பக்கங்கள்

புதன், 18 செப்டம்பர், 2024

கேள்வி பதில். பாகம்.3

 

.............#முஹம்மது............ 

..........#ரஸூலுல்லாஹ்......... 


   ............#வினாவிடை.............. 


     .............#பாகம்_3.................... 


51 : நபி (ஸல்) அவர்களும் கதீஜா அம்மையார் அவர்களும் எத்தனை வருடம் கணவன் மனைவியாக வாழ்ந்தார்கள்?


     *25 வருடம்*


52 : கதீஜா அம்மையார் அவர்கள் மூலமாக பிறந்த நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பெண் மக்கள் எப்போது மரணமடைந்தார்கள்?


*ஸைனப்,ருகைய்யா,உம்மு குல்ஸூம் (ரலி) ஆகிய மூவரும் நபி (ஸல்) அவர்களின் காலத்திலேயே மரணமடைந்துவிட்டனர்.நபி (ஸல்) அவர்களின் மரணத்திற்கு பின் ஆறு மாதம் கழித்து பாத்திமா பீவி அம்மையார் மரணமடைந்தார்கள்.*


53 : நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் செய்த தொழில்கள் யாவை?


*ஆடு மேய்த்தல் மற்றும் வியாபாரம்.*


54 : நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு முதன் முதலாக வஹி இறங்கிய குகை யாது?


   *ஹிராஃ குகை*


55 : ஹிராஃ குகை எந்த மலையில் உள்ளது?


      *ஜபலுன் நூர்.*


56 : நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் தங்கியிருந்து இறை தியானத்தில் ஈடுபட்டிருந்த ஹிராஃ குகையின் அளவு என்ன? 


*ஹிராஃ குகை நான்கு அடி நீளமும் ஒன்றே முக்கால் முழ அளவு அகலமும் கொண்டது.*


57 : முதன் முதலில் வஹி இறங்கிய நாள் யாது ?


*ரமளான் 27 திங்கட்கிழமை.*


58 : திருக்குர்ஆனில் முதன் முதலாக இறங்கிய வசனம் யாது?


*ஸுறத்துல் அலக்கின் முதல் ஐந்து வசனங்கள்.*


59 : பயந்து போய் வந்த நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களை கதீஜா அம்மையார் அவர்கள் யாரிடம் அழைத்து சென்றார்கள்.?


*வறக்கத் இப்னு நவ்ஃபல்.*


60 : பெண்களில் முதன் முதலாக நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களை ஈமான் கொண்டது யார்?


*கதீஜா அம்மையார் அவர்கள்*


61 : கதீஜா அம்மையார் அவர்கள் மரணிக்கும் போது அவர்களின் 

வயது எத்தனை?


           *65*


62 : கதீஜா அம்மையார் அவர்கள் மரணிக்கும் போது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் வயது எத்தனை?


               *50*


63 : கதீஜா அம்மையார் எங்கே நல்லடக்கம் செய்யப்பட்டார்கள்?


*மக்காவிலுள்ள ஜன்னத்துல் முஅல்லா*


64 : நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் காலத்தில் தன்னே நபி என்று சொன்ன பொய்யன் யார்?


*முஸைலமத்துல் கத்தாப்*


65 : அறியாமை காலத்தில் அக்கால மக்கள் வணங்கி கொண்டிருந்த கடவுள்களின் பெயர்கள் சிலவற்றை கூறவும்?


*லாத், மனாத்,உஸ்ஸா,ஹுப்ல்*


66 : நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களுக்கு சிரமங்கள் தந்த பெரிய தந்தை பெயர் என்ன?


       *அபூலஹப்*


67 : நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் முகத்தோற்றமுள்ள நபி யார்?


*ஆதம் நபி அலைஹிஸ்ஸலாம் அவர்கள்*


68 : நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் முகத்தோற்றமுள்ள மகன் யார்?


      *இப்ராஹிம்*


69 : நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் முகத்தோற்றமுள்ள மகள் யார்?


*பாத்திமா பீவி அவர்கள்*


70 : நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் முகத்தோற்றமுள்ள ஸஹாபி யார்?


*ஜஃபரு இப்னு அபீதாலிப்*

 

71 : நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களுக்கு பிடித்த நிறம்?


      *வெள்ளை*


72 : நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களுக்கு பிடித்த ஆடை?


     *கமீஸ்*


73 : நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் எந்த விரலில் மோதிரம் அணிவார்கள்?


      *சிறிய விரல்*


74 : நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் எத்தனை தடவை ஹஜ் செய்துள்ளார்கள்?


     *ஒரு தடவை* 


75 : நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் எத்தனை உம்ரா செய்துள்ளார்கள்?


    *நான்கு தடவை*


            ......#ஆக்கம்...... 

M.#சிராஜுத்தீன்அஹ்ஸனி.

    .திருவிதாங்கோடு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக