அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.
எனது பெயர்………..
முஸ்லிம்கள் எல்லாவற்றையும் விட
தொழுகைக்குத்தான் முதலிடம் கொடுக்க வேண்டும் அதுக்கு என்ன காரணம் என்று சொல்ல நான் இங்கு வந்துள்ளேன்.
என் அன்பிற்கினிய அல்லாஹ்வின் நல்லடியார்களே…
ஒரு முஸ்லிம் தன் வாழ்வில் எல்லா சூழ்நிலையிலும் தொழுகைக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் இஸ்லாம் அந்த அளவுக்கு வலியுறுத்தி சொல்கிறது அதன்
காரணம்.. என்னவென்றால்?
1) நாளை மறுமையில் முதல் கேள்வி தொழுகையைப் பற்றித்தான் கேட்கப்படும்.
2) தொழுகை என்பது மனிதனை
மானக்கேடானவை, தீமை இவைகளை விட்டும் தடுக்கிறது.
3) தொழுகை என்பது நேரம் குறிக்கப்பட்ட கடமையாகும் அதாவது எந்தெந்த தொழுகையை எப்போது தொழுக வேண்டும் என்பதாக தெளிவாக கூறப்பட்டுள்ளது.
4) ஒரு மனிதனின் செயல்களில் இறைவனுக்கு மிகவும் விருப்பமானது எதுவென்றால்
தொழுகையை அதற்குரிய நேரத்திலேயே நிறைவேற்றுவதாகும்.
5) தொழுகையின் காரணமாக அவரது சிறு பாவங்களை இறைவன்
அழித்துவிடுகிறான்.
6 ) தொழுகை என்பது
மனிதனுக்கும் அவனது
இறைவனுக்கும் இடையே நிகழ்கின்ற உரையாடலாகும்.
7) தொழுகை என்பது மனிதனுக்கு மன
அமைதியை தருகிறது
எனவே தான்
கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
அவர்கள்
ஹஜ்ரத் பிலால் ரலியல்லாஹு அன்ஹு
அவர்களிடம்
என் அருமை தோழர் பிலாலே!
தொழுகைக்கு அழைப்பதின் மூலம் பாங்கு சொல்லி
எங்களுக்கு மனநிம்மதியை தாருங்கள் என்பார்கள்.
8) தொழுகையை வேண்டுமென்றே
விட்ட மனிதன்
காஃபிராவான்.
9) கருணை நபியவர்கள்
தனது இறுதி மூச்சு அடங்கும் முன்பும்
தொழுகையின் அவசியத்தை நினைவு படுத்தினார்கள்.
எனவே தான் இஸ்லாம்
கூறுகிறது
ஒரு முஸ்லிம் எல்லாவற்றிலும் முதலிடம் தொழுகைக்குத்தான் கொடுக்க வேண்டும் என்று கூறுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக