திங்கள், 13 ஏப்ரல், 2020

பிஸ்மில்லாஹ்வின் சிறப்பு






பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு...

எனது பெயர் ...............................................................

நான் பிஸ்மில்லாஹ் கூறுவதின் சிறப்பைப் பற்றி கூற இங்கு வந்துள்ளேன்.

அல்லாஹ்வின் நல்லடியார்களே...... நமது நபி ஸல் அவர்கள் அல்லாஹ்வை காணுவதற்கு ஹஸ்ரத் ஜிப்ரயீல் அலை அவர்களுடன் மிஃராஜ் பயணம் சென்றார்கள் அங்கே அவர்கள் பல காட்சிகளை கண்டார்கள்.


அன்பிற்கினியவர்களே......நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், மிஃராஜ் இரவில் சுவர்க்கம் முழுவதும் எனக்குக் காண்பிக்கப்பட்டது அங்கு நான்கு நதிகள் ஓடுவதைக் கண்டேன்
1. தண்ணீர் நதி
2. பால் நதி
3. மது நதி
4, தேன் நதி,
இந்த நதிகள் எங்கிருந்து புறப்பட்டு எங்குபோய்ச் சேர்கின்றன என ஜிப்ரயீல் (அலை அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள், இவைகள் ஹவ்லுல் கெதர் என்ற நீர்த் தடாகத்தில் போய்ச் சேர்கிறது, எங்கிருந்து புறப்பட்டு வருகிறது என்பது எனக்குத் தெரியாது அல்லாஹ்வே மிக அறிந்தவன் என்றார்கள்

அல்லாஹுதஆலாவிடம் இதைப்பற்றி நான் கேட்டேன் ஒரு மலக்கு என்னிடம் வந்து ஸலாம் கூறிவிட்டு கண்ணை மூடும்படியும் பின்பு திறக்கும்படியும் சொன்னார். அப்போது நான் ஒரு மரத்தடியில் இருப்பதை அறிந்தேன், அங்கு முத்தினால் அமைந்த மண்டபம் ஒன்று இருந்தது அந்த மண்டபத்தின் வாசலுக்குத் தங்கத்தினால் கதவு போடப்பட்டிருந்தது அதன் அகலம் உலகத்தில் உள்ள அனைத்தையும் அதன்மேல் வைத்தால் ஒரு மலையின் உச்சியில் உள்ள பறவை போன்று தான் இருக்கும், அதிலிருந்து தான் நான்கு நதிகளும் வருவதைக் கண்டேன்

அந்த மலக்கு, நபியே! ஏன் இந்த மண்டபத்திற்குள் செல்லவில்லை என்றார்கள். அதற்கு நான், அதன் வாசல் பூட்டப்பட்டுள்ளது, அதன் சாவி என்னிடம் இல்லையே என்றேன். அதற்கு நபியே! பிஸ்மில்லா ஹிர்ரஹ்மா னிர்ரஹீம் என்பதுதான் அதன் சாவி என்றார்கள்

பிஸ்மில்லாஹ் சொன்னேன். கதவு திறந்து கொண்டது. அதன் உள்ளே புகுந்தேன், அந்த மண்டபத்தில் நான்கு தூண்கள் இருந்தன. அதில் ஒன்றில் பிஸ்மி என்று எழுதியிருந்தது. அதில் பிஸ்மி என்ற மீமிலிருந்து மதுரமான தண்ணீர் நதியும், அல்லாஹ் என்ற ஹே-யிலிருந்து பால் நதியும், அர்ரஹ்மான் என்ற மீமிலிருந்து மது நதியும், அர்ரஹீம் என்ற மீமிலிருந்து தேன் நதியும் ஓடிக்கொண்டிருந்தன

இந்த நான்கு நதியின் பிறப்பிடம் பிஸ்மில்லா ஹிர்ரஹ்மா னிர்ரஹீம் என்ற வாக்கியத்திலிருந்து தான் என்பதை தெரிந்து கொண்டேன். அல்லாஹ் என்னை நோக்கி, முஹம்மதே (ஸல்) உங்களின் உம்மத்தினரில் எவர் மனத்தூய்மையுடன் பிஸ்மில்லா ஹிர்ரஹ்மா னிர்ரஹீம் என்பதை ஓதி வருகிறாரோ அவருக்கு நான் இதை புகட்டுவேன் என்றான்.

நூல் : தப்ஸீருல் ஹமீத்

நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்

ஒரு மனிதர் பிஸ்மில்லா ஹிர்ரஹ்மா னிர்ரஹீம் என்று அல்லாஹ்வின் திருநாமத்தைக் கூறி தம் வீட்டினுள் நுழைந்து. அதே போல், அல்லாஹ்வின் திருநாமத்தைக் கூறிச்சாப்பிட ஆரம்பித்தால், ஷைத்தான் தன் சகாக்களிடம், இன்று இந்த வீட்டில் தங்குவதற்கோ, உணவில் கலந்து கொள்வதற்கோ உங்களுக்கு இடமில்லை என்று கூறுகிறான். வீட்டில் நுழையும் போதும், சாப்பிடும் போதும் பிஸ்மில்லா ஹிர்ரஹ்மா னிர்ரஹீம் என்று கூறவில்லையானால் இன்று இவ்வீட்டில் இரவில்
தங்குவதற்கும், உணவில் கலந்து கொள்வதற்கும் உங்களுக்கு இடம் கிடைத்து விட்டது என்று கூறுகின்றான் என்பதாக நபி ஸல் அவர்கள் கூறினார்கள். நூல்.  (மிஷ்காத -)



எனவே அனைத்து காரியத்திலும் அல்லாஹ்வை மறக்காமல் நாம் பிஸ்மில்லாஹ் கூறி அல்லாஹ்வின் அன்பையும் அருளையும் பெற்றுக் கொள்வோமாக.

மேலும் விபரங்களுக்கு...

A.காதிர் மீரான் மஸ்லஹி. 
ஜாமிஆ பள்ளிவாசல்.
அசநெல்லி குப்பம்.
அரக்கோணம்.
9952129706.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக