إِنَّاۤ أَنزَلۡنَـٰهُ فِی لَیۡلَةࣲ مُّبَـٰرَكَةٍۚ إِنَّا كُنَّا مُنذِرِینَ ٣ فِیهَا یُفۡرَقُ كُلُّ أَمۡرٍ حَكِیمٍ ٤﴾ الدخان ٣-٤
"நாம் இவ்வேதத்தை வளமிக்க ஓர் இரவிலே அருளினோம்: நிச்சயமாக நாம் (என்றும் பாவங்களைக் குறித்து) எச்சரிக்கை செய்பவர்களாகவே இருந்து வருகிறோம். உறுதி செய்யப்பட்ட ஒவ்வொரு காரியமும் அவ்விரவில் (மலக்குகளிடம்) பிரித்து ஒப்படைக்கப் படுகிறது.
(ஸூரத்துத் துகான்: 3,4)
பராஅத் இரவின் சிறப்புகள்:
ஷஃபான் மாதத்தின் 15-ம் நாள் இரவு 'ஷபே பராஅத்' என அழைக்கப்படும் புண்ணிய மிக்க இரவாக இருக்கிறது. பராஅத் என்பது 'பரஅ' எனும் சொல்லிருந்து பிறந்தது. பரஅ என்றால் விடுதலை பெறுதல் என்பதாகும். இந்த இரவிற்கு 'லைலதுல் பராஅத்'(விடுதலை பெறும் இரவு) என்ற பெயரும் உண்டு.
وقالَ عِكْرِمَةُ رضي الله عنه : كانَ ابْنُ عَبّاسٍ رضي الله عنهما يُسَمِّي ...... لَيْلَةَ النِّصْفِ مِن شَعْبانَ لَيْلَةَ البَراءَة
(تفسير الماوردي، ج : ٦، ص : ٣١٣)
இக்ரிமா (ரளியல்லாஹு அன்ஹு) அவர்கள் கூறினார்கள் : இப்னு அப்பாஸ் (ரளியல்லாஹு அன்ஹுமா அவர்கள், ஷஃபான் பதினைந்தாம் நாளின் இரவுக்கு லைலதுல் பராஅத் விடுதலை பெரும் இரவு என்று பெயர் வைக்கக்கூடியவர்களாக இருந்தார்கள்.
(நூல் : தஃப்ஸீருல் மாவர்தி, பாகம் : 6, பக்கம் : 313)
قَالَ ابْنُ عَبَّاسٍ رضي الله عنهما : يُحْكِمُ اللَّهُ أَمْرَ الدُّنْيَا إِلَى قَابِلٍ فِي لَيْلَةِ الْقَدْرِ مَا كَانَ مِنْ حَيَاةٍ أَوْ مَوْتٍ أَوْ رِزْقٍ
(تفسير القرطبي، ج : ١٦، ص : ١٢٦)
ஹள்ரத் இப்னு அப்பாஸ் (ரளியல்லாஹு அன்ஹுமா) அவர்கள் கூறுகிறார்கள் : பிறப்பு, இறப்பு, உணவு உட்பட படைப்பினங்களின் எல்லா காரியங்களும் இந்த இரவில் நிர்ணயிக்கப்படுகின்றன
(நூல் : தஃப்ஸீருல் குர்தூபீ, பாகம்: 16, பக்கம் : 126)
ஷஃபான் பதினைந்தாம் நாளின் இரவில் இபாதத்து செய்வது ஆகுமாக்கப்பட்டதாகும்.
(நூல் : ரத்துல் முக்தார், பாகம்: 2, பக்கம்: 469)
★. பராஅத் இரவின் பெயர்கள்
أسماءها أبو الخير الطالقاني لاثنين وعشرين اسما
(تحفة الإخوان، ص : ٦٠)
பராஅத் உடைய இரவுக்கு ஏறத்தாழ 22 பெயர்கள் இருப்பதாக அபுல் கைர் அத்தாலிகானீ (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.
(நூல் : துஹ்ஃபத்துல் இக்வான், பக்கம் : 60)
அதில் சிலவற்றை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
١. ليلة المباركة
٢. ليلة الحياة
٣. ليلة التقدير
٤. ليلة القسمة
٥. ليلة التكفير
٦. عيد الملائكة
٧. ليلة البراءة
٨. ليلة الشفاعاة
٩. ليلة الصك
١٠. ليلة الغفران
١١. ليلة عتق من النيران
١٢. ليلة الجائزة
١٣. ليلة الرجحان
١٤. ليلة التعظيم
(تحفة الإخوان د، ص : ٦٠ - ٦٣)
١٥ - ليلة الرحمة
(تفسير الرازي)
1. பரகத் பொருந்திய இரவு
2. (வணக்க வழிபாடுகளால்) உயிர்பிக்கும் இரவு
3. விதி மாற்றப்படும் இரவு
4. (ரிஜ்க்) பங்கிடும் இரவு
5. பாவங்களுக்கு பரிகாரமளிக்கும் இரவு
6. மலக்குகளின் பெருநாள்
7. (நரகத்திலிருந்து) விடுதலைப் பத்திரம் கிடைக்கும் இரவு
8. (நபி ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்களின்) பரிந்துரை கிடைக்கும் இரவு
9. லைலதுல் செக்
10. பாவங்கள் மன்னிக்கப்படும் இரவு
11. நரக விடுதலை கிடைக்கும் இரவு
12. ஜாயிஸ் (வெகுமதி வழங்கப்படும்) இரவு
13. ரஜ்ஹான் (முன்னுரிமை வழங்கப்பட்ட) இரவு
14. கண்ணியம் பொருந்திய இரவு
(நூல் : துஹ்ஃபத்துல் இக்வான், பக்கம் : 60 - 63)
15. ரஹ்மத் இறங்கும் இரவு
(நூல் : தஃப்ஸீருர் ராஸீ)
★. இந்த இரவிலே ஐந்து சிறப்புகள் கிடைக்கின்றன :
هَذِهِ اللَّيْلَةُ مُخْتَصَّةٌ بِخَمْسِ خِصالٍ
الأُولى: تَفْرِيقُ كُلِّ أمْرٍ حَكِيمٍ فِيها، قالَ تَعالى: ﴿فِيها يُفْرَقُ كُلُّ أمْرٍ حَكِيمٍ﴾ .
والثّانِيَةُ: فَضِيلَةُ العِبادَةِ فِيها، قالَ رَسُولُ اللَّهِ ﷺ: «مَن صَلّى في هَذِهِ اللَّيْلَةِ مِائَةَ رَكْعَةٍ أرْسَلَ اللَّهُ إلَيْهِ مِائَةَ مَلَكٍ، ثَلاثُونَ يُبَشِّرُونَهُ بِالجَنَّةِ، وثَلاثُونَ يُؤَمِّنُونَهُ مِن عَذابِ النّارِ، وثَلاثُونَ يَدْفَعُونَ عَنْهُ آفاتِ الدُّنْيا، وعَشَرَةٌ يَدْفَعُونَ عَنْهُ مَكايِدَ الشَّيْطانِ» .
الخَصْلَةُ الثّالِثَةُ: نُزُولُ الرَّحْمَةِ، قالَ عَلَيْهِ السَّلامُ: «إنَّ اللَّهَ يَرْحَمُ أُمَّتِي في هَذِهِ اللَّيْلَةِ بِعَدَدِ شَعْرِ أغْنامِ بَنِي كَلْبٍ» .
والخَصْلَةُ الرّابِعَةُ: حُصُولُ المَغْفِرَةِ، قالَ ﷺ: «إنَّ اللَّهَ تَعالى يَغْفِرُ لِجَمِيعِ المُسْلِمِينَ في تِلْكَ اللَّيْلَةِ، إلّا لِكاهِنٍ، أوْ مُشاحِنٍ، أوْ مُدْمِنِ خَمْرٍ، أوْ عاقٍّ لِلْوالِدَيْنِ، أوْ مُصِرٍّ عَلى الزِّنا» .
والخَصْلَةُ الخامِسَةُ أنَّهُ تَعالى أعْطى رَسُولَهُ في هَذِهِ اللَّيْلَةِ تَمامَ الشَّفاعَةِ، وذَلِكَ أنَّهُ سَألَ لَيْلَةَ الثّالِثَ عَشَرَ مِن شَعْبانَ في أُمَّتِهِ فَأُعْطِيَ الثُّلُثَ مِنها، ثُمَّ سَألَ لَيْلَةَ الرّابِعَ عَشَرَ فَأُعْطِيَ الثُّلُثَيْنِ، ثُمَّ سَألَ لَيْلَةَ الخامِسَ عَشَرَ فَأُعْطِيَ الجَمِيعَ إلّا مَن شَرَدَ عَلى اللَّهِ شِرادَ البَعِيرِ.
(تفسير الرازي، ج : ٢٧، ص : ٢٣٩)
முதலாவது சிறப்பு :
இந்த இரவிலே அல்லாஹு தஆலா எதை விதியாக்கினானோ அதை மலக்குமார்களிடம் பிரித்து கொடுக்கிறான்.
இரண்டாவது சிறப்பு :
ஹதீஸில் அறிவிக்கப்பட்டுள்ளது இந்தஇரவிலே யார் நூறு ரகாஅத் தொழுகிறாரோ அல்லாஹு தஆலா அவரிடத்தில் நூறு மலக்குமார்களை அனுப்புகிறான். அவர் தொழுததற்காக அவருக்கு சுவனம் கிடைத்து விட்டது என்று சொல்வதற்கு 30 மலக்குமார்களும் நரகத்திலிருந்து இவர் பாதுகாப்புப் பெற்றுவிட்டார் என்று சொல்வதற்கு 30 மலக்குமார்களும், உலகத்தின் ஆபத்துகளைவிட்டும் இவரை தடுக்க 30 மலக்குமார்களும், ஷைத்தானின் தீங்கை விட்டு இவரை பாதுகாக்க 10 மலக்குமார்களும் வருகிறார்கள்.
மூன்றாவது சிறப்பு:
நபி (ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம்) அவர்கள் கூறினார்கள் : 'பனூகல்ப்' என்ற கோத்திரனர்களுடைய ஆடுகளில், 10 ஆட்டின் முடி அளவுக்கு இந்த இரவில் என்னுடைய உம்மத்திற்கு அல்லாஹு தஆலா அருள் பொழிகிறான். (பனூ கல்ப் என்ற கோத்திரனர்கள் ஆடுகள் அதிகமாக வைத்திருப்பர். ஒவ்வொரு ஆட்டின் முடிகளும் மிகவும் அதிகமாக இருக்கும்).
நான்காவது சிறப்பு :
இந்த இரவிலே அல்லாஹு தஆலா முஸ்லிம்களின் அனைத்து (சிறிய) பாவங்களையும் மன்னிக்கிறான். ஆனால், ஜோசியம் பார்ப்பவன், பகை உடையவன், மதுவிலே மூழ்கிருக்கிற குடிகாரன். தன் பெற்றோருக்கு மாறு செய்பவன், அதிகமாக விபச்சாரம் செய்பவன் இவர்கனை (தவ்பா செய்வதாலே தவிர) மன்னிக்க மாட்டான்.
ஐந்தாவது சிறப்பு :
இந்த இரவிலே அல்லாஹு தஆலா நபி (ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம்) அவர்களின் ஷஃபாஅத்தை (பரிந்துரையை) தருகிறான். நபி (ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம்) அவர்கள் இந்த ஷஃபான் மாதத்தின் 13-ம் நாளில் தனது உம்மத்திற்க்காக ஷஃபாஅத்தை கேட்டார்கள். அல்லாஹ் கால்பங்கு கொடுத்தான். 14-ம் நாளில் கேட்டார்கள் பாதி ஷஃபாஅத்தை கொடுத்தான். 15-ம் நாளில் கேட்டார்கள். முழு ஷஃபாஅத்தையும் கொடுத்து விட்டான். ஆனால் அல்லாஹ்வின் கட்டளைகளை அமல் செய்யாமல் (அதாவது அல்லாஹ் குர்ஆனில் சொல்லிருக்கிற தொழுகை, நோன்பு போன்றவை என்னென்ன கட்டளைகளை சொல்லிருக்கிறானோ அதனை செய்யாமல்), சண்டித்தனம் செய்பவனுக்கு மட்டும் அல்லாஹ் ஷஃபாஅத்தை கொடுக்கவில்லை.
(நூல் : தஃப்ஸீர் ராஜி, பாகம் : 27, பக்கம்: 239)
மற்றொரு அறிவிப்பில் :
அன்னை ஆயிஷா (ரளியல்லாஹு அன்ஹா) அவர்கள் கூறுகிறார்கள் :
ஷஃபானுடைய பதினைந்தாம் நாளின் இரவில் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம்) அவர்கள் ஸஜ்தாவில் துஆ கேட்டுக் கொண்டிருந்ததை பார்த்தேன், அப்போது ஜிப்ரயீல் (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் இறங்கி வந்து உங்களுடைய உம்மத்திலிருந்து கால்பங்கு அளவு மக்களை, உங்களுடைய ஷஃபாஅத்தைக் கொண்டு இந்த இரவிலே நரகத்திலிருந்து அல்லாஹு தஆலா விடுதலை செய்துவிட்டான் என்று கூறிச் சென்றார்கள்.
நபி (ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம்) அவர்கள் (ஸஜ்தாவிலிருந்து எழாமல்) இன்னும் அதிகமாக துஆச் செய்தார்கள். மீண்டும் ஜிப்ரயீல் (அலைஹிஸ் ஸலாம்) அவர்கள் இறங்கி வந்து அல்லாஹ் உங்களுக்கு ஸலாம் கூறினான் என்று சொல்லிவிட்டு, உங்களுடைய உம்மத்திலிருந்து பாதி அளவு மக்களை நரகத்திலிருந்து அல்லாஹு தஆலா விடுதலை செய்து விட்டான் என்று கூறிச் சென்றார்கள்.
நபி (ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம்) அவர்கள் (ஸஜ்தாவிலிருந்து எழாமல்) இன்னும் அதிகமாக துஆ செய்தார்கள். மீண்டும் ஜிப்ரயீல் (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் இறங்கி வந்து உங்களுடைய உம்மத்தினர்கள் அனைவரையும் உங்களின் ஷஃபாஅத்தைக் கொண்டு நரகத்திலிருந்து விடுதலை செய்து விட்டான், ஆனால் யாருக்கு விரோதி இருக்கிறானோ, அவன் அந்த விரோதியை பொருந்திக் கொள்ளும் வரை (மன்னித்து ஏற்றுக் கொள்ளும் வரை நரகத்திலிருந்து விடுவிக்க மாட்டான்) என்று கூறிச்சென்றார்கள்.
நபி (ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம்) அவர்கள் (ஸஜ்தாவிலிருந்து எழாமல்) இன்னும் அதிகமாக துஆச் செய்தார்கள். மீண்டும் ஜிப்ரயீல் (அலைஹிஸ் ஸலாம்) அவர்கள் காலையில் இறங்கி வந்து, நபியவர்களிடம், உம்முடைய உம்மத்திலிருக்கும் விரோதிகளை அல்லாஹு தஆலா தன்னுடைய அருட் கொடையினாலும் தன்னுடைய அருளினாலும் அவர்களை பொருந்திக் கொள்வதற்கு பொறுப் பேற்றுக்கொண்டான். என்று கூறியபோது தான் நபியவர்கள் பொருந்தி கொண்டார்கள். (நிம்மதியடைந் தார்கள்)
(நூல் : ரூஹுல் பயான், பாகம் : 3, பக்கம் : 598)
★. பராஅத் இரவில் மன்னிக்கப்படாதவர்கள்
فمنهم على طريقة البسط
١ - المشرك
٢- والعاق لوالديه
٣- والمدمن للخمر.
٤ - والساحر .
٥ - والكاهن : الذي يزعم مطالعة الغيب ويخبر عن الكوائن ، وهو نوع من السحر .
٦- المسبل إزاره خيلاء .
٧- والشاعر : الذي يروي الشعر المشتمل على الهجاء وما لا يجوز كما في قوله تعالى : (والشعراء يَتَّبِعُهُمُ الْغَاوُنَ) .
٨ - والجابي وهو جامع الضرائب .
٩- والقاطع للطريق
١٠ - والقاطع لرحمه .
۱۱ - والمشاحن .
۱۲ - والشرطي والمراد به هنا من يسعى إلى السلطان بالباطل في حق الناس .
۱۳ - والعريف أي القيم بأمور الناس، بحيث عُرف بذلك واشتهر ، والمراد هنا الذي لا يعدل في حكمه .
١٤ - والعشار : وهو من يأخذ من السلع مكساً ، أي عشرها .
١٥ - وصاحب كوبة أو غرطبة والكوبة هي الطبل، والغرطبة هي الطنبور.
١٦ - والمبتدع .
۱۷ - والمصوّر .
۱۸ - والزاني .
١٩ - والناشزة، أي الخارجة عن طاعة زوجها .
٢٠ - والرافضي الذي في قلبه شحناء للصحابة رضي الله تعالى عنهم .
۲۱ - والقاتل للنفس
۲۲ - والقتات أي النمام .
(مواهب الديّان بذكر ما يُطلب في ليلة النصف من شعبان - حسين بن طاهر الهدار، ص : ١١)
1. அல்லாஹ்வுக்கு இணை வைத்தவர்
2. பெற்றோர்களை நோவினை செய்பவன்
3. சதாவும் மதுவை குடிப்பவன்
4. சூனியம் செய்பவன்
5. ஜோசியக்காரன்
6. ஆணவத்தால் கரண்டைக் காலுக்கு கீழ் ஆடை அணிபவன்
7. நையாண்டி செய்து, அனுமதிக்கபடாத வார்த்தைகளை பயன்படுத்தி கவி பாடுபவன்
8. (அத்தியாயமான முறையில்) வரி வசூலிப்பவர்
9. பயணிகளிடம் வழிமறித்து பொருட்களை சூரையாடுபவன்
10. உறவை துண்டித்தவன்
11. குரோதம் கொள்பவன்
12. மக்களுக்கு எதிராக அநியாயமாக அதிகாரத்தைப் பெறத் துடிக்கும் காவலன்.
13. ஆட்சியில் நீதம் இல்லாத மக்கள் விவகாரங்களுக்குப் பொறுப்பானவர்
14. மக்களிடம் வரி வசூலித்து அதிலிருந்து அநியாயமா முறையில் பத்தில் ஒரு பங்கை எடுத்துக் கொள்பவர்
15. இசைக்கருவிகளை பயன்படுத்துபவன்
16. குழப்பம் செய்பவன்
17. உருவப் படம் வரைபவர்
18. விபச்சாரம் செய்பவர்
19. கணவனுக்கு கீழ்படியாத பெண்
20. சஹாபாக்கள் மீது வெறுப்பு கொண்டவன்
21. தற்கொலை செய்பவன்
22. கோள் சொல்பவன்.
(நூல் : மவாஹிப்புத் தய்யான், பக்கம் : 11)
ان عمر بن عبد العزيز لما رفع رأسه من صلاته ليلة النصف من شعبان وجد رقعة خضرآء قد اتصل نورها بالسماء مكتوب فيها هذه براءة من النار من الملك العزيز لعبده
تفسير روح البيان، ج : ٨، ص : ٤٠٢)
உமர் இப்னு அப்துல் அஜீஸ் (ரஹ்மத்துல்லாஹி அலைஹி) அவர்கள் ஷஃபான் மாதத்தின் பதினைந்தாம் நாளின் இரவன்று தொழுது முடித்துவிட்டு தனது தலையை உயர்த்திய போது ஒரு பச்சை நிறத் துண்டு துணியைப் பார்த்தார்கள். அதன் ஒளி வானம் வரை சேர்ந்திருந்தது. அந்த துணியில் இது உமர் இப்னு அப்துல் அஜீஸ் என்ற அடியானின் நரக விடுதலைப் பத்திரம் என்று எழுதப்பட்டிருந்தது.
(நூல் : ரூஹுல் பயான், பாகம் : 8. பக்கம்: 402)
وقد روي عن عمر بن عبد العزيز أنه كتب إلى عامله إلى البصرة عليك بأربع ليال من السنة فإن الله يفرغ فيهن الرحمة إفراغا أول ليلة من رجب وليلة النصف من شعبان وليلة الفطر وليلة الأضحى
(لطائف المعاريف، ص : ٢٦٣)
உமர் இப்னு அப்துல் அஜீஸ் (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் பசரா நகரத்திலுள்ள தன் வேலையாட்களுக்கு இப்படி கடிதம் எழுதுவார்கள், நீங்கள் நான்கு இரவுகளை தவற விடாதீர்கள்! அந்த இரவுகளை அல்லாஹ்வுக்காக ஒதுக்குங்கள், அதிலே அல்லாஹ்வின் ரஹ்மத்து இறங்குகிறது. ரஜப் மாதத்தின் முதல் இரவு, ஷஃபான் மாதத்தின் 15 ஆம் இரவு, ஈதுல் ஃபித்ர் உடைய இரவு, ஈதுல் அழ்ஹா உடைய இரவு.
(நூல் லதாயிஃபுல் மஆரிஃப், பக்கம் : 263)
ويروى عن نوف البكالي أن عليا خرج ليلة النصف من شعبان فأكثر الخروج فيها ينظر إلى السماء فقال: إن داود عليه السلام خرج ذات ليلة في مثل هذه الساعة فنظر إلى السماء فقال إن هذه الساعة ما دعى الله أحد إلا أجابه ولا استغفره أحد من هذه الليلة إلا غفر له ما لم يكن عشارا أو ساحرا أو شاعرا أو كاهنا أو عريفا أو شرطيا أو جابيا أو صاحب كوبة أو غرطبة.
(لطائف المعارف، ص : ٢٦٢)
அலி (ரளியல்லாஹு அன்ஹு) அவர்கள் பராஅத் இரவில் வெளியில் வந்து வானத்தைப் பார்த்து இப்படி சொல்வார்கள் : தாவூத் (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் இந்த இரவிலே இந்த நேரத்திலே வெளியே வந்து வானத்தைப் பார்த்து, "இந்த நேரத்திலே அல்லாஹ்விடத்திலே எந்த துஆ கேட்டாலும் அங்கீகரிக்கப்படும், பாவ மன்னிப்பு கேட்டால் மன்னிக்கப்படும், மக்களிடம் வரி வசூலித்து அதிலிருந்து அநியாயமான முறையில் பத்தில் ஒரு பங்கை எடுத்துக் கொள்பவன், சூனியம் செய்பவன், நையாண்டி செய்து அனுமதிக்கபடாத வார்த்தைகளை பயன்படுத்தி கவி பாடுபவன், ஜோசியக்காரன், ஆட்சியில் நீதம் இல்லாத மக்கள் விவகாரங்களுக்கு பொறுப்பானவன், மக்களுக்கு எதிராக அநியாயமாக அதிகாரத்தைப் பெறத் துடிக்கும் காவலன், (அநியாயமான முறையில்) வரி வசூலிப்பவன், இசைக்கருவிகளை பயன்படுத்துபவன் இவர்களைத் தவிர" என்று கூறுவார்கள்.
(நூல் : லதாயிஃபுல் மஆரிஃப், பக்கம் : 262)
رُوِيَ عَنْ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ أَنَّهُ قَالَ يُعْجِبُنِي أَنْ يُفَرِّغَ الرَّجُلُ نَفْسَهُ فِي أَرْبَعِ لَيَالٍ: لَيْلَةِ الْفِطْرِ، وَلَيْلَةِ الأَضْحَى، وَلَيْلَةِ النِّصْفِ مِنْ شَعْبَانَ وَأَوَّلِ لَيْلَةٍ مِنْ رَجَبٍ.
(التبصرة، ج : ٢، ص : ٢٠)
அலி)ரளியல்லாஹு அன்ஹு) அவர்கள் கூறினார்கள் : ஈதுல் ஃபித்ர் உடைய இரவு, ஈதுல் அழ்ஹா உடைய இரவு, பராஅத் இரவு, ரஜப் மாதத்தின் முதல் இரவு, இந்த நான்கு இரவிலும் ஒருவர் இபாதத் செய்வதில் அவ்விரவுகளை கழிப்பது எனக்கு சந்தோஷத்தை ஏற்படுத்தும்.
(நூல் : அத்தப்சிரா, பாகம் : 2, பக்கம் : 20)
وَرُوِيَ أَنَّ عُمَرَ بْنَ عَبْدِ الْعَزِيزِ كَتَبَ إِلَى عَدِيِّ بْنِ أَرْطَأَةَ: إِنَّ عَلَيْكَ بِأَرْبَع لَيَالٍ، فَإِنَّ اللَّهَ يُفْرِغُ فِيهِنَّ الرَّحْمَةَ إِفْرَاغًا. فَذَكَرَ هَذِهِ اللَّيَالِيَ الأَرْبَعَ.
(التبصرة، ج : ٢، ص : ٢٠)
உமர் இப்னு அப்துல் அஜீஸ் (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் அதீ இப்னு அர்தாத் என்பவருக்கு கடிதம் எழுதுவார்கள் : நான்கு இரவுகளை நீங்கள் கடைப்பிடித்துக் கொள்ளுங்கள்! ஏனெனில் அவ்விரவுகளில் அல்லாஹ்வின் ரஹ்மத் இறங்குகிறது என்று சொல்லி, மேற்கூறப்பட்ட நான்கு இரவுகளை சொன்னார்கள்.
(நூல் : அத்தப்சிரா, பாகம் : 2, பக்கம் : 20)
ஒரு நாள் ஹள்ரத் ஈஸா (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் மலையின் மேல் சென்று கொண்டிருந்தார்கள். அங்கு உருண்டையான வடிவத்தில் மிக வெண்மையான ஒரு பெரும்பாறை இருந்தது. அப்பாறையின் அழகு ஹள்ரத் ஈஸா (அலைஹிஸ்ஸலாம்) அவர்களை மிகவும் கவர்ந்தது. இப்பாறையின் உள்ளே என்ன இருக்கிறது என்று அறிந்து கொள்ள அதைச் சுற்றிச் சுற்றி வந்தார்கள். அப்போது அல்லாஹு தஆலா ஹள்ரத் ஈஸா (அலைஹிஸ்ஸலாம்) அவர்களிடம் அப்பாறையின் இரகசியத்தை அறிந்து கொள்ள விரும்புகிறீர்களா? என்று கேட்டான். ஆம்! என்று பதிலளித்தார்கள். அல்லாஹு தஆலா அப்பாறையைப் பிளக்கச் செய்தான். அங்கே ஒரு மனிதர் தொழுது கொண்டிருந்தார் அவருக்கு முன் திராட்சைக் கொடியும், நீர் ஊற்று ஒன்றும் இருந்தது. ஹரத் ஈஸா (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் அம்மனிதரைப் பார்த்து இவை என்னவென்று கேட்க, அதற்கு அம்மனிதர் இவை எனது ஒவ்வொரு நாளின் உணவாகும் என்றார். நீங்கள் இப்பாறையில் எத்தனை காலமாக இறை வணக்கம் செய்கிறீர்கள்? என்று கேட்டார்கள். அதற்கு அம்மனிதர் நான் இப்பாறையின் உள்ளே 400 ஆண்டுகளாக இறைவணக்கம் செய்கிறேன் என்றார்.
அப்போது ஹள்ரத் ஈஸா (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் அல்லாஹ்வே இவரை விடச் சிறந்த ஒரு படைப்பைப் படைத்துள்ளாயா? என்று கேட்டார்கள். வஹி மூலம் அல்லாஹ். 'நிச்சயமாக முஹம்மது (ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம்) அவர்களின் உம்மத்தினரில் ஒருவர் பராஅத் இரவில் தொழுது வணங்குவது எனது இந்த அடியார் 400 ஆண்டுகள் வணங்குவதை விட மிகச் சிறந்ததாகும்' என்று கூறினான். அப்போது ஹள்ரத் ஈஸா (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் தானும் முஹம்மது (ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம்) அவர்களின் உம்மத்தில் ஒருவராக ஆக வேண்டும் என்று துஆ செய்தார்கள்.
(நூல் : நுஸ்ஹத்துல் மஜாலிஸ், பாகம் : 1, பக்கம் :120)
وَروى عُثْمَانُ بْنُ الْمُغِيرَةِ قَالَ قَالَ النَّبِيُّ ﷺ : تقطع الآجال من شعبان إِلَى شَعْبَانَ حَتَّى إِنَّ الرَّجُلَ لَيَنْكِحُ وَيُولَدُ لَهُ وَقَدْ خَرَجَ اسْمُهُ فِي الْمَوْتَى
இந்த இரவிலே அல்லாஹு தஆலா படைப்பினங்களின் விதிகளை முடிவு செய்கிறான். இந்த வருடத்தில் யார் யாருக்கெல்லாம் மரணம் வரவேண்டும் என்று விதி எழுதப்பட்டிருந்ததோ, அவர்கள் உயிருடன் வாழ வேண்டுமென்று எழுதுகிறான். நபி (ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம்) அவர்கள் கூறியதாக உஸ்மான் இப்னு முஙைரா (ரளியல்லாஹு அன்ஹு) அவர்கள் அறிவிக்கிறார்கள் : ஒரு ஷஃபானிலிருந்து அடுத்த ஷஃபான் வரை மனிதனுடைய தவணைகள் (விதிகள்) முடிவு செய்யப்படுகிறது. ஒரு மனிதன் நிக்காஹ் செய்து கொள்வான். அவனுக்கு குழந்தை பிறக்கும். அவனுடைய பெயர் இறந்தவர்களின் பட்டியலிலிருந்து எடுக்கப்படும்.
(நூல் : தஃப்ஸீருல் குர்தூபி, பாகம்: 16, பக்கம்: 126, 127)
روى عطاء ابن يسار إذا كانت ليلة النصف من شعبان نسخ لملك الموت كل من يموت من شعبان الى شعبان وأن العبد ليغرس الغرس وينكح الأزواج ويبنى البنيان وأن اسمه قد نسخ فى الموتى وما ينتظر به ملك الموت إلا أن يؤمر به فيقبضه
(مكاشفة القلوب - للغزالي، ص : ٢٥٧)
அதா இப்னு யஸார் (ரஹ்மத்துல்லாஹி அலைஹி) அவர்கள் கூறினார்கள் ஷஃபான் 15 ஆம் இரவென்று மலக்குல் மௌத் இஸ்ராயீல் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களை அழைத்து, ஷஃபானிலிருந்து எதிர்வரும் ஷஃபான் வரையிலான காலப்பகுதிக்குள்ள மரணிக்க இருப்பவர்களின் பெயர் பட்டியல் வழங்கப்படும். ஒருவர் மரம் நடுவார், திருமணம் முடிப்பார், உயர் கட்டிடம் கட்டுவார். ஆனால் அவர் பெயர் மரணிப்பவரின் பட்டியலில் இருக்கும். மலக்குல் மௌத் அம்மனிதரின் உயிரை எடுப்பதற்கு அல்லாஹ்வின் கட்டளையை எதிர்பார்த்துக் கொண்டிருப்பார்கள்.
(நூல் : முகாஷஃபதுல் குலூப், பக்கம் : 257)
நபி (ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம்) அவர்கள் கூறினார்கள்: ஷஃபான் மாதத்தின் பதினைந்தாம் இரவில் அல்லாஹு தஆலா தனது அடியார்களில் இணைவைத் தவர்கள், பகைமைகொண்டவர்கள் தவிர அனைவரின் பாவங்களையும் மன்னிக்கிறான்.
(அறிவிப்பாளர்: அபூமூஸா (ரளியல்லாஹு அன்ஹு),
நூல்: இப்னுமாஜா, ஹதீஸ் எண் : 1390, பாகம்: 1, பக்கம்: 445)
நபி (ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம்) அவர்கள் இம்மாதத்தில் அதிகமாக நோன்பு நோற்பதைக் கண்ட உஸாமா இப்னு ஜைத் (ரளியல்லாஹு அன்ஹு) அவர்கள், நாயகமே! இம்மாதத்தில் தாங்கள் மற்ற மாதங்களை விட இந்த ஷஃபான் மாதத்தில் அதிகம் நோன்பு வைப்பதின் காரணமென்ன? என்று கேட்டபோது, ரமளான் மற்றும் ரஜப் மாதத்திற்கு மத்தியிலுள்ள ஷஃபான் மாதத்தில் மக்கள் அதிகம் பொடுபோக்காக இருக்கிறார்கள். இந்த மாதத்தில் தான் அமல்கள் அல்லாஹ்விடத்தில் உயர்த்தப்படுகிறது, எனவே நோன்பு வைத்திருக்கும் நிலையில் எனது அமல்கள் உயர்த்தப்பட வேண்டுமென விரும்புகிறேன் என நபி (ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம்) அவர்கள் கூறினார்கள்.
(நூல்: ஸுனனுன் நஸயீ, ஹதீஸ் எண்: 2357, பக்கம்: 367)
பராஅத் இரவில் செய்ய வேண்டிய அமல்கள்!
நபி (ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம்) அவர்கள் கூறினார்கள்:ஷஃபான் மாதத்தின் 15-ம் நாள் வந்தால் அன்று இரவு தொழுங்கள். அன்றைய பகலில் நோன்பு வையுங்கள். ஏனெனில் அன்றைய நாளின் சூரியன் மறைந்து விட்டால், அல்லாஹு தஆலா முதல் வானத்திற்கு வந்து, என்னிடம் பாவ மன்னிப்பு கேட்பவர் உண்டா? அவரை நான் மன்னிக்கிறேன், யாரும் ரிஜ்கை கேட்பவர் உண்டா? அவருக்கு நான் ரிஜ்கை தருகிறேன். யாரும் துன்பம், துயரங்களால், நோய் நொடிகளால் அவதிப்படுபவருண்டா? அவருக்கு உடல் நலம் தருகிறேன். யார் யாருக்கு என்னென்ன வேண்டுமோ கேளுங்கள் தருகிறேன் என்று அன்று முழுவதும் ஃபஜ்ர் வரை கேட்டுக் கொண்டே இருக்கிறான்.
(அறிவிப்பாளர் : அலீ (ரளியல்லாஹு அன்ஹு),
நூல்: இப்னு மாஜா. ஹதீஸ் எண்: 1388, பாகம்: 1, பக்கம்:
قال الإمام الشافعي في "الأم": "بلغنا أنه كان يقال: إن الدعاء يستجاب في خمس ليال: في ليلة الجمعة, وليلة الأضحى, وليلة الفطر, وأول ليلة من رجب, وليلة النصف من شعبان
இமாம் ஷாஃபிஈ (ரஹ்மத்துல்லாஹி அலைஹி) அவர்கள் கூறினார்கள்
1. ஜும்ஆவின் இரவு
2. ஈதுல் அள்ஹா இரவு
3. ஈதுல் ஃபித்ர் இரவு
4. ரஜப் மாதத்தின் முதலாம் இரவு
5. ஷபே பராஅத் இரவு
இந்த ஐந்து இரவுகளில் துஆ செய்தால் அங்கிகரிக்கப்படும்
(நூல்: அல் உம்மு, பாகம்: 1, பக்கம்:231)
قال رسول الله صلى الله عليه وسلم : من أحيا ليلة الفطر وليلة الأضحى لم يمت قلبه يوم تموت القلوب
நபி (ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம்) அவர்கள் கூறினார்கள்: யார் இரு பெருநாள் இரவுகளையும், ஷஃபான் 15 வது இரவையும் வணக்கத்தால் உயிர்பிக்கிறாரோ, உள்ளங்கள் இறந்து விடும் நாளில் அவரது உள்ளம் இறக்காமல் இருக்கும்.
(அறிவிப்பாளர்: இப்னு கர்தூஸ் (ரளியல்லாஹு அன்ஹு), நூல்: மஃரிஃபத்துஸ் சஹாபா லிஅபீ நுஅய்ம், ஹதீஸ் எண்: 5948, பாகம்: 4, 174)
இவ்விரவில் மக்காவாசிகள்
وَأَهْلُ مَكَّةَ فِيمَا مَضَى إِلَى الْيَوْمِ إِذَا كَانَ لَيْلَةُ النِّصْفِ مِنْ شَعْبَانَ، خَرَجَ عَامَّةُ الرِّجَالِ وَالنِّسَاءِ إِلَى الْمَسْجِدِ، فَصَلَّوْا، وَطَافُوا، وَأَحْيَوْا لَيْلَتَهُمْ حَتَّى الصَّبَاحَ بِالْقِرَاءَةِ فِي الْمَسْجِدِ الْحَرَامِ، حَتَّى يَخْتِمُوا الْقُرْآنَ كُلَّهُ، وَيُصَلُّوا، .....
وَأَخَذُوا مِنْ مَاءِ زَمْزَمَ تِلْكَ اللَّيْلَةَ، فَشَرِبُوهُ، وَاغْتَسَلُوا بِهِ، وَخَبَّؤُوهُ عِنْدَهُمْ لِلْمَرْضَى
ஷாபான் 15 ஆம் இரவன்று மக்காவாசிகள் ஆண்கள் மற்றும் பெண்கள் பள்ளிவாசலுக்கு சென்று தொழுவார்கள், கஃபாவை தவாஃப் செய்வார்கள், குர்ஆனை அந்த இரவு முழுக்க காலை வரை முழுமையாக ஓதுவார்கள், ஜம்ஜம் நீரால் உளூ செய்து அதை குடிப்பார்கள், நோயாளிகளுக்கு கொடுப்பார்கள்
(நூல்: அக்பாரு மக்கா லில் ஃபாக்கிஹீ, பாகம்: 3, பக்கம்: 84)
★. பராஅத் இரவில் ஓதப்படும் துஆ
عن كثير من السلف، كعمر بن الْخَطَّابِ، وَابْنِ مَسْعُودٍ وَغَيْرِهِمَا، أَنَّهُمْ كَانُوا يَدْعُونَ بِهَذَا الدُّعَاءِ
(مرقاة المفاتيح ، (٣٥٠/٣)
உமர் (ரளியல்லாஹு அன்ஹு) அவர்கள், அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரளியல்லாஹு அன்ஹுமா) போன்ற சஹாபாக்களும், தாபிஈன்களும் இந்த துஆவை பராஅத் இரவில் ஓதி வந்துள்ளார்கள்.
اللَّهُمَّ إِنْ كُنْتَ كَتَبَتَنَا أَشْقِيَاءَ فَامْحُهُ وَاكْتُبْنَا سُعَدَاءَ، وَإِنْ كُنْتَ كَتَبْتَنَا سُعَدَاء فَأَثْبِتْنَا، فإنَّكَ تَمْحُوْ مَا تَشَاءُ وَتُثْبِتُ وَعِنْدَكَ أمُّ الْكَتَابِ
"அல்லாஹும்ம இன்குன்த்த கதப்த்தனா அஷ்க்கியாஅ ஃபம்ஹுஹு வக்துப்னா ஸு அதா. வஇன்குன்த்த கதப்த்தனா ஸுஅதா. ஃபஅஸ்பித்னா ஃபஇன்னக்க தம்ஹு மாதஷா. வதுஸ்பிது இன் தக்க உம்முல் கிதாப்.
பொருள்: 'யாஅல்லாஹ் நீ எங்களை (உனது பதிவேட்டில்) துர்ப்பாக்கியவான்களாக எழுதி இருந்தால் அதை அழித்து எங்களை நற்பாக்கியவான்களாக எழுதுவாயாக ! நீ எங்களை நற்பாக்கியவான்களாக எழுதி இருந்தால் அதை அப்படியே உறுதிப்படுத்துவாயாக ! ஏனெனில் நீ நாடுவதை அழிப்பாய் (நீ நாடுவதை) உறுதிப்படுத்துவாய் உன்னிடமே மூலப்பதிவேடு உள்ளது'.
(நூல் : மிர்காதுல் மஃபாதீஹ், பாகம் : 3, பக்கம் : 350)
كان خالد بن معدان ولقمان بن عامر وغيرهما يلبسون فيها أحسن ثيابهم ويتبخرون ويكتحلون ويقومون في المسجد ليلتهم تلك
இந்த பராஅத் இரவன்று, காலித் இப்னு மிஃதான் (ரஹ்மத்துல்லாஹி அலைஹி), லுக்மான் இப்னு ஆமிர் (ரஹ்மத்துல்லாஹி அலைஹி) போன்ற பெரியார்கள் புத்தாடை அணிந்து, நறுமணம் பூசிக் கொண்டு, கண்களில் சுர்மா இட்டுக் கொண்டு அன்று இரவு முழுவதும் மஸ்ஜிதில் இபாதத் செய்து கழிப்பார்கள்.
(நூல்: லதாயிஃபுல் மஆரிஃப், பக்கம்: 263)
இப்பெரும் பாக்கியங்கள் கிடைக்கும் இப்புனித மிக்க இரவின் ஒரு வினாடியைக் கூட நாம் வீணாக்காமல் நமது பாவங்களுக்காக இறைவனிடம் மன்னிப்புக் கோர வேண்டாமா? இவ்விரவிலே நாம் செய்த பாவங்களுக்கு விடுதலை பெறும் வாய்ப்பு நமக்குக் கிடைக்கிறது. எனவேதான் இதற்கு பராஅத் இரவு (விடுதலை பெறும் இரவு) என்று சொல்லப்படுகிறது. இந்த இரவில் ஒவ்வொருவரும் விழித்திருந்து நஃபிலான தொழுகைகளை அதிகமதிகம் தொழ வேண்டும். அல்லாஹ்விடத்தில் கண்ணீர் பெருக பாவமன்னிப்புக் கேட்க வேண்டும். நமது அனைத்துத் தேவைகளையும் கருணைக் கடலான வல்ல ரஹ்மானிடம் இரு கரமேந்தி கேட்க வேண்டும். தான தருமங்கள் செய்ய வேண்டும். ஏனெனில் நமது விதிகளை மாற்றக்கூடிய இரண்டே அமல், துஆ, தான தர்மம் தான். நோயாளிகளை நலம் விசாரிக்க வேண்டும். கப்ரு ஜியாரத்செய்ய வேண்டும்.
ஏனெனில் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம்) அவர்கள் இந்த இரவிலே மக்காவில் உள்ள 'ஜன்னதுல் பகி' என்ற கப்ருகள் உள்ள இடத்தில் நின்று துஆச் செய்து பிறகு சொன்னார்கள், இந்த ஷஃபான் மாதம் 15 ஆம் நாளின் இரவன்று முதல் வானத்திற்கு அல்லாஹு தஆலா இறங்கி வந்து, 'பனூகல்ப்' என்ற கோத்திரத்தினர்களுடைய ஆடுகளின் முடி அளவை விட மிக அதிகமாக மன்னிக்கிறான். (பனூகல்ப் என்று கோத்தினர்கள் ஆடுகள் அதிகமாக வைத்திருப்பர். ஒவ்வொரு ஆட்டின் முடிகளும் மிகவும் அதிகமாக இருக்கும்)
(அறிவிப்பாளர்: ஆயிஷா (ரளியல்லாஹு அன்ஹா), நூல்: இப்னு மாஜா, ஹதீஸ் எண் : 1389, பாகம்: 1, பக்கம்: 444)
அவ்வாறு கப்ரு ஜியாரத் செய்யும் போது ஸூரத்துல் யாஸீன் ஓதி துஆ செய்ய வேண்டும். ஏனெனில் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம்) அவர்கள் கூறினார்கள் : உங்களில் மரணித்தவர்கள் மீது ஸூரா யாஸீன் ஓதுங்கள்.
(அறிவிப்பாளர்: மக்கல் இப்னு யஸார் (ரளியல்லாஹு அன்ஹு),
நூல்: அபூதாவூத், ஹதீஸ் எண்: 3121, பாகம்: 3, பக்கம்: 320)
முப்தி தகி உஸ்மானி (தாமத் பரகாதுஹு) அவர்கள் கூறுகிறார்கள்:பராஅத் சம்மந்தமான அதிகமான அறிவிப்புகள் தனிப்பட்டமுறையில் ளயீஃபானதுதான். என்றாலும் அதிகமான பல அறி விப்பாளர்கள் தொடர்களில் இது அறிவிக்கப்படுவதால் இது பலமானதாகிவிடும் என்று சட்ட மேதைகளான ஃபுகஹாக்களும் ஹதீஸ் கலை வல்லுனர்களான முஹத்திஸீன்களும் கூறுகிறார்கள். பராஅத் சம்பந்தமான ஹதீஸ்கள் பத்து நபித்தோழர்கள் வழியாக அறிவிக்கப் பட்டுள்ளது. பலவனீமானஹதீஸ்களைக் கொண்டுஅமல்செ ய்வதுகூடும் என்பது ஹதீஸ் கலை ஆய்வாளர்களின் கருத்து இதல்லாமல் காலங்களில் சிறந்த காலத்தவர்களான சஹாபாக்கள், தாபியீன்கள், தபஉத் தாபியீன்கள் காலமுதல் இன்று வரை இந்த பராஅத் இரவு விசே ஷம் அனுஷ்டிக்கப்பட்டு இந்த இரவில் அதிகமாக இபாதத் செய்து முக்கியத்துவப்படுத்துவதும் நடை முறை யில் இருந்து வருகிறது. ஆகவே இதை பித்அத் என்று பிதற்றுவதோ, இது அடிப்படையற்ற விஷயம் என்று ஒதுக்கித்தள்ளுவதோ தவறானதாகும். எனவே சரியான விஷயம் என்னவெ ன்றால் இது சிறப்பிற்குரிய ஒரு இரவாகும். இதற்கு தனிப்பட்ட ஒரு முக்கியத்துவம் இருக்கிறது. இதில் இரவு விழித்து இபாதத்தில் ஈடுபடுவது மிகப்பெரும் கூலியைபெற்றுத்தருவதாகும்.
(நூல்: இஸ்லாஹீகுத்பாத், பாகம் 4, பக்கம் : 458, 459).
மேலும் இந்த இரவிலே நபி (ஸல்லல்லாஹு அலை வஹி வ ஸல்லம்) அவர்களின் மீது சலவாத்து கூறி குர்ஆன் ஓதி, நஃபிலான வணக்கங்கள் திக்ருகள், இது போன்ற நம்மால் முடிந்த அளவு ஏதாவது அமலைச்செய்து அதன் பொருட்டால் துஆச் செய்வோம். பகலிலே நோன்பு நோற்க வேண்டும். இரவிலே தஸ்பீஹ் நஃபில் தொழுகைத் தொழ வேண்டும். மஃரிப் தொழுகைக்கு பின்பு மூன்று யாஸீன் ஓத வேண்டும்.
وعن بعض العارفين: ان مما ينبغي فعله ليلة النصف من شعبان: ان يقرأ الإنسان بين صلاة المغرب والعشاء سورة يس بتمامها ثلاث مرات متواليات من غير كلام اجنبي في أثناء ذلك.
الاولى بنية البركة في العمر له ولمن يحب. الثانية: بنية التوسعة في الرزق مع البركة. الثالثة بنية أن يكتبه من السعداء.
(نهاية الأمل : ٢٨٠)
முதல் யாஸீன் ஓதிய பின்பு ஆயுளில் பரகத் கிடைக்க, இரண்டாவது யாஸீன் ஓதிய பின்பு ரிஜ்கில் பரகத் கிடைக்க, மூன்றாவது யாஸீன் ஓதிய நற்பாக்கிவான்களில் நம்மை எழுத துஆ கேட்க வேண்டும்.
(நூல் : நிஹாயத்துல் அம்ல், பக்கம் : 280)
நாம் இந்த இரவை மதித்து விழித்திருந்து எவ்வளவு அதிகமாக தொழுது அல்லாஹ்விடத்தில் மன்னிப்பு கேட்டு இந்த இரவைக் கழிக்க வேண்டியது அவசியத்திலும் அவசியமாக இருக்கிறது. அறிவும் மார்க்கப் பற்றும் உள்ள எந்த முஸ்லிமும் அறிய சந்தர்ப்பமாக கிடைத்துள்ள இந்த ஷபே பராஅத் இரவைத்தூக்கத்திலும், வீண்விளை யாட்டுகளிலும், வே டிக்கை களிலும், ஆடம்பரங் களிலும் வெறுமனே கழித்து விடமாட்டார். எனவே இந்த புனித இரவில் நின்று வணங்கி இறை யருளை பெறுவோமாக, ஆமீன்!
ஆக்கம் : -
மவ்லவீ, S. அப்துல் பாஸித் நூராணி,
DCA. சுங்குவார்சத்திரம்
Cell: 6382621686
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக