ஏழு தலைவாசல்கள் இருக்கின்றன.
நஃப்ஸாகிய இப்லீசைப் பின்பற்றுகிற ஆன்மாக்களிலிருந்து ஒவ்வொரு தலைவாசலுக்கும் நஃப்ஸுடைய தன்மைகளைக் கொண்டு அது தன்மையை எடுத்துக் கொள்வதற்கேற்றவாறு இருக்கிறது"
என்பதாக தாவீலாத்துன்னஜ்மிய்யா என்ற கிரந்தத்தில் கூறப்பட்டிருக்கிறது.
பாங்கு என்னும் அதானில் ஏழு வாக்கியங்களும்,
இகாமத்தில் எட்டுவாக்கியங்களும் இருக்கின்றன.
இவ்விரண்டையும் நிறைவேற்று பவருக்கு நரகின் ஏழு வாசல்களும் அடைக்கப்பட்டு சுவர்க்கத்தில் எட்டு வாசல்களும் திறக்கப்படுகின்றன என்று கூறப்படுகிறது.
لَهَا سَبْعَةُ اَبْوَابٍ لِكُلِّ بَابٍ مِّنْهُمْ جُزْءٌ مَّقْسُوْمٌ
அதற்கு ஏழு வாசல்கள் உண்டு; அவ்வாசல்கள் ஒவ்வொன்றும் பங்கிடப்பட்ட (தனித்தனிப்) பிரிவினருக்கு உரியதாகும்.
(அல்குர்ஆன் : 15:44)
தப்ஸீருல் ஹமீத் ஃபீ தஃப்ஸிரில் குர்ஆனில் மஜீத்
இந்த நூலிலிருந்து எடுக்கப்பட்டது.
ஆசிரியர்
சன்மார்க்க முற்றிஞர், அல்லாமா, மர்ஹும் எம்.எஸ்.முஹம்மது அப்துல் காதிர் சாஹிப் பாக்கவி(ரஹ்)
பதிவு
திருப்பூர்
K அமானுல்லாஹ்
திங்கள், 7 அக்டோபர், 2024
நீ திருந்தவே மாட்டியா? (கதை)
”திரும்பத் திரும்ப பிக் பாக்கெட் அடிச்சிட்டு ஜெயிலுக்கு வர்ரியே, நீ திருந்தவே மாட்டியா?” என்றார் ஜட்ஜ் ..
“எவ்வளவு தரம் பிக் பாக்கெட் அடிச்சாலும் அதே தண்டனையே தர்ரீங்களே, நீங்க சட்டத்தைத் திருத்த மாட்டீங்களா?” என்றான் பிக் பாக்கெட் பக்கிரி.
புதன், 2 அக்டோபர், 2024
மரணம் வரும் முன்.. (கதை)
ஒரு பழைய சூபி கதை;
முன்னொரு காலத்தில் ..
குரங்கு ஒன்று இருந்தது ..
அதற்கு செர்ரிப் பழங்கள் என்றால் உயிர் ..
ஒருநாள் அது, அழகான செர்ரிப் பழத்தைக் கண்டது ..
செவ்வாய், 1 அக்டோபர், 2024
தம்பி வண்டி எடுப்பா.. (கதை)
ஒரு நகரத்திற்கு ஒரு சட்டமிருந்தது. அதன்படி யார் வேண்டுமென்றாலும் அந்த நகரத்திற்கு ராஜாவாக வரமுடியும். ஆனால், அந்தப் பதவி ஐந்தாண்டுகள் மட்டுமே! ஐந்தாண்டு முடிந்த அடுத்த நாளே மன்னனை ஆற்றின் கரைக்கு மறுபுறம் உள்ள காட்டில் விட்டுவிடுவார்கள்.
திங்கள், 30 செப்டம்பர், 2024
நன்றி Thanks சொல்லலாமா..?
உ தவிக்கு நன்றி செலுத்துவது மனிதனுடைய இயற்கை குணம். ஆனால், இன்று செய்யும் உதவிக்கு நன்றி தெரிவிக்காவிட்டா லும், அதைப் பற்றி குறைகூறாமல் இருந்தாலாவது பரவாயில்லை என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது.
மனிதனிடமிருந்து நன்றி விசுவாசம் எடுபட்டுப்போய்விட்டதால் நன்றியுள்ள பிராணி நாய்' என்று பாடம் சொல்லிக்கொடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். நன்றியுணர்வில் எல்லோருமே மனிதனைவிட மிருகத்திற்கு முதலிடம் கொடுத்திருப்பதுதான் நடைமுறை.
அமெரிக்கர்களுக்கு நன்றி:
குழந்தைகள் தினம். ஆசிரியர் தினம், எய்ட்ஸ் ஒழிப்புதினம். இவ்வாறு ஒவ்வொன்றுக்கும் ஒரு தினத்தை உண்டாக்கி வைத்திருப்போர், அமெரிக்கா வில் ஒவ்வொரு நவம்பர் மாதத்தின் நான்காவது வியாழக்கிழமையை Thanks Giving Day நன்றி தெரிவிக்கும் தினமாக கொண்டாடிவருகின்றனர்.
கடந்த ஆண்டுகளில், நன்றி தெரிவிக்கும் தினத்தில் அமெரிக்க அதிபர் இரகசியமாக ஈராக் சென்று அமெரிக்க இராணுவத்திற்கு நன்றி தெரிவித்து விட்டு வந்தார். ஆனால், இந்த ஆண்டின் நன்றி தெரிவிக்கும் தினத்தில் முழு உலகமும் சேர்ந்து அமெரிக்க மக்களுக்கு நன்றி சொல்லிக்கொண்டி ருக்கிறது.
உலக அமைதிக்கு அச்சுறுத்தலாக இருப்பவர்கள் யார். யார் என்று எடுக்கப்பட்ட ஒரு கருத்துக் கணிப்பில் இரண்டாம் (முதல்) இடத்தைப் பிடித்தவர் ஜார்ஜ் புஷ், உலகத்தின் போலீஸ்காரர்' என்ற கற்பனையில் ஈராக்கை அடுத்து அவரது இலக்கு ஈரானா? வடகொரியாவா என்றெல்லாம் கேள்விகள் எழுப்பிய உலக ஊடகங்கள், இப்போது புஷ் சர்வதேச தலைவர் என்ற அந்தஸ்தை இழந்துவிட்டார். அதிகாரத்தை இழந்து பொறுப்பற்றவராகிவிட்டார்' என்கின்றன.
ஏற்கனவே அமெரிக்க பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து முதலாளித்து வத்தின் அஸ்திவாரம் ஆடிப்போயுள்ளது. இந்நிலையில் சதாமுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட மறுநாள் நடந்த தேர்தலில் அப்பாவி முஸ்லிம் களை அநியாயமாக கொன்றுகுவித்த புஷ்ஷுக்கு மரண அடி கொடுத்திருக் கிறார்கள் அமெரிக்க மக்கள். புஷ்ஷின் சிறகுகளை வெட்டிவிட்ட அமெரிக்க மக்கள் உண்மையிலேயே நன்றிக்குரியவர்கள். பாரம்பர்யமிக்க பிரிட்டிஷ் பத்திரிகையான கார்டியன்' அமெரிக்கர்களை பாராட்டி 'தேங்க்யூ அமெரிக்கா' என தலையங்கம் எழுதியுள்ளது.
நன்றி செலுத்தும் விதம்
இஸ்லாத்தின் பார்வையில் 'நன்றி' என்பது ஒரு தினத்தோடு மட்டுமல்ல மனித வாழ்க்கையின் ஒவ்வொரு மணித் துளிகளோடும் சம்பந்தப்பட்டிருக் கிறது. இறைவேதத்துக்கு இணையான இறைபாக்கியம் வேறில்லை என்பதால், நோன்பின் மூலம் குர்ஆன் அருளப்பெற்ற காலத்தில் 'நன்றி செலுத்துவதை மார்க்கக் கடமையாக்கி உள்ளது இஸ்லாம்.
விண்ணையும் மண்ணையும் மனிதனுக்காகவே இயங்கவைத்த அனைத் துலகங்களின் இரட்சகனுக்கு நன்றி தெரிவிப்பதற்காக, 'அல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன் இந்த அண்ட சராசரத்தைப் படைத்து பராமரிக்கக்கூடிய அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்" என்று கூறுவதை ஒவ்வொரு தொழுகை யிலும் அவசியமாக்கப்பட்டுள்ளது.
எவரேனும் ஒருவருக்கு கொடை வழங்கப்பட்டால், வசதியிருப்பின் அவரும் கொடையளித்தவருக்கு பகரமாக தானும் வழங்கட்டும். அப்படியில் லையானால், அவரை மனதார புகழட்டும்" என்றும், மற்றோர் அறிவிப்பில், உதவியவருக்கு ஜஸாக்கல்லாஹு கைரா - பகரத்தை வழங்குவானாக என்று கூறி விட்டால் அவரைப் புகழ வேண்டிய G அளவுக்கு புகழ்ந்தவராகிவிடுகிறார்' என்றும் நபி (ஸல்) அவர்கள் கூறினார் கள். (திர்மிதீ) (ஒழுங்காக)
அல்லாஹ் உங்களுக்கு சிறந்த
அப்துல்லாஹ் இப்னு அபீரபீஆவி டம் ஒரு முறை நபி (ஸல்) அவர்கள் கடன் வாங்கியிருந்தார்கள். கடளைத் திருப்பிச் செலுத்தும்போது. உங்களுக் கும் உங்களுடைய குடும்பத்திலும்
நிறைவேற்றுவதும் புகழ்வதும்தான் கடன் கொடுத்தவருக்கு செய்யும் பிரதி உபகாரம் என்று கூறினார்கள்.
செல்வத்திலும் அல்லாஹ் அருள்வளம் (பரக்கத்) அளிப்பாளாக' என்று துஆச் செய்துவிட்டு (ஒழுங்காக) நிறைவேற்றுவதும் புகழ்வதும்தான் கடன் கொடுத்தவருக்கு செய்யும் பிரதி உபகாரம் என்று கூறினார்கள்.
இந்தக் காலத்தில் கடன் கொடுத்தவர், 'தன்னைப் பாராட்டாவிட்டாலும் பரவாயில்லை, வாங்கிய கடனை உருப்படியாக திருப்பிக் கொடுத்துவிட்டால். நானே உன்னைப் பாராட்டுகிறேன்" என்ற நிலைதான் உள்ளது.
உதவிக்கு தகுந்த நன்றி
செய்யப்படும் உதவியின் முக்கியத்துவம் மற்றும் சிரமத்திற்கு தகுந்தவாறு நன்றியும் அமைய வேண்டும். நபி (ஸல்) அவர்கள் சுய தேவையை நிறை வேற்றுவதற்காக வெளியே சென்றிருந்தார்கள். திரும்பி வருவதற்குள், இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் உளூச் செய்வதற்கு தண்ணீர் எடுத்துவைத்தார்கள். நபி (ஸல்) அவர்கள் வந்து, இந்த தண்ணீரை வைத்தது யார்? என்று வினவி னார்கள்.'
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள்தான் வைத்தார்கள்' என்று தெரிவிக்கப் பட்டதும், யா அல்லாஹ்! அவருக்கு மார்க்க விஷயத்தில் நல்ல விளக்கத் தைக் கொடுப்பாயாக!" என்று துஆச் செய்தார்கள். இங்கு இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களின் உதவி சாதாரணமானதுதான்.
ஆனால், நபியவர்களின் நன்றியுணர்வில் வெளிப்பட்ட பிரார்த்தனையோ மிகவும் உயர்ந்தது. ஏனெனில், எந்த நேரத்தில் எந்த வேலையை செய்ய வேண்டுமென்பதை யாரும் சொல்லாமல் தாங்களாகவே விளங்கி தண்ணீர் எடுத்து வைத்திருந்தார்கள்.
செய்த காரியம் சாதாரணமாக இருந்தாலும், அதற்காக செய்த சிந்தனை பாராட்டுக்குரியது. எனவேதான், நபி (ஸல்) அவர்கள் 'இந்த விளக்கம் மார்க்க விஷயத்திலும் பொங்கி வழியட்டும்" என்று பிரார்த்தனை செய்தார்கள்.
நபியவர்களின் தாடியிலிருந்த ஒரு பொருளை அபூஅய்யூப் அல்அன்ஸாரீ (ரலி) அவர்கள் தட்டிவிட்டதற்காக நீங்கள் வெறுக்கும் காரியத்தை அல்லாஹ் உங்களைவிட்டு நீக்குவானாக' என்று பிரார்த்தித் தார்கள். இப்படி சின்னத் சின்ன உதவிக்கும் உடனடி நன்றி தெரிவிக்கும் பழக்கத்தை நபி (ஸல்) அவர்கள் நமக்கு கற்றுத் தந்துள்ளார்கள்.
தேங்க்ஸ் (THANKS] சொல்லலாமா?
இன்று எல்லா இடங்களிலும் ஆங்கில வார்த்தைகளை உபயோகிப்பது தான் நாகரீகமாக கருதப்படுகிறது. நாம் பேசுவதில் பாதி வார்த்தை ஆங்கில கலப்புடன்தான் இருக்கிறது. 'கக்கூஸ்' என்பதைவிட டாய்லட் என்று சொல்லி விட்டால் புனிதமான இடத்திற்கு சென்றுவந்ததாக நினைப்பு.
எந்த மொழியின் மீதும் நமக்கு வெறுப்பில்லை. ஆனால், குர்ஆனுடைய மொழியை விரும்புவது இறைநம்பிக்கையாளரின் பண்பாடு. எனவே, 'தேங்க்ஸ்' என்று சொல்வதைவிட நபி (ஸல்) அவர்கள் கற்றுத் தந்த கருத்துச் செறிவுள்ள துஆவாகிய 'ஜஸாக்கல்லாஹு கைரா' என்று அரபியிலேயே சொல்வதை பரவலாக்க வேண்டும். அதையே கண்ணியமானதாகவும் “ நாகரீகமானதாகவும் கருதும் மனோ நிலை நம்மவர்களிடையே உருவாக வேண்டும். "மக்களுக்கு நன்றி செலுத்தாதவன் அல்லாஹ்வுக்கு நன்றி
நன்றி மறப்பது... தர்மம் செய்யுங்கள், அதிகமாக பாவமன்னிப்பு கோருங்கள். ஏனெனில், உங்களை நரகவாசிகளில் அதிகமாகப் பார்த்தேன்" என்று பெண்களை நோக்கி நபி (ஸல்) அவர்கள் கூறிய செலுத்தியவனாக மாட்டான்" என்று எச்சரித்தார்கள். போது, 'அதற்கு காரணம் என்ன?" என்று புத்திக்கூர்மையுள்ள ஒரு பெண் கேட்டார். நீங்கள் அதிகமாக சாபமிடுகிறீர்கள். கணவனிடம் நன்றிகெட்ட வர்களாக நடந்துகொள்கிறீர்கள் என்று நபி (ஸல்) அவர்கள் காரணம் கூறினார்கள்.
நன்றி மறப்பது நரகவாசியாக ஆக்கிவிடுமளவுக்கு கொடூரமானது. ஏளெனில், கணவனுக்கு நன்றி செலுத்தாதவர்கள் அல்லாஹ்வின் அருட் கொடைக்கு எப்படி நன்றி செலுத்துவார்கள் எனவேதான், நபி (ஸல்) அவர்கள். மக்களுக்கு நன்றி செலுத்தாதவன் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தியவளாக மாட்டான்" என்று எச்சரித்தார்கள்.
மெளலவி, எஸ்.ஏ. காஜா நிஜாமுத்தீன் யூசுஃபி,
திண்டுக்கல் -2.
மனாருல் ஹுதா 2006 டிசம்பர் இதழிலிருந்து.
ஞாயிறு, 29 செப்டம்பர், 2024
கேள்வி பதில் பாகம். 12
முஹம்மது_றஸூலுல்லாஹ்.
#வினா_விடை.
#பாகம்_12.
276 : நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் விரும்பிய எண்ணெய்?
*ஸைத்தூன் எண்ணெய்*
277 : முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் நடக்கிற பொழுது நிழல் தறையில் பதியுமா?
*பதியாது.மேகம் அவர்களுக்கு நிழல் கொடுக்கும்.*
278 : காதிமுரஸூலுல்லாஹ் (நபி ஸல்லல்லாஹு அலைஹி அவர்களின் சேவகர்) என்ற பெயரில் அறியப்படும் நபித்தோழர் யார்?
*அனஸ் இப்னு மாலிக் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள்*
279 : நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் ஹிஜ்றா செல்லும் வேளையில் தன் விரிப்பில் யாரை படுக்க செய்தார்கள்.?
*அலி (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள்*
280 : திரு நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் பயன்படுத்திய வாகனங்கள் எவை?
*குதிரை, ஒட்டகம், கழுதை, கோவேறு கழுதை*
281 : நாயகத்தின் ஹவாரியூன்கள் என்னும் தோழர்களில் ஒருவர் எனக் கூறப்பட்டவர் யார்?
*அஸ்ஸுபைரு இப்னுல் அவ்வாம் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள்*
282 : உஸ்மான் இப்னு மள்வூன் (ரலியல்லாஹு அன்ஹு) யார்?
*நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் பால்குடி சகோதரர். உமர் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களின் மாமா மகன். முஹாஜிர்களில் முதன் முதலாக மரணித்தவர்*
283 : நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின்தந்தை மரணிக்கும் போது அவர்களின் வயது எத்தனை?
*18 வயது*
284 : அலி (ரலி) அவர்கள் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களுக்கு என்ன உறவு?
*நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் பெரிய தந்தை அபூதாலிபின் மகன்தான் அலி (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள்.*
285 : தமது சட்டையில் கபனிட்டு நபிகளால் அடக்கம் செய்யப்பட்ட பெண்மணி யார்?
*அபூதாலிபின் மனைவி ஃபாத்திமா பின்த் அஸத் இவர்கள் அலி (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களின் தாயார்.*
286 : முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் மறைவுக்கு பிறகு இஸ்லாமிய ஆட்சியின் முதல் கலீஃபா யார்?
*ஹழ்ரத் அபூபக்கர் சித்தீக் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள்*
287 : முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் மறைவுக்கு பின் இஸ்லாமிய ஆட்சியின் இரண்டாம் கலீஃபா யார்?
*ஹழ்ரத் உமர் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள்.*
288 : முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் மறைவுக்கு பிறகு இஸ்லாமிய ஆட்சியின் மூன்றாம் கலீஃபா யார்?
*ஹழ்ரத் உஸ்மான் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள்.*
289 : முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின்மறைவுக்கு பிறகு இஸ்லாமிய ஆட்சியின் நான்காம் கலீஃபா யார்?
*ஹழ்ரத் அலி (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள்*
290 : முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் பயன்படுத்திய சுர்மா என்ன?
*இஸ்மித் என்ற சுருமாவை பயன் படுத்தினார்கள்*
291 : நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் எந்த பொருட்களை தந்தால் மறுக்க கூடாது என்று சொன்னார்கள்?
*தலையணை , எண்ணெய், பால், நறுமண பொருட்கள்*
292 : இஸ்லாமிய அழைப்பு பணிக்காக தாயிஃப் சென்ற நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களை அந்த மக்கள் எவ்வாறு நடத்தினார்கள்?
*இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளாதது மட்டுமின்றி நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களை மிக மோசமாக நடத்தினார்கள்.நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களுக்கு எதிராக சிறுவர்களை தூண்டினார்கள். அச்சிறுவர்கள் நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களை கல்லால் எறிந்து இரு கணுக்கால்களில் இரத்தம் வரும் வரை காயப்படுத்தினார்கள்.*
293 : நஜ்ஜாஷி மன்னரால் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களுக்கு திருமணம் செய்விக்கப்பட்ட பெண்மணி யார்?
*உம்மு ஹபீபா ரமலா பின்த் அபீ ஸுஃப்யான் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள்.*
294 : அர்ஷின் மேலிலிருந்து அல்லாஹ்வால் திருமணம் செய்விக்கப்பட்டவர் என தம் சக்களத்திகளிடம் பெருமைப்படும் பெருமானாரின் மனைவி யார்?
*உம்முல் முஃமினீன் அன்னை ஸைனப் பின்த் ஜஹ்ஷ்.*
295 : கிஸ்ரா மன்னரின் முத்து பதித்த காப்புகளை அணியும் பேறு பெற்றவர் யார்?
*ஸுராகத் இப்னு மாலிக்*
296 : நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் தந்தையுடன் பிறந்தவர்களில் ஆண்கள் எத்தனை பேர்?
1 : ஹாரிஸ் 2 : ஸுபைர் 3 : அபூதாலிப் 4 : அப்துல்லாஹ் 5 : ஹம்ஸா 6 : அபூலஹப் 7 : முகவ்விம் 8 : ஸிஃபார் 9 : அப்பாஸ் 10 : கைதாக்...
297 : இவர்களில் இஸ்லாத்தை ஏற்றவர்கள் யார்?
*ஹம்ஸா (ரலி) அப்பாஸ் (ரலியல்லாஹு அன்ஹு)*
298 : நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் தாயுடன் பிறந்த பெண்கள் எத்தனை பேர்?
*ஆறு பேர்*
*ஸஃபிய்யா, ஆத்திக்கா, அர்வா, உமைய்யா,பர்ரா,உம்மு ஹக்கீம்,
ஆகிய ஆறு நபர்கள்*
299 : இவர்களில் இஸ்லாத்தை ஏற்றவர்கள் யார்?
*ஸஃபிய்யா (ரலியல்லாஹு அன்ஹா)*
*மற்றவர்களில் கருத்து வேறுபாடு உண்டு.*
300 :நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களுடைய குழந்தைகளில் முதலாவதாக பிறந்த குழந்தை யார்?
*ஹழ்ரத் காஸிம் (ரலி) அவர்கள்*
#நிறைவடைந்தது..
#இனி_அல்லாஹ்_நாடினால்_மீண்டும் #தொடரும்......
#ஆக்கம்.
#M_சிராஜுத்தீன்_அஹ்ஸனி..
#இயக்குனர்.
#மைமூன்_பப்ளிஷிங்_ஹவுஸ்.
#திருவிதாங்கோடு......
சனி, 28 செப்டம்பர், 2024
கேள்வி பதில் பாகம். 11
முஹம்மது_றஸூலுல்லாஹ்.
#வினா_விடை.
#பாகம்_11
251 : நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களை புகழ்ந்து அதிகமானவர்களால் பாடப்படும் கஸீதாவின் பெயர் என்ன?
*புர்தா ஷெரீஃப்*
252 :நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களிடம் சுவனத்தில் உங்களுடன் எனக்கும் இடம் வேண்டும் என்று கேட்ட சஹாபி யார்?
*ரபீஆ (ரலி) அவர்கள்*
253 : நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் திருமுடியை தனது தொப்பியில் வைத்து போர் களங்களில் கலந்து கொண்ட ஸஹாபி யார்?
*காலித் பின் வலீத் (ரலியல்லாஹு அன்ஹு)*
254 : நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களை புகழ்வதற்காக எந்த ஸஹாபிக்கு பள்ளிவாசலில் மிம்பர் உருவாக்கப்பட்டது.?
*ஹஸ்ஸான் இப்னு ஸாபித் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள்*
255 : உஹது போர் களத்தில் பெருமானார் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களை அரணாக காத்து நின்றோர்களில் ஒரு பெண்மணியும் இருந்தார் அவர் யார்?
(உம்மு உமாரா என்னும் நுஸைபா பின்த் கஃபில் மாஸினிய்யா
(ரலியல்லாஹு அன்ஹா) அவர்கள்.*
256 : நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களுடைய மனைவிமார்களில் உம்முல் மஸாக்கீன் என்றழைக்கப்பட்டவர் யார்?
உம்முல் முஃமினீன் ஸைனப் (ரலியல்லாஹு அன்ஹா) அவர்கள்.
257 : நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் அதிகம் விரும்பிய காய் எது?
*சுரைக்காய்*
258 : முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கடைசியாக செய்த அமல் எது?
*மிஸ்வாக் குச்சியால் பல் துலக்கினார்கள்*
259 : முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் உம்மத்தாருக்கு ஸலாம் சொல்லி அனுப்பிய நபி யார்?
*மிஃராஜ் பயணத்தின் போது நபி இப்ராஹிம் (அலை) அவர்கள் ஸலாம் சொல்லி அனுப்பினார்கள்*
260 : முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் கப்ரை கட்டியது யார்?
*ஹழ்ரத் அபூதல்ஹா அன்ஸாரி ரலியல்லாஹு அன்ஹு அவர்களாகும்*
261 : முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் இந்த உம்மத்திற்காக செய்ய இருக்கிற மாபெரும் உபகாரம் எது?
*ஷஃபாஅத் என்னும் பரிந்துரை.*
262 : முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் அதிகம் விரும்பிய நறுமணம் எது?
*கஸ்தூரி மற்றும் ஊது ஆகும்*
263 : முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களுக்கு பிடித்த மாமிசம் எது?
*ஆட்டின் முன்சப்பை கறியாகும்*
264 : முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களுக்கு முதன் முதலில் இறங்கிய குர்ஆன் வசனம் எது?
*இக்ரஃ பிஸ்மி ரப்பிக்க என்பதாகும்*
265 : முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் சுத்தம் எப்படிப்பட்டது?
*தூய்மையான ஆடை அணிவார்கள், தினசரி மிஸ்வாக் செய்வார்கள், நறுமணம் பூசுவார்கள், சுர்மா இடுவார்கள், தலைமுடி மற்றும் தாடியை சீப்பினால் வாருவார்கள்.*
266 : நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் வியர்வை துளிகளின் மணம் எவ்வாறு இருக்கும்?
*நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களுடைய வியர்வை துளிகளின் நறுமணம் மற்ற எல்லா உயர்ந்த நறுமணங்களையும் விட மேலானதாக இருந்தது.*
267 : முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் எப்போது ஹஜ் செய்தார்கள்?
*ஹிஜ்ரி 10_ம் ஆண்டு ஹஜ் செய்தார்கள்.*
268 : முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் தூங்கும் முன் என்ன செய்வார்கள்?
*நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் தூங்கும் முன் இஸ்மித் என்ற ஸுர்மாவை பயன் படுத்துவார்கள். ஏனெனில் அவை பார்வையை கூர்மையாக்கும். இமை முடியை வளரச் செய்யும்.*
269 : முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் பொன் மொழிகளுக்கு என்ன சொல்லப்படும்?
*ஹதீஸ்*
270 : மறுமை நாளில் முதன் முதலாக எழுப்பப்படும் நபி யார்?
*முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள்*
271 : முத்தபிஃஉஸ்ஸுன்னா என்றழைக்கப்படும் ஸஹாபி யார்?
*அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள்*
272 : நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களிடம் பெண்களின் தூதுவராகச் சென்ற நபித் தோழி யார்?
*அஸ்மா பின்த் யஸீது இப்னு ஸகன்*
273 : முஸ்தஜாபுத்தஃவா (துஆ அங்கீகரிக்கப்படுபவர்) என சிறப்பிக்கப்பட்ட நபித் தோழர் யார்?
*ஸஃது இப்னு அபீ வக்காஸ் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள்*
274 : நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் இறுதி நாட்களில் அவர்களை கைத்தாங்கலாக பள்ளிவாசலுக்கு அழைத்து சென்ற இரு நபித்தோழர்கள் யார்?
*ஃபழ்ல் இப்னு அப்பாஸ் (ரழியல்லாஹு அன்ஹு), அலி (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள்*
275 : நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் மனைவியான அன்னை ஆயிஷா (ரலியல்லாஹு அன்ஹா) விஷயத்தில் அவதூறு பேசப்பட்ட நபித்தோழர் யார்?
*ஸஃப்வான் இப்னுல் முஅத்தல் (ரலியல்லாஹு அன்ஹு) பின்னர் இவர்கள் நிரபராதி என இறை செய்தி வந்தது.
அவதூறு கூறியோருக்கு கசையடியும் வழங்கப்பட்டது.*
......#ஆக்கம்.........
M.#சிராஜுத்தீன்_அஹ்ஸனி..
#இயக்குனர்_
#மைமூன்_பப்ளிஷிங்_ஹவுஸ்
#திருவிதாங்கோடு.
#குமரி_மாவட்டம்..
வெள்ளி, 27 செப்டம்பர், 2024
கேள்வி பதில் பாகம்.10
#முஹம்மது_றஸூலுல்லாஹ்
#வினா_விடை.
#பாகம்_10
226 : நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மீதுள்ள நேசத்தால் நாற்பது வருடம் வாகனத்தில் ஏறாமல் பயணம் செய்த இமாம் யார்?
*இமாம் மாலிக் (ரஹ்மத்துல்லாஹி அலைஹி) அவர்கள்.*
227 : தொழுகையின் கடைசி அத்தஹிய்யாத்தில் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மீது ஸலவாத் சொல்வதின் சட்டம் என்ன?
*ஃபர்ள்*
228 : பூமியில் எந்த இடத்திலும் தொழுவதற்கு அனுமதி வழங்கப்பட்ட சமுதாயம்?
*முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களுடைய சமுதாயம்*
229 : மண் கொண்டு சுத்தம் செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்ட சமுதாயம்?
*முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களுடைய சமுதாயம்.*
230 : நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களுக்கு மிகவும் அதிகம் கஷ்டங்கள் கொடுத்த உறவினர் யார்?
*அபூலஹப்*
231 : நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மீது ஸலவாத் சொல்வதற்கு சத்திய விசுவாசிகளோடு கட்டளை பிறப்பிக்கும் குர்ஆனின் வசனம்?
*3 : 56*
232 : மக்காவை வென்றடுத்த நேரத்தில் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கஃபாவின் சாவியை யாரிடத்தில் கொடுத்தார்கள்?
*உஸ்மான் இப்னு தல்ஹா*
233 : இந்த சமுதாயத்தின் " ஃபிர்அவ்ன்" என்று நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் யாரை கூறினார்கள்.?
*அபூ ஜஹ்ல்*
234 : ஹம்ஸா (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களுக்கும் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களுக்கும் பால் கொடுத்த பெண்மணி?
*ஸுவைபத்துல் அஸ்லமிய்யா (ரலியல்லாஹு அன்ஹு).*
235 நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் அநாதையாக வளர்ந்தார்கள் என்று சுட்டிக் காட்டும் குர்ஆன் வசனம்?
*ஸூரத்துள்ளுஹா.*
236 : மிஃராஜில் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் அதிகமான மலக்குமார்களை பார்த்த இடம் யாது?
*ஸித்ரத்துல் முன்தஹா*
237 : நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் சுவனத்தையும் நரகத்தையும் கண்ட தினம் யாது?
*மிஃராஜ் தினம்*
238 : நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் காலத்தில் விபச்சார குற்றத்திற்காக கல் எறிந்து கொல்லப்பட்ட நபர் யார்?
*மாயிஸ்*
239 : நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களுக்கு எதிராக விமர்சன காவியங்கள் எழுதிய யூதக் கவிஞர் யார்?
*கஃப் இப்னு அஷ்ரஃப்*
240 : திருநபியின் கரத்தால் கொலை செய்யப்பட்ட நபர் யார்?
*அப்துல்லாஹ் இப்னு உபய்யிப்னு ஸுலூல்*
241 : நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் வெளிப்படையாக தஃவா பணி ஆரம்பிக்கும் முன் எத்தனை பேர் இஸ்லாத்தில் இணைந்தனர்?
*முப்பது*
242 : மரணிக்கும் போது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் போர் கவசம் யார் கைவசம் இருந்தது?
*ஒரு யூதனின் கைவசம் இருந்தது*
243 : ஸைத் இப்னு ஹாரிஸ் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களை நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் எத்தனை போர்களில் தலைவராக நியமித்தார்கள்?
*ஒன்பது*
244 : நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் மடியிலிருந்து மரணித்த பெருமானாரின் வாரிசு?
*இப்ராஹிம் (ரலியல்லாஹு அன்ஹு)*
245 : மதீனாவுக்கு ஹிஜ்ரா சென்ற நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களை தஃப் கொட்டி வரவேற்றது யார்?
*பனூ நஜ்ஜார் வம்சத்தை சேர்ந்த சிறுமிகள்.*
246 : தாருந்நத்வாவில் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களை கொலை செய்ய வேண்டுமென்ற கருத்தை சொன்னவர் யார்?
*அபூ ஜஹ்ல்*
247 : இஸ்ராஃ இரவில் நபிமார்களுக்கு இமாமாக நின்று தொழுகை நடத்திய நபி யார்?
*முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள்.*
248 சுவர்க்கத்தில் பெண்மணிகளின் தலைவி யார்?
*நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் மகள் பாத்திமா பீவி அவர்கள்*
249 : மிகவும் பரிசுத்தமான மகத்தான தண்ணீர் எது?
*நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் கை விரல்களுக்கிடையில் உருவெடுத்த தண்ணீர்.*
250 : நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் முதல் பேரக்குழந்தை யார்?
*ஸைனப் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களுடைய மகள் உமாமா பின்த் அபுல் ஆஸ்.*
ஆக்கம்.M.#
சிராஜுத்தீன்_அஹ்ஸனி..
#இயக்குனர்.
#மைமூன்_பப்ளிஷிங்_ஹவுஸ்
#திருவிதாங்கோடு.
#குமரி_மாவட்டம்.
தமிழ்நாடு
புதன், 25 செப்டம்பர், 2024
கேள்வி பதில் பாகம்.9
முஹம்மது_றஸூலுல்லாஹ்*
#வினா_விடை.
*#பாகம்_9*
201 : பறவைகள்,ஓநாய் போன்ற உயிரினங்கள் நபியென்று சாட்சிப்படுத்திய இறைத்தூதர் யார்?
*முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள்*
செவ்வாய், 24 செப்டம்பர், 2024
கேள்வி பதில் பாகம்.8
முஹம்மது_றஸூலுல்லாஹ்
#வினா_விடை.
#பாகம்_8
176 : கதீஜா அம்மையார் அவர்களின் முந்தைய கணவர்களின் பெயர்கள் என்ன?
*1 : அபூ ஹாலா பின் ஸுராரா*
*2 :அதீக் பின் ஆயித்*
திங்கள், 23 செப்டம்பர், 2024
கேள்வி பதில் பாகம்.7
முஹம்மது_றஸூலுல்லாஹ்
#வினா_விடை.
#பாகம்_7
151 : நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் பிறந்த மாதம்
என்ன பெயரில் அறியப்படுகிறது?
.*(ஆமுல் ஃபீல்).
அதாவது யானைப்போர் நடந்த வருடம்.*
152 : நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் பிறந்த தினம் எது?
*திங்கட்கிழமை*
153 : நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் வஃபாத்தான தினம் எது?
*திங்கட்கிழமை*
154 : நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் நல்லடக்கம் செய்யப்பட்ட தினம் எது?
*புதன் கிழமை*
155 : நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் பிறப்பதற்கு முன் அவர்களுக்கு அல்லாஹ் வைத்த பெயர் யாது?
*அஹ்மது என்ற பெயராகும்*
156 : முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் இவ்வுலகில் பிறந்த பின் அல்லாஹ் வைத்த பெயர் யாது?
*முஹம்மது என்ற பெயராகும்*
157 : முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களுக்கு மறுமையில் அல்லாஹ் வைக்கும் பெயர் யாது?
*மஹ்மூது என்ற பெயராகும்*
158 : முஹம்மது (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களுடைய சிறப்புப் பெயர்கள் குர்ஆனில் எத்தனை கூறப்பட்டுள்ளது?
*ஷாஹித், பஷீர், நதீர், ஹாதீ, ஸிராஜும் முனீர் உள்பட 27.பெயர்கள் குர்ஆனில் கூறப்பட்டுள்ளது.*
159 : நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் இறைத் தூதராக்கப்பட்டார்கள் என்று உறுதிப்படுத்தியவர் யார்?
*வரக்கத்துப் பின் நவ்ஃபல்*
160 : வரக்கத்துப்பின் நவ்ஃபல் என்பவர் யார்?
*அறியாமைக் காலத்தில் கிறிஸ்தவராக இருந்தவர், இப்ரானி மொழியை எழுத படிக்க தெரிந்தவர், இன்ஜீலை இப்ரானி மொழியில் மொழி பெயர்த்துக் கொண்டிருந்த வயதான கண் பார்வையற்ற முதியவர்.*
161 : வரக்கத்துப் பின் நவ்ஃபலுக்கும் கதீஜா (ரலியல்லாஹு அன்ஹா) அவர்களுக்கும் என்ன உறவு?
*அன்னை கதீஜா அம்மையார் அவர்களுடைய தந்தையின் சகோதரரின் மகன்தான் வரக்கத்துபின் நவ்ஃபல் அவர்கள்.*
162 : ஜீப்ரீல் (அலை) அவர்களை என்ன பெயரிட்டு வரக்கத்து பின் நவ்ஃபல் குறிப்பிட்டார்கள்?
*நாமூஸ்*
163 : இறைத் தூதர்களை அவர்களின் சமூகத்தார்கள் என்ன செய்வார்கள் என்று வரக்கத்துப்பின் நவ்ஃபல் குறிப்பிட்டார்கள்?
*ஊரை விட்டு விரட்டுவார்கள் என்று சொன்னார்கள்.*
164 : நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களுக்கு முதலில் வஹி வந்த பிறகு தொடர்ந்து வஹி வந்ததா?
*இல்லை.சிறிது காலம் நின்றது.*
165 : நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் தியானத்தில் ஈடுபட்டிருந்த ஹிறா குகையின் அளவு என்ன?
*ஹிறா குகை நான்கு முழ நீளமும் ஒன்றே முக்கால் முழ அகலமும் கொண்டது.*
166 : நபித்துவம் அருளப்பட்டதற்கு அடையாளங்களாக ஆறு மாதங்களாக நடைபெற்ற நிகழ்வுகள யாவை?
பரிபூரணத்தின் தொடக்கமாகிய 40 வயது நிறைவாகிய போது நபித்துவ அடையாளங்கள் தெரிய ஆரம்பித்தன.அவற்றில் சில: மக்காவிலிருந்த கல் ஒன்று அவர்களுக்கு ஸலாம் கூறியது, உண்மையான கனவுகளை கண்டார்கள், அவை அதிகாலையின் விடியலைப் போன்று இருந்தது....நிஜமாக அவை நடந்துவிடும் பிறகுதான் ஜீப்ரீல் (அலை) அவர்களின் மூலமாக வஹி இறங்கியது.
167 : முதன் முதலில் இஸ்லாத்தை தழுவியவர்களில் முக்கியமானவர்கள் யார்? யார்?
வரக்கத்து இப்னு நவ்ஃபல், அன்னை கதீஜா அம்மையார், அபூபக்கர் சித்தீக் (ரலியல்லாஹு அன்ஹு) அலி (ரலியல்லாஹு அன்ஹு) ஸைத் இப்னு ஹாரிஸா (ரலியல்லாஹு அன்ஹு) அம்மார் (ரலியல்லாஹு அன்ஹு) சுமைய்யா (ரலியல்லாஹு அன்ஹு) ஷுஹைப் (ரலியல்லாஹு அன்ஹு) பிலால் (ரலியல்லாஹு அன்ஹு) மிக்தாம் (ரலியல்லாஹு அன்ஹு) போன்றோர்கள்.
168 : நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களுடைய உடலின் எந்த பகுதியில் நுபுவ்வத்தின் முத்திரை இருக்கும்?
*முதுகில்*
169 : ரஹ்மத்துல் ஆலமீன் என்று குர்ஆன் சிறப்பித்து கூறும் நபி யார்?
*முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள்.*
170 : முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின்திருப்பெயரின் அர்த்தம் என்ன?
*புகழுக்குரியவர் என்பதாகும்*
171 : முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் பண்பு எப்படி இருந்தது.?
*மிக உயர்ந்த பண்புடனும் குர்ஆனுக்கு முன் மாதிரியாகவும் இருந்தது.*
172 : நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் அன்பு மனைவியான கதீஜா அம்மையாரின் செல்ல பெயர் என்ன?
*உம்மு ஹிந்த் (முன் கணவர் ஹாலாவின் மூலம் பிறந்த குழந்தை ஹிந்த்)*
173 : உம்மஹாத்துல் முஃமினீன் என்பவர்கள் யார்?
*நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் மனைவிமார்கள்.*
174 : கதீஜா அம்மையார் அவர்கள் உலகில் எத்தனை ஆண்டுகள் வாழ்ந்தார்கள்?
*65: ஆண்டுகள்.*
25 : நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கதீஜா (ரலியல்லாஹு அன்ஹா) அவர்களை திருமணம் முடித்த போது அவர்கள் கன்னிப்பெண்ணா? விதவையா?
இரண்டு திருமணங்கள் முடித்த பின்னர் விதவையாக இருந்தார்கள்.
#ஆக்கம்.
#M_சிராஜுத்தீன்_அஹ்ஸனி.
#இயக்குனர்_மைமூன்_பப்ளிஷிங் #ஹவுஸ்.
#திருவிதாங்கோடு....
#குமரி_மாவட்டம்
ஞாயிறு, 22 செப்டம்பர், 2024
கேள்வி பதில் பாகம்.6
முஹம்மது_றஸூலுல்லாஹ்
#வினா_விடை.
#பாகம்_6.
126 : நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் இரண்டு முஅத்தின்கள் (பாங்கு சொல்பவர்) யார்?
*பிலால் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் மற்றும் உம்மு மக்தூம் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள்.*
சனி, 21 செப்டம்பர், 2024
கேள்வி பதில். பாகம். 5
......#முஹம்மது_றஸுலுல்லாஹ்......
.................#வினா_விடை..............
......#பாகம்=5
101 : இஸ்ராஃ என்றால் என்ன?
*நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மக்காவிலுள்ள மஸ்ஜிதுல் ஹராமிலிருந்து பாலஸ்தீனத்தில் இருக்கும் மஸ்ஜிதுல் அக்ஸா வரை சென்ற இரவு பயணத்திற்கு இஸ்ராஃ என்று சொல்லப்படும்.*
102 : மிஃராஜ் என்றால் என்ன?
*நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் பைத்துல் முகத்தஸிலிருந்து ஏழு வானங்களையும் கடந்து அல்லாஹ்வை காண்பதற்காக சென்ற பயணத்திற்கு மிஃராஜ் என்று சொல்லப்படும்.*
103 : இஸ்ராஃ மிஃராஜ் எப்போது நடைபெற்றது?
*நுபுவத்தின் பதினொன்றாம் வருடம் ரஜப் மாதம் 27_ம் நாள் திங்கட்கிழமை இரவு.*
104 : பைத்துல் முகத்தஸில் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் என்ன செய்தார்கள்?
*எல்லா நபிமார்களுக்கும் இமாமாக நின்று தொழுகை நடத்தினார்கள்.*
105 : நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களை ஜின்கள் சந்தித்தது எப்போது?
*நுபுவத்தின் பத்தாம் வருடம் துல் கஃதா மாதம்.*
106 :இஸ்ராஃ பயணத்திற்கு எந்த வாகனத்தில் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் சென்றார்கள்?
*புராக்*
107 : மிஃராஜின் போது ஏழு வானங்களிலும் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் எந்தெந்த நபிமார்களை சந்தித்தார்கள்?
முதல் வானம்: ஆதம் நபி (அலை)*
இரண்டாம் வானம்: ஈஸா நபி மற்றும் யஹ்யா நபி (அலை)
மூன்றாம் வானம்: யூசுஃப் நபி (அலை)
நான்காம் வானம்: இத்ரீஸ் நபி (அலை)
ஐந்தாம் வானம்: ஹாரூன் நபி (அலை)
ஆறாம் வானம்: மூஸா நபி (அலை).
ஏழாம் வானம்: இப்ராஹிம் நபி (அலை)
108 : ஏழாம் வானத்தில் நபி (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) அவர்கள் கண்ட ஆலயம் எது?
*பைத்துல் மஃமூர்*
109 : நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் அல்லாஹ்வை எப்படி பார்த்தார்கள்?
*புறக் கண்களால் பார்த்தார்கள்.*
110 : மிஃராஜின் போது அல்லாஹ் என்ன கடமையாக்கினான்?
*ஐம்பது நேர தொழுகை*
111 : யாருடைய தூண்டுதலின் பேரில் ஐம்பது நேரத்தொழுகை ஐந்து நேரத் தொழுகையாக குறைக்கப்பட்டது?
மூஸா நபி (அலை) அவர்கள்
112 : ஹிஜ்ரத் என்றால் என்ன?
*நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மக்காவிலிருந்து மதீனாவுக்குச் சென்ற புனித பயணத்திற்கு ஹிஜ்ரத் என்று பெயர்.*
113 : நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களை கொலை செய்வதற்காக முடிவெடுக்க குறைஷிகள் ஒன்று சேர்ந்த இடம் யாது?
*தாருந்நதுவா*
114 : ஹிஜ்ரா போகும் நேரத்தில் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் தமது படுக்கையில் யாரைப் படுக்க வைத்தார்கள்?
*அலிய்யிப்னு அபீ தாலிப்
(ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள்*
115 : நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களை கொலை செய்வதற்காக குறைஷிகள் தீட்டிய திட்டம் என்ன?
*நூறு பேர்கள் சேர்ந்து ஒரே வெட்டில் வெட்டி கொல்தல்*
116 : வீட்டை சுற்றி நின்ற கொலையாளிகளிமிருந்து நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் எவ்வாறு தப்பித்தார்கள்?
*ஒரு பிடி மண்ணெடுத்து ஸூரத் யாஸீன் முதல் ஐந்து வசனங்களை ஓதி எதிரிகள் மீது எறிந்தார்கள்.*
117 : ஹிஜ்ரத் பயணத்தின் போது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களுடன் சென்றது யார்?
*அபூபக்கர் சித்தீக்
(ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள்*
118 : ஹிஜ்ரத் சென்ற நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களும் அபூபக்கர் சித்தீக் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களும் எந்த குகையில் தங்கினார்கள்?
*ஸவ்ர் குகை*
119 : ஸவ்ர் குகையில் எத்தனை நாட்கள் தங்கினார்கள்?
*மூன்று நாட்கள்*
120 : மக்காவிலிருந்து ஸவ்ர் குகைக்கு உணவு கொண்டு சென்றது யார்?
*அஸ்மா ரலி அவர்கள்*
121 : தனது இடுப்புப் பட்டையை இரண்டாகக் கீறி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு உணவு கட்டிக்கொடுத்ததால் அஸ்மா (ரலியல்லாஹு அன்ஹா) அவர்கள் எந்தப்பெயரில் அறியப்படுகிறார்கள்?
*தாதுன் நிதாகைன்*
122 : நூறு ஒட்டகங்கள் கிடைக்கும் என்ற ஆசையில் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களை பிடிப்பதற்காக குதிரையில் துரத்தி சென்றவர் யார்?
*ஸுராக்கா*
123 : ஹிஜ்ரா செல்லும் வழியில் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் வற்றிய ஆட்டிலிருந்து பால் கறந்தது யார் வீட்டில்?
*உம்மு மஃபது*
124 : நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மதீனாவில் முதலில் இறங்கிய இடம் எது?
*குபாஃ*
125 : குஃபாவில் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கட்டிய பள்ளிவாசல் எந்த பெயரில் அறியப்படுகிறது?
*மஸ்ஜிதுல் குபாஃ*
#ஆக்கம்.
M.#சிராஜுத்தீன்_அஹ்ஸனி.
#இயக்குனர்_மைமூன்_பப்ளிஷிங் #ஹவுஸ்
#திருவிதாங்கோடு.
குமரி மாவட்டம்….
வெள்ளி, 20 செப்டம்பர், 2024
கேள்வி பதில் பாகம்.4
................#முஹம்மது ...........
.............#றஸுலுல்லாஹ்..............
.............#வினா_விடை.................
..............#பாகம்_4....................
76 : நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களுக்கு அல்லாஹ் வழங்கிய மிகப்பெரிய அற்புதம்.?
*திருக்குர்ஆன்*
77 : நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களுக்கு மட்டும் வழங்கப்பட்ட அற்புதங்கள்?
*இஸ்ராஃ, மிஃராஜ்*
78 : நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களுக்கு பிடித்த ஆடை?
*கமீஸ்*
79 : நபி (ஸல்) அவர்கள் எத்தனை திருமணம் செய்தார்கள்?
*11*
80 : நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மரணிக்கும் வேளையில் எத்தனை மனைவிமார்கள் உயிருடன் இருந்தார்கள்.?
*9*
81 : நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் முதன் முதலில் பங்கு பெற்ற போர் எது?
*ஹர்புல் ஃபிஜார்*
82 : நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கடைசியாக பங்கு பெற்ற போர் எது?
*தபூக் போர்*
83 : நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் நேரடியாக எத்தனை போரில் கலந்து கொண்டார்கள்.?
*27*
84 : நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கடைசியாக யாரை திருமணம் செய்தார்கள்?
*மைமூனா பீவி (ரலி) அவர்கள்*
85 : நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் மோதிரத்தில் என்ன பொறிக்கப்பட்டு இருந்தது.?
லாயிலாஹ இல்லல்லாஹ்.
86 : ஹபீபுல்லாஹ்
என்ற சிறப்பு பெயர் யாருக்கு
அல்லாஹ் வழங்கினான்.?
*முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களுக்கு வழங்கப்பட்டது.*
87 : இஸ்லாத்தின் ஆரம்ப காலத்தில் காஃபிர்களுக்கு பயந்து முஸ்லிம்கள் இரகசியமாகத் தொழுத இடம் யாது?
*தாருல் அர்கம்*
88 : இஸ்லாத்திற்க்காக முதன் முதலாக தன்னுயிரை தியாகம் செய்தவர் யார்.?
*ஸுமைய்யா (ரலியல்லாஹு) அவர்கள்.*
89 : காஃபிர்களின் தொல்லைகளிலிருந்து தற்காத்துக் கொள்ள நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களும் குடும்பத்தினரும் எங்கே தங்கினார்கள்.?
*அபூதாலிப் கணவாய்*
90 : அபூ தாலிப் கணவாயில் எத்தனை வருடம் தங்கினார்கள்.?
*மூன்று வருடங்கள்*
91 : கணவாயில் தங்கியிருந்த போது உணவு கிடைக்காத சூழலில் எதைச் சாப்பிட்டு பசியை போக்கினார்கள்.?
*இலைகளை சாப்பிட்டார் கள்*
92 : நுபுவத்தின் பத்தாம் வருடம் மரணமடைந்த இருவர் யார்?
*நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் பெரிய தந்தை அபூதாலிப் மற்றும் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் அருமை மனைவி கதீஜா அம்மையார்.*
93 : உக்பத் இப்னு அபீமுஅய்த் என்பவன் தொழுது கொண்டிருந்த நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் கழுத்தை துணியால் நெரித்த போது அதை அவிழ்த்து விட்டவர் யார்?
*அபூபக்கர் சித்தீக் ரலியல்லாஹு அவர்கள்.*
94 : தொழுது
கொண்டிருந்த நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் மேனியில் காஃபிர்கள் போட்ட ஓட்டஹக் குடலை அகற்றியவர் யார்.?
*பாத்திமா பீவி அம்மையார் அவர்கள்*
95 : நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மரணிக்கும் போது ஆயிஷா பீவி அம்மையாரின் வயது எத்தனை.?
*18*
96 : நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மரணிக்கும் வேளையில் யார் வீட்டில் தங்கினார்கள்.?
*ஆயிஷா பீவி அம்மையார் வீட்டில் தங்கினார்கள்*
97 : நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் மனைவிமார்களில் அதிகமான ஹதீஸ்களை அறிவிப்பு செய்தவர் யார்?
*ஆயிஷா பீவி அம்மையார் அவர்கள்.*
98 : நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மரணிக்கும் வேளையில் அவர்கள் வயது எத்தனை.?
*63 வயது*
99 : நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் எங்கே நல்லடக்கம் செய்யப்பட்டார்கள்?
*மதீனா*
100 : நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் முதன் முதலாக ஜூம்ஆ தொழுகை நடத்திய இடம்.?
*மஸ்ஜிதுல் குபா*
ஆக்கம்.M.#சிராஜுத்தீன்_அஹ்ஸனி.
இயக்குனர்.#மைமூன்_பப்ளிஷிங் ஹவுஸ்.
#திருவிதாங்கோடு.
புதன், 18 செப்டம்பர், 2024
கேள்வி பதில். பாகம்.3
.............#முஹம்மது............
..........#ரஸூலுல்லாஹ்.........
............#வினாவிடை..............
.............#பாகம்_3....................
51 : நபி (ஸல்) அவர்களும் கதீஜா அம்மையார் அவர்களும் எத்தனை வருடம் கணவன் மனைவியாக வாழ்ந்தார்கள்?
*25 வருடம்*
52 : கதீஜா அம்மையார் அவர்கள் மூலமாக பிறந்த நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பெண் மக்கள் எப்போது மரணமடைந்தார்கள்?
*ஸைனப்,ருகைய்யா,உம்மு குல்ஸூம் (ரலி) ஆகிய மூவரும் நபி (ஸல்) அவர்களின் காலத்திலேயே மரணமடைந்துவிட்டனர்.நபி (ஸல்) அவர்களின் மரணத்திற்கு பின் ஆறு மாதம் கழித்து பாத்திமா பீவி அம்மையார் மரணமடைந்தார்கள்.*
53 : நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் செய்த தொழில்கள் யாவை?
*ஆடு மேய்த்தல் மற்றும் வியாபாரம்.*
54 : நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு முதன் முதலாக வஹி இறங்கிய குகை யாது?
*ஹிராஃ குகை*
55 : ஹிராஃ குகை எந்த மலையில் உள்ளது?
*ஜபலுன் நூர்.*
56 : நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் தங்கியிருந்து இறை தியானத்தில் ஈடுபட்டிருந்த ஹிராஃ குகையின் அளவு என்ன?
*ஹிராஃ குகை நான்கு அடி நீளமும் ஒன்றே முக்கால் முழ அளவு அகலமும் கொண்டது.*
57 : முதன் முதலில் வஹி இறங்கிய நாள் யாது ?
*ரமளான் 27 திங்கட்கிழமை.*
58 : திருக்குர்ஆனில் முதன் முதலாக இறங்கிய வசனம் யாது?
*ஸுறத்துல் அலக்கின் முதல் ஐந்து வசனங்கள்.*
59 : பயந்து போய் வந்த நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களை கதீஜா அம்மையார் அவர்கள் யாரிடம் அழைத்து சென்றார்கள்.?
*வறக்கத் இப்னு நவ்ஃபல்.*
60 : பெண்களில் முதன் முதலாக நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களை ஈமான் கொண்டது யார்?
*கதீஜா அம்மையார் அவர்கள்*
61 : கதீஜா அம்மையார் அவர்கள் மரணிக்கும் போது அவர்களின்
வயது எத்தனை?
*65*
62 : கதீஜா அம்மையார் அவர்கள் மரணிக்கும் போது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் வயது எத்தனை?
*50*
63 : கதீஜா அம்மையார் எங்கே நல்லடக்கம் செய்யப்பட்டார்கள்?
*மக்காவிலுள்ள ஜன்னத்துல் முஅல்லா*
64 : நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் காலத்தில் தன்னே நபி என்று சொன்ன பொய்யன் யார்?
*முஸைலமத்துல் கத்தாப்*
65 : அறியாமை காலத்தில் அக்கால மக்கள் வணங்கி கொண்டிருந்த கடவுள்களின் பெயர்கள் சிலவற்றை கூறவும்?
*லாத், மனாத்,உஸ்ஸா,ஹுப்ல்*
66 : நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களுக்கு சிரமங்கள் தந்த பெரிய தந்தை பெயர் என்ன?
*அபூலஹப்*
67 : நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் முகத்தோற்றமுள்ள நபி யார்?
*ஆதம் நபி அலைஹிஸ்ஸலாம் அவர்கள்*
68 : நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் முகத்தோற்றமுள்ள மகன் யார்?
*இப்ராஹிம்*
69 : நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் முகத்தோற்றமுள்ள மகள் யார்?
*பாத்திமா பீவி அவர்கள்*
70 : நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் முகத்தோற்றமுள்ள ஸஹாபி யார்?
*ஜஃபரு இப்னு அபீதாலிப்*
71 : நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களுக்கு பிடித்த நிறம்?
*வெள்ளை*
72 : நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களுக்கு பிடித்த ஆடை?
*கமீஸ்*
73 : நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் எந்த விரலில் மோதிரம் அணிவார்கள்?
*சிறிய விரல்*
74 : நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் எத்தனை தடவை ஹஜ் செய்துள்ளார்கள்?
*ஒரு தடவை*
75 : நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் எத்தனை உம்ரா செய்துள்ளார்கள்?
*நான்கு தடவை*
......#ஆக்கம்......
M.#சிராஜுத்தீன்அஹ்ஸனி.
.திருவிதாங்கோடு.
திங்கள், 16 செப்டம்பர், 2024
கேள்வி பதில். பாகம்.1
1: நமது நபி யார்?
*நமது நபி முஹம்மது (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள்*
2: முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் எங்கே பிறந்தார்கள்?
*அவர்கள் மக்காவில் பிறந்தார்கள்.*
சனி, 14 செப்டம்பர், 2024
புதுப்பித்து கொண்டே இருங்கள்.
நான்-இன் என்பவர் ஒரு குருவிடம் பல காலமாக சீடராக இருந்தார்.
பல காலம் கழித்து குரு சொன்னார் உனக்கு எல்லாம் நிறைவேறி விட்டது ஏறக்குறைய நீ அடைந்து விட்டாய் என்றார்.
வெள்ளி, 13 செப்டம்பர், 2024
யார் பெரியவர் (கதை)
அக்பர் தனது அவையில் அமர்ந்திருந்தார்.
சபையில் அமர்ந்திருந்த அறிஞர்களை நோக்கி, "அறிஞர் பெருமக்களே! நான் பெரியவனா? கடவுள் பெரியவரா? என்ற ஐயம் என் மனதில் எழுந்துள்ளது.
புதன், 11 செப்டம்பர், 2024
எனக்கு ஒரு உதவி செய்வியா..? (கதை)
50 யானைகளுக்கு சொந்தக்காரனாக வேண்டும்.
100 ஏக்கர் நிலம் வேண்டும்.
சுற்று வட்டாரத்தில் இல்லாத அளவுக்கு பெரிய வீடு கட்ட வேண்டும் என்று ஒரு யானைப்பாகன் ஆசைப்பட்டான்.
அது மட்டுமன்றி கடவுளை வேண்டவும் ஆரம்பித்தான்.
திங்கள், 9 செப்டம்பர், 2024
கேள்வி பதில். பாகம் -2
26 : நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு தந்தையின் மூலம் வாரிசு சொத்தாக கிடைத்த அடிமையின் பெயர் என்ன..?
உம்மு அய்மன்
வயது ஓர் அருட்கொடை.
நீண்ட நாள் வாழவேண்டும் என்பதே அனைவரின் ஆசையாகும். ஒரு குழந்தை பிறந்தவுடன் அதிக ஆயுளுடன் வாழ்ந்திடப் பிரார்த்திப்பதும், திருமணத் தம்பதிகளை வாழ்த்தும் போதும் 'சகல சுகங்களுடன் பல்லாண்டுகள் வாழ்க' என்று வாழ்த்துவதும் வழமையில் உள்ளது.
ஞாயிறு, 8 செப்டம்பர், 2024
கார் பரிசு. (கதை)
25 வருடங்களுக்கு மேல் சேர்ந்து வாழ்ந்த தம்பதிகளில் சிறந்த தம்பதியை தேர்ந்தெடுத்து ஒரு கார் பரிசு வழங்குவது என்று ஒரு நிறுவனம் முடிவு செய்து விளம்பரம் செய்தது.
நூற்றுக்கணக்கான தம்பதிகள் கலந்து கொண்டார்கள்.
சனி, 7 செப்டம்பர், 2024
கனிவாக நடந்துக் கொள்வோம்!
ஒரு முறை "ஸூப்யானுஸ் ஸவ்ரி" ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் தனது தோழர்களை நோக்கி: "கனிவு என்றால் என்ன?" என்று வினவினார்கள். அதற்கு தோழர்கள்: "அபூ முஹம்மதே நீங்கள் கூறுங்கள் எனக் கூறினார்கள்." அப்போது இமாமவர்கள்: "அந்தந்த விடயங்களை அதனதன் இடத்தில் மேற்கொள்வதாகும்" என பதிலளித்துவிட்டு, அதனை பின்வருமாறு விளக்கினார்கள்.
ஒன்று உண்டு இரண்டு இல்லை.
ஆன்மிகப் பேரருவி அபூ யஜீத் அல்புஸ்தாமீ (ரஹ்) அவர்கள் ஒரு நாள் தூங்கும் போது ஒருவர் சொல்ல கேட்டார்கள் "இன்ன இடத்துக்குச் செல். அங்கே உமது நபி முஹம்மது அவர்களைப் பற்றி தவறாக பேசப்படுகிறது. அதை நீ தடுத்து நிறுத்து" உடனே தூக்கத்தை விட்டு எழுந்து அந்த இடத்துக்கு சென்று அமர்ந்தார்.
வெள்ளி, 6 செப்டம்பர், 2024
எச்சில்.
இன்று இஸ்லாமிய சமுதாயம் மாற்றாரின் பல்வேறு பழக்கத்திலிருந்து ஆட்கொள்ளப்பட்டு, சீறிய வாழ்விலிருந்து திசை திருப்பப்பட்டு வியாபித்துக் காணப்படும் பல்வேறு குற்றங்களுக்கு காரணமாயிருப்பது நாம் அறிந்த ஒன்று. அவைகளில் ஒன்று எச்சில் பற்றிய தவறான பழக்கமாகும்.
புதன், 4 செப்டம்பர், 2024
என்னைச் சார்ந்தவனில்லை!
நபிகளார் அவர்களின் அறிவுரைகளில், அவர்களது வார்த்தைப் பயன்பாட்டை வைத்து அதன் கடுமையையும் நன்மையையும் மதீப்பிடு செய்து விடலாம்.
சாதாரணமாகக் கண்டித்த வார்த்தைகள்,கடுமையாகக் கண்டித்த வார்த்தைகள் என்று நபிமொழித் தொகுப்புகளில் நபிகளாரின் வார்த்தைப் பயன்பாட்டில் நாம் பார்க்கலாம்.
திங்கள், 19 ஆகஸ்ட், 2024
எனக்காக அழ யாரு இருக்கா (கதை)
ஒரு ஊர்ல ஒரு வெங்காயம்,ஒரு தக்காளி, ஒரு உருளைக்கிழங்கு, இந்த மூணு பேரும் ரெம்ப திக் ஃப்ரெண்ட்ஸா இருந்தாங்க.ஒரு நாள் அந்த மூணு பேரும்,கடலுக்கு குளிக்க போனாங்க.
சனி, 17 ஆகஸ்ட், 2024
நிக்காஹ் குத்பா.
خُطْبَةُ النِّكَاحِ
بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ
الْحَمْدُ لِلَّهُ الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعُلَمِينَ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ
وَنَسْتَغْفِرُهُ وَنُؤْمِنُ بِهِ وَنَتَوَكَّلُ عَلَيْهِ
எங்கே எப்படி..!
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..
எனது பெயர்......
எனது பெயர்......
திருக்குர்ஆனில் இடம்பெற்றுள்ள 25 நபிமார்களின் பெயர்களை குர்ஆனில் அல்லாஹ் எங்கே எப்படி கூறுகிறான் என்று கூற நாங்கள் வந்துள்ளோம்.
புதன், 14 ஆகஸ்ட், 2024
வா... அந்த பொம்மையை தேடலாம். (கதை)
பெர்லின் நகரப் பூங்கா ஒன்றில் தனது பொம்மையை தொலைத்து விட்டு அழுது கொண்டிருந்த போதுதான் அவரைப் பார்த்தாள் அந்தச் சிறுமி.
20 வயது இருக்கலாம் அவருக்கு. "ஏன் அழுகிறாய்.?" என்று கேட்டுத் தெரிந்தவர், மற்றவர்களைப் போல தாண்டிச் செல்லாமல், "வா.. அந்த பொம்மையைத் தேடலாம்.!" என்று சிறுமியையும் கூட்டிக் கொண்டு தேடினார்.
செவ்வாய், 13 ஆகஸ்ட், 2024
முதலில் தொழுகை.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.
எனது பெயர்………..
முஸ்லிம்கள் எல்லாவற்றையும் விட
தொழுகைக்குத்தான் முதலிடம் கொடுக்க வேண்டும் அதுக்கு என்ன காரணம் என்று சொல்ல நான் இங்கு வந்துள்ளேன்.
என் அன்பிற்கினிய அல்லாஹ்வின் நல்லடியார்களே…
நல்லா ஏமாந்தியா..(கதை)
"என்னை யாராலும் ஏமாற்ற முடியாது. யார் வேண்டுமானாலும் முயற்சி செய்யுங்கள், தோல்வியைத்தான் அடைவீர்கள்" என்று அந்த கடைத்தெருவில் ஒருவன் கத்திக் கொண்டிருந்தான்.
திங்கள், 12 ஆகஸ்ட், 2024
தூங்குவதின் ஒழுக்கங்கள்.
بسم الله الرحمن الرحيم
தூங்குவது பற்றிய ஒழுக்கங்கள்
1.உலக பேச்சுக்களின்றி சீக்கிரம் தூங்க முயற்சிக்க வேண்டும்.
2. உளுவுடன் தூங்குவது.
ஏற்றம் தரும் எட்டு விஷயங்கள்.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.
எனது பெயர்……….
அல்லாஹ்வின் நல்லடியார்களே…
நமது வாழ்வில் ஏற்றம் தரும் எட்டு விஷயத்தை சொல்வதற்கு நான் இங்கு வந்துள்ளேன்
சனி, 10 ஆகஸ்ட், 2024
அடுத்தவருக்கு நல்லது நினைத்தால் (கதை)
ஒரு நாள் அப்பா, இரண்டு கிண்ணங்களில் கஞ்சி சமைத்து சாப்பாட்டு மேசை மேல் வைத்தார்.
ஒரு கிண்ணத்தில் கஞ்சியின் மேலே ஒரு முட்டை. அடுத்த கிண்ணத்தின் கஞ்சியின் மேலே முட்டை இல்லை.
செவ்வாய், 6 ஆகஸ்ட், 2024
கழிப்பறை ஒழுக்கங்கள்.
மலம் ஜலம் கழிப்பதின் ஒழுக்கங்கள்.
1. கழிப்பிடத்திற்கு செல்வதற்கு முன் துஆ ஓத வேண்டும்.
2.இடது காலை முன் வைத்து உள்ளே நுழைய வேண்டும்.
குர்ஆன் ஷரீஃப் ஓதுவதன் ஒழுக்கங்கள்
بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
எனது பெயர்......
நான் இங்கு குர்ஆன் ஷரீஃப் ஓதுவதின் ஒழுக்கங்களை பற்றி பேச வந்துள்ளேன்.
என் அன்பிற்கினிய அல்லாஹ்வின் நல்லடியார்களே......
அருள்மறையாம் திருக்குர்ஆனை நாம் ஓதும்போது..
1.உடல் , உடை , இடம் இம்மூன்றும் இருக்க வேண்டும்.
2.உளூவுடன் இருக்க வேண்டும்.
உளூ இல்லாமல் குர் ஆனைத் தொட கூடாது.