பக்கங்கள்

ஞாயிறு, 29 செப்டம்பர், 2024

கேள்வி பதில் பாகம். 12

 


முஹம்மது_றஸூலுல்லாஹ்.

             #வினா_விடை.

                 #பாகம்_12.


276 : நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் விரும்பிய எண்ணெய்?


*ஸைத்தூன் எண்ணெய்*


277 : முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் நடக்கிற பொழுது நிழல் தறையில் பதியுமா?


*பதியாது.மேகம் அவர்களுக்கு நிழல் கொடுக்கும்.*


278 : காதிமுரஸூலுல்லாஹ் (நபி ஸல்லல்லாஹு அலைஹி அவர்களின் சேவகர்) என்ற பெயரில் அறியப்படும் நபித்தோழர் யார்?


*அனஸ் இப்னு மாலிக் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள்* 


279 : நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் ஹிஜ்றா செல்லும் வேளையில் தன் விரிப்பில் யாரை படுக்க செய்தார்கள்.?


*அலி (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள்*


280 : திரு நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் பயன்படுத்திய வாகனங்கள் எவை?


*குதிரை, ஒட்டகம், கழுதை, கோவேறு கழுதை*


281 : நாயகத்தின் ஹவாரியூன்கள் என்னும் தோழர்களில் ஒருவர் எனக் கூறப்பட்டவர் யார்?


*அஸ்ஸுபைரு இப்னுல் அவ்வாம் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள்* 


282 : உஸ்மான் இப்னு மள்வூன் (ரலியல்லாஹு அன்ஹு) யார்?


*நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் பால்குடி சகோதரர். உமர் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களின் மாமா மகன். முஹாஜிர்களில் முதன் முதலாக மரணித்தவர்*


283 : நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின்தந்தை மரணிக்கும் போது அவர்களின் வயது எத்தனை?


    *18 வயது*


284 : அலி (ரலி) அவர்கள் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களுக்கு என்ன உறவு?


*நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் பெரிய தந்தை அபூதாலிபின் மகன்தான் அலி (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள்.* 


285 : தமது சட்டையில் கபனிட்டு நபிகளால் அடக்கம் செய்யப்பட்ட பெண்மணி யார்?


*அபூதாலிபின் மனைவி ஃபாத்திமா பின்த் அஸத் இவர்கள் அலி (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களின் தாயார்.*


286 : முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் மறைவுக்கு பிறகு இஸ்லாமிய ஆட்சியின் முதல் கலீஃபா யார்?


*ஹழ்ரத் அபூபக்கர் சித்தீக் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள்*


287 : முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் மறைவுக்கு பின் இஸ்லாமிய ஆட்சியின் இரண்டாம் கலீஃபா யார்? 


*ஹழ்ரத் உமர் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள்.* 


288 : முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் மறைவுக்கு பிறகு இஸ்லாமிய ஆட்சியின் மூன்றாம் கலீஃபா யார்?


*ஹழ்ரத் உஸ்மான் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள்.*


289 : முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின்மறைவுக்கு பிறகு இஸ்லாமிய ஆட்சியின் நான்காம் கலீஃபா யார்?


*ஹழ்ரத் அலி (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள்*


290 : முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் பயன்படுத்திய சுர்மா என்ன? 


*இஸ்மித் என்ற சுருமாவை பயன் படுத்தினார்கள்*


291 : நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் எந்த பொருட்களை தந்தால் மறுக்க கூடாது என்று சொன்னார்கள்?


*தலையணை , எண்ணெய், பால், நறுமண பொருட்கள்*


292 : இஸ்லாமிய அழைப்பு பணிக்காக தாயிஃப் சென்ற நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களை அந்த மக்கள் எவ்வாறு நடத்தினார்கள்?


*இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளாதது மட்டுமின்றி நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களை மிக மோசமாக நடத்தினார்கள்.நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களுக்கு எதிராக சிறுவர்களை தூண்டினார்கள். அச்சிறுவர்கள் நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களை கல்லால் எறிந்து இரு கணுக்கால்களில் இரத்தம் வரும் வரை காயப்படுத்தினார்கள்.*


293 : நஜ்ஜாஷி மன்னரால் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களுக்கு திருமணம் செய்விக்கப்பட்ட பெண்மணி யார்?


*உம்மு ஹபீபா ரமலா பின்த் அபீ ஸுஃப்யான் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள்.*


294 : அர்ஷின் மேலிலிருந்து அல்லாஹ்வால் திருமணம் செய்விக்கப்பட்டவர் என தம் சக்களத்திகளிடம் பெருமைப்படும் பெருமானாரின் மனைவி யார்?


*உம்முல் முஃமினீன் அன்னை ஸைனப் பின்த் ஜஹ்ஷ்.*


295 : கிஸ்ரா மன்னரின் முத்து பதித்த காப்புகளை அணியும் பேறு பெற்றவர் யார்?


*ஸுராகத் இப்னு மாலிக்*


296 : நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் தந்தையுடன் பிறந்தவர்களில் ஆண்கள் எத்தனை பேர்? 


1 : ஹாரிஸ் 2 : ஸுபைர் 3 : அபூதாலிப் 4 : அப்துல்லாஹ் 5 : ஹம்ஸா 6 : அபூலஹப் 7 : முகவ்விம் 8 : ஸிஃபார் 9 : அப்பாஸ் 10 : கைதாக்...


297 : இவர்களில் இஸ்லாத்தை ஏற்றவர்கள் யார்?


*ஹம்ஸா (ரலி) அப்பாஸ் (ரலியல்லாஹு அன்ஹு)*


298 : நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் தாயுடன் பிறந்த பெண்கள் எத்தனை பேர்?


       *ஆறு பேர்*


*ஸஃபிய்யா, ஆத்திக்கா, அர்வா, உமைய்யா,பர்ரா,உம்மு ஹக்கீம், 

ஆகிய ஆறு நபர்கள்*


299 : இவர்களில் இஸ்லாத்தை ஏற்றவர்கள் யார்?


*ஸஃபிய்யா (ரலியல்லாஹு அன்ஹா)*


 *மற்றவர்களில் கருத்து வேறுபாடு உண்டு.*


300 :நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களுடைய குழந்தைகளில் முதலாவதாக பிறந்த குழந்தை யார்?


*ஹழ்ரத் காஸிம் (ரலி) அவர்கள்* 


 

#நிறைவடைந்தது..

#இனி_அல்லாஹ்_நாடினால்_மீண்டும் #தொடரும்......

  


#ஆக்கம்.

#M_சிராஜுத்தீன்_அஹ்ஸனி..


#இயக்குனர்.

#மைமூன்_பப்ளிஷிங்_ஹவுஸ்.


#திருவிதாங்கோடு......

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக