அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..
எனது பெயர்.......
நான் இங்கு அல்லாஹ் யார் அவன் எப்படிப்பட்டவன் என்பதை பற்றி சொல்ல இங்கு வந்துள்ளேன்.
அன்பிற்கினிய அல்லாஹ்வின் நல்லடியார்களே....
அல்லாஹ் ஒருவன்,
அவன் தனித்தவன்,
அல்லாஹ் மட்டுமே வணக்கத்திற்குத் தகுதியானவன்.
அல்லாஹ்வுக்கு எந்த கூட்டாளியும் இல்லை.
அல்லாஹ் எங்கும் எப்பொழுதும் இருக்கின்றான்.
அல்லாஹ் எல்லாவற்றையும் அறிகின்றான்.
அல்லாஹ் எந்தக் குறையும் இல்லாதவன்.
அல்லாஹ் பரிசுத்தமானவன்.
அல்லாஹ் நம்மைப் படைத்து, உயிர் கொடுத்து, வாழச் செய்கிறவன்.
அவனே நம்மை மரணிக்கச் செய்கிறான்.
அல்லாஹ் உண்ணுவதோ, குடிப்பதோ,உறங்குவதோ இல்லை.
அல்லாஹ்வுக்கு தாய் தந்தை,மனைவி, குழந்தை இல்லை.
அல்லாஹ்வுக்கு எந்த தேவையுமில்லை.
நாம்தான் அவனிடம் தேவை உள்ளவர்கள்
உருவம் இல்லா ஒப்பற்ற இறைவன் அவன்தான் அல்லாஹ்.
அப்படிப்பட்ட அல்லாஹ்வை என்றும் எங்கும் எப்போதும் மறக்காதவர்களாக நம் அனைவர் களையும் அல்லாஹ் வாழச் செய்வானாக.
பழைய குறிப்புகள் வாசிக்க 👇🏻 கிளிக் செய்யவும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக