செவ்வாய், 6 ஆகஸ்ட், 2024

குர்ஆன் ஷரீஃப் ஓதுவதன் ஒழுக்கங்கள்

 

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

எனது பெயர்......

நான் இங்கு குர்ஆன் ஷரீஃப் ஓதுவதின் ஒழுக்கங்களை பற்றி பேச வந்துள்ளேன். 

என் அன்பிற்கினிய அல்லாஹ்வின் நல்லடியார்களே......

அருள்மறையாம் திருக்குர்ஆனை நாம் ஓதும்போது..


1.உடல் , உடை , இடம் இம்மூன்றும் இருக்க வேண்டும்.


2.உளூவுடன் இருக்க வேண்டும். 

உளூ இல்லாமல் குர் ஆனைத் தொட கூடாது.


3.குர் ஆன் ஓதும் போது மிகவும் ஒழுக்கமாக அமர வேண்டும்.


4.குர்ஆன் ஷரீஃபை ரைஹால் மேல் வைக்க வேண்டும்.


5. குர் ஆன் ஷரீஃபிற்கு மேலுறை அணிவிக்க வேண்டும்.


6.அவூது பில்லாஹி மினஷ்ஷைதானிர் ரஜீம், பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் என்று சொல்லி ஓதத் துவங்க வேண்டும்.


7.குர்ஆன் ஷரீஃப் ஓதும் போது பேசாமல் இருக்க வேண்டும்.

ஏதாவது அவசிய, அவசரப் பேச்சுகள் பேச நேர்ந்தால் பேசி விட்டு "அவூது பில்லாஹி மினஷ்ஷைதானிர் ரஜீம்" என்று சொல்லித்துவங்க வேண்டும்.


8."அல்லாஹ் நாம் ஓதுவதைக் கேட்கிறான்" என்ற இறையச்சத்தோடு ஓத வேண்டும்.


9.குர்ஆன் ஓதுவதைக் கேட்பவர்களுக்கு அல்லாஹ்வின் புனித வசனம் ஓதப்படுகிறது. அதைச் செவி தாழ்த்தி கேட்க வேண்டும் என்ற எண்ணம் வர வேண்டும்.


10. குர்ஆனின் தாள்களைத் திருப்பும் போது விரலால் வாயின் எச்சிலைத் தொட்டுத் திருப்பக்கூடாது.


11. குர் ஆன் ஷரீஃபை கிழியாமல், அழுக்குப்படியாமல் பாதுகாக்க வேண்டும்.


12.குர்ஆன் ஷரீஃபை எடுக்கும் போது நெஞ்சோடு அணைத்து மிகவும் கண்ணியமான முறையில் எடுத்துக் கொண்டு வர வேண்டும்.


13.குர்ஆன் ஷரீஃபை ஓதும் போது பிறருடைய முதுகுப்பக்கமோ, கால் பக்கமோ உட்காரா மல் இருக்க வேண்டும்.


14. குர்ஆன் ஷரீஃப் வைக்கும் இடம் உயர்ந்த இடமாக இருக்க வேண்டும்.


15. குர்ஆன் ஷரீஃப் ஓதும் போது அல்லாஹ்வின் திருப்திக்காக நான் ஓதுகிறேன் என்ற எண்ணத்தில் ஓத வேண்டும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக