முஹம்மது_றஸூலுல்லாஹ்.
#வினா_விடை.
#பாகம்_11
251 : நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களை புகழ்ந்து அதிகமானவர்களால் பாடப்படும் கஸீதாவின் பெயர் என்ன?
*புர்தா ஷெரீஃப்*
252 :நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களிடம் சுவனத்தில் உங்களுடன் எனக்கும் இடம் வேண்டும் என்று கேட்ட சஹாபி யார்?
*ரபீஆ (ரலி) அவர்கள்*
253 : நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் திருமுடியை தனது தொப்பியில் வைத்து போர் களங்களில் கலந்து கொண்ட ஸஹாபி யார்?
*காலித் பின் வலீத் (ரலியல்லாஹு அன்ஹு)*
254 : நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களை புகழ்வதற்காக எந்த ஸஹாபிக்கு பள்ளிவாசலில் மிம்பர் உருவாக்கப்பட்டது.?
*ஹஸ்ஸான் இப்னு ஸாபித் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள்*
255 : உஹது போர் களத்தில் பெருமானார் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களை அரணாக காத்து நின்றோர்களில் ஒரு பெண்மணியும் இருந்தார் அவர் யார்?
(உம்மு உமாரா என்னும் நுஸைபா பின்த் கஃபில் மாஸினிய்யா
(ரலியல்லாஹு அன்ஹா) அவர்கள்.*
256 : நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களுடைய மனைவிமார்களில் உம்முல் மஸாக்கீன் என்றழைக்கப்பட்டவர் யார்?
உம்முல் முஃமினீன் ஸைனப் (ரலியல்லாஹு அன்ஹா) அவர்கள்.
257 : நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் அதிகம் விரும்பிய காய் எது?
*சுரைக்காய்*
258 : முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கடைசியாக செய்த அமல் எது?
*மிஸ்வாக் குச்சியால் பல் துலக்கினார்கள்*
259 : முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் உம்மத்தாருக்கு ஸலாம் சொல்லி அனுப்பிய நபி யார்?
*மிஃராஜ் பயணத்தின் போது நபி இப்ராஹிம் (அலை) அவர்கள் ஸலாம் சொல்லி அனுப்பினார்கள்*
260 : முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் கப்ரை கட்டியது யார்?
*ஹழ்ரத் அபூதல்ஹா அன்ஸாரி ரலியல்லாஹு அன்ஹு அவர்களாகும்*
261 : முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் இந்த உம்மத்திற்காக செய்ய இருக்கிற மாபெரும் உபகாரம் எது?
*ஷஃபாஅத் என்னும் பரிந்துரை.*
262 : முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் அதிகம் விரும்பிய நறுமணம் எது?
*கஸ்தூரி மற்றும் ஊது ஆகும்*
263 : முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களுக்கு பிடித்த மாமிசம் எது?
*ஆட்டின் முன்சப்பை கறியாகும்*
264 : முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களுக்கு முதன் முதலில் இறங்கிய குர்ஆன் வசனம் எது?
*இக்ரஃ பிஸ்மி ரப்பிக்க என்பதாகும்*
265 : முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் சுத்தம் எப்படிப்பட்டது?
*தூய்மையான ஆடை அணிவார்கள், தினசரி மிஸ்வாக் செய்வார்கள், நறுமணம் பூசுவார்கள், சுர்மா இடுவார்கள், தலைமுடி மற்றும் தாடியை சீப்பினால் வாருவார்கள்.*
266 : நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் வியர்வை துளிகளின் மணம் எவ்வாறு இருக்கும்?
*நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களுடைய வியர்வை துளிகளின் நறுமணம் மற்ற எல்லா உயர்ந்த நறுமணங்களையும் விட மேலானதாக இருந்தது.*
267 : முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் எப்போது ஹஜ் செய்தார்கள்?
*ஹிஜ்ரி 10_ம் ஆண்டு ஹஜ் செய்தார்கள்.*
268 : முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் தூங்கும் முன் என்ன செய்வார்கள்?
*நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் தூங்கும் முன் இஸ்மித் என்ற ஸுர்மாவை பயன் படுத்துவார்கள். ஏனெனில் அவை பார்வையை கூர்மையாக்கும். இமை முடியை வளரச் செய்யும்.*
269 : முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் பொன் மொழிகளுக்கு என்ன சொல்லப்படும்?
*ஹதீஸ்*
270 : மறுமை நாளில் முதன் முதலாக எழுப்பப்படும் நபி யார்?
*முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள்*
271 : முத்தபிஃஉஸ்ஸுன்னா என்றழைக்கப்படும் ஸஹாபி யார்?
*அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள்*
272 : நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களிடம் பெண்களின் தூதுவராகச் சென்ற நபித் தோழி யார்?
*அஸ்மா பின்த் யஸீது இப்னு ஸகன்*
273 : முஸ்தஜாபுத்தஃவா (துஆ அங்கீகரிக்கப்படுபவர்) என சிறப்பிக்கப்பட்ட நபித் தோழர் யார்?
*ஸஃது இப்னு அபீ வக்காஸ் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள்*
274 : நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் இறுதி நாட்களில் அவர்களை கைத்தாங்கலாக பள்ளிவாசலுக்கு அழைத்து சென்ற இரு நபித்தோழர்கள் யார்?
*ஃபழ்ல் இப்னு அப்பாஸ் (ரழியல்லாஹு அன்ஹு), அலி (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள்*
275 : நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் மனைவியான அன்னை ஆயிஷா (ரலியல்லாஹு அன்ஹா) விஷயத்தில் அவதூறு பேசப்பட்ட நபித்தோழர் யார்?
*ஸஃப்வான் இப்னுல் முஅத்தல் (ரலியல்லாஹு அன்ஹு) பின்னர் இவர்கள் நிரபராதி என இறை செய்தி வந்தது.
அவதூறு கூறியோருக்கு கசையடியும் வழங்கப்பட்டது.*
......#ஆக்கம்.........
M.#சிராஜுத்தீன்_அஹ்ஸனி..
#இயக்குனர்_
#மைமூன்_பப்ளிஷிங்_ஹவுஸ்
#திருவிதாங்கோடு.
#குமரி_மாவட்டம்..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக