பக்கங்கள்

ஞாயிறு, 15 டிசம்பர், 2024

பேஸ்புக் மோகம் (உரையாடல்)


ராஷித் : ஆ….ஆ புடிச்சிட்டேன் புடிச்சிட்டேன்


இர்ஷாத் . : ஏதோ பெரிய கோட்டைய புடிச்ச மாதிரி குதிக்குற - அப்புடி என்னத்த புடிச்ச


பேஸ்புக்ல 3000 ஃப்ரெண்ட்ஸ புடிச்சிட்டேன்


ராஷித். எங்க மூஞ்சிய காட்டு face-ம் தெரில ஒழுங்கா பேசவும் தெரில உனக்குலாம் பேஸ்புக்ல ஒரு அக்கவுண்ட்


இர்ஷாத் : .பின்ன சும்மாவா.... உக்காந்த இடத்துலயே உலகம் பூரா 3000 ஃப்ரெண்ட்ஸை வச்சிருக்கோம்ல


ராஷித் : .எது 3000 ஃப்ரெண்டா முளைச்சு மூணு இளம் விடல-உனக்குலாம் முகநூல்ல 3000 ஃப்ரெண்டு உலகம் உருப்பட்ரும் ஃப்ரெண்டு புடிச்சிட்டு அப்புடி என்னத்த கிளிச்சிட்ட- அது சரி இவ்லோ நண்பர்களை எதற்கு பிடிச்சி வைத்திருக்கிற


இர்ஷாத் : எல்லாம் chatting cheating


ராஷித் : . அதான் தெரியுமே பேஸ்புக் நாலே chatting-விட cheating தான் அதிகம்னு


அடுப்புக்கரிய விட அண்டக்கருப்பா இருப்பான் ஆனா பேஸ்புக்ல அட்டகாசமான ஆக்டர் மாதிரி போட்டோ போட்ருப்பான்.


 படுத்த படுக்கையா இருக்கிற பாட்டி கூட 18 வயசுன்னு பச்சையா போய் சொல்லி பளிச்சினு ஒரு போட்டோ வேற 


அசல்ல அவங்க பேரு அல்லாஹ் பிச்சையோ நாகூர் பிச்சையோ ஆனா பில்கேட்ஸ் ரேஞ்சுக்கு பீலா விட்ருப்பாங்க 


இத மாதிரி எத்தன பேரு ஏமாத்துறாங்க தெரியுமா


இர்ஷாத் :. அப்பன்னா பேஸ்புக்ல நன்மையே இல்லைனு சொல்றியா


ராஷித் : இருக்கு குவிஞ்சு கிடக்குற குப்பைல ஒரு சில குண்டு மணி மாதிரி இங்க ஒன்னு அங்க ஒன்னுனு சில நல்ல விஷயம் இருக்கு ஆனா அந்த குண்டுமணிய விட குப்பைதான் அதிகம்-னு சொல்ல வர்றேன். உன்னால மறுக்க முடியுமா ?



இர்ஷாத் : அப்ஜெக்ஷன் யுவர் ஆனர் கடுப்பேத்றாரு மக்களே இத பத்தி இவருக்கு என்ன தெரியும் உலகமே உள்ளங்கைக்குள்ள உலகம் பூராவும் உறவுகளை உண்டாக்கும் உன்னதமான கருவி இது


ராஷித் : உலகம் பூரா உறவ வச்சு என்ன செய்ய வீட்ல உள்ள உறவு கொஞ்சம். கொஞ்சம செத்து போச்சே 


குடும்பத்துல ஒரு குதூகலமே இல்லாம போச்சு 


ஒரு நேரம் நம்ம வீட்ல அடிக்கடி அர்ரஹ்மான் சூரா ஒலி கேட்கும் ஆனா இன்று அர்ரஹ்மான் இல்ல ஏ ஆர் ரஹ்மான் அல்லவா எந்த நேரமும் ஒலிச்சிட்ருக்காரு 


வாகிஆ ஸூரா ஓதினால் வறுமை அறவே வராதுனு வள்ளல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் ஆனா இன்னைக்கு வாகிஆ எங்கப்பா ஒதுறாங்க நோக்கியா-வல்லவா நோண்டிக்கிட்ருக்காங்க


இர்ஷாத் : . சரி இப்ப என்னதான் சொல்ல வர்ற..


ராஷித் : வாழ்க்கைல செல்ஃபோன் இருக்கலாம் ஆனா செல்ஃபோனே வாழ்க்கை- யாகிறக்கூடாது 


பேஸ்புக்ல பேசிக்கலாம் ஆனா பேசுரதெல்லாமே பேஸ்புக்கா இருக்க்க்கூடாது 


மணிக்கனக்கா மானிட்டர பாக்குறத விட்டுட்டு மனுஷனையும் கொஞ்சம் பாருங்கப்பா"


இர்ஷாத் :. பாத்துட்டன்பா


ராஷித் : .கிளம்புப்பா


இர்ஷாத் : சரிப்பா


அஸ்ஸலாமு அலைக்கும்.

வ அலைக்கும் ஸலாம்.


இந்த உரையாடலை தொகுத்தவர். 

எனது நண்பர் 

மவ்லானா மவ்லவி அல்ஹாபிழ் 

ஸதக் மஸ்லஹி ஹஸ்ரத் 

 வாலிநோக்கம்.



பழைய குறிப்புகள் பார்க்க 👇 கிளிக் செய்யவும்.

மக்தப் மதரஸா மேடை நிகழ்ச்சிகள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக