அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
எனது பெயர்...........
கண்ணியத்திற்குரிய அல்லாஹ்வின் நல்லடியார்களே…
அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஹஸ்ரத் முஆத் ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்களுக்கு செய்த 10 உபதேசத்தை கூற நான் இங்கு வந்துள்ளேன்.அல்லாஹ்வின் நல்லடியார்களே.....
ஹஸ்ரத் முஆத் ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்கள் கூறினார்கள்
அன்று ஒரு நாள் கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எனக்கு 10 உபதேசத்தை கூறினார்கள்
1. அல்லாஹ்வை பயப்படவேண்டும்.
2. உண்மையே பேசவேண்டும்
3. கொடுத்த வாக்கைக் காக்க வேண்டும்
4. அமானிதத்தை நிறைவேற்ற வேண்டும்.
5. மோசடி செய்யாதிருக்க வேண்டும்.
6. அண்டை வீட்டாரை ஆதரிக்க வேண்டும்.
7. அனாதைகளுக்கு இரங்கிடவேண்டும்.
8. மனிதர்களிடம் மிருதுவாகப் பேசவேண்டும்.
9. சலாம் கூறவேண்டும்.
10. பணிந்து வாழவேண்டும்.
என்று எனக்கு நபி (ஸல் ) அவர்கள் உபதேசித்தார்கள்.
அறிவிப்பவர்: முஆத் (ரலி) - நூல் : இஹ்யா
இப்படிப்பட்ட 10 உபதேசத்தையும் நம் வாழ்வில் என்றும் தவறாமல் பேணி வாழக்கூடிய நற்பாக்கியத்தை அல்லாஹ் நம்
அனைவருக்கும் தந்தருள் புரிவானாக.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக