முஹம்மது_றஸூலுல்லாஹ்*
#வினா_விடை.
*#பாகம்_9*
201 : பறவைகள்,ஓநாய் போன்ற உயிரினங்கள் நபியென்று சாட்சிப்படுத்திய இறைத்தூதர் யார்?
*முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள்*
202 : நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களுக்கு சூனியம் செய்த யூதன் யார்?
*லபீது இப்னு அஃஸம்*
203 : நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களை கொலை செய்வதற்காக உணவில் விஷம் கலந்த யூதப்பெண்மணி யார்?
*ஸைனப் பின்த் ஹாரிஸ்*
204 : நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களை முதன் முதலாக பைஅத் செய்த பெண்மணி?
*உம்மு ஆமீர் ஃபக்கீஹா*
205 : ஹிஜ்ரா வேளையில் மக்காவின் செய்திகளை உடனுக்குடன் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களுக்கு அறிவித்து கொடுத்தவர் யார்?
*சித்தீக் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களின் மகள் அஸ்மாஃ*
206 : முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இறுதி நபியென்று சாட்சி ப்படுத்தும் குர்ஆன் வசனம்?
*அஃறாப்=40*
207 : ஹிஜ்ரா சென்ற வேளையில் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களுக்கும் தோழர் அபூபக்கர் சித்தீக் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களுக்கும் வழிகாட்டியவர் யார்?
*அப்துல்லாஹ் இப்னு அரீகத்*
208 : சொற்பொழிவு மூலம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை தோற்கடிக்க அழைத்து வரப்பட்ட நபர் யார்?
*ஹளர் பின் ஹாரிஸ்*
209 : நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் முதன் முதலாக ஜுமுஆ தொழுகை யாருடைய வீட்டில் நிறைவேற்றினார்கள்?
*ஸாலிம் இப்னு அவ்ஃப்*
210 : நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எத்தனாவது வயதில் நீச்சல் படித்தார்கள்?
*ஆறாவது வயதில்*
211 : காத்திமுந்நபிய்யீன் என்று குர்ஆன் சிறப்பித்து கூறிய இறைத்தூதர்?
*முஹம்மது நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள்*
212 : மறுமையில் எல்லா நபிமார்களுடைய நாயகராக திகழ்பவர் யார்?
*முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள்*
213 : நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மதீனாவுக்கு ஹிஜ்றா
சென்ற தினம்?
*திங்கட்கிழமை*
214 : நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களுக்கு நபி பட்டம் கிடைத்த தினம்?
*திங்கட்கிழமை*
215 : நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் மகள் ருகைய்யா மரணித்த போது அவர்களின் வயது எத்தனை?
*இருபது*
216 : நிச்சயம் உங்களின் நண்பர் பைத்தியக்காரர் அல்ல என்று குர்ஆன் யாரை அறிமுகப்படுத்துகிறது?
*முஹம்மது நபி(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள்*
217 : நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் பத்ர் போருக்கு சென்ற நேரத்தில் மதீனாவில் வைத்து மரணித்த நபி ஸல் அவர்களின் மனைவி யார்?
*ருகைய்யா அம்மையார்*
218 : குர்ஆனில் ஓ நபியே!!!
என்று அழைக்கப்படும் இடங்கள் எத்தனை?
*11*
219 : உஹ்த் போரில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் முன் பல் உடைந்த செய்தி கேட்டு தன் பற்களை உடைத்த யமன் நாட்டுக்காரர் யார்?
*உவைஸுல் கர்னி*
220 : மீலாது நபியை தேசிய விடுமுறையாக அறிவித்தவர் யார்?
வி.பி.சிங் (1990)
221 : உஹ்த் போரில் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களை கல் எறிந்த நபர்?
*உத்பத்து இப்னு அபீ வக்காஸ்*
222 : நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மரணத்திற்கு காரணமான நோய்?
*காய்ச்சல்*
223 : ஹஜ்ஜத்துல்விதாவுக்கு பிறகு நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் வாழ்ந்த காலம் எவ்வளவு?
*மூன்று மாத காலம்*
224 : பகிரங்க பிரச்சாரத்தை வெளிப்படுத்த நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மக்காவாசிகளை ஒன்று திரட்டிய இடம்?
*ஸஃபா மலையின் அருகில்*
225 : நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு ஊர் மக்கள் வழங்கிய சிறப்பு பெயர்?
*அல் அமீன்*
#ஆக்கம்.
#M_சிராஜுத்தீன்_அஹ்ஸனி.
வெளியீடு
#மைமூன்_பப்ளிஷிங்_ஹவுஸ்.
#திருவிதாங்கோடு.
குமரி மாவட்டம்…
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக