ஒரு பழைய சூபி கதை;
முன்னொரு காலத்தில் ..
குரங்கு ஒன்று இருந்தது ..
அதற்கு செர்ரிப் பழங்கள் என்றால் உயிர் ..
ஒருநாள் அது, அழகான செர்ரிப் பழத்தைக் கண்டது ..
உடனே மரத்தை விட்டிறங்கி
எடுத்துப் பார்த்தால் ..
அது ஒரு சிறிய கண்ணாடிக்
குவளை ....
அதற்குள் செர்ரிப் பழம்!
குரங்கு குவளைக்குள் கையை விட்டது ..
பழத்தை இறுகப் பற்றிக் கொண்டது ..
ஆனால், மூடிய கை வெளியே
வரவில்லை ..
உள்ளே போகும்போது...
நேராகப் போன கை...
பழத்தை பற்றிக் கொண்டதும்
வடிவம் பெரியதாகவே ..
வெளியில் கொண்டுவர முடியவில்லை ..
இது ஒரு பொறி ..
குரங்கைப் பிடிக்க வேடன்
வைத்த பொறி ..
குரங்கு எப்படிச் சிந்திக்கும் ..
என்பதை அறிந்த வேடன் அவன்.
குரங்கு போராடுவதைக் கண்ட வேடன் ..
அங்கே வந்தான் ..
குரங்கு ஓடப் பார்த்தது ..
கை குவளையில் சிக்கிக் கொண்டதால் ..
வேகமாக ஓடித் தப்பவும் முடியவில்லை ..
ஓர் ஆறுதல்!
பழம் தன் கைப்பிடிக்குள்தான் இருக்கிறது .. என்ற ஆறுதல் அதற்கு ..
வேடன் குரங்கைத் தாவிப் பிடித்தான் ..
அதன் கையின் மேல் சட்டென ஒரு தட்டுத் தட்டினான் ..
அதிர்ச்சியில் அது பழத்தை விட்டு விட்டது ..
கை வெளியில் வந்துவிட்டது ..
என்றாலும் அது வேடன் பிடியில் சிக்கியிருந்தது ..
வேடனிடம்,
கண்ணாடிக் குவளையும்,
பழமும் சேதமாகாமல் அப்படியே இருந்தன ..
குரங்கின் சிந்தனை ..
மனவழிச் சிந்தனை ..
#கடைசியில்_வரும்_மரணமே_வேடன் ..
"நாம் வேண்டாத ஆசையில்
கையை நுழைத்து ..
அகப்பட்டு விடுகிறோம் ..
நம் சொந்த குவளையில் .."
#வேடன்_வரும்முன் ..
#கையை_உருவிக்கொள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக