பக்கங்கள்

திங்கள், 9 டிசம்பர், 2024

முள்ளம்பன்றிக் கோட்பாடு

 


முள்ளம்பன்றிகளால் ஒன்றோடு ஒன்று நெருங்கி வாழ முடியாது. அவற்றில் காணப்படும் முட்கள் காரணமாக எதிரிகள் மட்டுமல்ல, சொந்த குட்டிகளைக் கூட அரவணைக்க முடியாது. 

குளிர்காலம் வந்து விட்டால் முட்களின் குத்துக்களை தாங்கிய வண்ணம் அவைகள் வெப்பத்தைத் தேடி நெருக்கமாக வந்து ஒன்றோடு ஒன்று ஒட்டிக்கொள்ளும். வெப்பம் கூடும் போது குளிர்ச்சியை தேடி தூரமாகிவிடும். 


இப்படியே கிட்ட வருவதும் தூர செல்வதுமாக அவைகளின் குளிர்கால இரவுகள் கழிகின்றன. 


அதிகம் நெருங்குவதால் காயங்கள் அதிகரிக்கும், அதிகம் விலகுவதால் உயிருக்கு ஆப்பத்தாகிவிடும். 


மனிதர்களுடான நமது உறவுகளும் இப்படித்தான் இருக்க வேண்டும். நம்மில் யாரும் முட்கள் இல்லாதவர்கள் இல்லை.

வலிகளை சுமக்காமல் உறவுப் பாலத்தை கட்டியமைக்க முடியாது. 


குறைகள் இல்லாத நண்பன் தேடியவன் 

காலமெல்லாம் தனித்து வாழ வேண்டி வரும். 


குறைகள் இல்லாத துணையை தேடியவன் 

காலமெல்லாம் திருமணம் முடிக்காமல் வாழ வேண்டி வரும். 


சச்சரவு இல்லாத சகோதரன் தேடியவன் 

காலமெல்லாம் தேடிக்கொண்டே இருப்பான். 


குறைகள் இல்லாத உறவினர்களை எதிர்பார்த்து வாழ்பவன் காலமெல்லாம் உறவுகளை துண்டித்து வாழ வேண்டி வரும். 


குறைகளையும், பிழைகளையும் சுமக்காமல் வாழ்க்கை வண்டி நேராக பயணிக்காது.  


மகிழ்ச்சியாக வாழ விரும்பினால்

எல்லாவற்றுக்கும் விளக்கம் தேடிப் போகாதீர்கள். 


எல்லாவற்றையும் அலசி ஆரயாதீர்கள். எல்லாவற்றையும் பகுப்பாய்வு செய்யதீர்கள். 


மாணிக்கமா, மரகதமா என்று தேடிப் பார்த்தவனுக்கு சுட்ட செங்கல் என்று தெரிய வந்த கதை போல் ஆகிவிடும். 


யாரையும் அளவுக்கதிகம் தெரிந்து கொள்ள முற்படாதீர்கள். 


முகத்துக்கு முன்னால் எப்படி நடந்து கொள்கிறார்கள் என்பதோடு நாம் நின்றுகொள்வது நமக்கு நல்லது. 


✍ தமிழாக்கம் / imran farook

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக