திருக்குர்ஆன் பற்றிய சிறு குறிப்புகள்
1) திருக்குர்ஆன் ஓதத் துவங்கும் போது என்ன கூற வேண்டும்?
அஊது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம் என்றும் (16:98) மற்றும் பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர்ரஹீம் என்றும் (96:1) கூற வேண்டும்.
2) திருக்குர்ஆன் யாரிடமிருந்து இறங்கியது?
அல்லாஹ்விடமிருந்து இறங்கியது
3) திருக்குர்ஆன் யார் மூலம் இறங்கியது?
ஹழ்ரத் ஜிப்ரயீல் ((அலை)) மூலம் இறங்கியது.
4) திருக்குர்ஆன் யாருக்கு இறங்கியது?
ஹழ்ரத்முஹம்மது நபி (صلى الله عليه وسلم) அவர்களுக்கு இறங்கியது
5) திருக்குர்ஆன் எந்த இடத்தில் இறங்கியது?
ஹிரா என்னும் மலைக் குகையில் இறங்கியது
6) திருக்குர்ஆன் எந்த மொழியில் இறங்கியது?
அரபி மொழியில் இறங்கியது.
7) திருக்குர்ஆனில் முதன்முதலாக இறங்கிய வசனம் எது?
இக்ரஹ் என்னும் வசனம் ஆகும்.
திருக்குர்ஆன் எதற்காக வேண்டி இறங்கியது?
மனித, ஜின் வர்க்கத்திற்கு நேர்வழி காட்டுவதற்காகஇறங்கியது.
9) திருக்குர்ஆனின் திருப்பணி என்ன?
நன்மையை ஏவுவதும், தீமையை தடுப்பதும் ஆகும்.
10) திருக்குர்ஆனில் உள்ள பெரிய சூரா எது?
சூரா அல்பகரா
11) திருக்குர்ஆனில் உள்ள சிறிய சூரா எது?
சூரத்துல் கவ்ஸர்
12) ஜூஸ்வு 2 என்றால் என்ன?
பாகம் என்று பொருள்
13) திருக்குர்ஆனில் எத்தனை பாகங்கள் உள்ளன?
30பாகங்கள் உள்ளன.
14) சூரா என்றால் என்ன?
அத்தியாயம் என்று பெயர்
15) திருக்குர்ஆனில் எத்தனை சூராக்கள் உள்ளன?
114 சூராக்கள் உள்ளன.
16) ஆயத் என்றால் என்ன?
திருக்குர்ஆனின் வசனம் என்று பெயர்
17) திருக்குர்ஆனில் எத்தனை ஆயத்துக்கள் உள்ளன?
ஆயிஷா ((ரலி)) அவர்களின் கணக்குப்படி6666
18) திருக்குர்ஆன் வசனத்திற்கு மட்டும் ஏன் ஆயத் என்று பெயர் வந்தது?
இறைவேதமாகிய திருக்குர்ஆனின் ஒவ்வொரு வசனமும் அத்தாட்சியாக விளங்குவதால்
19) திருக்குர்ஆனில் ஐன் (ருகூவு) என்றால் என்ன?
தொழுகையில் ஒருரக் அத்தில் ஒதுவதற்கு ஏதுவாக உள்ள ஒரு பகுதி
20) ருகூவு என்று ஏன் பெயர் வந்தது?
பெரும்பாலும் தொழுகையில் அதுவரை ஓதிய பிறகு ருகூவிற்கு குனிவதால்
21) திருக்குர்ஆனில் கூறப்படும் இறையச்சத்தை அடிப்படையாகக்
கொண்டு கட்டப்பட்ட பள்ளிவாசல் எது?
மதினாவிற்கு அருகில் உள்ள மஸ்ஜிதே குபா ஆகும்.
22) திருக்குர்ஆனில் ஆயத்துல் குர்ஸி எந்த ஜூஸ்வில் உள்ளது?
3ம் ஜூஸ் உவின் ஆரம்பத்தில் வருகிறது.
23) திருக்குர்ஆனில் யாஸூன் சூரா எந்த ஜூஸ்உவில் ஆரம்பிக்கிறது?
22ம் ஜூஸ்வின்; இறுதியில்
24) திருக்குர்ஆனில் உள்ள மொத்த ஸஜ்தாக்கள் எத்தனை?
14 ஆகும்.
25) திருக்குர்ஆனில் உள்ள நீண்ட அல்லாஹ்வின் அழகிய திருப்பெயர் எது?
துல் ஜலாலி வல் இக்ராம்
26) திருக்குர்ஆனில் எத்தனை மாதங்களின் பெயர் உள்ளது?
ஒரே ஒரு மாதத்தின் பெயர் தான் உள்ளது
27) திருக்குர்ஆனில் உள்ள ஒரு மாதத்தின் பெயர் என்ன?
ரமலான் மாதம்
28) திருக்குர்ஆனில் மதீனாவிற்கு கூறப்பட்ட மற்றொரு பெயர்?
யஸ்ரிப்
29) திருக்குர்ஆனில் உதாரணம் காட்டப்படும் இரண்டு சிறிய உயிரினம் எது?
1.ஈ (22:73) 2. சிலந்தி (29:41)
30) திருக்குர்ஆனில் முதல் சூரா எது? கடைசி எது?
முதல் சூரா ஃபாத்திஹா கடைசி சூரா நாஸ்
31) திருக்குர்ஆனில் எத்தனை பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் உள்ளன?
114 உள்ளன
32) திருக்குர்ஆனின் கடைசி 'ஸஜ்தா'எந்த சூராவில் உள்ளது?
சூரத்துல் 'அலக்' என்ற அத்தியாயத்தில் உள்ளது.
33) திருக்குர்ஆன் கூறும் அழியாமல் பாதுகாக்கப்பட்டு பின்வரும் சமுதாயத்திற்கு அத்தாட்சியாக உள்ள மனித உடல் எது?
ஃபிர்அவ்னின் உடல்
34) திருக்குர்ஆன் கூறும் மூஸா நபியின் எதிரி யார்?
ஃ பிர்அவ்ன்
35) திருக்குர்ஆன் கூறும் இப்ராஹீ நபியின் எதிரி யார்?
ஃநம்ரூத்
36) திருக்குர்ஆன் கூறும் ஈஸா நபியின் எதிரி யார்?
யூத சமுதாயம்
37) திருக்குர்ஆனில் எத்தனை நபிமார்களின் பெயர்கள் கூறப்பட்டுள்ளன?
25 நபி மார்களின் பெயர்கள் கூறப்பட்டுள்ளன.
38) திருக்குர்ஆனில் நபி (صلى الله عليه وسلم) அவர்களின் பெயர் எத்தனை இடங்களில் கூறப்பட்டுள்ளது?
4 இடங்களில் முஹம்மது என்றும், ஒரு இடத்தில் அஹ்மது
என்றும் கூறப்பட்டுள்ளது.
39) திருக்குர்ஆனைப் போன்று வாழ்ந்தவர்கள் யார்?
நபி (صلى الله عليه وسلم) அவர்கள்
40) திருக்குர்ஆனில் நபி (صلى الله عليه وسلم) அவர்களை அல்லாஹ் என்னென்ன பெயர்கள் மூலம் அழைக்கிறான்?
முஹம்மது, அஹ்மது, தாஹா, யாஸீன்,முஸ்ஸம்மில்,
முத்தஸ்ஸிர், அப்துல்லாஹ் ஆகிய 7பெயர்களில் அழைக்கிறான்.
41) திருக்குர்ஆனுக்கு முந்தைய வேதங்கள் எவை?
1.தவ்ராத், 2.ஸபூர் 3.இன்ஜீல் (ஆதாரம் : அபூதாவூத்)
42) திருக்குர்ஆனில் முதன் முதலில் முழுவதுமாக இறங்கிய சூரா எது?
சூரா ஃபாத்திஹா
43) திருக்குர்ஆன் லவ்ஹூல் மஹ் ஃபூலில் இருந்து எங்கு இறங்கியது?.
முதல் வானத்தில் பைத்துல் இஸ்ஸஹ் என்ற இடத்தில் இறங்கியது
44) திருக்குர்ஆன் முதல் (வஹீ) வசனம் எப்போது அருளப்பட்டது?
கி.பி.610ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம்
45) திருக்குர்ஆன் எந்த இரவில் அருளப்பட்டது?
ரமலான் மாதத்தில் புனித லைலத்துல் கத்ர் என்னும் சங்கை மிகு இரவில் (ஆதாரம் 97.01)
46) திருக்குர்ஆனின் கடைசி சூரா எங்கு இறக்கப்பட்டது?
மதீனாவில்.
47) திருக்குர்ஆனில் மதீனாவில் இறங்கிய கடைசி சூரா எது?
சூரா நஸ்ரு
50) திருக்குர்ஆனை அல்லாஹ் எப்படி பாதுகாக்கின்றான்?
கல்வியாளர்கள் உள்ளத்தில் பாதுகாக்கின்றான்
51) திருக்குர்ஆன் ஒன்று திரட்டப்பட்ட காரணம் என்ன?
யமாமா என்ற போரில் ஏறத்தாழ 70ஹாஃபிழ்கள் (குர்ஆனை
மனனம் செய்தவர்கள்) ஷஹீதாக்கப்பட்டு வீரமரணம்
அடைந்ததால் (ஆதாரம் :புகாரி)
52) திருக்குர்ஆனை ஒன்று திரட்டும் யோசனையை அபூபக்கர் சித்தீக் ((ரலி)) அவர்களிடம் தெரிவித்தவர் யார்?
உமர் ((ரலி))அவர்கள் (ஆதாரம் :புகாரி)
53) திருக்குர்ஆன் என்ற வார்த்தையின் பொருள் என்ன?
ஓதுதல், ஓதப்பட்டவை, ஓதப்பட வேண்டியது என்பதாகும்.
54) திருக்குர்ஆனில் பிஸ்மில்லாஹ் எழுதப்படாத சூரா எது?
சூரா தவ்பா என்ற பராஅத் சூராவாகும்
55) திருக்குர்ஆன் ஒலி வடிவமாக இறங்கியதா? எழுத்து வடிவில் இறங்கியதா?
ஒலி வடிவில் இறங்கியது
60) திருக்குர்ஆனை ஒன்று சேர்த்தவர் என்ற சிறப்பு பெயருக்குரியவர் யார்? ஹளரத் உஸ்மான் (ரலி)யல்லாஹூ அன்ஹூ
61) திருக்குர்ஆனுக்கு 'ஸபர், ஜேர், பேஷ்'என்னும் உயிர் குறியீடுகளை அமைத்தவர் யார்?
ஹிஜ்ரி 43ல் இராக் ஆளுநராக இருந்த ஹஜ்ஜாஜ் இப்னு யூசுப் என்பவராவார்.
62) திருக்குர்ஆனின் சூராக்களை வரிசைப்படுத்தியது யார்?
நபி صلى الله عليه وسلمலல்லாஹூ (அலை)ஹி வஸல்லம் அவர்கள்
63) திருக்குர்ஆனின் ஞானம் பெற்ற உலமாக்களை அதிகமாக உருவாக்கும் தமிழக மாவட்டம் எது?
வேலூர் மாவட்டம்
64) திருக்குர்ஆனின் ஞானம் பெற்றவர்கள் அதிக எண்ணிக்கையில் வாழும் மாவட்டம் எது?
திருநெல்வேலி மாவட்டம்
65) திருக்குர்ஆனை மனைம் செய்தவர்கள் ஹாபிழ்கள் தமிழகத்தில் அதிகஎண்ணிக்கையில் வாழும் ஊர் எது?
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மேலப்பாளையம்
66) திருக்குர்ஆனை ஒதுவதால் என்ன நன்மை?
ஒரு எழுத்துக்கு 10 நன்மைகள் உண்டு (ஆதாரம் :திர்மிதீ)
67) திருக்குர்ஆனை ஒதக் கேட்பதால் என்ன நன்மை?
ஒதுவது போன்றே நன்மை கிடைக்கும் (அல்ஹதீஸ்)
68) திருக்குர்ஆனை ஒளுவுடன் ஓதினால் என்ன நன்மை கிடைக்கும்?
ஒரு எழுத்துக்கு 25 நன்மைகள் கிடைக்கும் (ஆதாரம் :இஹ்யா)
69) திருக்குர்ஆனை ஒருவர் உட்கார்ந்து தொழுகும் போது ஓதினால் என்ன நன்மை கிடைக்கும்?
உட்கார்ந்து தொழும் போது ஒரு எழுத்துக்கு50,50 நன்மைகள் கிடைக்கும் (ஆதாரம் :இஹ்யா)
70) திருக்குர்ஆனை நின்று தொழும் போது ஒதினால் என்ன நன்மை கிடைக்கும்?
ஒரு எழுத்துக்கு 100 நன்மைகள் கிடைக்கும் (ஆதாரம்:இஹ்யா)
71) திருக்குர்ஆனை பார்த்து ஒதுவது சிறந்ததா? பார்க்காமல் ஒதுவது சிறந்ததா?
பார்த்து ஒதுவதே சிறந்தது
72) திருக்குர்ஆனை திக்கி ஓதினாலும் நன்மைகள் கிடைக்குமா?
ஆம் : இரு மடங்கு நன்மைகள் கிடைக்கும்
(ஆதாரம் : புகாரி, அபூதாவூது, முஸ்லிம்,திர்மிதி)
73) திருக்குர்ஆன் மறுமையில் பரிந்துரைக்குமா?
ஆம் அதனை ஒதியவருக்கு கண்டிப்பாக பரிந்துரைக்கும்
(ஆதாரம் : முஸ்லிம்)
74) சூரா ஃ பர்த்திஹா ஓதினால் என்ன நன்மை?
திருக்குர்ஆனில் 3ல் 2 பகுதி ஒதிய நன்மைகள் உண்டு.
75) சூரா யாசீன் ஓதினால் என்ன நன்மை?
10 திருக்குர்ஆன் ஓதிய நன்மைகள் உண்டு (ஆதாரம்: திர்மிதி)
76) சூரா இக்லாஸ் ஓதினால் என்ன நன்மை?
திருக்குர்ஆனில் 3ல் 1 பங்கு ஒதிய நன்மைகள் உண்டு. (ஆதாரம் :புகாரி , இப்னு கஸீர்)
77) திருக்குர்ஆனில் எந்த சூராவை ஒதினால்4000 வசனங்கள் ஒதிய
நன்மை கிடைக்கும்?
சூரா தகாசுர்
78) திருக்குர்ஆனில் தலைசிறந்த 'ஆயத்'எது?
ஆயத்துல் குர்ஸீ
79) திருக்குர்ஆனில் 'இதயம்' எந்த அத்தியாயம்?
யாஸீன் என்ற அத்தியாயம்
80) திருக்குர்ஆனில் மொத்தம் எத்தனை எழுத்துக்கள் உள்ளன?
3,21,267 (3 லட்சத்து 21 ஆயிரத்து 267எழுத்துக்கள் உள்ளன.)
|
இறுதியாக முழுவதுமாக இறக்கப்பட்ட சூரா எது
பதிலளிநீக்கு