பக்கங்கள்

செவ்வாய், 13 ஆகஸ்ட், 2024

நல்லா ஏமாந்தியா..(கதை)

 

"என்னை யாராலும் ஏமாற்ற முடியாது. யார் வேண்டுமானாலும் முயற்சி செய்யுங்கள், தோல்வியைத்தான் அடைவீர்கள்" என்று அந்த கடைத்தெருவில் ஒருவன் கத்திக் கொண்டிருந்தான்.


யாரும் அவனை பொருட்படுத்தவே இல்லை.

   

அப்போது அங்கே முல்லா வந்தார். அவன் கத்தியதை கேட்டார். அவனிடம் சென்று "என்ன யாரும் உன்னை ஏமாற்ற முடியாதா? சரி இங்கேயே ஒரு மணி நேரம் உன்னால் நிற்க முடியுமா? அப்படி நின்றால் உன்னை ஏமாற்றிப் காட்டுகிறேன். அதற்கு ஒத்துக்கொள்ளாவிட்டால் நீ தோற்று விட்டாய் " என்றார். 


அதைக் கேட்டு கோபத்தோடு அவன் " ஒரு மணி நேரம் என்ன இரண்டு மணி நேரம் நிற்கிறேன் முடிந்தால் என்னை ஏமாற்றிக் காட்டு " என்று சவால் விட்டான். 


'" சரி ஒரு மணி நேரம் போகட்டும் வருகிறேன்" என்று கூறி அங்கிருந்து சென்றார் முல்லா.


மூன்று மணி நேரம் கழிந்தது. பொறுமை இழந்த அவன் " முல்லா ஏன் வரவில்லை" என்று முணுமுணுத்தான். 


அப்போது அங்கிருந்த ஒருவர் 

" முல்லா வரமாட்டார். அவர் உன்னை நன்றாக ஏமாற்றிவிட்டார். நீயும் ஏமாந்துவிட்டாய்." என்றார்.


     

      

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக