ஞாயிறு, 31 ஜூலை, 2022

ஐந்து கலிமாக்கள்

 


1. கலிமா தய்யிப்

 

லா இலாஹ இல்லல்லாஹு முஹம்மதுர் ரசூலுல்லாஹி

 

பொருள்: முதல் கலிமா பரிசுத்தமானது

வணக்கத்திற்குரியவன் அல்லாஹூத்தஆலாவைத் தவிர வேறு இறைவன் இல்லை. முஹம்மது நபி (ஸல்) அவர்கள் அல்லாஹுத்தஆலாவின் திருத்தூதராக இருக்கிறார்கள்.

 

2. கலிமா ஷஹாதத்

 

அஷ்ஹது அல்லாஹ் இலாஹ இல்லல்லாஹு வஹ்த்ஹு லாஷரீக்க லஹு வஆஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹு வரசூலுஹு.

 

பொருள்: இரண்டாம் கலிமா (உள்ளத்தால்) சாட்சி கூறுதல்

வணக்கத்திற்குரியவன் அல்லாஹுத்தஆலாவைத் தவிர வேறு எந்த இறைவனுமில்லை என்று (உள்ளத்தால் உறுதி கொண்டு) சாட்சிக் கூறுகிறேன். அவன் தனித்தவன் அவனுக்கு (யாரும்) இணை இல்லை. மேலும் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் அல்லாஹுத்தஆலாவின் அடியாராகவும், உண்மைத் திருத்தூதராகவும் இருக்கிறார்கள் என்றும் சாட்சிக் கூறுகிறேன்.

 

வியாழன், 28 ஜூலை, 2022

மார்க்கக் கல்வியில் பெரிதும் ஆர்வம் உடையோர் பெண்களே -3

 


அல்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன் வஸ்ஸலாத்து வஸ்ஸலாமு அலா ரசூலிஹில் முஜ்தபா வ நபிய்யிஹில் முஸ்தபா சல்லல்லாஹு அலைஹிவ வசல்லம்.. அம்மா பஃத்..

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ.. சபையோர்களே.. பெரியோர்களே.. நியாயமான நடுவர் அவர்களே.. எனக்கு முன் ஆண்கள் அணி சார்பாக பேசிய ______ அவர் சின்னப்புள்ளத்தனமா இருப்பார் என்று நினைச்சு கூட பாக்கல..

நடுவர் அவர்களே..?

புதன், 27 ஜூலை, 2022

மார்க்கக் கல்வியில் பெரிதும் ஆர்வம் உடையோர் ஆண்களே..3


 

கண்ணியத்திற்குரிய விழாக்குழு தலைவர் அவர்களே.. எனது ஆசிரிய தந்தையே.. ஆண்கள் சபையே..

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ

அனைத்து படைப்பிலும் ஆண் இனத்தை அழகுபடுத்திய அல்லாஹ்வைப் புகழ்ந்து.. அண்ணல் நபி அவர்களை அவையில் நினைவு கூர்ந்து என் மறுப்புரையை துவங்குகிறேன்..

நடுவர் அவர்களே! என்னங்க ____ இவர்கள் போடும் மொக்கை தாங்க முடியல.. மூன்று பேர்கிட்டயும் ஒரே ஒரு குறிப்பு தான் இருக்கும் போல அதை வச்சிக்கிட்டே நேரத்தை ஓட்டறாங்கன்னு நினைக்கிறேன்..

எங்க ஊருல ஒரு டுபாக்கூர் டாக்டர் இருந்தார் லேகிய டாக்டர்.. அவருக்கு அந்த பேர் மிகவும் பொருத்தமாக இருந்தது ஏனென்றால் அவர் அஸ்வகந்தா லேகியத்தை.. மட்டும் வித்து வித்து பிரபலமாகிவிட்டார்..

செவ்வாய், 26 ஜூலை, 2022

மார்க்கக் கல்வியில் பெரிதும் ஆர்வம் உடையோர் பெண்களே….2


அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ..

விண்ணையும் மண்ணையும் அந்த மண்ணிலே என் அன்னையையும் ஓம் மாந்தர்க்கு பிள்ளையாக என்னையும் படைத்து பரிபாலிக்கின்ற இரட்சகா உன்னை புகழ்ந்தேன் அல்ஹம்துலில்லாஹ்..

பெண்ணை போற்றிய உண்மையான உம்மி நபியை வாழ்த்தும் அந்த சலவாத்தை கூறி என் புழையை துவக்குகிறேன்..

அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதின் வ அலா ஆலிஹி வ அஸ்ஹாபிஹி அஜ்ம ஈன்

நடுவர் அவர்களே! எனக்கு முன் பேசிய தோழி அவர்கள்.. அவருடைய பெயரைரே அவருக்கு சரியா படிக்கத் தெரியாது இந்த நிலையில இவரு வரலாறு படிச்சா எப்படி இருக்கும்..

என்னவோ பெரிய அல்லாமா முல்லா அலிகாரி மாதிரி வியாக்கானம் பேசுறாரு நடுவர் அவர்களே..

திங்கள், 25 ஜூலை, 2022

மார்க்க கல்வியில் பெரிதும் ஆர்வம் உடையவர் ஆண்களே…! 2


 

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்

அல்லாஹ்வின் பெயரைக் கூறி நபி மீது ஸலவாத் ஓதி என் வாதத்தை துவங்குகிறேன்.. அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ

எங்கள் அணித்தலைவர் எவ்வளவு அழகாக ஆதாரங்களை அடுக்கினார் பார்த்தீர்களா நடுவரே!

என் தலைவர் சஹாபி ஆண்களின் அதிக ஆர்வம் உள்ள ஒரு உதாரணத்தை சொல்லிவிட்டார்.

நான் சஹாபாக்களிலும் அதற்குப் பின்பு உள்ள தாபியீன்கள்அதற்குப் பின்னுள்ளவர்களையும் சொல்ல தயாராக உள்ளேன்.. நடுவர் அவர்களே..!

சனி, 23 ஜூலை, 2022

மார்க்கக் கல்வியில் பெரிதும் ஆர்வம் உடையவர்கள் பெண்களே 1


 

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்

அல்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன் வஸ்ஸலாத்து வஸ்ஸலாமு அலா ரசூலிஹில் முஸ்தபா வஅலா ஆலிஹி வ அஸ்ஹாபிஹி வஸல்லம் ஆமீன்..

அறிவூட்டும் தந்தை தந்து.. அமுதூட்டும் அன்னை தந்து.. செறிவூட்டும் மறையைத் தந்து.. உணர்வூட்டும் நபியை தந்த.. வல்லோன் அல்லாஹ் தன்னை புகழ்ந்து சபையோருக்கு சலாம் என்னும் முகமன் கூறி துவங்குகிறேன்.. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..

நடுவர் அவர்களே..! இப்ப பேசிட்டு போனவர்க்கு பேரை தப்பா வச்சிருக்காங்க.. ________ னா ________ .

நடுவர் அவர்களே! ஆதம் அலைஹி வஸ்ஸலாம் கல்வியில் ஆர்வமாக இருந்தாங்கன்னு குர்ஆனில் வந்தது என்று சொன்னார்..

ஆனால் அங்கு அல்லாஹ் கற்றுக்கொடுத்தது மார்க்க கல்வியை பற்றி இல்லை.. அந்த வசனத்தையும் அர்த்தத்தையும் உங்கள் முன் சொல்லி உங்களிடமே முடிவை விடுகிறேன்

வியாழன், 21 ஜூலை, 2022

மார்க்கக் கல்வியில் பெரிதும் ஆர்வம் உடையோர் ஆண்களே..! 1 பட்டி மன்றம்.

 


பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்

அல்ஹம்துலில்லாஹ் வஸ்ஸலாத்து வஸ்ஸலாமு அலா ரசூலில்லாஹ்.

கண்ணியத்துக்குரிய பட்டிமன்ற நடுவர் அவர்களே என் இரு தோழர்களே எதிரணியின் _____________

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ….

மார்க்கக் கல்வியில் பெரிதும் ஆர்வம் உடையோர் யார் என்பது இந்த பட்டிமன்றத்தின் நோக்கம் ஆகும் கேள்வியாகும்

நடுவர் அவர்களே..! இதென்ன கேள்வி சந்தேகமின்றி ஆண்கள் தான் அதிக ஆர்வம் உடையவர்கள்..

ஆதம் நபியை படைத்த அல்லாஹ்..

அவர்களுக்கு மார்க்கக் கல்வியை கற்றுக் கொடுத்தான் ..அவர்கள் கற்றுக் கொண்டார்கள் என்பது குர்ஆன் நமக்கு கூறும் வரலாறு..

ஞாயிறு, 17 ஜூலை, 2022

ஆடை இல்லா மனிதன் அரை மனிதன்

 


அன்னாசு பில்லிபாஸ் الناس باللباس ஆடையை வைத்தே மனிதர்கள் மதிக்கப்படுகிறார்கள்


அன்றொருநாள் முல்லா ஒரு விருந்துக்கு அழைக்கப்பட்டிருந்தார்..குறித்த நேரத்தில் விருந்துக்கு சென்றார். எளிமையான உடையில் இருந்ததால் வாட்ச்மேன் உள்ளே விடவில்லை. எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் அனுமதிக்கவில்லை. 

முல்லா திரும்பி சென்றார்; கடைக்குச் சென்று ஒரு அழகான டிப்டாப்பான உடையை வாடகைக்கு வாங்கி அணிந்துகொண்டு மீண்டும் விருந்துக்கு வந்தார். இப்பொழுது வாட்ச்மேன் வாயெல்லாம் பல்லாக வாங்க வாங்க என்று வரவேற்றான். உள்ளே சென்ற முல்லா விருந்தை எடுத்து தன் சட்டைப் பைக்குள் போட்டு சட்டையே ! இந்தா தின்னுஎன்று சொல்லிக் கொண்டிருந்தார். அங்கிருந்த மக்கள் எல்லோரும் என்ன முல்லா.. என்னாச்சு உங்களுக்கு?” என கேலியாக கேட்டனர். முல்லா சொன்னார்; ரொம்ப நல்லா சொன்னார்: ஆமா.. முதலில் எளிமையா வந்தேன்; எதுவும் கிடைக்கல.. டிப்டாப்பா வந்தேன்; எல்லாமே கிடச்சது. அப்படின்னா இந்த விருந்து எனக்கா? இந்த சட்டைக்கா?” என்றார்.

வெள்ளி, 15 ஜூலை, 2022

‘ வதந்தி வேண்டாம்”

 


கண்ணியத்திற்குரிய...ஹிதாயத்துல் இஸ்லாம் மதரஸா மற்றும் மஸ்ஜிதே முபாரக் பள்ளிவாசல் தலைவர் செயலாளர் மற்றும் நிர்வாக பெருமக்களே.. ஜமாஅத்தார்களே.. இவ்விழாவிற்க்கு சிறப்பு விருந்தினராக வருகை தந்த ஆலிம்களே.. சமூக சேவையாளர்களே.. இவ்விழாவிற்க்கு உடலாலும் பொருளாலும் உதவி செய்த செல்வந்தர்களே.. மற்றும் பெற்றோர்களே..என் உடன் பயிலும் மாணவ மாணவிகளே.. அனைவருக்கும் என் இனிய ஸலாம் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..

அல்லாஹ் குர்ஆனில் ஒரு வசனத்தில் சொல்கிறான்

முமின்களே! தீயவன் எவனும் உங்களிடம் ஒரு செய்தியைக் கொண்டு வந்தால் அதைத் தீர்க்க விசாரித்துக் கொள்ளுங்கள். (இல்லையேல்) அறியாமையினால் (குற்றமற்ற) ஒரு சமூகத்தாருக்கு நீங்கள் தீங்கு செய்து விடலாம்; பின்னர் நீங்கள் செய்தவை பற்றி நீங்களே கைசேதப்படுபவர்களாக (கவலைப்படுபவர்களாக) ஆவீர்கள்” (திருக்குர்ஆன் 49:6).

தர்மத்தின் சிறப்பு

 

*தர்மம் செய்பவருக்கு அல்லாஹ் கொடுக்கும் பதினெட்டு விதமான சிறப்புகள்*


1 *
அவர் நோய் வாய்ப்பட்டு இருந்தால் அந்த நோயில் இருந்து நிவாரணம் கொடுக்கப்படும்*
ஆதாரம்: நூல்: மராஸீலு அபீ தாவூது: ஹதீஸ் எண்: 105

2 *
அவர் செய்த சிறு பாவங்கள் மன்னிக்கப்படும்*
ஆதாரம்: சூரத்துல் பகரா: வசனம்: 271

வெள்ளி, 8 ஜூலை, 2022

பிஸ்மில்லாஹ் கூறுவதின் சிறப்பு

 

அல்லாஹ்வின் நல்லடியார்களே…… நமது நபி ஸல் அவர்கள் அல்லாஹ்வை காணுவதற்கு ஹஸ்ரத் ஜிப்ரயீல் அலை அவர்களுடன் மிஃராஜ் பயணம் சென்றார்கள் அங்கே அவர்கள் பல காட்சிகளை கண்டார்கள்.


அன்பிற்கினியவர்களே……நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், மிஃராஜ் இரவில் சுவர்க்கம் முழுவதும் எனக்குக் காண்பிக்கப்பட்டது அங்கு நான்கு நதிகள் ஓடுவதைக் கண்டேன்
1.
தண்ணீர் நதி
2.
பால் நதி
3.
மது நதி
4,
தேன் நதி,
இந்த நதிகள் எங்கிருந்து புறப்பட்டு எங்குபோய்ச் சேர்கின்றன என ஜிப்ரயீல் (அலை அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள், இவைகள் ஹவ்லுல் கெதர் என்ற நீர்த் தடாகத்தில் போய்ச் சேர்கிறது, எங்கிருந்து புறப்பட்டு வருகிறது என்பது எனக்குத் தெரியாது அல்லாஹ்வே மிக அறிந்தவன் என்றார்கள்

ஸலாம் சொல்வதன் ஒழுக்கம்

 


அஸ்ஸலாமு அலைக்கும்..

ஸலாம் சொல்வதன் ஒழுக்கத்தைப் பற்றி நான் இங்கு பேச வந்து இருக்கிறேன்


1.
தெரிந்தவர்கள் தெரியாதவர்கள் என்று எல்லா முஸ்லிம்களுக்கும் ஸலாம் சொல்ல வேண்டும்.

2.
முந்தி கொண்டு ஸலாம் சொல்ல வேண்டும்.

3.
சபைக்கு வரும் போதும் சபையை விட்டு வெளியேறும் போதும் ஸலாம் சொல்ல வேண்டும்.

செவ்வாய், 5 ஜூலை, 2022

மனிதனே உனக்கு ஆச்சரியமாக இல்லையா?

 


மனிதனே உனக்கு ஆச்சரியமாக இல்லையா?

 

நீ பிறந்த போது உன்னை உன்னுடைய தாயின் வயிற்றில்லிருந்து வெளியேற்றியது யார் என்று உனக்கு தெரியாது 

அதே போல் உன்னை மண்ணரையில் வைப்பது யார் என்று உனக்கு தெரியாது.

 

நீ பிறந்த போது உன்னை குளிப்பாட்டினார்கள் சுத்தம் செய்தார்கள்

அதே போல் நீ மரணித்தாலும் குளிப்பாட்டி சுத்தம் செய்வார்கள்.

ஞாயிறு, 3 ஜூலை, 2022

இஸ்லாத்தில் தெரிந்து கொள்ள வேண்டியவை_!!

 


பெருமானார் (ஸல்) அவர்களின் மனைவிமார்கள் யார்.. அவர்களின் பெயர் என்ன...?

 1 . அன்னை கதிஜா (ரலி)

2 . அன்னை சவுதா (ரலி)

3 . அன்னை ஆயிஷா (ரலி)

4 . அன்னை ஹப்ஸா (ரலி)

5 . அன்னை ஜைனப் (ரலி)

6 .அன்னை உம்மு சல்மா (ரலி)

7 . அன்னை ஜவாரிய்யா பின் ஹரித் (ரலி)

8 . அன்னை ஜைனப் பின் ஹஜாஷ் (ரலி)

9 . அன்னை ஹபீபா (ரலி)

10 . அன்னை சபியா (ரலி)

11 .அன்னை மைமூனா (ரலி).

பெருமானார் (ஸல்) அவர்களின் குழந்தைகள் யார்..? அவர்களின் பெயர் என்ன...?

பெருமானார் (ஸல்) அவர்களின் குழந்தைகளில் பெண் மக்கள்.

 1 . ஜைனப் (ரலி)

2 . ருகையா (ரலி)

3 . .:பாத்திமா (ரலி)

4 . உம்மு குல்தூம் (ரலி).