புதன், 29 ஜனவரி, 2025

சந்தூக்.

 


ஃபாத்திமா ரழியழ்ழாஹு அன்ஹா அவர்கள் ஸக்கராத்தில் இருக்கிறார்கள். அன்னாரின் நெருங்கிய தோழி அஸ்மா பின்த் உமைஸ் ரழியழ்ழாஹு அன்ஹா அவர்கள் அருகே அமர்ந்து ஆறுதல் கூறிக் கொண்டிருக்கிறார்கள்.

செவ்வாய், 28 ஜனவரி, 2025

அஹ்மத் முஹம்மத்

 


ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்.. 


நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு ஏராளமான பெயர்கள் உண்டு. 

அதில் சிலது குர்ஆனிலும், 

ஹதீஸிலும் வந்துள்ளது. 

மற்று சிலது பண்டைய கால அறிஞர்களின் நூல்களில் காணக்கூடியவையாகும்.

திங்கள், 27 ஜனவரி, 2025

அரசர்களை மிஞ்சிய வள்ளல்.

 


நபிகள் நாயகம் அவர்களின் நன்மொழிகளை இவ்வுலகுக்கு அளித்திட்ட உத்தமர்களின் வரிசையில் தனிச்சிறப்பு வாய்ந்த ஒரு மாமேதையை இன்று நாம் காண்போம். 


அவர் கல்வியில் சிறந்து விளங்கினார் என்பது மட்டும் அல்ல, கொடை வள்ளல் பட்டியலிலும் அவரது பெரும் புகழ் நீடித்து நிற்கிறது. 


அந்த மகான் தான் அபுல் ஹாரித் அல்லைஸ் இப்னு ஸஃது இப்னு அப்துர் ரஹ்மான் (ரஹ்) அவர்கள். 


எகிப்து நாட்டின் கெய்ரோவில் ஹிஜ்ரி 94-ம் ஆண்டு ஷஃபான் மாதம் பிறை 14 வியாழக்கிழமை பிறந்த இவர் துவக்கத்தில் அடிமையாகத் தம் வாழ்க்கையை ஆரம்பித்தவர்தான் என்றாலும் தனது கவனத்தை கல்வியின் பக்கம் திருப்பினார்கள்.


அப்போது ஹதீஸ் கலை வேகமாக பரவி கொண்டிருந்தது. அதில் தானும் இணைந்தார். ஆயிரக்கணக்கில் அல்ல. இலட்சக்கணக்கில் ஹதீஸ்களை மனனம் செய்தார். 


அத்தோடு நின்றுவிடவில்லை. ஹதீஸ்களிலிருந்து சட்டங்களை வகுத்து தந்திடும் "ஃபிக்ஹ்" கல்வியிலும் கவனம் செலுத்தினார். அந்நேரத்தில் பிரபலமான முஹத்தீஸ்களாகத் திகழ்ந்த இமாம் அதா இப்னு அபீரபாஹ் (ரஹ்) இமாம் ஸுஹ்ரி (ரஹ்) போன்ற கல்விக் கடல்களிடம் கல்வியை கற்று தேர்ந்தார்.


இவர்களின் காலமும் இமாமுல் அஃளம் அபூ ஹனிபா (ரஹ்) அவர்களின் கால மும் ஒன்றாக இருந்தது. எனவே ஃபிக்ஹ் கலையை இவர்கள் அபூஹனிபா அவர் களிடம் கற்றுத் தேர்ந்ததாக கூறப்பட்டுள்ளது. 

இமாம் புஹாரி (ரஹ்) அவர்கள் தொகுத்து அளித்த ஸஹீஹுல் புஹாரி ஷரீஃபின் ஏராளமான ஹதீஸ்கள் இந்த மாமேதை லைஸ் இப்னு ஸஃது (ரஹ்) அவர்களின் மூலமாக ரிவாயத் செய்யப்பட் டுள்ளது என்பதிலிருந்தும் "ஹதீஸ் கலையை பொறுத்தவரையில் அத்துறையை முழுமையாகக் கற்றுத் தேர்ந்தவர்களில் லைஸ் இப்னு ஸஃது தவிர வேறு யாரையும் நான் காணவில்லை" என்று இமாம் யஹ்யா இப்னு புகைர் (ரஹ்) கூறுவதிலிருந்தும் இவரின் பெரும் திறமையை நாம் உணரலாம்.


அடிமையாக வாழ்க்கையைத் துவக்கிய இந்த மாமேதையின் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டது. 


ஆம்! பெரும் செல்வந்தராக மாறினார். ஆண்டுதோ ரும் 80 ஆயிரம் தீனார் தங்கக் காசுகள் அவருக்கு வருமானம் வரக்கூடிய அளவுக்கு அல்லாஹ் பரக்கத் செய்தான். 

ஒரு தீனார் என்பது 4.25 கிராம் எடையுள்ள தங்க நாணயமாகும். இதன் மதிப்பு இன்றைய நிலவரப்படி பார்த்தால் ஒரு தீனார் பத்தாயிரம் ஆகிறது. அப்படியானால் ஆண்டொன்றுக்கு வருமானம் எத்தனை கோடி என்று கணக்கிட்டுப் பாருங்கள்.


இவ்வளவு வருமானம் வந்தும் கூட அவருக்கு ஜகாத் கடமையாகவில்லை என் பது தான் உலகம் வியக்கக்கூடிய செய்தியாக உள்ளது. இவ்வளவு அதிகமான தொகையை வைத்துக் கொண்டு இருப்பவருக்கு ஜகாத் கடமையாகவில்லை என்றால் அதற்கான காரணம் என்ன என்ற சந்தேகம் எழலாம். 


ஆம்! ஜகாத் கடமையாகுவதற்கு ஒரு நிபந்தனை உண்டு. அதாவது அந்தப்பொருள் தன் கைவசம் வந்தபின் சரியாக ஒரு வருடம் அது தன்னிடத்தில் இருக்கவேண்டும். 

ஒரு வருடம் ஆகுவ தற்கு ஒரு நாள் முன்பு செலவாகிவிட்டால் கூட அதற்கு ஜகாத் கடமையில்லை என்பதே இஸ்லாமியச் சட்டம். இப்போது மிகப்பெரும் செல்வந்தராகவும் மாபெரும் கல்வி மானாகவும் திகழ்ந்த மாமேதை லைஸ் இப்னு ஸஃது (ரஹ்) அவர்களுடைய வாழ்க் கையை நாம் பார்த்தால் வியப்பின் எல்லைக்கே நாம் செல்ல வேண்டியிருக்கிறது. தன் வருமானத்தை அவர்கள் அள்ளி அள்ளி வழங்கி தானம் செய்வதில் கண்ணுங்கருத்துமாய் இருப்பார்கள்.


எண்பதாயிரம் தங்க நாணயங்கள் என்பது அந்த காலகாட்டத்தில் மிகப்பெரிய சொத்தாகும். அக்கால வழக்கப்படி ஒரு சில தீனார்களை வைத்து ஒரு வருடத்தைக் கூட கழித்து விடலாம். இப்படி இருந்தும் கூட இம் மாமேதை அவ்வளவு தொகை யையும் தானம் செய்து விடுவார் என்பதால் தான் அவர்களை மிகப்பெரும் வள்ளல் களில் ஒருவராக வரலாறு புகழ்கிறது. 

அவர் வாரி வாரி வழங்கிய நிகழ்ச்சிகள் ஏராளம் உள்ளன. ஒவ்வொன்றும் அற்புதமான அதிசயமான வரலாறு ஆகும்.


இமாம் மாலிக் (ரஹ்) அவர்கள் மதீனா முனவ்வராவிலிருந்து பேரீத்தப் பழப் பெட்டி ஒன்றை இவர்களுக்கு அன்பளிப்பாக அனுப்பிவைத்தார்கள். இவர் எகிப்தில் இருந்தார் (மதீனாவாசிகள் பொதுவாக அன்றிலிருந்து இன்றுவரை தம் நண்பர்க ளுக்கு பேரீத்த பழங்களைப் பெட்டியில் வைத்து அன்பளிப்பு வழங்குவது வழக்கத் தில் இருந்து வருகிறது) பேரீத்தம் பழப்பெட்டியைப் பெற்று கொண்ட இம்மாமேதை அதற்கு பதிலாக அதே பெட்டியை திருப்பி அனுப்பி வைத்தார். 

ஆனால் அப்போது அந்த பெட்டி முழுவதும் தங்க நாணயங்கள் நிறைக்கப்பட்டு இருந்தன. "இமாம் மாலிக் (ரஹ்) அவர்கள் தம்மிடத்தில் இருப்பவற்றில் மிகச்சிறந்த பழத்தை அன்பளிப் பாக வழங்கியபோது நாம் நம்மிடத்தில் இருப்பவற்றில் மிகச்சிறந்ததை அன்பளிப்பாக வழங்க வேண்டாமா? என்று இம்மாமேதையவர்கள் நினைத்தே அவ்வாறு செய் தார்கள்.


وَاِذَا حُيِّيْتُمْ بِتَحِيَّةٍ فَحَيُّوْا بِاَحْسَنَ مِنْهَاۤ اَوْ رُدُّوْهَا‌ ؕ اِنَّ اللّٰهَ كَانَ عَلٰى كُلِّ شَىْءٍ حَسِيْبًا

"உங்களுக்கு ஓர் அன்பளிப்பு வழங்கப்பட்டால் அதை விடச் சிறந்ததை நீங்கள் அன்பளிப்பாக வழங்குங்கள் அதற்கு வசதி இல்லை என்றால் அதை போன்ற தையே திரும்பவும் நீங்கள் அனுப்பி வையுங்கள்" என்ற குர்ஆன் 4:86 வசனத்தின் படி செயல்பட்டார்கள்.


பக்கத்து வீட்டில் ஒரு பெண் தன் கணவர் சுகமில்லாமல் இருப்பதாகவும் அவ ருக்கு மருந்து கொடுப்பதற்கு கொஞ்சம் தேன் வேண்டும் என்று கேட்டுக் கொண்டாள் தேன் வாங்கி செல்வதற்காக வேண்டி உடன் ஒரு சிறிய புட்டி வைத்திருந்தார். ஆனால் அந்த மாமேதை அவர்களோ ஒரு தோல்பை நிறைய தேனை கொடுத்து அனுப்பும்படி சொல்வதைக் கேட்டு ஆச்சர்யப்பட்டு போனார்கள்.


அந்தப் பெண் கேட்டது சிறிய அளவுதான், அவர் கொண்டு வந்திருக்கும் புட்டியும் சிறியது. அதுவே போதுமானது என்று அவரிடம் சொன்ன போது "அந்தப் பெண் தன் தேவைக்கேற்பவும் தனது தகுதிகேற்பவும் கேட்டிருக்கிறார் என்பதற்காக அப்படியே கொடுப்பது அழகல்ல. நாம் நமது தகுதிக்கேற்ப கொடுப்பது தான் முறை" என்று எடுத்துக் கூறினார்கள்.


மக்களிடையே கல்வியாலும், கொடைத்தன்மையாலும் பிரபலமாகிவிட்டிருந்த மகான் லைஸ் இப்னு ஸஃது (ரஹ்) அவர்கள் எகிப்திலிருந்து பக்தாதுக்கு ஹிஜ்ரி 161 ஆம் வருடம் வருகை தந்தபோது அங்கிருந்த மன்னர் மன்ஸூர் எகிப்தின் ஆளுந ராக பொறுப்பேற்றுக் கொள்ளுமாறு வற்புறுத்தினார். 

ஆனாலும் இம்மாமேதை தம்மை மன்னித்துக் கொள்ளுமாறு கெஞ்சி கேட்டதுடன் அப்பதவியை ஏற்க மறுத்து உதறித் தள்ளிய இம்மாமேதைக்கு மக்களின் உள்ளங்களில் மாபெரும் ஆட்சியும் அதிகாரமும் இருக்க, வேறு என்ன தேவை?


தம் மாணவர்களுக்கு அடிக்கடி விருந்து வைப்பார்கள். அப்போது அவர்கள் அவர்களுக்கு வழங்கிய பண்டங்கள் ஒவ்வொன்றிலும் பொற்காசுகள் வைத்து விடு வார்களாம். காரணம் அதிகமான பண்டங்களை அவர்கள் சாப்பிட வேண்டும். அதன் மூலம் அதிகமான பொற்காசுகள் கிடைக்க வேண்டும் என்ற நோக்கம் தான்.


சுப்ஹானல்லாஹ்! இப்படியும் ஒரு வள்ளலா? என்று நாம் புருவத்தை உயர்த்து கிறோம் அல்லவா? இப்படி வாழ்ந்த பெரும் மேதை தமது 81-வது வயதில் ஹிஜ்ரி 175- ஆம் ஆண்டு ஷஃபான் மாதம் பிறை 15 வெள்ளிக் கிழமையன்று தம் மண்ணக வாழ்வை முடித்து கொண்டு விண்ணகப் பயணம் மேற்கொண்டார்கள்.


"இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்"


மாபெரும் மேதையாகவும் மிகப்பெரும் வள்ளலாகவும் திகழ்ந்த இம்மகானின் வாழ்வு உலகம் உள்ளவரை மக்களுக்கு நல்ல வழிகாட்டியாக அமைந்துள்ளது என்பதில் என்ன சந்தேகம்?


மார்க்கத்துக்காகவே தம்மை அர்ப்பணித்து வரும் உலமாப் பெருமக்கள் ஒவ் வொருவரும் அந்த மகான்களைப்போல பிறருக்கு வாரி வழங்கும் வள்ளல்களாக கொடுக்கும் கரங்களாகவே வாழ 

அல்லாஹ் அருள்புரிவானாக! ஆமீன்.

மௌலானா S. லியாகத் அலி மன்பஈ


பழைய குறிப்புகள் வாசிக்க 👇🏻 கிளிக் செய்யவும்.


சிந்திக்க தூண்டும் சிறு நிகழ்வுகள்.

ஞாயிறு, 26 ஜனவரி, 2025

குவாலிட்டி சார் (காமெடி கதை)

 


பேங்க் மேனேஜர் அதிர்ச்சியில் உறைந்தார்.


“என்ன சார் இது! ஒரு கோடி ரூபாய் லோனை ஒரே மாசத்துல ஒரே இன்ஸ்டால்மெண்ட்ல முழுசா ரீ பே பண்றீங்க?”


“செய்யற தொழில்ல பிராடக்ட் குவாலிட்டி நல்லா இருந்தா இதொண்ணும் கஷ்டமே இல்லை”

செவ்வாய், 21 ஜனவரி, 2025

நற்செயல்கள். (கதை)

 


ஒரு ஊரில் ஒரு ஆள் இருந்தான். அவன் பேரில் ஒரு குற்றச்சாட்டு. அரண்மனையிலிருந்து, உன்னை விசாரிக்க வேண்டியிருக்கிறது. ஆகவே, அரண்மனை விசாரணை மண்டபத்துக்கு வந்து போ என்றது, அரசனின் ஆணை.


நம்ம பேர்ல எந்த தப்பும் இல்லையே. நாம் எந்த தவறும் செய்யலையே.... என்று நினைத்தான், அந்த ஆள். ஆனாலும் அரசாங்க உத்தரவு அதை அலட்சியம் செய்ய முடியுமா? போய்த்தான் ஆக வேண்டும். தனியாக போக அவனுக்கு தயக்கமாக இருந்தது.


துணைக்கு யாராவது வந்து, எனக்காக கொஞ்சம் வாதாடினால் தேவலை. யாரை அழைத்துக் கொண்டு போவது, என்று யோசித்தான். அவனுக்கு மூன்று நண்பர்கள் இருந்தனர். அவர்களில் ஒருவரை அழைத்து செல்லலாம் என்று முடிவு செய்தான்.


அந்த மூவரில் மிகவும் நெருக்கமான ஒரு நண்பரின் வீட்டுக்கு போய் கதவை தட்டினான். திறந்த நண்பனிடம் விஷயத்தை சொல்லி அரண்மனைக்கு அழைத்தான். என்னால் வரமுடியாது என்று சொல்லிவிட்டான், அவன். இவனுக்கு ஏமாற்றமாக போய் விட்டது. ரொம்பவும் நெருக்கமாக இருந்த இவனே இப்படி சொல்லிவிட்டானே என்று வருத்தப்பட்டான்.


சரி, பரவாயில்லை. இன்னொரு நன்பனிடம் போவோம்... என்று முடிவு செய்து இரண்டாவது நண்பனை தேடி சென்றான். இரண்டாம் நண்பனோ விஷயம் அனைத்தையும் கேட்டுவிட்டு அரண்மனை வாசல் வரைதான் நான் வருவேன். அங்கேயே நின்று கொள்வேன் அதற்கு மேல் வரமாட்டேன் என்று கூறினான். அப்படி அதுவரைக்கும் வந்து என்ன பிரயோஜனம்? கடைசி வரைக்கும் நம்ம கூட வந்து, நமக்காக வாதாடணுமே அதுதானே முக்கியம்... என்று நினைத்தான்.


அடுத்தபடியாக மூன்றாவது நண்பனிடம் போனான். அவன் அதிக நெருக்கம் இல்லை. இருந்தாலும் போனான். விபரத்தை சொன்னான். அவன் உடனே சட்டையை போட்டுக் கொண்டு "வா போகலாம்" என்று புறப்பட்டு விட்டான். விசாரணையின் போது, தன் நண்பனுக்காக வாதாடி, பரிந்து பேசி, விடுதலை வாங்கிக் கொடுத்தான்.


ஒவ்வொரு மனிதனுக்கும் மூன்று நண்பர்கள் உண்டு. முதல் நபருக்கு பெயர், பணம். இரண்டாம் நபருக்கு பெயர், சொந்தம். மூன்றாம் நபர் அவன் செய்த "நற்செயல்கள்".


இறுதி பயணத்தின் போது, பணம் கூட வராது. சொந்தம், கல்லறை வரைக்கும் வரும். நற்செயல்கள் தான் கூடவே வரும். அதாவது, நமக்கு பின்னாலும் நம்மைப் பற்றி சொல்லிக் கொண்டே இருக்கும்.


மனிதன் நற்செயல்களை மட்டுமே செய்ய வேண்டும்.


பழைய குறிப்புகள் வாசிக்க 👇🏻 கிளிக் செய்யவும்.

மக்தப் மாணவர்கள் மேடை நிகழ்ச்சிகள்.

திங்கள், 20 ஜனவரி, 2025

எனக்கு மட்டும் தான் நடக்குதா..

 


அவசரமா பெட்ரோல் அடிக்க போனா...


பெட்ரோல் பங்குல நமக்கு முன்னாடி இருக்கிறவன் டேங் மூடி திறக்க முடியாம தடுமாறிட்டு இருப்பான் ..


ஏடிஎம்ல பணம் எடுக்கப் போனா


அங்க ஒருத்தன் ரொம்ப நேரம் நின்னு நோண்டிட்டு இருப்பான்.

சிக்னல் விழுந்தவுடனே எல்லாருமே போனாலும், நமக்கு முன்னாடி இருக்கிறவன் வண்டிய ஆப் பண்ணிட்டு, ஸ்டார்ட் பண்ணிட்டு இருப்பான் ..


ஹெல்மெட் போடாம மறந்துட்டு வந்த டைம்ல தப்பிச்சு போயிடலாம்னு பார்த்தா, நமக்கு முன்னாடி போறவன் பிரேக் அடிச்சு, நம்மள நிறுத்தி போலீஸ் கிட்ட புடிச்சி கொடுத்துட்டு போவான்.


டோல் கேட்ல எல்லா லைனுமே போகும். நமக்கு முன்னாடி வந்தவன் காசு தராம எதாவது ஒரு கார்டை காட்டி சண்டை பண்ணிட்டு இருப்பான் ...


ஆம்லேட் ஆர்டர் பண்ணி அரைமணி நேரம் வெயிட் பண்ணிட்டு இருப்போம். சப்ளையர் ஆள் தெரியாம பக்கத்துல இருக்கிறவனுக்கு வச்சிட்டு, சார் ஆம்லேட் கேட்டீங்களே, கொஞ்சம் வெயிட் பண்ணுங்க இப்ப போட்றலாம்னு சொல்லுவான் ..


பேங்க் மேனேஜர பார்க்கப் போனா, ஒருத்தன் உட்கார்ந்து ஊர் கத பேசிட்டு இருப்பான்..


பஸ்ல நமக்கு பின்னாடி வந்தவன், அடுத்த ஸ்டாப்ல இறங்க வேண்டியவன் சீட்ட புடிச்சி உட்கார்ந்துக்குவான்.


டீக்கடை மாஸ்டர் தூள் மாத்தி பத்து டீக்கு அப்புறம்தா நமக்கு டீ குடுப்பான்..


சூடா வடை இருக்குன்னு பார்த்தா...


நமக்கு முன்னடி ஒருத்தன் விருந்தாடி வந்திருக்காங்கன்னு அம்பது வடையை பார்சல் வாங்குவான்.


பந்தியில எழுந்திருக்கட்டும் உட்காருவோம்னு வெயிட் பண்ணா...


மாப்ள இங்க வா நான் எந்திருக்க போறேன்னு இன்னொருத்தரை கூப்பிட்டு உட்கார வச்சிட்டு போவான்...


இதெல்லாம் எதேச்சையா நடக்குதா..!!??


இல்ல எனக்கு மட்டும் தான் நடக்குதா…


பழைய குறிப்புகள் வாசிக்க 👇🏻 கிளிக் செய்யவும்.

மதரஸா மேடை நிகழ்ச்சிகள்.